புதிய பதிவுகள்
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Today at 8:36 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 7:48 pm

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Today at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» கருத்துப்படம் 24/03/2023
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
67 Posts - 64%
T.N.Balasubramanian
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
21 Posts - 20%
Dr.S.Soundarapandian
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
6 Posts - 6%
eraeravi
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
1 Post - 1%
venkat532
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
479 Posts - 66%
T.N.Balasubramanian
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
111 Posts - 15%
Dr.S.Soundarapandian
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
70 Posts - 10%
mohamed nizamudeen
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
28 Posts - 4%
Dhivya Jegan
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
6 Posts - 1%
eraeravi
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_m10இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இரண்டு புலிக்கு எங்கே போவேன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88825
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 10, 2010 4:27 pm

ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வணிகத்திற்காக வெளியூர் சென்றிருந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு அவனிடமிருந்து கடிதம் வந்தது. நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள். நாம் வளமாக வாழலாம், என்று அதில் எழுதியிருந்தது.

தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஏறினாள் அவள். வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டாள்.
அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்று கொண்டிருந்தது. ஆபத்து வரப் போவதை மாடுகள் உணர்ந்தன. கயிற்றை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன.

ஐயோ! என்ன செய்வேன்? நடுக் காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக் கொண்டேனே! இங்கே புலி பலரை அடித்துக் கொன்றதாகக் கேள்விப் பட்டுள்ளேனே, என்று நடுங்கினாள் அவள்.

அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்தாள் அவள்.

சிறிது தூரத்தல் பயங்கரமான புலி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவள் அதனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தாள்.

நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.

இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளினாள். இருவருடம் காடே அலறும் படி அழத் தொடங்கினார்கள்.

குழந்தைகளே! அழாதீர்கள், நான் என்ன செய்வேன். இப்படி நீங்கள் அடம் பிடிப்பது சிறிதும் நல்லது அல்ல. நேற்றுத்தான் நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக் கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலியை நான் எங்கே தேடுவேன்? எப்படியும் இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.

இதைக் கேட்ட புலி நடுங்கியது, நல்ல வேளை! அருகில் செல்லாமல் இருந்தேன். இந்நேரம் நம்மைப் பிடித்துக் கொன்றிருப்பாள், இனி இங்கே இருப்பது நல்லதல்ல, எங்காவது ஓடிவிடுவோம், என்று நினைத்தது அது.

ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது அது.

தன் திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் அவள்.

பயந்து ஓடும் புலியை வழியில் சந்தித்தது நரி. காட்டுக்கு அரசே! ஏன் இப்படி அஞ்சி ஓடுகிறீர்கள்? உங்களைவிட வலிமை வாய்ந்தது சிங்கம் தான். நம் காட்டில் சிங்கம் ஏதும் இல்லை. என்ன நடந்தது? சொல்லுங்கள், என்று கேட்டது அது.

நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். இப்படி அவளே சொல்வதை என் காதால் கேட்டேன். அதனால் தான் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தேன், என்றது புலி.

இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. புலியாரே! கேவலம் ஒரு பெண்ணிற்குப் பயந்தா ஓடுகிறீர்? அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்காவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள். நாம் அங்கே செல்வோம். அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம், என்றது அது.
அந்தக் குழந்தைகளின் கத்தலை நீ கேட்டிருந்தால் இப்படிப் பேச மாட்டாய். அந்த அரக்கியின் குரல் இன்னும் என் காதில் கேட்கிறது. நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.

அவள் சாதாரண பெண்தான். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி.

தயக்கத்துடன் ஒப்புக் கொண்டது புலி.

இருவர் வாலும் சேர்த்து இறுகக் கட்டப்பட்டன. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியும் புலியும் வருவதைப் பார்த்தாள். இரண்டின் வாலும் ஒன்றாகக் கட்டப்பட்டு இருந்தது. அவளின் கண்களுக்குத் தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.

கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என்ன சொன்னேன்? என் குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஆளுக்கொரு புலி வேண்டும் என்றேன். இரண்டு புலிகளை இழுத்து வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றாய். இப்பொழுது ஒரே ஒரு புலியுடன் வருகிறாள் எங்களை ஏமாற்றவா நினைக்கிறாய்? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.

இதை கேட்ட புலி நடுங்கியது, இந்த நரிக்குத்தான் எவ்வளவு தந்திரம்? நம்மை ஏமாற்றித் தன் வாலோடு கட்டி இழுத்து வந்திருக்கிறதே. நாம் எப்படிப் பிழைப்பது? ஓட்டம் பிடிப்பது தான் ஒரே வழி, என்று நினைத்தது அது.

அவ்வளவுதான். வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.

நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள். ஓடாதீர்கள், என்று கத்தியது.
உன் சூழ்ச்சி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைக் கொல்லத் திட்டம் போட்டாய். இனி உன் பேச்சை கேட்டு ஏமாற மாட்டேன், என்று வேகமாக ஓடத் தொடங்கியது புலி.

வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதியது. படுகாயம் அடைந்தது அது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக் கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்தது. மயக்கம் அடைந்த நரி அங்கேயே விழுந்தது. புலி எங்கோ ஓடி மறைந்தது.

பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊரை அடைந்தாள்.



இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சசிரேகா
சசிரேகா
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 12/01/2010

Postசசிரேகா Wed Feb 10, 2010 4:35 pm

புத்திசாலி பெண்மணி!
புத்திகெட்ட புலி!

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Wed Feb 10, 2010 4:39 pm

இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Icon_lol இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Icon_lol

mkag.khan
mkag.khan
பண்பாளர்

பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009
http://www.aranthaiweb.blogspot.com

Postmkag.khan Wed Feb 10, 2010 4:40 pm

என்பாட்டி குரங்கை வைத்து சொன்னார்கள் இப்போ பெண் செம காமெடில



-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 10, 2010 4:47 pm

சிரி மகிழ்ச்சி



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 10, 2010 4:50 pm

இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196



இரண்டு புலிக்கு எங்கே போவேன்? Uஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Dஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Aஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Yஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Aஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Sஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Uஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Dஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? Hஇரண்டு புலிக்கு எங்கே போவேன்? A
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Feb 10, 2010 4:58 pm

இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 10, 2010 6:16 pm

அதிகமா யோசித்து எழுதி உள்ளீர்கள் தல வாழ்த்துக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 6:26 pm

இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 677196 இரண்டு புலிக்கு எங்கே போவேன்? 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 10, 2010 6:27 pm

நல்ல கருத்துள்ள கதைகள்...
சூழ் நிலைக்கு ஏற்றவாரு சிந்தித்து செயல்படு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக