புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_m10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10 
42 Posts - 63%
heezulia
பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_m10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_m10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_m10பெப்ரவரியிலா மார்ச்சிலா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெப்ரவரியிலா மார்ச்சிலா?


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 10:57 am

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த ஆண்டில்(2010) எப்போது அனுஷ்டிப்பது என்பதில் விரத நிர்ணயகாரர்களிடம் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றமையினால் சைவசமய அனுஷ்டானிகளிடம் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளமையை தீர்த்துவைத்து தீர்மானமாக ஒரு சரியான தினத்தை நிர்ணயம் செய்வதற்கு சைவ சமயஸ்தாபனங்கள் எவையும் இதுவரை முன் வராதநிலையில் அனைவரது கவனத்தையும் இவ்விஷயத்தில் ஈர்த்து பொருத்தமானதொரு தினத்தினை தேர்வுசெய்வார்கள் எனும் நோக்கில் இங்கு சில கருத்துக்களை முன்வைக்க முனைகின்றேன். மகா சிவராத்திரி விரதம் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா அல்லது ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டுமா என்பதில் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதினால்தான் சில பஞ்சாங்கங்கள் 2010 பெப்ரவரியிலும் சிலபஞ்சாங்கங்களில் 2010 மார்ச்சிலும் திகதிகள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது போன்றதொரு சிக்கல் தோன்றியிருந்திருந்த 1964ஆம் வருஷத்தில் அக்குழப்ப நிலையை தீர்க்கும் முகமாக இலங்கை அச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,“ கண்டனுõர் சிவஸ்ரீ அரு. இராமநாதக் குருக்கள் மற்றும் திருவாவடுதுறை சிவஸ்ரீ க. சுவாமிநாத சிவாசாரியார் ஆகிய சிவாசாரியப் பெரியோர்கள் " சிவராத்திரி மாச நிர்ணயம்' எனும் சிறு நுõலை பல்வேறு ஆகமநுõல்களையும் மற்றும் பல ஸ்மிருதி“ புராண வாக்கியங்களையும் மேற்கோள் காட்டி மகாசிவராத்திரி விரதம் ஸெளரமான மாசத்திலேயே அனுஷ்டிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டு திருக்கேதீஸ்வரம்(இலங்கை) சிவானந்த குருகுல வெளியீடாக சோபகிருது வருஷம் கார்த்திகை கஅ என தேதியிட்டு வெளியிட்டுள்ளனர்.

அவ்வெளியீட்டில் அந்த சோபகிருது வருஷத்திற்கு முந்தைய பராபவருஷத்தில் சிலர் சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்ததாகவும் இதுவிஷயமாகப் பரிபூரணமான திருவாவடுதுறை ஆதீனத்து மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் சாஸ்திரமறிந்த வித்துவான்களையும் பல ஆகமவிற்பன்னர்களையும் அழைத்துப் பரிசீலனை செய்து சௌரமானப்படி மாசி 29ஆம் திகதிதான் நடத்தவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டது என மேற்கோள் காட்டியுள்ளனர். "சிவராத்திரியைச் சௌரமாசத்தில் அனுஷ்டிக்கவேண்டும், சாந்திரமாஸத்திற் செய்யக் கூடாது' உத்தர காராணாகமம் : சிவராத்ரி விரதம் சரோத்' சௌரபக்ஷமாக மாகமாசத்தில் கிருஷணபக்ஷ சதுர்த்தசியில் உறக்கமின்றி சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும் பிம்பாகமம் "கும்பமாசத்தில் மாக நட்ஷத்திரம் விசேஷமாகக் கொள்ளப்படுதலால் அது மாக மாசமென்று சொல்லப்படுகிறது காரணாகமம் "எப்பொழுது சூரியன் கும்பராசியிற் செல்கிறானோ அந்த மாசம் மாகமாசமென்று நினைக்கத்தக்கது' புரொத்கீதாகமம் "சூரியன் கும்பராசியில் எப்பொழுது செல்கிறானோ, அதுதானே மாகமாசமாகும், அம்மாசத்தில் வரும் கிருஷ்ணசதுர்த்தசி மகாநிசி என்று சொல்லப்படும் அதில் சிவனைப்பூசிக்க' சூக்ஷ்மாகமம்

"கும்பமாசத்து கிருஷ்ண சதுர்த்தசியில் சிவபெருமானைப் பூசித்து சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கவேண்டும்' கிரணாகமம் "கும்பமாசத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் வருகிற அஸ்தமனபரியந்தம் வியாப்தியுடன்கூடிய திரயோதஸியும் அதற்குமேல் சதுர்த்தஸியுமிருந்தால் அந்த இரவு சங்கரனுக்குப் பிரியமானதாகும்' வீராகமம்

"சூரியன் கும்பராசியிற் செல்கின்ற மாசிமாதத்தில்வரும் கிருஷ்ணசதுர்த்தசி சிவராத்திரியாகும், அது கோடிபாவங்களை நாசஞ்செய்யும்' பராசரம் "இராத்ரிமுழுவதும் தைமாதத்தையடைந்த சிவராத்திரியானது பாவத்தைக் கொடுக்கக்கூடியது விதிக்கப்பட்ட காலத்தைச் சேராததால் தள்ளத்தக்கது. கேவலம் தைமாதத்தையடைந்த சதுர்த்தசியானது விதிக்கப்படாமலிருப்பதனாலே சந்ரகிரஹணத்தைத்தவிர வேறான ராத்திரியில் பிதிர்தர்ப்பணம் எப்படியோ அப்படி பாபத்தைக் கொடுக்கிறதாய் தள்ளத்தக்கது' விந்தியாவர்த்திகம் "மாசபூஜை முதலியவைகளைச் சௌரமாசத்தில் செய்

க, கும்பமாசத்துக் கிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கவும்' பீமசங்கிதை என்று மேற்கண்டவாறு பல நுõல்களையும் மேற்கோள்காட்டி சௌரமான மாசத்திலேயே சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று "சிவராத்திரி மாச நிர்ணயம்' எனும் அந்நுõலில் தெரிவித்துள்ளனர்.

சைவசமயிகளுக்கு ஆகமங்கள் சிறப்பு நுõல்களாகச் சொல்லப்பட்டிருப்பதுடன், அவை முழுமுதற் கடவுளான சிவபெருமானாலும் உபதேசிக்கப் பட்டதாக கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சிறப்புப்பெற்ற ஆகமங்களில் சொல்லப்பட்ட விரதஅனுஷ்டான விதிகளை புறந்தள்ளுவது ஏற்புடையதாகுமா? விரதநுõல்கள் ஆகமங்கள், புராணங்களில் சொல்லப்பட்ட விரதவிதிகளை தொகுத்துத் தருபவையாகும் அல்லவா? இந்த முரண்பாடுகள் எல்லாம் சைவஉலகினரால் ஆராயப்படவேண்டியவைகளாகும். வளர்ந்துவரும் இன்றைய உலகில் சைவஉலகம் இவ்வாறு பின்தங்கியிருக்க வேண்டுமா? இந்த ஆண்டில் வந்திருக்கும் இம்முரண்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தி முரண்பாடு வரக்கூடிய விரதநாட்களுக்கு எல்லோருக்கும் இசைவாய் விதிமுறைகளை அறிஞர்கள் ஒன்றுகூடி ஏற்படுத்தமுடியுமல்லவா?

சிவராத்திரி பூஜாவிதி படலத்தில் மிகவும் விரிவாக இவ்விடயங்கள் தரப்பட்டுள்ளன. அதில் பின்வரும் முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது.

1) மஹாசிவராத்திரி ஸெளரமானமாசத்தில் அனுஷ்டிக்கப்படவேண்டும்.

2) மஹாசிவராத்திரியை சாந்திரமானமாசத்தில் அனுஷ்டித்தல் கூடாது.

3) சூரியன் கும்பத்தில் உள்ள மாதத்தின் பௌர்ணமியுடன் மாகநட்ஷத்திரம் சேரும் மாதமே மாகமாசமாகும்

காரணத்தில்: சைத்ரநட்ஷத்திரம் சேர்வதால் சைத்ர(மேஷ)மாதம் விசாகநக்ஷத்திரம்சேர்வதால் வைசாக(ரிஷப)மாதம்

இதேபோல் மாக நட்ஷத்திரம் சேர்வதால் மாக(கும்ப)மாதம் 4) மாகமாச கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவராத்திரி அஷ்டிக்கத்தக்கது தவிர,

விரதசூடாமணியில் (1935ஆம் ஆண்டுப்பதிப்பு) சிவராத்திரிவிரதம் பகுதியில் :"சதுர்த்தஸ்யாந்து கிருஷ்ணாயாம் பால்குனே சிவபூஜனம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஸெளரமான மாஸத்தை குறிப்பதாக கருதவேண்டும். நிர்ணயஸிந்து எனும் நுõலில் :

"பால்குணகிருஷ்ணசதுர்த்தஸீ சிவராத்திரி' எனவும், அதே நுõலில் லிங்கபுராணத்தில் இருந்து. "பால்குணஸ்ய சதுர்த்தஸ்யாம் கிருஸ்ணபக்ஷே ஸமாஹிதா, கிருத்திவாஸேஸ்வரம் லிங்கமர்ஜயந்தி சிவம் ஸுபே' எனும் வசனமும் சிவராத்ரி நிர்ணய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இச் சிவராத்திரி நிர்ணயப்பகுதி "பால்குணகிருஷ்ண சதுர்த்தசி நிர்ணய:' எனும் தலைப்பின் கீழேயே தரப்பட்டுள்ளது. இவற்றின் மூலமும் கும்பமாஸத்தையே அவைகொள்வதாக கருத இடமுண்டல்லவா? இலங்கையில் இருந்துவெளிவரும் பிரபலமான பஞ்சாங்ககணிதர் பெப்ரவரியில் விரதநிர்ணயம் செய்துவிட்டு அதற்கு ஆதாரமாக காமிகமத்தில் இருந்து ". மாகமாஸ்யஸிதேபக்ஷே வித்யதேயா சதுர்த்தஸீ தத்ராத்ரி சிவராத்ரி ஸ்யாத்.' (சிவராத்திரிபூஜா படலம் 4,5ம் சுலோகங்கள்) எனவும் ஸ்காந்தத்தில் இருந்து " மாககிருஷ்ணசதுர்த்தஸ்யாம்' எனும் பகுதியையம் பிரசுரமொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். மாககிருஷ்ண சதுர்த்தசியில் சிவராத்திரியென்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது ஸெளரமான மாசமா? அல்லது சாந்ரமானமாசமா என்பது பற்றியோ அல்லது மாகமாசமென்பது எதுவென்பது பற்றியோ எவ்விதகுறிப்பும் தற்போது கிடைக்கும் காமிகாகமத்திலும், ஸ்காந்தத்திலும் காணப்படவில்லை. தவிர மேற்படி பஞ்சாங்க கணிதரின் பிரசுரத்தில் குமாரதந்திரத்தில் இருந்து, " மாகபூஜாவிதி: ப்ரோக்தம் சிவராத்ரிவிதிம் ச்ருணு, தந்மாஸே க்ருஷ்ணபக்ஷேது வித்யதேயா சதுர்த்தஸீ, தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாத்'எனமேற்கோள்காட்டியிருந்தார். குமாரதந்திரத்தில் மாசபூஜாவிதியின்கீழ் எல்லாமாஸங்களுக்கும் விரதவிபரங்கள் தரப்பட்டுள்ளதுடன், அவை நட்ஷத்திரங்களை முதன்மைப்படுத்தியும் தரப்பட்டுள்ளன. அதாவது, சைத்ரமாத பூஜாவிதியில் "சைத்ரேஷு.' என்றும் குமாரதந்திரம் காரணாகமத்தின் சுருக்கமென அந்நுõற்பதிப்பில் கூறப்படுவதில் இருந்தும், நக்ஷத்திரங்களை பிரதானமாகக் கொண்டு மாதபூஜைவிதிகள் அதில் சொல்லப்படுவதைக்கொண்டும் (காரணாகமம் மாதங்களின் பெயர்கள் அவ்வவ்மாசத்தின் பௌர்ணமியுடன் நட்ஷத்திரங்கள் சேர்ந்துவருவதனால் தீர்மானிக்கப்படுவதாக குறிப்பிடப்படுவதை கவனிக்கவேண்டும்) குமாரதந்திரம் ஸெளரமானமாஸத்தை அடிப்படையாகக் கொண்டு மாதபூஜாவிதிகளைத் தந்திருப்பது தெளிவாகும்.

ஆகவே குமாரதந்திரத்தில்இருந்து மேற்கோள்காட்டி பெப்ரவரி 12ஆம் திகதியை சிவராத்திரி தினமாக அப்பஞ்சாங்க கணிதர் நியாயப்படுத்த முயல்வது பொருத்தமற்றதுடன் மாறாக அதற்கெதிராக ஸெளரமான மாசத்தையே அது அனுசரிப்பதையும் கவனிக்கத் தவறியும் விட்டார். தவிர மேற்படி பஞ்சாங்ககணிதர் உத்தரகாரணாகமம் மற்றும் ஆகமங்களில் கூறப்பட்ட இவ்விஷேடவிதிகளை புறந்தள்ளியதுடன் அவைபற்றி தமது பிரசுரத்தில் குறிப்பிடாமல் மறைத்து விட்டுள்ளமைக்கான காரணம் யாதோ?

எல்லாவற்றையும் சீர்துõக்கிப் பார்க்கையில் பெப்ரவரி 12ஆம் திகதி சிவராத்திரி தினமாக கொள்வது ஆகமாதி நுõல்களுக்கு அமைவாக இல்லை என்பதுடன் மார்ச் 13ஆம் திகதியே பொருத்தமானதென்பதும் தெளிவாகும்.



பெப்ரவரியிலா மார்ச்சிலா? Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக