ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் தேவை
by Guest Today at 1:38 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 1:32 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by Dr.S.Soundarapandian Today at 12:49 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by T.N.Balasubramanian Yesterday at 8:49 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Yesterday at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Mon Nov 23, 2020 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Mon Nov 23, 2020 7:59 pm

Admins Online

பொட்டாசியம்

Go down

பொட்டாசியம் Empty பொட்டாசியம்

Post by சிவா on Thu May 14, 2009 2:44 am

பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். காரணம் என்ன? உப்பில் உள்ள சோடியம் (Sodium - Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால், அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.


இந்த விடயம் மருத்துவ உலகத்திற்கு நீண்டகாலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொது மக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை. அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texas ஒரு ஆய்வு செய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர் , பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது.


இது உணவுப் பொட்டாசியத்தின் அளவிற்கு சமாந்தரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது. பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்துக்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது, வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட போதும் பொட்டாசியம் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆபிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.


பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமன்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம் , கல்சியம் ஆகியன போதியளவு இருக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறது. அதேநேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?


நிச்சயமாக இல்லை. ஆனால், பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பாற்பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய் , வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

ஒருவருக்குத் தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் , விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனை விட அதிகம் தேவைப்படும். கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படலாம். சிலவேளை, இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற்பயிற்சியின் பின் ஒரு கப் ஒரேஞ்சு ஜூஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தடுக்க முடியும்.


கடுமையான வயிற்றோட்டம் , கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மது பாவனை , குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தக் கூடும். சில மலம் இழக்கி மருந்துகளும் , சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.

மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும் , உப்பைச் சற்றுக் குறைவாகவும் உட்கொள்ளுங்கள். அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

நன்றி: தினக்குரல் (ஹாய் நலமா)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum