புதிய பதிவுகள்
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Today at 21:08

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 19:38

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 18:42

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 18:11

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 18:07

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 17:54

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 17:45

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 13:56

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 6:39

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:31

» மந்திரங்கள்
by சிவா Today at 6:19

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 5:11

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 5:03

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 3:59

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Today at 0:54

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 5:02

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 4:47

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 23:38

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 21:53

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon 20 Mar 2023 - 19:39

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon 20 Mar 2023 - 15:19

» உலகச் செய்திகள்!
by சிவா Sun 19 Mar 2023 - 23:48

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:41

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun 19 Mar 2023 - 23:37

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:34

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 23:32

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun 19 Mar 2023 - 23:32

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:30

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun 19 Mar 2023 - 23:15

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun 19 Mar 2023 - 23:05

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:24

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun 19 Mar 2023 - 16:18

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun 19 Mar 2023 - 3:00

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun 19 Mar 2023 - 2:53

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat 18 Mar 2023 - 20:14

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri 17 Mar 2023 - 23:11

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 22:04

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:51

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri 17 Mar 2023 - 20:40

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri 17 Mar 2023 - 12:26

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:33

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:30

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:24

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Fri 17 Mar 2023 - 0:16

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu 16 Mar 2023 - 22:47

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu 16 Mar 2023 - 19:58

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu 16 Mar 2023 - 19:49

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu 16 Mar 2023 - 19:30

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu 16 Mar 2023 - 18:39

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
23 Posts - 70%
T.N.Balasubramanian
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
5 Posts - 15%
Dr.S.Soundarapandian
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
1 Post - 3%
venkat532
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
436 Posts - 67%
T.N.Balasubramanian
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
மனித உடலியல் - Page 3 Poll_c10மனித உடலியல் - Page 3 Poll_m10மனித உடலியல் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

மனித உடலியல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 May 2009 - 4:08

First topic message reminder :

மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?

உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வு செய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,
தசை (muscular) மண்டலம்,
நரம்பு (nervous) மண்டலம்,
நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,
மூச்சு (respiratory) மண்டலம்,
இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,
நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,
செரிமான (digestive) மண்டலம்,
கழிவு (excretory) மண்டலம் மற்றும்
இனப்பெருக்க (reproductive) மண்டலம்


உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப் பொருத்த முடியும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 May 2009 - 4:16

நமது உடலின் சமச்சீர் நிலையைக் கட்டுப்படுத்துவது எது?

உடலின் சமச்சீர் நிலையைக் கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பாக விளங்குவது செவியின் உட்பகுதியாகும். ஆனால் கழுத்து, முதுகு, கால், பாதத் தசைகளின் நரம்பு முனைகள் ஆகியவற்றிலிருந்தும் செய்திகளை மூளையானது பெறுகின்றது. மூளை இச்செய்தியைப் பிரித்துணர்ந்து, அவற்றை மீண்டும் தசைகளுக்கே அனுப்பி வைக்கிறது; இதன் விளைவாகத்தான் நம்ப முடியாத வியப்பூட்டும் செயல்களான பனிச்சறுக்கல்கள் அல்லது உடலை வளைத்துச் செய்யும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற உடற்பயிற்சி விளையாட்டுகள் ஆகியவற்றை நம் உடலால் செய்ய முடிகிறது. செவிச்சுருள்வளைக்கு (cochelea) அருகில் திரவம் நிரம்பிய குழல்கள்-அரை வட்டக் குழாய்கள் உள்ளன. தலையை அசைக்கும்போது, ஒவ்வொரு குழாயிலுமுள்ள திரவம் இப்படியும் அப்படியுமாக அசைகிறது. உடல் அசையும்போது அத்திரவத்தால் முடிகள் பாகுக்குழம்பு போல் வளைகின்றன. நடுக்குழாய் நரம்புடன் (vestitubular nerve) இவை இணைக்கப்பட்டு மூளை எச்சரிக்கப்படுகிறது; இதனால் உடல் சமச்சீர் நிலையை அடைய முடிகிறது.

ஒருவர் சுற்றிச் சுற்றி சுழன்று ஆடியபின் திடீரென்று நிறுத்தி விட்டாலும், காதிலுள்ள திரவம் சுழன்று கொண்டிருப்பதால் மயக்கம் ஏற்படுவது போன்ற ஒரு நிலை உண்டாகிறது; அவர் எங்கே செல்கிறார் என்பதை அவரது மூளையால் கூறமுடிவதில்லை. சுற்றிச் சுழன்று நடனமாடுபவரின் தலையைக் கவனித்தால், அவரது தலை தொடர்ந்து சுழலாமல் இருப்பதைக் காணலாம்.

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது எது?

நமது உடலின் உட்பகுதிச் சூழல் ஒரே நிலையில் அமைந்திருப்பதற்கு "உட்சீர்மை (homeostasis)" எனப் பெயர். உடலின் உட்சூழலை நிலையாக வைத்திருப்பதற்குப் பல அமைப்புகளையும் செயல்முறைகளையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. உடலின் வெப்ப இழப்பையும் தோலின் மூலம் வெப்ப உற்பத்தியையும் கட்டுப்படுத்த மூளையின் கீழ்த்தளத்திலுள்ள வெப்ப உட்கரு (temperature nucleus) காரணமாக விளங்குகிறது. அதிக வெப்பமானது இரத்த நாளங்களிலிருந்து மிகுதியான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது; அப்போது வியர்வை நாளங்களிலிருந்து வியர்வை வெளியேறி வெப்ப இழப்பு ஏற்படக் காரணமாகிறது. உடலின் வெப்பநிலை குறையும்போது மேற்புற இரத்த நாளங்கள் சுருக்கமடைந்து, வியர்வை வெளியேற்றம் தடுக்கப்படுகிறது; மேலும் முடிகள் விறைத்து நின்று காற்றைக் காப்புறை போன்று உள்ளேயே தடுத்து நிறுத்தும் மேலும் உடல் நடுக்கத்தாலும் கூடுதல் வெப்பம் உருவாக்கப்படும்.

உடல் அசைவுகளும் உட்சீர்மை ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. வெப்பம் மிகுதியாக உள்ளபோது கைகளையும் கால்களையும் நீட்டி அகலப்படுத்துவதால் வெப்பம் வெளியேற வாய்ப்புண்டாகிறது. குளிர்ந்த நிலையிலுள்ள மனிதர்கள் உடலைச் சுருக்கி உடற்பரப்பையும் குறுக்கிக்கொள்வதால் வெப்ப இழப்பு தவிர்க்கப்பட்டு உடல் வெப்பம் காக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 May 2009 - 4:17

தோல் என்பது என்ன?

தோல் என்பது உடல் முழுதும் மிக மிகக் குறைவான தடிமனுடன் (சுமார் 2 மில்லி மீட்டர் தடிமனுக்கு) போர்த்தப்பட்ட ஒரு விரிப்பு போன்ற அமைப்பாகும். உடலின் சில பகுதிகளில் குறிப்பாக கால் பாதத்தின் அடிப்பகுதி, உள்ளங்கைப் பகுதி ஆகியவற்றில் அதன் தடிமன் சற்றுக் கூடுதலாக (சுமார் 3 மி.மீ. அளவுக்கு) இருக்கும். அது நீர் உடலில் புகாவண்ணம் காப்பதோடு நீட்சித்தன்மையுடன் விளங்குகிறது; மேலும் நுண்ணிய தூசு, கிருமிகள் ஆகியவையும் உடலுள் செல்லாவண்ணம் தோல் உடலைப் பாதுகாக்கிறது.

தோலில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. வெளிப்புறப் பகுதி புறத்தோல் (epidermis) எனப்படுகிறது. உடலின் மேல்பகுதியில் காணப்படும் புறத்தோல் பகுதி இறந்த உயிரணுக்களால் ஆனது; புதிய உயிரணுக்கள் புறத்தோலின் அடிப்பகுதியில் உருவாகின்றன. தோலின் அடிப்பகுதி உட்தோல் (dermis) எனப்படுகிறது. தொடு உணர்ச்சி, வெப்பம், குளிர், அழுத்தம் மற்றும் வலி ஆகியவற்றை உணரும் உணர்ச்சி ஏற்பிகள் (sensory receptors) இங்கேதான் அமைந்துள்ளன; மற்றும் தகவல்களைத் தெரிந்தெடுத்து மூளைக்கு அனுப்பும் நரம்பு முனைகளும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளன. உட்தோலில்தான் வியர்வைத் துளிகள் அரும்புவதோடு, உடலின் முடிகளும் உருவாகின்றன.

உடலிலுள்ள ஒவ்வொரு முடியிலும் மிக நுண்ணிய விரைப்புத் தசைகள் (erector muscles) அமைந்துள்ளன. உடல் குளிரால் பாதிக்கப்படும்போது இத்தசைகள் சுருங்கி முடிகள் விரைத்து நிற்கும். இதனால் வெதுவெதுப்பான காற்று அவற்றுள் சிக்கி உடல் வெதுவெதுப்பாகிறது.

தொடு உணர்ச்சி (sensation) என்றால் என்ன?

உடலின் தோல் பகுதியானது மிகப் பெரிய உணர்ச்சி உறுப்பாகும்; இதில் ஆயிரக்கணக்கில் உணர்வு ஏற்பிகள் அமைந்துள்ளன. தோலில் உள்ள உணர்வு ஏற்பிகள் (sensory receptors) தொடு உணர்ச்சியை மட்டும் தெரிவிப்பனவல்ல; தொடப்படும் பொருளின் இழை நயத்தையும், எடுத்துக்காட்டாக, அது மென்மையானதா சொரசொரப்பானதா எனவும் தெரிவிக்கக்கூடியவை. வெப்பமான மற்றும் குளிர்ச்சியான பொருட்களையும் தெரிவிக்கக்கூடிய ஏற்பிகள் அமைந்துள்ளன. மற்றும் சில ஏற்பிகள் தோலில் ஏற்படும் அழுத்தத்தையும் தெரிவிக்கக் கூடியவை.

தோலின் சில ஏற்பிகள் தொடுதல், வெப்பம், குளிர்ச்சி மற்றும் அழுத்தம் ஆகிய நான்கு உணர்ச்சிகளையும் உணரக் கூடியவை. அவை கட்டற்ற நரம்பு முனைகள் (free nerve endings) எனப்படுகின்றன. இந்த உணர்ச்சிகள் வலிமையாக இருந்தால் அவற்றின் வலி சமிக்ஞைகளுக்கான செய்திகளை அவை அனுப்புகின்றன. தோலிலுள்ள முடிகளைச் சுற்றி சில கட்டற்ற நரம்பு முனைகள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொரு முடியின் சிறு அசைவின் உணர்ச்சியையும் வெளிப்படுத்துபவை. தோலின் சில பகுதிகளில் குறிப்பாக விரல் நுனிகளில் நரம்பு முனைகள் அடர்த்தியாக அமைந்துள்ளன. மற்ற சில பகுதிகளில் அதாவது முதுகு போன்ற பகுதிகளில் நரம்பு முனைகள் அடர்த்தி குறைந்து அமைந்துள்ளன.

ஐந்து முக்கிய உணர்ச்சிகளைத் தவிர்த்து சமச்சீர் உணர்வு, பசி, நீர் வேட்கை போன்ற வேறு சில உணர்வுகளும் அமைந்துள்ளன. நமது வலி உணர்வு மிக முக்கியமான ஒன்று. உடலில் ஊறு விளையும்போது அல்லது அபாயம் ஏற்படும்போது இவ்வுணர்வு எச்சரிக்கை உணர்வாக அமைகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 May 2009 - 4:17

நம் இரத்தம் சிகப்பு நிறத்தில் இருப்பது ஏன்?

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் பலவகைப் பொருள்களும், உயிரணுக்களும் (செல்கள்) உள்ளன. இரத்தத்தின் ஒவ்வொரு பகுதிக்கும், அவற்றிற்கே உரிய சிறப்புப் பணிகள் உண்டு. இரத்தத்தின் பாதிக்கு மேற்பட்ட திரவப் பகுதி பிளாஸ்மா எனப்படும். இது வெளிர் மஞ்சள் நிறமானது; தண்ணீரை விடச் சற்று அடர்த்தியானது; பல பொருள்கள் இதில் கரைந்துள்ளன. புரதம், நோய் எதிர்ப்புப் பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கும் ஃபைப்ரினோஜன், கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுப் பொருள்கள், கொழுப்பு மற்றும் உப்புகள், இரத்த உயிரணுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

சிகப்புக் குருதி அணுக்கள் (Red Blood Corpuscles _ RBC) எனப்படுபவையே இரத்தத்திற்கு நிறத்தை அளிப்பவை. இரத்தம் சிகப்பாகக் காணப்படுவதற்கு இவையே காரணம். இரத்தத்தில் இவ்வணுக்கள் ஏராளமாக உள்ளன. மிகவும் நுண்ணிய, வட்டமான, தட்டையான இந்த அணுக்கள் ஏறக்குறைய 35 டிரில்லியன் எண்ணிக்கையில் உள்ளன.

இளம் இரத்தச் சிகப்பணு வளர்ச்சியடைந்து, கொழுப்புத் திசுவின் சோற்றுப் (marrow) பகுதியில் முதிர்ச்சியுறும்போது தனது அணுக்கருவை இழந்து, ஹீமோகுளோபினாக உருவாகிறது.

ஹீமோகுளோபின் என்பது சிகப்பு நிறமிப் பொருளாகும். சிகப்பணுக்களின் வாழ்நாள் நான்கு மாதங்கள் மட்டுமே; பின்னர் அவை பெரும்பாலும் மண்ணீரலில் (spleen) சிதைவுறுகின்றன. சிதைவுற்று அழிந்து போகும் உயிரணுக்களை ஈடுகட்ட புதிய சிகப்பு உயிரணுக்கள் எப்போதும் உருவாகிக் கொண்டே இருக்கும்.

இதயத் துடிப்பு வீதம் என்பது ஒரு நிமிடத்தில் இதயம் எத்தனை முறை சுருங்கி விரிகிறது என்பதன் எண்ணிக்கையாகும். மணிக்கட்டில் உள்ள நாடியின் மீது கை விரலை மெதுவாக வைத்து ஒரு நிமிடத்தில் எத்தனை முறை நாடி துடிக்கிறது என்பதைக் கணக்கிட்டு இதயத் துடிப்பின் அளவை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 May 2009 - 4:18

தமனிகள், சிரைகளில் இருந்து ஏன் வேறுபட்டவை?

நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்புடன், நகரின் போக்குவரத்து அமைப்பின் திறன் எதையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது; அந்த அளவுக்கு நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்பு சிறந்து விளங்குகிறது எனலாம். மைய விநியோக நிலையத்துடன் (Central Pumping Station), ஒன்று பெரியதும், மற்றொன்று சிறியதுமான இரண்டு வகைக் குழாய் அமைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்க; இது ஏறக்குறைய நமது இரத்த ஓட்ட அமைப்புடன் ஒப்பிடக் கூடியதாகும். சிறு குழாய்கள் இதயத்திலிருந்து நுரையீரலுக்கும், பின்பு மீண்டும் இதயத்திற்கும் செல்பவை. பெரிய குழாய்கள் இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குச் செல்பவை. இக்குழாய்கள் தமனிகள் (arteries), சிரைகள் (veins), தந்துகிகள் (capillaries) எனப்படும். இரத்தத்தை இதயத்திலிருந்து எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகளாகும். சிரைகள் வழியே இரத்தம் திரும்ப இதயத்திற்கு வந்து சேரும். பொதுவாகக் கூறுவதெனில் தமனிகள் தூய இரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும். சிரைகள் அசுத்தங்கள் நிரம்பிய இரத்தத்தை மீண்டும் கொண்டு வரும். மைய விநியோக நிலையமாக விளங்குவது நமது இதயம்தான். மணிக்கட்டையும், கழுத்தின் பக்கவாட்டுப் பகுதிகளைத் தவிர்த்துப் பிற இடங்களில் தமனிகள் திசுக்களுக்கு அடியில் அமைந்திருக்கும். எனவேதான் இவ்விடங்களில் நாடித்துடிப்பைக் கணக்கிட்டு அறிந்து கொள்ள முடிகிறது. மருத்துவர் இதன் மூலம் தமனிகளின் நிலையை அறிந்து கொள்வார். தமனிகளில் செல்லும் இரத்தம் ஒளிரும் சிகப்பு நிறமானது. சிரைகள் தோலுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும். இச்சிரைகளில் இரத்தம் இருண்ட சிகப்பு நிறத்தில் ஒரே சீராக ஒடும். சிரைகள் நெடுகிலும் ஆங்காங்கே வால்வுகள் அமைந்திருக்கும்.

இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்புக் குருதி அணுக்கள் உள்ளன. இவை பிளாஸ்மா என்னும் திரவத்தில் மிதந்துகொண்டிருக்கும். உடலுக்குத் தேவையான பல ஆயிரம் பொருள்கள் இரத்தத்தில் உள்ளன. இப்பொருள்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து செல்வதோடு, தேவையற்ற மாசுப்பொருள்கள் அதே இரத்தத்தால் வெளியேற்றப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 22 May 2009 - 4:18

நமக்கு ஏன் எலும்புக்கூடு (skeleton) அமைந்துள்ளது?

எலும்புகளாலான வலையமப்பை எலும்புக்கூடு என்கிறோம். முழு உடலையும் ஒன்றிணைத்துப் பிடித்துக்கொள்ளும் ஒரு சட்டகமாக எலும்புக்கூடு விளங்குகிறது.

எலும்புக்கூடு இல்லமலிருக்குமானால் உடலுக்கு ஆதாரமான பிடிமானமின்றி துணிப்பொம்மை போல் உடல் துவண்டு விழுந்து விடும். அதாவது உடலால் எங்கும் நடமாடவே இயலாது.

இதுமட்டுமல்லாமல் உடலின் முக்கிய பகுதிகளான மூளை, இதயம், நுரையீரல்கள் போன்றவற்றிற்கும் பாதுகாப்பாக எலும்புக்கூடு அமைந்துள்ளது. உடலின் மென்மையான உறுப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் உறுதுணையாகவும் விளங்குவது எலும்புக்கூடேயாகும்.

எலும்புக்கூடு நெம்புகோல் அமைப்புபோல் துணைபுரிந்து உடலின் தசைகள் இயங்கவும் வழி செய்கிறது. இதனால் உடலின் அசைவுகள் அனைத்தும் நன்கு நடைபெற முடிகிறது.பிறந்த குழந்தைக்கு சுமார் 300 எலும்புகள் உள்ளன. இவற்றுள் 94 ஒன்றோடொன்று இணைந்து அமைந்துள்ளவை. கை மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றில் மட்டும் 27 எலும்புகள் அமைந்துள்ளன.

எக்ஸ்-ரே ஏன் எடுக்கப்படுகிறது?

மனிதர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, எலும்புகளில் ஏங்கேனும் முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய எக்ஸ்-ரே எடுப்பதை நாம் அறிவோம். எக்ஸ்-ரேயில் காணப்படும் படம் நிழற்படமாக அமைந்திருப்பதை நாம் காணலாம். எக்ஸ் கதிர்கள் உடற்பகுதிகளுள் ஊடுருவி படலத்தில் (film) நிழற்பகுதியாக விழுகின்றன. இப்படலத்தின் இரு பக்கங்களிலும் பசை (emulsion) பூசப்படுகிறது; பின்னர் இது வெளியில் காட்டப்படும்போது சாதாரண ஒளிப்படமாகக் காட்சியளிக்கிறது. எலும்புகள் மற்றும் பிற பொருட்களை எக்ஸ் கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாததால் அவை அடர்த்தியான நிழற்பகுதியாக படலத்தில் ஒளிர்கின்றன. இதனைப் பார்த்து மருத்துவர் எலும்புகளில் முறிவு அல்லது இட மாற்றம் ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்கிறார்.

எக்ஸ் கதிர்களைப் போன்றே மீஒலி அலைகளும் (ultrasonic sound waves) உடலில் ஊடுருவிச் செல்கின்றன. அவை உடலினுள் இருக்கும் உறுப்புகளால் திருப்பி அனுப்பப்படும். எதிரொளிக்கப்பட்ட ஒலி திரையில் படமாக விழுகிறது. இதன் மூலம் கருவுற்ற தாயின் வயிற்றிலுள்ள குழந்தை பற்றி அறிய முடிகிறது. இதனை ஸ்கேன் (scan) எடுத்தல் என்கிறோம்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 25 Aug 2010 - 8:07

இவைகளில் ஓரளவுதான் படித்தேன் மீதி மீண்டும் படிக்கிறேன் அண்ணா இலவச மருத்துவம் உங்கள் சேவை அண்ணா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா உங்கள் சேவை எங்களுக்கு இன்னும் தேவை நன்றி.மனித உடலியல் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Wed 25 Aug 2010 - 11:10

மனித உடலியல் - Page 3 678642 மனித உடலியல் - Page 3 678642 மனித உடலியல் - Page 3 678642 மனித உடலியல் - Page 3 678642

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed 25 Aug 2010 - 12:35

அருமை சிவா அண்ணா......

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed 25 Aug 2010 - 12:45

நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சிஅன்புடன்
மீனா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88782
இணைந்தது : 20/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 26 Jan 2023 - 15:19

மனித உடலியல் - Page 3 103459460

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக