ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Today at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

Admins Online

60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..?

Go down

60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..? Empty 60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..?

Post by Tamilzhan on Tue May 26, 2009 5:05 pm

அறுபதிலும் இளமையாக வாழ்வது எப்படி

மரு.நா.மோகன்தாஸ், எம்.டி.டி.எம். தஞ்சாவூர்
இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ வளர்ச்சியின் பயனாக தனி மனித வாழ்நாள் வளர்ந்து கொண்டே சென்று இன்றைக்கு 65 வயதுக்கு மேல் சற்றேறக் குறைய 60 விழுக்காட்டினர் வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நவீன விஞ்ஞான மருத்துவம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ, அதுபோன்றே வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் பண்பாடு கலாச்சாரம் என்று தொடங்கி வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களிலிருந்து உணவுமுறை வரை மாற்றங்கள் ஏற்பட்டு சாதக பாதகங்களையும் நம்மிடையே ஏற்படுத்தியுள்ளது.
எல்லோரும் நீண்ட நாட்கள் வாழவே விழைகின்றோம். முதுமை தவிர்க்க இயலாத ஒன்று. ஆனால் அந்த முதுமையிலும் நமக்கேற்பட்டுள்ள புற, அக பாதிப்புகளுக் கிடையேயும் இளமையாக வாழ்வது எல்லோரலும் முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நாம் பிறந்தது முதல் நம்முடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால வயது வரை வயதுக்கேற்ப வளர்ச்சி அடைகின்றன. பின் குறிப்பிட்ட வயதுக்குப் பின் வளர்ச்சி குறைந்து மாற்றம் அடைகின்றன.
அந்த வகையில் முடி நரைப்பது, பல் விழுவது, எலும்பு தேய்வது போன்றவைகள் வியாதிகள் அல்ல. அவை வயதக்கேற்ப ஏற்படுகின்ற மாறுபாடுகள். வயது வந்தவர்கள் வியாதிகளுக்கு ஆட்பட்டு அல்லது வயது முதிர்வினால் ஏற்படும்.
வெற்றிகரமான வயது முதிர்வு என்பது மனதைரியம், ஆழ்ந்த சிந்தனை, உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. வயது ஆனாலும், பல் விழாமல் அல்லது வயதின் காரணமாக ஏற்படகூடிய உடல் மாறுபாடுகள். குறைந்தது அவர்களின் வேலைகளை அவர்களே செய்துகொள்வது. அவர்களைத் தான் வெற்றிகரமான வயது முதிர்வடைந்தவர்கள் என்று சொல்கிறோம்.
பொதுவாக எல்லோரும் வயது ஆக ஆக எல்லா வியாதிகளும் வந்துவிடும் என்று நினைப்பது தவறான கருத்தாகும். உதாரணமாக எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்பதை வியாதியாகக் கொள்ளலாம். ஆனால் சா¢யாக நினைவில் இல்லை என்பதும் சரியாக பேச முடியவில்லை என்பதும் வியாதியல்ல, அதுபோலவே இனிப்பு சாப்பிட்டால் இரத்தத்தில் சிறிதளவு குளுக்கோஸ் அதிகரிபது இயல்பானது. ஆனால் இயல்பாகவே இனிப்பு சாப்பிடாமலேயே இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருப்பதுதான் வியாதி.
அதிகநாள் வாழ்வது என்பது பரம்பரை மரபு வழியினைப் பொருத்து அமைவதுடன் சுகாதாரமான நச்சுத் தன்மையற்ற சூழ்நிலை. உணவுப் பழக்கங்கள், மனஉளைச்சலற்ற வாழ்க்கை இவற்றைப் பொருத்து அமைகின்றது. ஏன் ஒரு மனிதனுக்கு வயதாகின்றது என்பது எப்போதும் ஏன் இளமையுடன் இருக்க முடிவதில்லை என்பதற்கு பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் காரணங்களாக கூறியுள்ளன. நமது உடலிலுள்ள திசுக்கள் குறிப்பிட்ட ஒரு காலகட்டம் வரை தான் வளர்ச்சி அடைகின்றன. அதற்குப் பிறகு அவைகளின் வளர்ச்சி நிலை குறைகின்றது. 40வயதுக்குமேல் சதைத் தேய்மானம் ஆரம்பித்து விடுகின்றது. வயது ஆக ஆக சதைக் குறைந்து கொழுப்பு அதிகமாகி விடுகின்றது அதிலும் ஆண்களைவிட பெண்களுக்குக் குறிப்பிட்ட வயதுக்குமேல் அவர்களிடம் கொழுப்பு கூடிவிடுகின்றது. காரணம் அவர்களது பழக்கவழக்க அன்றாட பணிகளில் மாற்றம் ஏற்படுவதும்தான். மற்றும் சுரப்பிகளின் குறைபாடகளுமே காரணமாக அமைகின்றது.
ஒவ்வொரு உறுப்பும் வயதுக்கேற்ப அதனுடைய பணி குறைந்து தேய்ந்து கொண்டு விருகின்றது. மூளையின் எந்தப் பகுதியில் தேய்மானம் அதிகமாக உள்ளதோ அதற்கேற்றார் போல செயல்பாடுகளிலும் மாறுதல் ஏற்படுகின்றது.
கை, கால் நடுக்கம், சாதாரணமாக சட்டை பொத்தானை கூட போட முடியாமல் போகுதல், வேகமாக நடக்க முடியாத நிலை இவைகளெல்லாம் பார்க்கின்சன் நோயைக் குறிக்கும், ஞாபகமறதி, சொன்னவற்றையே திரும்பத் திரும்பத் சொல்லுதல் இவை போன்றவைக் மூளையின் தேய்மானத்தைக் குறிக்கும் இதன் காரணமான நரம்புத் தளர்ச்சி , 40 வயதுக்க மேல் சிறுநீரகத்தின் செயலில் ஒரு வருடத்துக்கு 1 மி.லி. என்ற அளவில் GFR சிறுநீரகச் செயல் குறைத் தொடங்கும். அதன் காரணமாக சிறுநீரகத்தின் செயல்திறன் குறைந்து அதிகமாக சிறுநீர் பிரிதல், பிராஸ்டேட் சுரப்பியில் ஏற்படுகின்ற மாற்றங்கள் காரணமாக அடைப்பு, சிறுநீர் முழுமையாக பிரியாத நிலை, இதயத் துடிப்பு சீராக இல்லாமல் அதிகமாகத் துடித்தல், இரத்தக் குழாய்களின் சுரங்கி விரியும் தன்மை குறைந்து குழய்களில் அடைப்பு, சுவாசப் பைகளில் ஏற்படுகின்ற மாற்றம், நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை குறைவு, நெஞ்சு எலும்புக்கூடு கடினமாகி விரியும் தன்மை குறைவு, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம். இதன் விளைவாகவேககூட அடிக்கடி சளிப்பிடிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். சாப்பிட்ட உணவு சரியாக செரி மானமாகாத நிலை, எனவே மலங் கழிப்பதில் சிரமம்.


Last edited by Tamilzhan on Tue May 26, 2009 5:10 pm; edited 1 time in total
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..? Empty Re: 60 வயதிலும் இளமையாக வாழ்வது எப்படி..?

Post by Tamilzhan on Tue May 26, 2009 5:07 pm

எலும்பு சவ்வு நோயினால் மூட்டுவலி, முதுகுவலி, நடப்பதில் சிரமம், தடுமாற்றம் இவைகள் எல்லாம் வயது முதிர்வினால் ஏற்படக்கூடிய மாறுதல்களே தவிர, வியாதிகள் என்று கூறிவிட முடியாது.
வயது முதிர்வினால் காது கேட்பது குறைவது. கண்பார்வை குறைகின்ற போது கண்களில் புரைவிழும். இதற்கு வயது முதிர்வுதான் காரணம் என்பது சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமே தவிர, அதை வியாதி என்று கருதி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு உடலை மேலும் அதிகமாக கெடுத்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலையே தற்போது அதிகமாக உள்ளது.
வயது முதிர்வினால் கண்பார்வைக் குறைவினை நாம் எளிய வழிமுறைகளிலேயே நிவர்த்தி செய்த விட முடியும். எப்படியெனில், வெளிச்சமுள்ள இடங்களிலேயே புழங்க வேண்டும். இரவில் படுத்து உறங்கும்போது விளக்கு ஒளியில் படுத்து உறங்கவேண்டும். அல்லது கை அருகினில் விளக்கின் சுவிட்ச் இருக்க வேண்டும். கால்மிதிகள், கிழிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவைகர் தடுமாறி விழ காரணமாக அமைந்துவிடக்கூடும். தடுமாறி விழுந்தால் எலும்பு உடைய நேரிடும். உட்காருவதற்கு ஏற்றவாறான நாற்காலிகளை பயன்படுத்த வேண்டும். ஆடும் நாற்காலிகள், சக்கர நாற்காலிகளை தேவையில்லாதவர்கள் தவிர்ப்பது நல்லது.
வயது முதிர்வு அதிக குளிரையும், அதிக வெப்பத்தையும் தாங்கக்கூடிய உடல் நிலையினை இழந்துவிடுவதினால் வயது முதிர்ந்தவர்கள் அதிக வெப்பத்தையும் தவிர்ப்பது சிறப்பானதாக இருக்கும். இல்லையெனில் அவர்களுக்கு இரத்தக் குழாய் சுருங்கி மயக்கநிலை, நினைவிழத்தல், மாரடைப்பு ஏற்பட நேரிடலாம். அதிக வெப்பத்தில் உடலின் உள்ள நீர் அளவு மற்றும் உப்பின் அளவு குறைந்து நினைவிழக்க வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே வயதானவர்கள் அதிக வெப்பத்தினை தவிர்க்க வெளியே செல்லும்போது கருப்புக் குடைகளைப் பயன்படுத்துவதுடன் அடிக்கடி உப்புக் கரைத்த தண்ணீரை பருகலாம்.
இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், உடல் எடை பருமன், காது, கண் ஆகியவற்றை வருடத்துக்கு ஒருமுறையாவது சோதனை செய்து கொள்ள வேண்டும். உடலில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனை, அறிவுரையினைப் பெற §வ்ணடும்.
வயதானவர்கள், நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பதும், நடப்பதும் நல்லது சாதாரணமாக இருக்கும் போதுகூட கை, கால்களை நன்றாக நீட்டி மடக்கி மூட்டுகளுக்கு அசைவினைக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வது மூட்டுப்பிடிப்பு குறைக்க உதவும்.
நன்றாக எளிதில் எரிக்கக்கூடிய, கொழுப்பு குறைந்த சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பழங்கள் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் போன்ற திரவ உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இதன் காரணமாக செரிமான கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மலச்சிக்கல் ஏற்படுவதையும், குடல் புற்றுநோய் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.
வயதாக ஆக அதிக அளவில் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வயதானவர்கள் செய்கின்ற தவறுகளில் இதுவும் ஒன்று. பொதுவாக வயதானவர்கள் அடிக்கடி சாப்பிடுவது வலிநிவாரண மாத்திரைகளைத் தான். இது அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். வலி நிவாரணிகள் வயிற்றில் புண்ணை ஏற்படுத்தி இரத்த வாந்தி எடுக்கக்கூடிய நிலைக்குக் கொண்டு செல்வதுடன், இயல்பாகவே வயது முதிர்வின் காரணமாக குறைவாக செயல்படும் சிறுநீரகத்தினை பாதித்து மேலும் அவற்றின் செயல் திறனை குறைத்து சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அதுபோவே மலச்சிக்கல் ஏற்பட்டு சரியாக மலம் கழியவில்லை என்று மாத்திரை சாப்பிடுவதும் நல்ல பழக்கமல்ல, தவறான செயலாகும்.
நல்ல உடற்பயிற்சியும், கீரை, பழங்கள், திரவ ஆகாரங்கள் எடுத்துக் கொண்டலே போதுமானது. வயது முதிர்வின் காரணமாக குடலின் செயல் திறனும், பற்கள் இல்லாதது அல்லது வலுவிழந்த நிலையில் இருப்பதால் உணவினை சா¢யாக மென்று, அரைத்து சாப்பிட முடியாத நிலையுமே தான் மலசிக்கலுக்கும் காரணம். இதை விடுத்து மாத்திரை சாப்பிடுவது மேலும் மேலும் மலசிக்கலுக்கும், சிறுநீர் சரியாக பிரியாமைக்கும் காரணமாகிவிடுவதுடன் கண்களில் அழுத்தமேற்பட்டு கிளைக்கமோ போன்றவை ஏற்படவும் வழியேற்படுத்திவிடும்.
பற்கள் இல்லாதது குறையல்ல. செயற்கைப் பற்கள் பொருத்திக் கொள்ளலாம். கண்பார்வை குறைவுக்கு அறுவை சிகிச்சையோ அல்லது கண்ணாடி அணிந்தோ சரிசெய்து கொள்ளலாம். அது போன்றே சர்க்கரை நோய், இரத்த கொதிப்புள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை, அறிவுரையின்றி அவர்களாகவோ மாத்திரைகளை வாங்குவதோ, நிறுத்தி விடுவதோ, கூட்டிக் குறைத்துக் கொள்வதையோ செய்யக் கூடாது. ஏனெனில் அவர்களுக்கு எழுந்து நின்றால் மயக்கம் வருவது. தடுமாற்றம், சர்க்கரை, சர்க்கரை அளவு குறைந்து நினைவு இழத்தல் ஏற்பட ஏதுவாகும். தூக்கம் இல்லை என்பதற்காக மாத்திரைகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.
வயதானவர்களின் எலும்புகள் வலுவிழந்த நிலையில் இருப்பதால் அவை எளிதாக உடைந்துவிடக்கூடிய வாய்ப்புண்டு, எனவே மிகக் கவனமாக இருக்க வேண்டும். வழுவழுப்பான தரைகளையும் குளியல்அறைகளையும் தவிர்த்து சொரசொரப்புள்ள தளங்களைப் பயன்படுத்த வேண்டும். குளியல் அறைகளில் எளிய தாழ்ப்பாள் வசதிகளை செய்து கொள்ளவேண்டும். குடும்பக் கவலை தனிமை, கவனிப்பற்ற நிலை, வயதானவர்களின் மன நிலையினை பாதிக்கும். எனவே அவர்கள் தங்களை இறைவழிபாடு, தியானம் போன்றவற்றில் சிந்தனையினை திசை திருப்பி தனிமையையே இனிமையாக்கிக் கொள்ளலாம். பிராணயம் போன்ற தியானங்கள் மூலம் மூச்சிக்கும், உடலுக்கு வலு சேர்ப்பதுடன் மனத்தையும் ஒரு நிலைப்படுத்த முடியும். என்றைக்கும் இளவயது போல் வாழ வேண்டும் என்ற நினைப்பினை மாற்ற, எப்போதும் மனநிலையினை இளமையாக வைத்துக் கொள்வதுடன், உடலையும் பாதுகாத்து வாழ்க்கையினை வாழும்படியான எண்ணங்களுடன் நிம்மதியுடன் எல்லோராலும் வாழ முடியும். வாழ்க வளமுடன்.
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum