ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by சக்தி18 Today at 12:31 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:31 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 9:31 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by krishnaamma Yesterday at 9:01 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

» இந்தப் பெண்ணின் ஆக்ரோசம்-நீங்களே பாருங்கள்
by சக்தி18 Yesterday at 7:41 pm

» சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு - ரசிகர்கள் குஷி
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by heezulia Yesterday at 4:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 3:34 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Yesterday at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

Admins Online

நோய்களும் சிகிச்சைகளும்

Go down

நோய்களும் சிகிச்சைகளும் Empty நோய்களும் சிகிச்சைகளும்

Post by தாமு on Thu Apr 01, 2010 3:20 pm

முதலில் நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சமையல் உணவுகளினால்தான் மனிதன் பல்வேறு நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. நோயாளியான மனிதன் ஒரு மீன் மாதிரி. மீன் தண்ணீரில் மட்டும் தான் வாழ முடியும். நான் தரையில் தான் இருப்பேன். என்னைக் காப்பாற்றுங்கள் என்றால், யாரால் காப்பாற்ற முடியும்?
ஆஸ்துமா, இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோயாளிகள் (சாகும் வரை மருந்தை உணவாக சாப்பிடத் தயாராக இருப்பவர்கள்) முழு இயற்கை உணவில்தான் உண்மையான ஆரோக்கியம் பெற முடியும். அவர்கள் சமைத்த உணவையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடைய ஆரோக்கியத்தை நாம் காப்பாற்றுவது கடினம். அந்த நோயாளிகள் மருந்து மாத்திரை ஊசிகள் மூலம் நோய்கள் நீங்கப் பெற்றாலும் அதற்குப் பிறகும் கூட ஒரு ஆரோக்கியமான மனிதனைப் போல சாப்பிடவோ, நடக்கவோ, ஓடவோ, வேலைகள் செய்யவோ முடியாமல் நோயாளியைப் போலவே வாழ்ந்திடும் நிலை ஏற்படுகிறது. எனவே மீன் நிலையிலுள்ள நோயாளி மனிதன் முற்றிலும் சமையல் உணவை நிறுத்தி, பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட ஆரம்பித்தால் இழந்த ஆரோக்கியத்தை மீளப் பெற முடியும். எனவே தன்னுடைய தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் மீன் நிலைக்கு தள்ளப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அளவாகச் சாப்பிட்டு ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் சாப்பிடாமல் 24 மணி நேரமும் பசித்துக கொண்டு இருக்கும்படி சிகிச்சை பெற வேண்டும். பசி இருந்துகொண்டே இருந்தால் ஓரளவு ஜீவகாந்த சக்தி மீதி இருக்கின்றது என்று அர்த்தம். அந்த சக்தி தான் நோய் குணமடைய உதவி செய்யும் என்று அர்த்தம். மருந்துகளின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரட்டஸ் கூறுகிறார். “நோயாளிகளுக்கு கொடுக்கும் அதிகமான உணவு அதிகத் தொல்லை தரும். மனிதனுடைய உணவு மருந்தாக இருக்க வேண்டும். மருந்தே உணவாக இருக்க வேண்டும்” என்று.
எந்தக் காரணங்களினால் ஆஸ்துமா வந்தாலும் அது எப்படிப்பட்ட ஆஸ்துமாவாக இருந்தாலும் இயற்கை உணவில் இனிமையாக குணம் பெறலாம். மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் நோயாளிகள் அஹிம்சை எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீரில் சிறிது தேன் கலந்து ஒரு டம்ளர் வரை சாப்பிடலாம். இவ்வாறு மூன்று நாட்கள் முடிந்தவரை பட்டினியாக இருந்தால் உடல் சுத்தம் அடைந்து நுரையீரல் அடைப்பட்டிருந்த சளி, வெளியேறத் துவங்கிவிடும். முதலில் பல காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால், அலர்ஜி என்று சாப்பிடாமலிருந்தவர்கள் இந்த மூன்று நாள் பட்டினிக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தால் உடல் ஏற்றம் கொள்ளும். தினசரி காலையிலும், மாலையிலும் அரை மணி நேரம் தொட்டில் குளியல் அல்லது முதுகுத்தண்டு குளியல் அல்லது ஈரத்துணி குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா வருவதற்கான முக்கிய காரணமான சமைத்த உணவு வகைகள், பால் சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்த்தல் வேண்டும். இயற்கை காபி அல்லது இயற்கை டீ போன்றவற்றை பனை வெல்லத்தோடு சேர்த்து பருகலாம். தூதுவளை, துளசி, வெற்றிலை இவற்றில் கைப்பிடியில் பாதியளவு எடுத்து மென்று சாப்பிட்டு சக்கையை துப்பி விடவும். மதிய உணவு கீழ்க்காணும் விதத்தில் சாலச் சிறந்தது.
சாதம் ஒரு கரண்டி - கொத்தமல்லி அல்லது புதினா சட்னி - சமைத்த காய்கறிகள் இரண்டு கரண்டி - சமைக்காத காய்கறிகளின் பச்சடி 2 கரண்டி - தக்காளி, வெங்காயம் நறுக்கி தேங்காய் துருவல் போட்டுக் கலந்த முளைவிட்ட பயறு தானியங்கள் ஒரு கரண்டி - நறுக்கிய இயற்கை பழங்கள் (ஆப்பிள், சப்போட்டா, மா, பலா, வாழை, கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை) போன்றவற்றையும் மேலே கூறியபடி சாதம் ஒரு பங்கும் மீதி எல்லாம் சேர்த்து பத்து பங்காக அமைத்துக் கொள்ளவும்.
உணவே மருந்து
பச்சைக் காய்கறிகளைப் பற்றிய தகவல்களைத் தந்து, அவற்றின் மூலம் ஒரு சில நோய்கள் வரும் முன் அவற்றிலிருந்து தற்காத்து தடுத்துக் கொள்ளவும், நோய்கள் வந்த பின் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மருத்துவக் குறிப்புகளையும் தந்து “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை தெளிவுபடுத்த முயன்றுள்ளேன்.
இயற்கையின் படைப்பில் தான் எவ்வளவு விந்தைகள், இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகில் தினம் தினம் புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள், புதுப்புது மாற்றங்கள் என மாறிவரும் நாகரிகங்களின் வளர்ச்சிக்கேற்ப புதுப் புது நோய்களும் ஏற்பட்டு மனித குலத்திற்கு சவால் விட்ட வண்ணம் அச்சுறுத்தலை தந்து கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. அதுபோன்றே இயற்கை சீற்றமாய் வெளிப்பட்ட சுனாமியின் தாக்கம், தொடர்ந்து பூகம்பம், வெள்ளம், கேதரீனா மற்றும் ரீட்டா போன்ற புயல், அப்பப்பா நினைத்துப பார்த்தால், இயற்கையின் தாக்கம் என்பது, உலகை அச்சுறுத்துகின்ற நிலையில், அனைவரையும் பீதியடையச் செய்வது என்பது நியாயம் தானே!
இவற்றையெல்லாம் ஒரு சில நேரம் நினைத்துப் பார்த்து, சிந்தித்து செயல்பட முற்பட்டால் மனிதர்களின் வாழ்வில் முன்னேற்றங்களும், இயற்கைக்கு எதிராகச் செய்யும் காரியங்களின் விபரீதங்களும் புரிந்துவிடும்.
அதிலும் மனிதனின் ஆரோக்கியம் என்பது இயற்கையின் அமைப்பில் பஞ்ச பூதங்களான நிலம், நிர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பதோடு இயற்கையாகவே கிடைக்கும் பச்சைக் காய்கறிகள், கீரை, கனி வகைகள், மூலிகைப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை முறையாக உபயோகப்படுத்தும் வழிவகைகளை எண்ணற்ற நூல்கள் மற்றும் மருத்துவ உரைகள் மூலம் அறியும் வாய்ப்புகள் இருக்கும்போது, அவற்றை முறையாக நாம் பின்பற்றுகிறோமோ என்றால் அதுதான் இல்லை. எனவே அடிப்படையில் வள்ளுவர் குறளில் காட்டிய “நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்” என்பதற்கேற்ப, நாம் அனைவரும், வாழ்கின்ற காலத்தில் நோயின்றி நலமும் வளமும் சூழ வாழ்ந்திட இத்தகைய இயற்கை உணவினை உட்கொள்ளுவது தான் சாலச் சிறந்தது.
கட்டுரையின் தொடக்கத்தில் கூறியபடி, காய்கறிகள் என்றால் நமக்கு உடனே நினைவில் வருவது, நமது தாயகத்தில் அன்றாடம் புத்தம் புதிதாய் நம் வீட்டு பின் புறத்தில் விளையும் காய்கறிகளான, கத்தரி, வெண்டை, பூசணி, பரங்கி, கொத்தவரங்காய், அவரை, இஞ்சி, நாட்டுத் தக்காளி, முருங்கை, அரிநெல்லி, சுண்டக்காய், புடலை, வாழைக்காய், பாகற்காய், தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கீரை வகைகளான தண்டுக்கீரை, புதினா, மல்லி, முளைக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக்கீரை, பச்சை கொத்தமல்லி ஆகியவற்றோடு நார்த்தை, மாங்காய், மாதுளை, பலா, வாழை மற்றும் விதவிதமான மலர்ச்செடிகள் என எவ்வளவு வகைகள்.
அதுவும் விடியற்காலைப் பொழுதில், அவற்றைப் பார்த்து ரசித்து, அன்றைய சமையலுக்கு என மார்க்கெட் பக்கம் கூட செல்ல தேவையின்றி, நாம் விளைவித்த உணவுப் பயிர் வகைகள் என்ற மகிழ்வில் சமைத்து சாப்பிடுவோமே, அதன் சுவையும், அதன் மருத்துவ குணங்களுக்கும், இன்று புலம்பெயர்ந்து வாழும் நாம், டின் புட் மற்றும் பாஸ்ட்புட் என்ற செயற்கைப் பண்டங்களின் மூலம் பெறுகிறோமா அல்லது வாய்க்கு ருசியாகத் தான் சாப்பிட முடிகிறதா என்பதே என் கேள்வி? நம் நாட்டில் தான் ஒரு சில காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் கனி வகைகள் ஒரு சில சீசன்களில் மட்டும் தான் விளையும் அல்லது கிடைக்கும். ஆனால் கனடாவிலோ வருடம் முழுவதும் சீசன்தான். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்தும் முறையில் பேக் செய்யப்பட்டு, புத்தம் புதிதாய் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கனி வகைகள் ஆகியவை இருக்கிறதே, அவற்றை வரிசைப்படுத்தி, அதன் மருத்துவ குணத்தையும், பயன்படுத்தும் விதத்தைப் பற்றி எழுதுவதென்றால், எனது கட்டுரையினை முடிக்கவே மிகவும் சிரமமாகும். காரணம்! அந்த அளவிற்கு உலகின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் அனைத்து வகையான காய்கறி மற்றும் கனிவகைகள் (இவற்றில் பலவகை கனடா நாட்டில் விளைவதுமில்லை, கிடைப்பதும் அரிதாகும்) தினமும் இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள பிரபல பெரிய கடைகளிலும், நம்மவர் நடத்தும் பல்வேறு கடைகளிலும் கிடைக்கின்றன. விலையும் கூட கனடிய நாணய மதிப்பிற்கு மிகவும் நியாயமானதுதான். அந்த வகையில் சாதாரண முருங்கைக்காய் முதல் வேப்பிலை வரை, அதுபோன்றே வாழைப்பழம் முதல் தர்பூசணி வரை எவ்வளவு ரகங்கள். இவற்றில் நம்மைப் பொறுத்தவரை முதலில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒரு சில பச்சைக் காய்கறிகளைப் பற்றி பார்ப்போம். இங்கு கத்தரி, வெண்டை, முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி, பீன்ஸ், கேரட், காலிபிளவர், பீட்ரூட், புரெக்கோலி, பூசணி, பரங்கி, பாகற்காய், சுண்டைக்காய், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் என நம்மூர் வகைகள் அனைத்துமே எளிதாய் விற்கப்படுவதால், அவற்றை நமது அன்றாட உணவில், பக்குவமாக சுவைகூட்டிச் சமைத்து உண்போமானால், அப்புறம் நோய்க்கு இடமேது!
An apple a day keeps the Doctor away என்ற பழமொழிக்கேற்ப இங்கு விற்கப்படும் ஆப்பிள் பழம் இருக்கிறதே, அதன் நிறமும், தரமும், அளவும், சுவையும் மிகவும் தனித்தன்மையுடையதாகும். விலையும் மலிவு என்பதால் அன்றாடம் ஒவ்வொருவரும் அவசியம் ஆப்பிளை சாப்பிட்டாலே போதும். இரத்தக்கொதிப்பு, சுகர் மற்றும் மூட்டு வலி என்ற உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏன் பிற நோய்களும் தோன்றாது என அறுதியிட்டு கூறலாம். எனது ஆத்ம திருப்தியே இங்குள்ள எம்மின மக்களுக்கு இயற்கை மருத்துவத்தின் அற்புதங்களையும், பக்க விளைவு ஏற்படாத வகையில் அதன் பயன்படுத்தும் வகைகளையும் இந்நூலின் மூலம் வழங்கி, மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கேற்ப எனது மருத்துவச் சேவையை தொடர முற்பட்டுள்ளேன்.


டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D., நோய்களும் சிகிச்சைகளும் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நோய்களும் சிகிச்சைகளும் Empty Re: நோய்களும் சிகிச்சைகளும்

Post by அப்புகுட்டி on Fri Apr 02, 2010 3:34 am

அனைவரும் படித்தறிய வேண்டிய தகவல் அருமை நன்றி பகிர்ந்தமைக்கு தாமு ஜீ நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum