ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:25 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:37 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by ayyasamy ram Today at 8:33 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

Admins Online

'ஜோடி' - தமிழ் அறிவோம்

Go down

'ஜோடி' - தமிழ் அறிவோம் Empty 'ஜோடி' - தமிழ் அறிவோம்

Post by சிவா on Sun Apr 11, 2010 4:50 pm

இரண்டு என்பதைக் குறிக்க இரட்டு, இரட்டை, இணை, துணை, பிணை முதலிய இனிய தமிழ்ச்சொற்கள், இலக்கிய வழக்கு, உலகியல் வழக்கு ஆகிய இருவகை வழக்குகளிலும் பயில வழங்குகின்றன. இவற்றொடு 'சோடி' என்னுமொரு சொல்லும் பெருக வழங்குகிறது. இதனை, 'ஜோடி' என்று சொல்வதும் எழுதுவதும் அழுத்தமாக உள்ளது. 'ஜோடி' என்று எழுதாமல் 'சோடி' என்று எழுதினால் 'வடமொழி வெறுப்பர்' என்று சொல்வாரும் உளர். அச் சொல்லின் உண்மைப் பிறப்பு, உறுதிப்பட்டால் அன்றித் தமிழரும் ஏற்றுக்கொள்ளார். ஏனெனில், அவர்களுள் பலரும் 'ஜோடி'யைத்தானே 'ஜோடி'த்து மகிழ்கிறார்கள்!

பழங்காலத்தில் எழுது பொருளாக ஓலை இருந்ததென்பது வெளிப்படை. ஓலையொடு 'ஏடு' என்பதும் அதற்கொரு பெயர். புல்வகை உறுப்புகளைச் சொல்ல வந்த ஆசிரியர் தொல்காப்பியனார்,

"கோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடும் வருமெனச் சொல்லினர் புலவர்"


என்று அவர்க்கு முந்தைப் புலவர் வழங்கிய மரபினைக் குறிப்பிடுகிறார்.

ஏட்டில் எழுதுவார் தம் விருப்புக்கு ஏற்ற அளவில் நெடிய ஓலையில் ஓர் ஒழுங்குற முறித்தோ, நறுக்கியோ, கிள்ளியோ ஏடு எடுப்பர். ஆகலின் ஏடு, 'முறி' என்றும், 'நறுக்கு' என்றும், கிள்ளாக்கு' என்றும் பெயர் பெற்றது. ஓர் ஏட்டிலேயே ஒருவர் எடுத்துக்கொண்ட நூல் முற்றுப் பெறுவதில்லை. ஆதலால், பல ஏடுகளை ஓரளவில் எடுத்துத் தொகுக்க வேண்டியதாயிற்று. ஓர் ஏட்டுடன் ஒப்பிட்டு ஓரளவில் எடுப்பதைச் 'சுவடி சேர்த்தல்' என்பது வழக்கு. ஒன்றோடு ஒன்றை, ஒப்பான அளவாக்கி நறுக்கிச் சேர்ப்பதால், இரண்டைச் 'சுவடி' என்னும் வழக்கம் ஏற்பட்டது. சுவடி என்னும் சொல் தோன்றிய வரலாறு இது. சுவடி என்பதற்கு இணை, இரண்டு, இரட்டை என்பதே பொருளாம்.

உருவமும் பருவமும் ஒத்த இரண்டு பிள்ளைகளைச் 'சுவடிப் பிள்ளைகள்' என்பதும், ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு இணை சேர்க்கும் காளைகளைச் 'சுவடிக் காளைகள்' என்பதும் நாடறிந்த செய்தியே. இச் சுவடிகள் இணைப்பொருள் தருவனவேயாம்.

'நாட்டுக்கு நாட்டு மட்டம் -நாமிரண்டும் சோடி மட்டம்' என்பதொரு நாட்டுப் புறப் பாட்டு! இவ்வாறு இரண்டு என்னும் பொருள்தரும் சுவடியாம் சோடி 'ஒரு சோடி செருப்பு', 'ஒரு சோடி வேட்டி' எனப் பேச்சு வழக்கிலும் வழங்குகின்றது. சுவடியில் இருந்து பிறந்தது சுவடு என்னும் சொல். எப்படி?

இரண்டு கால்கள் நிலத்தில் படியும் - பதியும் - படிவை அல்லது பதிவைச், 'சுவடு' என்பது இலக்கிய வழக்கு. பிரிவு மேற்கொண்ட தலைவியைப், பரிவு மேற்கொண்ட செவிலித் தாய் தேடி வரும்போது, 'சுவடு கண்டு இரங்கல்' என்பதொரு துறையில் புலவர்கள் பாட்டியற்றல் அகப்பொருள் இலக்கணச் செய்தி. 'சுவடு கண்டு' என்பது, 'தலைவியின் கால் தடம் கண்டு' என்னும் பொருள் தருவதாம்.

"மாதர் பிறைக்கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது"


என்பது அப்பரடிகள் வாக்கு (4 : 3 : 1 ). இதில், 'சுவடு' கால் தடத்தைக் குறிக்கின்றது.

கால் தடத்தைக் குறிக்கும் 'சுவடு' குதிரையில் ஏறுதற்குக் கால் வைக்கும் 'அங்க வடி'யையும் குறிக்கலாயிற்று. மயிலேறி விளையாடும் மகிழ்முருகனுக்குக் குதிரை, மயில்தானே! அம்மயிலேறும் 'பக்கரை'யையும் சுவடாகக் கொண்டனர். அதனால் அகரவரிசையாளர், சுவட்டுக்கு அங்கவடி, பக்கரைகளையும் இணைத்தனர்.

இனிச், சுவடி 'சோடி' யானது போலச், சுவடு 'சோடு' ஆகியது. "காலுக்குச் சோடில்லை" என்பது புலவர் ஒருவரின் பெருங்கவலை. "சோட்டால் அடிப்பேன்" என்பது சினத்தான் செருக்குரை.

ஒப்பிணைப் பொருளாம் சுவடியில் இருந்து, சுவடித்தல், சுவடிப்பு, சுவடணை என்னும் தொழிற்பெயர்கள் பிறந்தன. தேர், பல்லக்கு, அரங்கம், ஆட்டக்களம், மன்றம், மாளிகை முதலியன அழகுறுத்தப்பெறும்போது, இப்பாலும் அப்பாலும் ஒப்பு நோக்கி, இணை இணையாய்ச் செய்தலுடைமையால் அவ் வழகுறுத்தும் கலைச் செயல் இப்பெயர்களைப் பெற்றது. இவையே பின்னர்ச் சோடித்தல், சோடிப்பு, சோடணை என்றாயிற்று. இவற்றையும் வடமொழித்தாக்கர் விடுவரா? ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணையாக்கி மகிழ்ந்தனர்.

ஒப்பிணைப் பொருளால் வளர்ந்த 'சுவடு' இரு பதிவாம் தடங்களைக் குறித்ததில் இருந்து வளர்ந்தது. நடந்தும் ஓடியும் அழுந்தித் தடம் பட்டுப்போன வழியையும், பெருவழியையும் குறிக்கலாயிற்று.

"தேரின் சுவடு நோக்குவர்"
என்று குறிக்கும் கம்பர் (அயோ. தை.82)


"மண்ணின் மேலவன் தேர்சென்ற சுவடெலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது"என்று முடித்தார். (ஆரண்.சடா.165).


மண்ணின் தடத்தை விடுத்து விண்ணின் தடத்துக்கும் எழும்பினார் ஆளுடைய அரசர்.

"அண்டங் கடந்த சுவடும் உண்டோ
அனலங்கை ஏந்திய ஆடலுண்டோ?"

என்பது அவர் வாக்கு (தேவா. 6 : 97: 1). இவண் 'சுவடு' அடையாளப் பொருட்டது.

'சுவடு' தன் பொருளில் மேலும் வளர்ந்தது; நீர் ஒழுகும் தடம், புண், தழும்பு இவற்றையும் குறிப்பதாயிற்று. யானையின் மதம்பாய் தடம் 'மதம் பாய் சுவடு' என்றும் 'யானைச் சுவடு' என்றும் வழங்கலாயிற்று. குருதி கொட்டிய தடத்தைச் 'செம்புனற் சுவடு நோக்கி இது நெறி' என்று சுட்டுகிறார் கம்பர் (உயுத். மகரக்.29). ஏனைய புண்ணும் தழும்பும் வெளிப்படை.அழுந்திய தடத்தில் இருந்து சுவடு, 'அழுந்திய மரபு' சுட்டும் சொல்லாகவும் கொங்கு வேளிரால் கொண்டாடப் பெறுவதாயிற்று.

"சொல்லினன் வினவும் சுவடுதனைக் கின்மையின்"

என்றார் அவர் (பெருங்.உஞ்.34 : 79). இங்குச் சுவடு 'மரபு' அல்லது அடிப்பட்ட வழக்கினைக் குறிக்கிறது. வழித் தடத்தில் இருந்து வாழ்வுத் தடத்துக்கு வந்து வழி இது.சுவடி, சுவடு என்னும் தனித் தமிழ்ச் சொற்களின் வழிவந்த சோடி, சோடு, சோடித்தல், சோடிப்பு, சோடணை என்னுஞ் சொற்களை, இனியேனும் ஜோடி, ஜோடு, ஜோடித்தல், ஜோடிப்பு, ஜோடணை என வேற்றெழுத்தால் எழுதும் இழிவினைத் தமிழர் ஒழிப்பாராக! எழுத்து ஏமாற்றம் என்றும் நிலைக்காது என்றும், என்றேனும் உண்மை ஆய்வால் வெளிப்பட்டே தீரும் என்றும், அறிஞர்கள் ஆய்ந்து தெளிவுறுத்துவார்களாக!

-புலவர் இரா.இளங்குமரன்
நன்றி : செந்தமிழ்ச் செல்வி 56-வது சிலம்பு


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

'ஜோடி' - தமிழ் அறிவோம் Empty Re: 'ஜோடி' - தமிழ் அறிவோம்

Post by ரிபாஸ் on Sun Apr 11, 2010 4:52 pm

அருமையான தகவல் தல நன்றி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

'ஜோடி' - தமிழ் அறிவோம் Empty Re: 'ஜோடி' - தமிழ் அறிவோம்

Post by கலைவேந்தன் on Mon Apr 12, 2010 9:58 am

ஜோட் என்றால் வடமொழியில் இணைப்பது என்பது பொருளாகும்.

அதிலிருந்து வந்த சொல்லே ஜோடி என்பது.

புலவர் இரா இளங்குமரன் வடமொழி அறிவாரா என்று தெரியவில்லை. எல்லாமே தமிழ் என்று பொய்யாய் பெருமை கொள்வதும் தவறுதான்.

சுவடு என்பதற்கும் ஜோடி என்பதற்கும் பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள வேறுபாடு என்பதை மறந்துவிட்ட புலவர் எதையோ கூறி எதையோ சேர்க்க எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.

வடமொழியான சம்ஸ்கிருதம் மிகப்பழங்காலத்திலேயே தமிழுடன் இணைந்து கலந்து வழங்கி வருதலால் நிறைய சொற்கள் த்மிழைப்போலவே கலந்துவிட்டன்..

மொழி என்பது இளகிய ( FLEXIBLE ) தன்மை கொண்டதாக அமையும்போது தான் வளர்கிறது. தழைக்கிறது. தமிழும் அவ்வாறே...

அரிய தகவலுக்கு நன்றி தல.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

'ஜோடி' - தமிழ் அறிவோம் Empty Re: 'ஜோடி' - தமிழ் அறிவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum