புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
60 Posts - 48%
heezulia
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_m10உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் ஜனனம்(கரு எப்படி உருவாகிறது )


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:30 am

உயிர் ஜனனம் [ மருத்துவ அறிவியல் ]


- Dr. டி. நாராயண ரெட்டி அவர்கள் எழுதி ஜுனியர் விகடனில் வெளிவந்த 'உயிர்' என்ற தொடரிலிருந்து சில பகுதிகள்

இயற்கையின் சிருஷ்டியில் மிகமிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலேயே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர்... தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப் பின் வெளியுலகுக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் எண்ணத்தில் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை எப்படி உயிர் உருவாகிறது? என்ற சுவாரஸ்யமான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்தக் காலத்தில், விஞ்ஞான வளர்ச்சி இல்லாததினால் ஒரு பெண்ணின் உடம்புக்குள் நிகழ்வதை வெளியிலிருந்து தெரிந்துகொள்ள இயலாத நிலை இருந்த தால், கரு எப்படி உருவாகிறது என்பது தெரியாமல் இருந்தது. விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந்தித்துக் கரு உருவாகிறது என்பது தெரியாமலே இருந்தது என்பதே உண்மை!

ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால்& ஆணின் பிறப்புறுப்புகள் சரியாக இருப்பதுடன், அதன் செயல்பாடுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போதுமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப்புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலிருந்து வெளியேறும் உயிரணு, கருவாக உருமாற வாய்ப்பு ஏற்படும்.

ஆணின் பிறப்புறுப்பு இரண்டுவிதமாக அமைந்துள்ளது. கண்ணுக்குப் புலப் படுவது மாதிரியான அமைப்பு. கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண்ணுக்குத் தெரியாமல் உட்புறமாக அமைந்திருப்பவற்றில், விதைகள் உட்பட பல உறுப்புகள் உள்ளன.

கருவை உருவாக்க ஆணின் விந்தில் உள்ள உயிரணுவால் (Cell /
Stem Cell) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப்புறுப்புக்குள் செல்லப் பயன்படுவதுதான் ஆண் குறி.


[சமீப காலம்வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட்டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அதனால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆண் குறியைப் பெண் குறிக்குள் செலுத்துவதற்காகவே இயற்கை, ஒரு விஷயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம். ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறிவிட்டது. ஆண் குறியைப் பயன்படுத்தாமல்... செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிரணு உள்ள விந்தை மட்டும் பயன்படுத்திக் கரு உருவாக்க பல வழிமுறைகள் வந்துவிட்டன. பெண்ணின் கருப்பையிலிருந்து கருமுட்டை வெளிவரும் சமயத்தில், ஆணின் விந்தை எடுத்து அதற்குள் செலுத்தி விடுவது ஒரு வழி. இதற்கு இன்ட்ரா யுடிரியன் இன்செமினேஷன் (interuterine insemination) என்று பெயர். இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை. இதில் ஆணின் உயிரணு, பெண்ணின் கருமுட்டை இரண்டையும் தனியாக வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத்துக் கருவை உருவாக்கி விடுகிறார்கள். ]


பொதுவாக ஒரு ஆண், பருவ வயதை அடைந்த பின்னர் அவனின் ஆண் குறி 3 முதல் 4 அங்குலம் (விறைப்பு தன்மையில்லாதபோது) நீளமாக இருப்பதுடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதாரண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும்போது 7 அங்குலம் வரை நீளும். சுற்றளவு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவொரு சராசரி அளவு. விதவிதமான உயரம், அதற்கேற்ப விதவிதமான எடைகளில் ஆண்கள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும் சிறிதாகவும் பெரிதாகவும் அமைந்திருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், சாதாரண நிலையில் ஆண் குறி எந்த அளவில் இருந்தாலும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கும்போது எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். அதேபோல, ஆண் குறி விறைத்த நிலையில் பெண் குறியின் கடைசிவரை உள்ளே போனால்தான் கரு உருவாகும் என்று கருத வேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால்கூட போதும்.



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:37 am

[ஒரு பெண்ணைத் திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. ஏனெனில், பெண்ணின் பிறப்புறுப்பின் வெளிப்புற முன்பக்கத்தில் இரண்டு அங்குலத்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்புகள் அமைந்துள்ளன. எனவே ஆண் குறி விறைப்பு நிலையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போதுமானது. அதற்கு மேல் அதிகமாக இருப்பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை. பொதுவாக இயற்கை எல்லா ஆண் களையுமே போதுமான அளவுள்ள ஆண் குறியுடன்தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்து லட்சத்தில் ஒருவருக்கு விதிவசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண் குறி, பிறவிக் குறைபாடாக அமைந்துவிடலாம். இதற்கு மைக்ரோ பீனிஸ் என்று பெயர். ]

அடுத்து, விதைப்பையைப் பற்றி பார்ப்போம். ஆண் குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதை வடிவில் சாதாரண நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த விதைப்பை, உணர்ச்சிவசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி சிறிது சுருங்கி விடும். இதற்குள் இரண்டு விதைகள் உள்ளன. பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப் பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையைவிட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பின் பொது வெப்ப அளவைவிட குறைவான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கிறது இயற்கை.


[விதைப் பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதாலும்தான், வெப்ப மண்டலப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண்கள் இறுக்கமான ஆடைகளைக் அணியக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், விதைப்பையின் வெப்ப நிலை உயர்ந்து உயிரணுக்களின் தரமும், செயல்பாடும் பாதிக்கப்படும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரமும் உள்ளாடைகளை அணியக்கூடாது என்றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள்.]

விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன்றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும். இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத்தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியும் இருக்கும். இது ஏன் என்பதற்கான காரணத்தை மருத்துவ உலகம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் யூகமாக, நடக்கும்போது இரண்டு விதையும் இடிபடாமல் இருப்பதற்காகவும், அடிபட்டால் கசங்கி விடாமல் இருப்பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த விதைகள், கரு உருவாக்கக்கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டாஸ்டொரான் (ஜிமீஷீமீக்ஷீஷீஸீமீ) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுதல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோனின் பரிசுதான்!




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:41 am

ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடிவயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரி அமைந்திருக்கும். செமினல் வெஸிக்கிள்ஸ் எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தின் ஒரு பகுதியாகும். அடுத்து, ப்ராஸ்டேட் கிலாண்ட் என்பது சிறுநீர் பைக்குக் கீழ் அமைந்துள்ளது. இது ப்ராஸ்டேட் ஃப்ளூய்டு எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.

[ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் உருவாகும் விந்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. எல்லா நாட்டு மக்களிடமும் இந்த மனோநிலை இருந்தது. ஒரு குழந்தையை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ் இன்பத்துக்கோ, செக்ஸ் செயல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபித்த பிறகுதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.. ]

ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவைதான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வதில் விதையின் பங்கு 1 சதவிகிதம், செமினல் வெஸிக்கில்ஸின் பங்கு 60 சதவிகிதம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.

கருமுட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயிரணு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவுக்கு சக்தி கொடுத்து, ஆரோக்கியம் அளிப்பது செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல விதையில் உருவாகும் உயிரணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய அதற்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திரவத்தின் பணி. இதில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இருப்பதால், கிட்டத்தட்ட 6 கலோரி அளவு சக்தியை இது உயிரணுவுக்குத் தருகிறது.

அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக்கும். வெளியிலிருந்து கிருமிகள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது இந்த அமிலங்கள் அக்கிருமிகளை அரித்துவிடும். இதன் மூலம் பெண்ணின் கருப் பையையும், கருமுட்டையையும் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்கப்படாமல், பெண்ணின் உறுப்புக்குள் போவதற்காக பிராஸ்டேட் சுரப்பி உதவுகிறது. அதாவது, அமிலத்தன்மைக்கு எதிரான காரத்தன்மை கொண்டதாக இந்தத் திரவம் இருக்கும். இதனால் அமிலத்தன்மை உள்ள பாதையில் உயிரணு எந்த சேதமுமின்றி பயணிக்கும்.

விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வயதுக்கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் அந்தி வரைக்கும்... ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது. பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடிபட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டும்தான் இதன் பணி பாதிக்கப்படலாம்.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:52 am

வேளாண் துறையில் விதை மற்றும் மண் இந்த இரண்டின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். இந்த இரண்டும் ஒரு பயிர் வளர, அடிப்படையான விஷயங்கள். அதேபோல்தான், ஒரு உயிர்வளர விதை என்ற உயிரணுவும், அதைத் தாங்கிச் சுமந்து வளர்க்கக்கூடிய கர்ப்பப் பை என்ற நிலமும் தேவை!

ஆணின் விதையிலிருந்து உருவாகும் உயிரணுவில் தலை, உடம்பு, வால் என மூன்று பகுதிகள் உள்ளன. தலைப்பகுதி கிட்டத்தட்ட வேல் வடிவத்தில் அமைந்திருக்கும். இந்தத் தலைப் பகுதியில்தான் ஒரு மனிதனின் பரம்பரைத் தன்மைகள் பொதித்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட அந்த மனிதனின் குணம், நிறம், பரம்பரை நோய்கள் போன்ற அனைத்தும் உயிரணுவின் தலைப் பகுதியில்தான் அடங்கியிருக்கும். ஒவ்வொரு உயிரணுவின் தலைப்பகுதியிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும் (பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோசோம்கள் இருக்கும்).

உயிரணுவின் உடல் பகுதியை, உயிரணுவின் பவர் ஹவுஸ் என்றுதான் சொல்லவேண்டும். ஆண்குறியிலிருந்து வெளியேறும் ஒரு உயிரணு... பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையிலும், பெலோபியன் குழாய்களிலும் நீச்சலடித்துக் கருப்பைக்குள் செல்ல வேண்டும். இப்படி முழு வீச்சுடன் முண்டியடித்து நீந்தி செல்வதற்கான சக்தியை உயிரணுவுக்குத் தருவது, உயிரணுவின் உடல் பகுதிதான்.

பெண்ணின் பிறப்புறுப்புக்குள் உயிரணு நீந்திச் செல்லப் பயன்படுவது, அதன் வால்பகுதி. தலைப்பிரட்டை எனப்படுகிற தவளைக் குஞ்சு மாதிரிதான், உயிரணுவின் வடிவம் ஏறக்குறைய இருக்கும். வாலின் உதவியுடன் நீந்தும் உயிரணு மணிக்கு 5 முதல் 7 அங்குலம் வரை நீந்த முடியும்.


[தவளைக் குஞ்சை கண்ணால் பார்ப்பதுபோல், உயிரணுவைப் பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும். 17&ம் நூற்றாண்டு வரை உயிரணுவைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாததற்குக் காரணம், மைக்ராஸ்கோப் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான். அதே நூற்றாண்டில் டென்மார்க்கை சார்ந்த விஞ்ஞானி லீவன் ஹுக், மைக்ராஸ்கோப்பைக் கண்டுப்பிடித்த பிறகுதான் மருத்துவ உலகில் பல அற்புதங்களை, பேருண்மைகளைக் கண்டறியும் வாய்ப்பு கிட்டியது. தான் கண்டுப்பிடித்த மைக்ராஸ்கோப்பிலேயே முதன்முதலாக உயிரணுவைப் பரிசோதித்து, உயிரணு என்பது இப்படித்தான் இருக்கும் என்று உலகின் கூரையில் நின்று கூவினார் லீவன் ஹுக்! ]


ஆணின் விதையில் உருவாகும் உயிரணு, உருவாகும் போதே இன்னொரு உயிரை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குத் தகுதியோடும், பக்குவமாகவும் இருப்பதில்லை. படிப்படியாக வளர்ந்துதான் அது ஒரு பக்குவநிலைக்கு வருகிறது. பக்குவப்பட்ட ஒரு உயிரணு உருவாகக் கிட்டத்தட்ட 60 முதல் 72 நாட்கள் வரை ஆகும். அத்தகைய உயிரணு, ஆணுறுப்பிலிருந்து வெளிவந்த பிறகு 72 மணி நேரமே உயிருடன் இருக்கும். அதன்பிறகு இறந்துவிடும். பக்குவப்பட்ட உயிரணு ஏதோ காரணங்களால் வெளிவர முடியாவிட்டால் (உதாரணமாகக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தால்), அது அங்கேயே இறந்துவிடும். இறந்த உயிரணுவில் உள்ள பொருட்கள் உடலுக்குள்ளேயே ஜீரணிக்கப்பட்டுவிடும்.

பெண்ணின் ஜனன உறுப்பு: ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண்ணின் ஜனன உறுப்பிலும் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ், வெஸ்டிபியூல் போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை.

இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு சதைக் கதவாக இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் சதைக் கதவு மட்டுமல்ல... ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றில் பின்னிப் பிணைந்துள்ளன். ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டிபியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் மற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும்.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:52 am

பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக்கும் பகுதிகளில் பெண்குறி உள்பாதை, கர்ப்பப் பையின் வாசல், கர்ப்பப்பை, பெலோபியன் டியூப், கருமுட்டைப் பை ஆகியவை அடங்கும்.

பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டிபியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்திருக்கும். உள்பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை.



[பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும். சராசரியாக சாதாரண நிலையில் பெண்குறியின் உள்பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இந்த உள்பாதை தேவைக்கேற்ப நீளும் தன்மை கொண்டது. சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள். இந்தக் கவலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் திருமணத்துக்குப் பின்னர் வெஜினிஸ்மஸ் என்கிற செக்ஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். இது போன்ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச்னை வரும். ஆனால், இது தேவை இல்லாத கவலை. பத்தாவது மாதம் ஒரு குழந்தையே இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது என்பதை பலரும் அறிவதில்லை.]


அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப்படலம் கரைந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும்.


[கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை வெள்ளைப்படுதல் என்று சில பெண்கள் தவறாக புரிந்துகொள்கின்றனர்.]


கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை: கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை. கர்ப்பப் பைக்கு ஆங்கிலத்தில் யூட்ரஸ் (ஹிமீக்ஷீ) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு, நம் ஒரு கையை இறுக்கி மூடும்போது கிடைக்கும் பரப்பளவு போன்றதுதான். முக்கோண வடிவில் இருக்கும் கர்ப்பப்பை, சாதாரண நிலையில் 3 முதல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகல மும் உடையது. அதேசமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங்குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குல மாகவும் விரிவடையும். முக்கோண வடிவத்தின் கூர்பகுதியில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப் பையின் சுவர்கள் அடர்த்தியாகவும் நீளும் தன்மை உடைய தாகவும் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற் காகத்தான் இப்படியொரு நீட்சித்தன்மையுடன் உள்ளது.

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள்ளே இருக்கும் அடுக்குக்கு எண்டோமெட்ரியம் என்று பெயர். கரு உருவானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றால் இறந்த கருமுட்டை, உப்ப லான எண்டோமெட்ரியத்தின் துகள்கள் எல்லாம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளியேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற்சியாகவே நிகழும். பெண் பருவமடைந்திருந்த நாளிலிருந்து மெனோபாஸ்(மாதவிடாய் முற்றிலும் நிற்கும் வயது) வரை இது நடக்கும்.

அடுத்து, பெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இடது மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி சீலியா என்பது அமைந்திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மரவட்டையின் கால்களைப் போல் அசைந்து கொண்டேயிருக்கும்.



[பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பியன் டியூப் பைதான் வெட்டித் தைப்பார்கள். ]


கரு முட்டைப் பை: ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு கரு முட்டைப்பை கர்ப்பப் பைக்கு இடது புறமும், வலதுபுறமும் அமைந்திருக்கும் இவை சிறிய நீள் வட்ட வடிவில் ஒன்றரை அங்குல நீளம், ஒரு அங்குல அகலமும் உடையவை. ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, கரு முட்டைப்பை இருக்கும். அதில் பக்குவப் படாத சுமார் இரண்டு லட்சம் கருமுட்டைகள் இருக்கும். இந்த லட்சக் கணக்கான கருமுட் டையில் (பருவம் எய்திய நாளிலிருந்து மெனோபாஸ் வரைக்கும்) ஏறக்குறைய 300 முதல் 500 கருமுட்டைகளே பக்குவத்துக்கு வருகின் றன. மீதி உள்ளவற்றை உடம்பே ஜீரணித்து விடும்.



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:53 am

ஒவ்வொரு மாதமும் இடதுபுற அல்லது வலது புற கருமுட்டைப் பையிலிருந்து பக்குவமடைந்த ஒரு கருமுட்டை, பையிலிருந்து வெளிபட்டு சீலியாக்களால் நகர்த்தப்பட்டு கருப்பைக்குள் வரும். இப்படி ஒவ்வொரு மாதமும் கருமுட்டை வெளிப்படுவதற்கு ஓவலேஷன் என்று பெயர். லத்தீன் மொழியில் முட்டைக்கு ஓவம் என்று பெயர். இந்தக் கருமுட்டை வெளியேறு தல் ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவமடைந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை 4 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நிகழும். கருமுட்டையைப் பக்குவமடைய வைப்பது, அதை நான்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிவர வைப்பது போன்றவற்றை ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பிரத்யேக பெண் ஹார்மோன் செய்யும். பொதுவாக ஒரு பெண்ணுக்கு 45 வயதிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்று விடுவதால்தான் அந்த வயதில் மாதவிடாய் நின்று விடுகிறது.

கருமுட்டை கருப்பைக்குள் போனதும் அந்த மாதமே அப்பெண் கருவாகிவிட்டால், அந்த முட்டை எங்கிருந்து வெளிப்பட்டதோ அங்கே ப்ரஜஸ்டெரோன் (
Progesterone) எனும் ஹார்மோன் உருவாகி, மேற்கொண்டு அடுத்த கருமுட்டை வெளிவராமல் பார்த்துக் கொள்ளும்.


[கர்ப்பத் தடை மாத்திரைகளில் இருக்கும் ஹார் மோன் மருந்துகள், வாய்வழி உள்ளே சென்று ப்ரஜஸ்டெ ரோனை உருவாக்கி, முட்டை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும். இவ்வாறாகத்தான் இந்த மாத்திரைகள் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்கின்றன. ]


கருமுட்டை: ஆணின் உயிரணுவில் இருப்பது போலவே பெண்ணின் கருமுட்டையிலும் 23 குரோமோ சோம்கள் இருக்கும். பரம்பரை குணங்கள், நிறம், பரம்பரை நோய்க் கூறுகள் எல்லாம் இதில்தான் பொதிந்திருக்கும். கருமுட்டையின் குறுக்களவு ஒரு மில்லிமீட்டர். குண்டூசி தலை அளவுதான் இருக்கும். பையிலிருந்து முட்டை வெளியாகி ஏறக்குறைய 24 மணிநேரம் வரை உயிருடன் இருக்கும்.

கரு எப்படி உருவாகிறது: ஒருமுறை உடல் உறவு கொள்ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும். இதனால், 480 மில்லியன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்துபோய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய் நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவு டன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இதன் மூலம் இன்னொரு உயிரணு உள்ளே வருவது தடுக்கப்படுகிறது. கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோமோசோம்களாகி உயிர் உருவாகிறது.

கருமுட்டையை உயிரணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கருமுட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்துபோய் திரும்பி விடும். உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் அக்ரோசின் எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும்.


[ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தனது விந்து கெட்டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ... நினைத்துகொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு சென்று ஏமாறுகின்றனர். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப்பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரணம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக்கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது.. ]


உயிர் எப்படி வளர்கிறது: கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாருலா என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப் பையில் உப்பிக்கொண்டிருக்கும் உள்சுவரான எண்டோமெட்ரியத்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும்.



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:53 am

இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.
ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு எக்டோபிக் பிரகனன்சி (
ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக்கிற தன்மை, பெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால்தான் இந்த ஆபத்து.

கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது: உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க்கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23&வது ஜோடிதான் பாலினத்தைத் தீர்மானிக்கும் குரோமோசோம் (
chromosome). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகிதம் எக்ஸ் குரோமோசோம்களாகவும், 50 சதவிகிதம் ஒய் குரோமோசோம்களாகவும் இருக்கும். பெண்ணின் கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகிதமும் எக்ஸ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிரணுவில் உள்ள ஒய் குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் சேர்ந்தால் எக்ஸ்&ஒய் ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிரணுவில் உள்ள எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் சேர்ந்தால் எக்ஸ்&எக்ஸ் ஆகி பெண் குழந்தை உருவாகும்.


[ஒரு பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாத பலர், பெண்ணிடதில் குறை உள்ளதாக அவர்களை கொடுமைக்கு ஆளாக்குகின்றனர். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!.. ]


குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது?
ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அதற்கு பெயர் இன்பெர்டிலிட்டி. அதுவே நிரந்தரமானவையாக இருந்தால் அதற்கு ஸ்டெரிலிட்டி என்று பெயர். ஒருவேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள் நிரந்தரமானவையாக இருந்தாலும், இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்கமுடியாத குறைகள் இருந்தால் டோனர் இன்செமினேஷன்... பெண்ணுக்கு சரோகேட் மதர் எனும் நவீன சிகிச்சை முறைகள் உதவுகின்றன.

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக வேண்டும் என்றால், கருமுட்டை வெளியாகும் தருணத்தில் உடல் உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பெண்ணின் ஜனன உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான காரணங்கள் உண்டு.
குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40&லிருந்து 45 சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50&லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:53 am

ஆண் சார்ந்த காரணங்கள்:

சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயிரணு உற்பத்தியாவதில் பிரச்னை இருப்பது: ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக்க முடியும். இப்படி வெளிவரும் விந்தில், ஒரு மி.லி&க்கு 20 மில்லியன் உயிரணுவாவது இருக்க வேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவிகிதமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இவை உலக சுகாதார நிறுவனம் 1992&ல் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியுள்ளவை.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ& தரமான உயிரணு உற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்படும். சத்தான உணவு, உடற்பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும் மதுப்பழக்கம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில்லை.

உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை: சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமைப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம்& சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம் ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், அதனுடன் ஒருவிதமான இன்பத்தையும் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத்துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது.

சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனைவியின் உறுப்பில் தங்காத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படியொரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன. ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப் பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் தங்காமல் போகலாம்.

உடலுறவு கொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை: ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும் போதுதான் போதுமான அளவில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதே நாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளும்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவில் உயிரணுவும் இருக்காது. அதேபோல் நிறைய நாட்கள் இடைவெளிவிட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உயிருடன் இருக்கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

செக்ஸில் தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது: பெண்ணை உடலுறவிற்கு தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். பெண் பிறப்புறுப்புல் ஈரப்பதம் முன்விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இயற்கையாகவே உண்டாக்குகின்றன. இதை தவிர்த்து செயர்க்கையாக ஈரப்பதத்தை உண்டாக்க எண்னை போன்ற சில பொருட்களை பயன்படுத்துவதால் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்குள் போகவிடாமல் தடுக்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, பெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்திவிடும்.

ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோளாறு இருப்பது: பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப்படும்போதுதான் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்கவேண்டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளியிலேயே வெளியேறிவிடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்கு ஹைபோஸ்பேடியாஸ் என்று பெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக்குறையை நிவர்த்தி செய்துவிடலாம். சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் போகவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிட முடியும்.




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 15, 2009 11:54 am

பெண் சார்ந்த காரணங்கள்:

கருமுட்டை வெளியாகும்போதுதான் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக்குக் கருமுட்டை வெளியாகாமல்கூட இருக்கலாம். சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூட& உருவான கரு, பெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலேகூட இருந்து விடலாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமல் போகும்.

உயிரணுவானது கருப்பாதை, பெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணுவானது நீந்திச் செல்ல முடியாத அளவுக்குத் தடைகள் ஏற்பட்டு, அதனால் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போகலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.

ஹார்மோன் கலாட்டா: பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கருமுட்டை வெளிவரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், சில பெண்களுக்கு கரு முட்டையே வெளிவராமல் கரு உருவாவது தடைபடுகிறது. கருமுட்டை வெளிவராமல் போவதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள்தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சிலருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும். இவர்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை வெளிவராமல் போய்விடலாம். இதுமட்டுமில்லை, தீவிர மன அழுத்தம்கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண்மை.

பொதுவாக கரு ஃபெலோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரியம்) பலவீனமாகிப்போனால், பெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெட்ரியம் ஆரோக்கியமில்லாமல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன் கலாட்டாவும் ஒன்று.

பெண் குறியின் பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்கும், இந்த அமிலத்தன்மையை விந்தில் உள்ள காரத்தன்மை மட்டுப்படுத்திவிடும். சில பெண்களுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்துவிடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூக்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப்போய் கசிந்து வெளியேறிவிடும். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப் பையின் வாசலில் தடையாக இருந்து& உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி விடும். இதன் காரணமாகவும் குழந்தைப் பிறப்பு தடைபடும்.

சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள்ளே வரும் உயிரணுவின் வீரியம் குறைந்துவிடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.

ஃபெலோப்பியன் டியூப் பிளாக்: கரு முட்டையும், உயிரணுவும் சந்திக்கும் ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகாமல் போகலாம். பிறவி குறைபாடு, பால்வினை நோய், காச நோய் போன்றவற்றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப்பு ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஃபெலொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்படலாம்.
கர்ப்பப் பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

பெண் ஜனன உறுப்பில் பிறவிக் குறைபாடு: பிறவியிலேயே கருமுட்டைப் பை, கர்ப்பப்பை, பெண்குறி பாதை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்திருக்கும் பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் எட்டாக் கனவுதான். இன்னும் சில பெண்களுக்கு ஜனன உறுப்பு படைக்கப்பட்டிருக்கும். ஆனால், சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது. சில பெண்களுக்கு ஜனன உறுப்பு சரியாகவும் உரிய வளர்ச்சியும் பெற்றிருக்கும். ஆனால், பிறவியிலேயே ஜனன உறுப்புக்குப் பாதை இருக்காது. சிலருக்கு ஜனன உறுப்பில் பாதை இருக்கும். ஆனால், அது அடைபட்டிருக்கலாம். இது போன்றவர்களுக்கு உடலுறவிலும் பிரச்னை இருக்கும். இந்தக் குறையை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம்.

செக்ஸ் பிரச்னையால் குழந்தை இல்லாமை: சில பெண்களுக்கு செக்ஸ் ஆசை இருக்கும். உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், உடல் உறவில் ஈடுபட்டால் வலி எடுக்குமோ என்ற தேவையற்ற பயத்தில் உழல்வார்கள். அதன் காரணமாக அவர்களையும் அறியாமல் பெண்குறி பாதையை இறுக்கமாக்கி விடுவார்கள். திருமணமான புதிதில் சில பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். சில பெண்களின் இல்லற வாழ்வில் இதுவே தொடர்கதையாகவும் இருக்கும். இதன் காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபட்டுப் போகும்.


இருவருக்கு மான காரணங்கள்:

குழந்தையின்மையைப் பொறுத்தவரை, கணவன்&மனைவி இருவருக்கு மான காரணங்கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்குஇருக்கும். சில தம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும் இருக்காது... ஆனால், குழந்தை பிறக்காமல் இருக்கும். இதற்கு மருத்துவரீதியில் இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டி என்று பெயர். இன்னாதென்று அறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை இன்றைய அதி நவீன மருத்துவ விஞ்ஞானத்தால்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

- நன்றி: உயிர் www . vikatan. com -




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri May 15, 2009 6:05 pm

Thanks for tha information நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக