புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை வெல்வேன்  Poll_c10மரணத்தை வெல்வேன்  Poll_m10மரணத்தை வெல்வேன்  Poll_c10 
20 Posts - 65%
heezulia
மரணத்தை வெல்வேன்  Poll_c10மரணத்தை வெல்வேன்  Poll_m10மரணத்தை வெல்வேன்  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை வெல்வேன்  Poll_c10மரணத்தை வெல்வேன்  Poll_m10மரணத்தை வெல்வேன்  Poll_c10 
62 Posts - 63%
heezulia
மரணத்தை வெல்வேன்  Poll_c10மரணத்தை வெல்வேன்  Poll_m10மரணத்தை வெல்வேன்  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மரணத்தை வெல்வேன்  Poll_c10மரணத்தை வெல்வேன்  Poll_m10மரணத்தை வெல்வேன்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மரணத்தை வெல்வேன்  Poll_c10மரணத்தை வெல்வேன்  Poll_m10மரணத்தை வெல்வேன்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தை வெல்வேன்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 9:13 am

''மரணத்தை வெல்வேன்!''

''மரணத்தை வெல்வேன்!''
மரணத்தை வெல்வேன்  Bits_verline
மரணத்தை வெல்வேன்  P30'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் என்கிற அறிவு இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், எ.சுரேஷ், பத்திரிகையாளர் குல்தீப்நய்யார், அரசியல் தலைவர்கள் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் அணிந்துரை எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் தமிழக அரசியல் தளத்தில் பலத்த அதிர்வுகளைக் கிளப்பி இருக்கிறது.
பேரறிவாளன் எழுதியிருக்கும் திறந்த மடலின் சில பகுதிகள் இங்கே...

''மதிப்பிற்குரிய அம்மா/அய்யா!
வணக்கம்!

நான், அ.ஞா.பேரறிவாளன். ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதில் அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில், கடந்த 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான். துன்பம் சூழ்ந்த தீவில் நிற்பினும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தங்களைப் போன்ற மனித நேய உள்ளங்களின் துணையிருப்பதால், மரணத்தை வெல்வேன் என்ற நம்பிக்கை உண்டு.
எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரி யாகவும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MDMA) அதிகாரி யாகவும் அங்கம் வகித்து 2005 மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு.இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, 'குறுந்தகடு' (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு ஒரு பேட்டி வழங்கியுள்ளார். 31-7-2005 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும்:

'ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா?'
'ஒரே ஒரு விஷயம் இருக்கிறது... தனு தனது இடுப்பில் கட்டி இருந்த வெடிகுண்டு 'பெல்ட்'டைச் செய்து கொடுத்த நபர் யார்? என்கிற விஷயம்தான்!'
மரணத்தை வெல்வேன்  P31- ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள பல்நோக்குக் கண்காணிப்புக் குழு விசாரணைக்கான கருப் பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தி இருக்கிறது.
எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டுபிடிக்கவே முடிய வில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல் கிறாரோ... அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரசாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991-ம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டபோது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர்.
என்னை விசாரணைக்கென அழைத்துச் சென்ற முதல் நாளே சிறப்புப் புலனாய்வுத் துறையின் (SIT) அலுவலகம் அமைந்திருந்த 'மல்லிகை' கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த டி.ஐ.ஜி. (DIG) ராஜு அவர்கள் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவர் எனது படிப்பு பற்றி விசாரிக்கிறார். நான் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயப்படிப்பு (DECE)படித்தவன் என்றபோது, 'நீதான் குண்டு தயாரித்துத் தந்தவனா?' - என்று கேட்டார்.
எனது பெற்றோர், கல்வி ஒன்றே பெரும் சொத்து எனக் கருதி என்னைப் படிக்க வைத்தனர். எனது பெற்றோரின் உழைப்பாலும், எனது உழைப்பாலும் நான் பெற்ற கல்வி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பயன்பட்டதோ இல்லையோ... புலனாய்வுத் துறையினர்க்கு இவ் வழக்கில் என்னைப் பொய்யாகப் பிணைத்துத் தூக்கு மேடையில் நிறுத்தப் பயன்பட்டது.
அவ்வாறு 'குண்டு நிபுணராக' முதலில் சித்திரிக்கப் பயன்படுத்தப் பட்ட எனது கல்வி இறுதியில் பெட்டிக் கடையிலும் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் அன்றாட வாழ்வில் பயன்படும் 9 வோல்ட் மின்கலம் (பேட்டரி செல்) வாங்கித் தந்தேன் என்பதான குற்றச்சாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது. சிவராஜன், எல்.டி.டி.ஈ.-யின் சீனியர் அங்கத்தினர் என்பதால்தான் அவருக்கு நான் மின்கலம், கார் மின்கலம், மோட்டார் சைக்கிள் வாங்கித் தந்ததாகக் கூறுவதே பொருத்தம். ஆனால், ராஜீவ் கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாகக் கூறமுடியாது. சதியின் நோக்கத்துக்கு உடன்பட்டால்தான் இந்திய தண்டனை சட்டம் எ.120-ன்படி குற்றவாளியாக முடியும்.
எனது வாக்குமூலத்தை முழுமையாக வாசித்தீர் களேயானால், அவ்வாறு கொலைச் சதிக்கு ஒப்புக் கொண்டதாக, உதவுவதாக எந்தவொரு சிறு சொல்லை யேனும் தங்களால் காண முடியுமா?
எனக்கு தனு, சுபா ஆகியோருடன் அறிமுகம் இருந்ததாக எவ்வித ஆதாரங்களும் கிடையாது. சிவராசனுடன் மட்டுமே தொடர்பு இருந்ததற்கு ஆதாரங்கள் காட்டப்படுகின்றன. எனவே சிவராசன் மட்டுமே எனக்குக் கொலைச் சதி குறித்துக் கூறியிருக்க வேண்டும். எனது ஒப்புதல் வாக்குமூலத்தில் அதற்கான எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை என்பதுடன், சிவராசனுடன் எந்த உரையாடலிலும் நான் பங்கு பெறவில்லை என்பதையே காட்டுகிறது.
ராஜீவ் படுகொலையில் சதிகாரர்களை நான்கு பரந்த வகையினங்களாகக் கூறு பிரிக்கலாம். முதலாவதாக ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்ய முடிவெடுத்த உறுதியான கரு மையமாக அமைந்திருப்பவர்கள். இரண்டாவதாக, சதி வளையத்தில் சேர்ந்து கொள்ளும் படி மற்றவர்களைத் தூண்டி, சதியில் தீவிரப் பங்கும், மேற்பார்வைப் பங்கும் வகித்தவர்கள். மூன்றாவதாக, கருத்தாக்கத்தின் வாயிலாகவோ, வேறு வழியிலோ தூண்டப்பட்டு சதியில் சேர்ந்தவர்கள். நான்காவது, உள்ள படியே கொலை செய்வதில் பங்கேற்ற சதிகாரர்கள்.
இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தி யதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்விதக் குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச் சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருள்களை நான் வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?
'உண்மை' அரசின் வழக்குக்கு முற்றிலும் புறம்பானதாகவும், கசப்பு மிகுந்ததாகவும் இருப்பினும் அதை நிரூபிக்கும் ஆற்றல், வசதி இந்த எளியவனுக்குக் கிடையாது. 'கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை; உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது' என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை. இன்றைய எனது சூழலில் மனித நேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்துவிடவில்லை.
இறுதியில் வள்ளுவனின் உலகப் பொதுமறை ஒன்றோடு என் முறையீட்டை நிறைவு செய்கிறேன்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

தங்கள் உண்மையுள்ள...
பேரறிவாளன்!

- Vikatan

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:23 am

'உண்மை' அரசின் வழக்குக்கு முற்றிலும் புறம்பானதாகவும், கசப்பு மிகுந்ததாகவும் இருப்பினும் அதை நிரூபிக்கும் ஆற்றல், வசதி இந்த எளியவனுக்குக் கிடையாது. 'கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை; உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது' என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை. இன்றைய எனது சூழலில் மனித நேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்றால் கால தேவன் கண்டிப்பாக உங்களைக் காப்பாற்றுவார்.
நீதி தேவன் கையூற்று வாங்கியிருந்தால் உஙக கதி அதோ கதிதான்.... ஜாக்கிறத செந்தில்..

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 9:38 am

gunashan wrote:

ஹலோ எங்க அப்பாரு பெரிய நீதிபதி தெரியுமுல்ல மரணத்தை வெல்வேன்  Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:44 am

செந்தில் wrote:

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

உங்க அப்பாரு பெரிய நீதிக்கு பதின்னு எங்களுக்குத் தெரியும்......அவரு வாங்கின கையூட்டுலதான் நீங்கல்லாம் படிச்சீங்க......இது எங்களுக்குத் தெரியாதா செந்தி..... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 9:53 am

ஒரு மனுஷனுக்கு இந்த அளவுக்கு வயித்தெறிச்சல் இருக்க கூடாது மரணத்தை வெல்வேன்  Icon_basketball

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:56 am

செந்தில் wrote:ஒரு மனுஷனுக்கு இந்த அளவுக்கு வயித்தெறிச்சல் இருக்க கூடாது மரணத்தை வெல்வேன்  Icon_basketball

உண்மைய சொன்னா...வயித்தெறிச்சலா அம்பி.......அப்புறம் பக்கிரி வரட்டும்...பிளேடு போடச் சொல்றன் பாரு....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக