ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 10:11 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

Go down

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை  Empty புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

Post by ரபீக் on Wed Sep 01, 2010 11:29 am

கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். இது தவறு.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினி ஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர் ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். சில மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல. அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்று நோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண் நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும் போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில்போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை  Empty Re: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

Post by கார்த்திக் on Wed Sep 01, 2010 11:36 am

நன்றி நன்றி நன்றி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை  Empty Re: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

Post by சபீர் on Mon Sep 06, 2010 11:24 am

கருவேப்பிலையின் மகத்தான உண்மைகளை சொன்னமைக்கு மிக்க நன்றிதோழரே
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை  Empty Re: புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum