ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:06 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by krishnaamma Yesterday at 9:59 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by venkat532 Yesterday at 9:54 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by சக்தி18 Yesterday at 8:34 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by krishnaamma Yesterday at 8:19 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 12:39 pm

» பங்குச் சந்தை கதை
by ayyasamy ram Yesterday at 11:39 am

» நம்பிக்கை
by kandansamy Yesterday at 9:58 am

» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:27 am

» படம் தரும் பாடம் (புகைப்பட ஆல்பம்)
by ayyasamy ram Yesterday at 7:24 am

» ஒடிசாவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.400 ஆக குறைப்பு
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 'ஆஸ்கர்' விருதுகள் வழங்கும் விழா மேடையில் வழங்க முடிவு
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தோள் கொடுப்பாள் தோழி!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:17 pm

» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Wed Dec 02, 2020 10:06 pm

Admins Online

சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?

Go down

சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?    Empty சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?

Post by jeylakesengg on Sun Sep 19, 2010 1:40 pm

சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?

FILEஇந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெ‌ரிய கேள்விக்குறி.

ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இய‌க்க‌ம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார்.

அதேநேரம் சல்மான்கான், விவேக் ஓபராய் இருவரும் ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டு தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தினர். திரைப்பட கூட்டமைப்பின‌ரின் கோ‌ரி‌க்கையையும் நிராக‌ரித்தனர். இதனைத் தொடர்ந்து அசினின் அன்னை தெரசா நாடகமும் இனவெறி இலங்கை அரசால் வெற்றிகரமாக அரங்கேறியது. தமிழர்களின் இன உணர்வை கொச்சைப்படுத்திய இவர்களின் படங்களை தமிழகத்தில் மட்டுமல்லாது நான்கு தென்னிந்திய மாநிலங்களில் புறக்கணிப்பது என்றொரு தீர்மானமும் திரைப்பட கூட்டமைப்பால் நிறைவெற்றப்பட்டது. நாம் தமிழர் அமைப்பின‌ரின் முயற்சியால் ஐஃபா விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் திரைப்படம் உடனடியாக சென்னையிலுள்ள திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது. இத்தனைக்கும் ஹிருத்திக் ரோஷன் விழாவில் கலந்து கொள்ள மட்டுமே செய்தார். சல்மான், ஓபராய் போல ஊதுகுழலாக செயல்படவில்லை.

ஹிருத்திக் ரோஷனின் படத்தையே தமிழகத்தில் ஓடவிடாமல் செய்தவர்கள் சல்மான்கானின் படத்துக்கு எந்த எதிர்ப்பும் தெ‌ரிவிக்காதது ஏன்?. திரைப்பட கூட்டமைப்பு நான்கு மாநிலங்களில் தடை என்ற உத்தரவை வாபஸ் வாங்கிக் கொண்டதா? நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளுக்கு இது தேவையில்லாத பிரச்சனையாகிவிட்டதா?

அசின் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் தனது திமிர்தனத்தில் சிறிதுகூட குறைத்துக் கொள்ளாமல்தான் இன்று வரை அவர் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை என்று சொன்னாலே பாய்ந்து வருகிறார் நடிகர் சங்க‌த் தலைவர் சரத்குமார். அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகமே திரண்டு நிற்கும் போது தனியாளாக சரத்குமார் எழுப்பும் அசின் ஆதரவு யாருக்காக? நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி அசின் மீது நடவடிக்கை உறுதி என்று பேட்டியளிப்பதும், அசின் மீது எந்த தவறும் இல்லை என்று சரத்குமார் அறிக்கை விடுவதுமாக பல மாதங்களாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அக்கப்போருக்கு நடுவில் அசின் தெனாவட்டாக தமிழ் திரையுலகில் உலா வருவது திரைப்பட கூட்டமைப்பின் கையாலாகாத்தனமோ என பலரையும் எண்ண வைத்துள்ளது.


FILEஅசின் மீதான வெறுப்பு உலகத் தமிழர்களிடையே மண்டிக் கிடக்கிறது. அவர் நடித்தப் படத்தை புறக்கணிப்பது என்ற முடிவில் உலகத் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் பிரபல தமிழ் ஹீரோவுடன் நடித்தப் படத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் தமிழில் கலாச்சார சீரழிவு படங்களை எடுத்துவரும் தயா‌ரிப்பாளர் கம் இயக்குனர் ஒருவர் அசின் நடித்தப் படத்தை மிகப் பெ‌ரிய தொகைக்கு வாங்கியிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. இந்த தயா‌ரிப்பாளர் கம் இயக்குனர் சில லட்சங்கள் நஷ்டத்தையே தாங்க முடியாமல் கஷ்டப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெ‌ரியும். அப்படிப்பட்டவர் எப்படி குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் - ஏறக்குறைய நாற்பது கோடி - கொடுத்து அசின் நடித்த படத்தை வாங்க முடியும்? இவர் தான் கடைசியாக இயக்கிய படத்தில் தேவையே இல்லாமல் ஒரு புலியை காண்பித்து இது பல் பிடுங்கப்பட்ட புலி, புல் திங்கிற புலி, இந்தப் புலிக்கு சுகர் இருக்கிறது என கிண்டல் செய்தவர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் படத்தை எதிர்க்கப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். அதில் தம்பி சூர்யாவும் நடித்திருக்கிறார் என்று பொது மன்னிப்புக்கு காரணமும் சொல்லியிருக்கிறார். தங்கச்சி அசினுக்காக ராஜபக்சேவையும் மன்னித்துவிட்டால் பிரச்சனையே இல்லையே, சிறைக்குப் போக வேண்டிய அவசியமும் இருக்காது.

ரத்த ச‌ரித்திரம் படம் வரும் 22 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது. இந்திப் பதிப்பு சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் வெளியாகும். DABANGG படத்தைப் போல இதையும் யாரும் எதிர்க்கப் போவதில்லை. சல்மான்கான், அசினைப் போல விவேக் ஓபராயும் சுவரொட்டிகளில் நம்மைப் பார்த்து சி‌ரிக்கத்தான் போகிறார்கள்.

நமது கேள்வியெல்லாம் ஏன் ஹீரோவைப் போல தொடை தட்ட வேண்டும் என்பதே. ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக தி‌ரிந்து கடைசியில் காமெடியனாக பலரும் சி‌ரிக்க இடமளித்துவிட்டதே நமது திரைப்பட சங்கங்கள் என்பதே நமது வருத்தம்.

நன்றி வெப்துனியா
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
மதிப்பீடுகள் : 19

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum