ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:34 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

Admins Online

பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

Go down

பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?  Empty பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

Post by கார்த்திக் on Fri Sep 24, 2010 12:21 pm

பொதுவா பேய்-பிசாசு சம்பந்தப்பட்ட கதைகள நண்பர்கள், உறவினர்கள் இப்படி யாராவது சொல்லி கேட்கும்போது, “அட இதெல்லாம் சும்மா உடான்சுப்பா. இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு இருக்கக்கூடாது, வாழ்க்கையில தைரியமா இருக்கனும்” அப்படீன்னு ரொம்ப தைரியமா (?), வீராப்பா பேசிட்டு, அர்த்த ராத்திரியில வயல்வெளிக்கோ, இல்ல ஆள் நடமாட்டமில்லாத ஒரு சாலையிலயோ நடந்துபோகும்போது, பக்கவாட்டுல இருக்குற சருகுக்குள்ள, அதுபாட்டுக்கு சிவனேன்னு போயிக்கிட்டு இருக்குற ஒரு பூச்சியோ, புழுவோ ஏற்படுத்துற சத்தத்துல சப்த நாடியும் ஒடுங்கி, உறைஞ்சுபோயி நிக்குற சுபாவமுள்ளவங்க நம்மைச்சுத்தி எத்தனையோ பேரு இருக்காங்கங்கிறதுதான் நிதர்சனம் இல்லீங்களா?

அமிக்டலேவும் (amygdalae) உறைய வைக்கும் அந்த சில நொடிகளும்!
பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?  Amygdala
இம்மாதிரியான, பயத்தை ஏற்படுத்தும் அல்லது உறைந்துபோகவைக்கும், சிலிர்ப்பூட்டும் தருணங்களின்போது மனிதனின் மூளைக்குள்ளே என்ன நடக்கிறது அல்லது பயங்களுக்கு எதிரான ஒருவரின் மூளையின் எதிர்வினையை அறிவியல்பூர்வமாக எப்படி விளக்குவது போன்ற கேள்விகள் நரம்பியல் துறை விஞ்ஞானிகள் மத்தியில் ஏகப்பிரசித்தம்! இந்த கேள்விக்கான விடையை நோக்கிய ஆய்வுப்பயணத்தில், மூளையின் ஆபத்துப் பகுதி என்ற ஒன்றை நிர்ணயித்தார்கள் நரம்பியல் விஞ்ஞானிகள். அதாவது, ஒரு ஆபத்து நேரும்போது, பய உணர்வு ஏற்பட்டு, அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவோ, உறைந்துபோய் நின்றுவிடவோ என இருவகையான செயல்களுக்கு அடிப்படையான மூளைப்பகுதியைத்தான், ஆங்கிலத்தில் அமிக்டலே (amygdalae) என்கிறார்கள். மூளையின் மத்தியப்பகுதியிலுள்ள இரட்டை பாகங்கள்தான் இந்த அமிக்டலே என்பது குறிப்பிடத்தக்கது!

பயம் குறித்த இதுவரையிலான நரம்பியல் ஆய்வுகளினடிப்படையில், அமிக்டலே என்னும் மூளைப்பகுதியானது, உயிர்களின் அதீத உணர்வுகளான, அளவுக்கதிகமான கோபம் (அதாங்க, நம்ம விஜயகாந்த் படத்துல எல்லாம், அவரோட கண்ணு ரெண்டையும் செவப்பாக்கி, அவரு கோவப்படுறதா காமிப்பாங்களே அதுமாதிரி!) மற்றும் உறைய வைக்கும் திகில் உணர்வு ஆகியவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது! மேலும், இந்த பயஉணர்வுகளின் விளைவாக செய்யப்படும் செயல்களான, சுற்றும்முற்றும் ஓடுவது, மறைவான ஒரு இடத்தில் ஒளிந்துகொள்வது மற்றும் சத்தமாக அலறுவது ஆகிய செயல்களுக்கும் அமிக்டலேதான் காரணமாக இருக்கிறது என்று ஒரு பொதுவான புரிதல் இருக்கிறது விஞ்ஞானிகள் மத்தியில்!

ஆனால், அமிக்டலேவின் செயல்பாட்டினை, இப்படி பொத்தாம் பொதுவாக சொல்வது இனியும் சரியல்ல என்றும், பயம் குறித்தான் நம் அறிவியல்பூர்வமான புரிதலை மாற்றம்வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் சொல்கிறது ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் சோதனைக்கூடமான EMBL மற்றும் க்ளாக்சோ ஸ்மித்க்ளைன் (GlaxoSmithkline) என்னும் பிரபல மருந்து நிறுவனம் இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று! நியூரான் (Neuron) என்னும் மருத்துவ இதழில், சமீபத்தில் வெளியான இந்த ஆய்வின் முடிவுகள், பயத்துக்கும் மூளைக்குமான தொடர்பைப்பற்றியும், அமிக்டலேவைப்பற்றியும் என்ன சொல்கின்றன என்பதைத்தான் இனி இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம். சரி சரி, ஒன்னும் பயப்படாம வாங்க, பயத்தைப் பத்தி தெளிவா பார்ப்போம்……

பயத்துக்கெதிரான மூளையின் எதிர்வினைகளும், அமிக்டலேவும்!
இந்த ஆய்வின் அடிப்படை நோக்கம், ஒருவர் திகிலடையும்/பயப்படும்படியான ஒரு சூழ்நிலையில் இருக்கும்போது, அதிலிருந்து தப்பித்து ஓடுவதா இல்லை உறைந்துபோய்விடுவதா என எப்படி தீர்மானிக்கிறார் என்றும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் குறிப்பிட்ட மூளைப்பகுதி எது என்று கண்டறிவதுமே! இவ்விரு கேள்விகளுக்குமான விடை காண வேண்டுமானால், பயத்துடன் தொடர்புடைய அமிக்டலே பகுதியை கட்டுப்படுத்தவேண்டியது அவசியம்.

அமிக்டலே பகுதியை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மரபனுமாற்றம் செய்யப்பட்ட ஒரு எலியை (genetically engineered mice) உருவாக்கி, குறிப்பிட்ட ஒரு மருந்தை எலியின் மூளைக்குள் செலுத்துவதன்மூலம், அமிக்டலே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அனுக்கள் மட்டும் செயலிழந்துபோகும்படியான ஒரு பிரத்தியேக மரபனுமாற்ற எலியை உருவாக்கினார்கள். ஆக, ஒரு மருந்தைச் செலுத்தினால் சோதனை எலியின், அமிக்டலேவின் குறிப்பிட்ட அனுக்கள் மட்டும் செயலிழந்து, பிற பகுதிகள் எப்போதும்போல் செயல்படும்படியான ஒரு நிலையை உருவாக்கினார்கள் ஆய்வாளர்கள்!

அமிக்டலே பகுதியில் மாற்றங்களுக்குட்பட்ட, இத்தகைய மரபனுமாற்ற எலிகள், குறிப்பிட்ட ஒரு சப்தம் கேட்டவுடன் மின்சார அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டன. இத்தகைய பயிற்ச்சிக்குப்பின், குறிப்பிட்ட அந்த சப்தம் கேட்டவுடன் நமக்கு மின்சார அதிர்ச்சி நிச்சயம் என்பதுபோன்ற ஒரு நிலையை உணர்ந்த மரபனுமாற்ற எலிகள், சாதாரண எலிகளைப்போல பயந்து நடுங்கவில்லை! மாறாக, அந்த சப்தம் கேட்டவுடன், பயந்து நடுங்காமல், சப்தம் வந்த திசையை நோக்கி முன்னேறிச்சென்று, சப்தத்துக்கான காரணத்தை அறிய முற்பட்டன என்பது கண்டறியப்பட்டது!

இதிலிருந்து தெரியவரும் ஒரு ஆச்சரியமான உண்மை என்னன்னா, இதுவரையிலான ஆய்வுகளினடிப்படையில், பயத்துடன் தொடர்புடைய சில செயல்பாடுகள் மொத்தத்திற்க்கும் அமிக்டலேதான் காரணம் என்ற ஒரு புரிதல் தவறானது என்பதும், அமிக்டலே என்னும் மூளைப்பகுதியானது பயத்துக்கும், பயத்தினால் உறைந்துபோகும் தன்மைக்கும் மட்டுமே அடிப்படை என்பதுமே! ஆக, திடீரென்று ஏற்படும் பய/திகில் உணர்வால் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி, உறைந்துபோவதற்க்கு மட்டும்தான் அமிக்டலேவானது அடிப்படைக்காரணம் என்று முதல்முறையாக தெளிவாக தெரியவருகிறது!

“சரிப்பா, அதனாலென்ன என்ன இப்போ” அப்படீன்னு உங்கள்ல சிலபேருக்கு கேட்கத்தோனலாம். நமக்கு இது வெறும் ஆச்சரியமான அறிவியல் செய்திதான்னாலும், பயம் குறித்த ஆய்வுகளில் நீண்டகாலமாய் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஏன்னா, இந்த வகையான ஆய்வாளர்களின் அடிப்படை நோக்கம், உலகில் அவ்வப்போது நிகழும் அல்லது நிகழப்போகும் ஆபத்துகளுக்கு எதிராக சராசரி மக்களை தயார்படுத்தவேண்டும் என்பதே. அதற்க்கு, அவர்களின் பயத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

உதாரணமாக, சமீபத்துல வெளியாகி உலகையே அல்லோலக் கல்லோலப்பட வைத்துக்கொண்டிருக்கும், “டிசம்பர் 21, 2012-ல் உலகம் அழியப்போகிறது?!” என்பது மாதிரியான புரளிகள்/பயங்கள், சில/பல ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படும் வினோதமான விலங்குகள், வேற்றுக்கிரக ஜீவராசிகள் போன்றவற்றால் பயந்து நடுங்கும் தன்மையுள்ள மக்களை அப்பயங்களுக்கு எதிராக செயல்பட தயார்படுத்த, அமிக்டலே தொடர்பான இந்தப் புதிய உண்மை பெரும் உதவியாக இருக்குமென்கிறார்கள் பயத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்னும் ரீதியிலான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சில நரம்பியல் விஞ்ஞானிகள்!

மேலே நான் சொன்னது நல்ல எண்ணங்களுள்ள விஞ்ஞானிகளின் முயற்ச்சிகளைப் பற்றியது. ஆனா, தீய எண்ணமுள்ள விஞ்ஞானிகளும் இருக்காங்க இல்லீங்களா இந்த உலகத்துல?! அவங்களுக்கும் இந்த ஆய்வு சொல்லும் உண்மை பயன்படும். ஆனா, நல்ல வழியில இல்ல தீய வழியில! சரி இந்த பகுதிய உங்க யூகத்துக்கு விட்டுடுறேன். அதாவது, இதே ஆய்வு முடிவை தீய விஞ்ஞானிகள் தங்கள் அழிவுப்பாதையிலான திட்டங்களுக்கு பயன்படுத்தினா, அமிக்டலே பகுதியை எப்படி மாத்துவாங்க? அதனால, பயம் தொடர்பான நம் மூளையின் செயல்பாடு எப்படி மாறக்கூடும்?!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 45

Back to top Go down

பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?  Empty Re: பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

Post by உமா on Fri Sep 24, 2010 12:28 pm

பயனுள்ள தகவல்...
நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?  Empty Re: பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

Post by சபீர் on Sat Sep 25, 2010 10:10 am

பகிர்வுக்கு நன்றி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?  Empty Re: பயப்படும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum