புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10 
5 Posts - 83%
heezulia
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10 
1 Post - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10 
47 Posts - 64%
heezulia
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10 
22 Posts - 30%
T.N.Balasubramanian
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_m10எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்: தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை! எழுதியவர் மாதவராஜ்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 4 Oct 2010 - 21:47

உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ‘ஷங்கர்’ என்று சொல்வேன். அப்படியொரு திடமான நம்பிக்கையை அவர் குறித்து அவரே எழுப்பி இருக்கிறார். நமது நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது.

மொத்த தமிழ்ச்சினிமாவையும் தன் உள்ளங்கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.

அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன் ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.

இளையராஜாவுக்கு எதிராக அல்லது மாற்றாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டாலும், தன் திறமையின் மூலம் இசையுலகில் தனக்கென்று அல்லது தனக்குரிய ஒரு இடத்தை அடைந்தவர்தான் ஏ.ஆர்.ரகுமான். நல்ல படங்கள் என்றால், தன் சன்மானத்தை பொருட்படுத்தாமல் இசையமைக்கும் இளையராஜா போன்றோரின் முன்னால், பெரும் நிறுவனங்களின் பேனர்களில் மட்டுமே தன் இசையை வெளிக்காட்டும் ஏ.ஆர்.ரகுமானின் ‘சர்வதேசக் கலைத்தாகம்’ யாருக்கானது எனச் சொல்லத் தேவையில்லை.

இந்த தில்லாலங்கடிகளின் கூட்டுத் தொழிலில் (உழைப்பில் என்று சத்தியமாய்ச் சொல்ல மாட்டேன்), உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான் தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும்.

“இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது” என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை. எப்பேர்ப்பட்ட சினிமா அறிவு இவருக்குத்தான்! “டெஃபனிட்டா, கலாநிதி மாறன் இந்தியாவில நம்பர் ஒன் இண்டஸ்டிரியலிஸ்டா வருவார்” என்று அந்த சூப்பர் ஸ்டார் ஜோஸ்யமும் சொல்கிறார். ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்ற கவிதை வரிகளை எழுதிய மகாகவி பாரதியின் கண்கள்கூட அப்படி மின்னியிருக்காது! என்ன ஒரு ஆசை! எப்படி ஒரு கனவு! நோக்கங்களும், லட்சியங்களும் தெளிவாய் இருக்கின்றன. அவர் இப்போது பணம் சம்பாதிக்கும், சம்பாதித்துக் கொடுக்கும் எந்திரம், அவ்வளவுதான். வாய்பிளந்து நிற்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் கைதட்டி ஆரவாரிக்கிறது. அறிவுலகம் தலைகுனிய வேண்டிய இடம் இது.

“இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்” என்று அதிரடியாய் அறிவிக்கிறார்கள். என்னா தெனாவெட்டு! “சயின்ஸ்னா என்ன? ஃபிக்‌ஷன் என்ன?” என்று யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தைரியம்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது. “வித்தியாசமான ரஜினியை பார்க்கப் போகிறீர்கள்” என்று நெஞ்சு விம்மிப் போகிறார் ஷங்கர். தமிழ்ச்சினிமா ரசிகர்களை இந்த ‘வித்தியாசம்’ எனும் வார்த்தை சொல்லி எத்தனை காலம், எத்தனை பேர், எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தடவை ஏமாந்தபோதும், திரும்பவும் ஏமாறத் தயாராய் இருக்கிறார்கள் என்னும் கொழுப்பில்தானே இப்படியெல்லாம் பேச முடிகிறது.

பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ”ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும்” என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.

எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?

“ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..” என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த “ஜஸ்ட்டில்” என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.

எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த ‘எந்திரன்’கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த ‘எந்திரன்’கள். யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே ‘எந்திரனின்’ வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல! பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.

சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் ’எந்திரன்’கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

”இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 4 Oct 2010 - 21:59

சினிமா எப்போதே வியாபாரமாக கருதப்பட்டு விட்டதே நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 4 Oct 2010 - 22:08

ஆமாம் நண்பா அந்த காலத்தில் நாயகர்கள் எம் .ஜி .ஆர் ,சிவாஜி போன்றவர்கள் குடிப்பழக்கம் போன்ற பழக்கம் இருந்தால் அந்த படம் முழுக்க அவர்கள் நடிப்பு வெறுக்கும் படி இருக்கும் பிறகு திருந்தியவுடன் அவர்கள் நாயகன் போல நல்லது செய்வதாக விரும்பபடி இருக்கும் ஆனால் இப்போது உள்ள நாயகர்கள் தண்ணி அடிப்பதும் தம் அடிப்பதும் மட்டுமே ஹீரோயிசம் என நினைக்கிறார்கள்

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Mon 4 Oct 2010 - 22:55

பொறாமைப்பிடித்தவனின் முட்டாள் தனமான பேச்சு.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 4 Oct 2010 - 23:06

இந்திரஜித்தன் wrote:பொறாமைப்பிடித்தவனின் முட்டாள் தனமான பேச்சு.

இல்லை அண்ணா உண்மை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக