புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
127 Posts - 54%
heezulia
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
9 Posts - 4%
prajai
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அழகர் குறவஞ்சி Poll_c10அழகர் குறவஞ்சி Poll_m10அழகர் குறவஞ்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகர் குறவஞ்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 12:55 am

நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர்.

- தலைவன் நாடெங்கும் பவனி வருதல்
- தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல்
- விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல்
- குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல்
- தலைவி தலைவனோடு சேருதல்.

இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள்.

குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன.

1. திருக்குற்றாலக் குறவஞ்சி
2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
3. அழகர் குறவஞ்சி
4. விராலிமலை குறவஞ்சி

இவைகளில்,

- குற்றாலக் குறவஞ்சியில் - இலக்கியச் செறிவும்
- சரபேந்திர பூபால குறவஞ்சியில் - இசை உயர்வும்
- அழகர் குறவஞ்சியில் - இலக்கியம், இசை இணைந்த அமைப்பும்
- விராலிமலை குறவஞ்சியில் - நடனக் கலையின் நளினமும் பிரகாசமாகக் காணப்படும்

அழகர் குறவஞ்சியில்,

- பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர்
- தலைவி மோகனவல்லி

"கருமுகில்மால் அழகராதி; மோகினியை மணந்த கதை" என்ற அடியால் இதனை உணரலாம்.
இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிக்குஞ்சர பாரதி.

சங்கீத மும்மூர்த்திகளான,

- ஸ்ரீதியாகராஜர்
- முத்துஸ்வாமி தீக்ஷிதர்
- சியாமா சாஸ்த்ரிகள்

ஆகியோரின் சமகாலத்தவர்.

இவர் சிவகங்கை சமஸ்தானத்தாலும் ஆதரிக்கப்பட்டவர். இம்மேதை, சிவகங்கை சமஸ்தான மகாராஜா கெளரிவல்லப மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டு "கவிக்குஞ்சரம்" என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். இம்மன்னருக்குப் பிறகு வந்த சத்ரபதிபோதகுரு மகாராஜாவால் இவர் மிக்க மரியாதையோடும் அன்போடும் ஆதரிக்கப்பட்டார்.இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது.

இக்குறவஞ்சி,

- வெண்பா
- விருத்தம்
- கீர்த்தனம்
- சிந்து
- திபதை
- அடிமடக்குத்திபதை
- கும்மிக்கண்ணிகள்
- ஓரடி கீர்த்தனம்

முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன.

சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன.

"*மருத தொடையும் இளைஞர் கருத்தும் இறுக்கும்
கொண்டைச் சொருக்கினாள்*"

"*துயிலும் இல்லை பசியும் இல்லை
பசித்தாலும் எள்ளளவு புசிப்பும் இல்லை*"

"*தவளநிறக் கருங்கூந்தல்
பவளச்செவ்வாய்க் கலைமகள்*"

"*அங்கம் கலிங்கம் வங்கம் கொங்கம்
சிங்கம் தெலுங்கம்*."

என, சிறப்பாக இக்குறவஞ்சியில் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள்
பிரகாசிக்கின்றன.

"*உருகு பெருகு கோடையில்
நீர் பெருகக் கண்ட மான்கள்போல ஓடினார்*"

"*புயல் கண்ட மயில்போல*"

"*கிணற்று நீரைக் கொண்டு போமோ*?"

"*கல்லினும் நார் உரிப்பேன்
மணலையும் கயிரெனத் திரிப்பேன்*."

இவைகள் போன்ற அடிகளால் இந்நூலில் பழமொழிகளின் சிறப்பை உணரமுடியும்.

இந்நூலின் இசைதான் தனிச்சிறப்பாகும். "கமாஸ்" இராகத்தில் "ஸாமி மயூரகிரி வடிவேலா" என்ற ஓர் அற்புதப் பாடல். அழகர் குறவஞ்சி என்ற நூல் உனது அருளால் சிறப்பாக அமைய திருமுருகனை நினைந்துருகும் பாடல். இப்பாடலின் சரணத்தில் அற்புத இலய வேலைப்பாடுகளை ஆதி தாளத்தில் நிறைவுடன் தந்துள்ளார் கவி.

கட்டியக்காரன் வருகையை,

"*தொய்யிலேந்திய முலைமா மடந்தமோகச்
சுகத்திலே வசித்தேன் பஞ்சுகித்து நாகப்
பையிலே துயின்ற திருவழகர்*."

என, விருத்த வடிவில் அழகாக விளக்கியுள்ளார்.

சுந்தரராஜ பெருமாள் பவனிவரும் காட்சியை நகரிலுள்ள மாதர்கள் கண்டு விரகமுறல் நிலை அற்புதம். சிங்கனும், சிங்கியைத் தேடிவரும் நிலையை தன்யாசி இராகத்தில்,

"*சோலைமலைச் சிங்கனும் வந்தான்
சிங்கியைத் தேடி*."

என்ற கீர்த்தனையின் சரணத்தில் ஒவ்வொரு அடியும் முடியும் கொண்டு.

- விறுக்கி
- முறுக்கி
- யுறுக்கி
- வீக்கி

என்ற ஒரே ஒலி நயத்தோடு கவி தந்துள்ளது தமிழிசை உணர்வு தன்னிகரற்றுப் பிரகாசிக்கிறது.

சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான,

- வீணை
- மத்தளம்
- தாளம்
- துந்தி
- தம்புரு
- மேளம்
- பேரி
- முரசு
- டமாரம்
- உடுக்கு
- வேய்
- துடி

முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாட்டுப்பாடல் இசையான,

- நொண்டிச் சிந்து
- கும்மி
- திபதை

முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை.

இம்மாபெரும் தெய்வீக இசைமேதை கவிக்குஞ்சர பாரதி சங்கீத மும்மூர்த்திகளின் சம காலத்தவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு அருகில் உள்ள பெருங்கரையில் தமிழிசையைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில், இவருக்கென தனிமண்டபம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பதும், இவரது நூல்களை நாட்டுடைமையாக்கிக் காக்க வேண்டும் என்பதும் தமிழிசை அன்பர்களின் அவா!

காரை ஏ.சங்கரசேது



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக