புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
4 Posts - 27%
சிவா
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
310 Posts - 42%
heezulia
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
6 Posts - 1%
prajai
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_m10 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 3:53 pm

உடன்பிறப்பே,

9.10.2010 அன்று சென்னை விமான நிலையத்தில் நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி அம்மையார் அவர்களைச் சந்தித்தபோது, கடிதம் ஒன்றை அவர்களிடம் அளித்தேன். அந்தக் கடிதத்தில், இலங்கையில் இன்னமும் முகாம்களில் இருந்துவரும் 30 ஆயிரம் தமிழர்களையும் உடனடியாக அவரவர் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்றும்; போரினால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தமிழர்களுக்கும் விரைவில் மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை பயன்தரத்தக்க முறையில் வலியுறுத்த வேண்டுமென்றும்; மேலும் தாமதமின்றி அரசியல் தீர்வுக்கான செயல்முறையைத் தொடங்க இலங்கை அரசு வற்புறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தேன். அம்மையார் அவர்களும் அதுகுறித்து உடனடியாகக் கவனிப்பதாக என்னிடம் உறுதி அளித்தார்கள்.

இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதற்கு அரசியல் தீர்வு ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும் என்று, இன்று நேற்றல்ல; நீண்ட நெடுங்காலமாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது உனக்கும் உன்னைப் போன்றவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

29.1.1956 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்குழுவில் நான் முன்மொழிந்து; பெரியவர் அ.பொன்னம் பலனார் அவர்கள் வழிமொழிந்த தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்த நாள்தொட்டு; தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், அரசியல்ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காகவும், நாம் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், பேரணிகள் நடத்தியும், உரியவர்களிடத்தில் முறையீடுகள் மூலமாகவும் வலியுறுத்தி வருகிறோம். இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை நமது ஆட்சியையே இழந்திருக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களைக்காக்கவும் - அவர்தம் உரிமைகளை அறவழியில் - அமைதி வழியில் - அரசியல் ரீதியாக வாதாடி, போராடிப் பெறுகிற வழிமுறைகளைப் பின்பற்றி, கழகம் முயற்சிகளை மேற்கொண்டு - அதற்கு ஒத்துவருகின்ற கட்சிகள், இலங்கைத் தமிழர்பால் பரிவுகொண்ட இயக்கங்கள் - அவற்றின் தலைவர்கள் - முன்னோடிகள் ஆகியோருடன் தொடர்புகொண்டு - அவர்களும் ஈடுபாடு கொண்டு நடத்திய பல போராட்டங்களையும் - செய்த தியாகங்களையும் உலகம் முழுதும் இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடும் தமிழர்தம் தூயநெஞ்சங்கள் நன்கறியும்.

1956ஆம் ஆண்டிற்குப் பிறகு, அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பியபடி, 22.6.1958 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடெங்கும் "இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்" நடத்தப்பட்டது. அன்றையதினம், நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தில், "இலங்கையில் உள்ள ஒருசில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி, உயிரையும், உரிமையையும், உடைமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ்த் தமிழர்கள் நிலைகண்டு, இக்கூட்டம் மிகவும் இரங்குகிறது. நீண்டகாலமாக இலங்கையை தாயகமாகக் கொண்டுள்ள தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முறையில், தங்களுடைய நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டுமென்று இந்தியப் பேரரசினரை இப்பொதுக் கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று விளக்கமாகக் குறிப்பிடப்பட்டது. அதன்பிறகும்;

இந்திய நாட்டின் அரசியல் சட்டத்திற்குட் பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நாம் மேற்கொண்டுவரும் முயற்சிகள், எடுத்துவரும் நடவடிக்கைகள் எண்ணற்றவை. தமிழீழ ஆதரவாளர்கள் (கூநுளுடீ) என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய அமைப்பின் தலைவர்களையெல்லாம் மதுரைக்கு அழைத்து வந்து, இந்திய நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் முன்னிலையில், சகோதரயுத்தம் கூடாது என்று 4.5.1986 அன்று வேண்டுகோள் விடுத்தோம். அந்த வேண்டு கோள் முழுமையாக - மனப்பூர்வமாக அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டிருக்குமேயானால், வரலாறு வேறுவகையான வடிவத்தைப் பெற்றிருக்கும்.

இலங்கையில் நடைபெற்ற சகோதர யுத்தத்தின் காரணமாக, 1986.ல் "டெலோ" இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்; 1989.ல் கொழும்பு நகரில் பெருந்தமிழர் பெரியவர் அமிர்தலிங்கம் அவர்களும், ஈழப் போருக்கு ஆதரவாளரான யோகேஸ்வரன் அவர்களும் கொல்லப்பட்டார்கள்; அதே ஆண்டில், "பிளாட்" இயக்கத்தின் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் இலங்கையில் கொல்லப்பட்டார்; 1990ஆம் ஆண்டில் சென்னையில் "ஈ.பி.ஆர்.எல்.எப்" இயக்கத்தைச் சேர்ந்த பத்மநாபா அவர்களும், அவரோடு 10 பேரும் கொல்லப்பட்டார்கள். அப்போதும் சகோதர யுத்தத்தால் விளைந்திடும் கொடுமைகளைப் பற்றியும், பேரிழப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லி, "சகோதர யுத்தத்தால் நாம் பாழ்பட்டு விட்டோம் என்பதை மறந்துவிடாமல், அந்தச் சகோதர யுத்தங்கள் ஏற்படுத்திய விளைவுகளை, இப்போது நாம் பெறவேண்டிய பாடமாகப் பெற்று, இப்போதாவது இலங்கைத் தமிழர்களுக்கு, ஒற்றுமையாக இருந்து உதவிகள் செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்" என்று நான் சொன்னேன்.

சகோதர யுத்தத்தின் காரணமாக, இலங்கையிலே நடைபெற்ற சோகமயமான நிகழ்ச்சிகள், அவற்றினால் இலங்கைத் தமிழர்கள் பட்ட - இன்னமும் பட்டுக் கொண்டிருக்கும் துன்பதுயரங்கள் ஆகியவற்றை சரித்திரம் நிச்சயமாக மறக்காது; மன்னிக்கவும் செய்யாது.

இலங்கையிலே போர் தொடங்கி மேலோங்கியபோது, தமிழர்கள் பேரிழப்பைச் சந்திக்கத் தொடங்கியதைக் கண்டு, தமிழகச் சட்டப் பேரவையில்,

"இலங்கையில் தமிழ் இனமே அழிந்து கொண்டிருக்கிறது. ஐ.நா. மன்றமே கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு; அந்த நாடு அப்பாவித் தமிழ் மக்களின் இடுகாடாக - சுடுகாடாக - ஆகிக் கொண்டிருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு, குடும்பம் குடும்பமாக குய்யோ முறையோ என்று கூச்சலும் - ஒப்பாரியும் புலம்பலும் - பின்னணியாக, பிணங்கள் குவிக்கப்படுகின்றன. அத்தனையும் தமிழ் மக்களின் பிணங்கள்.

அய்யோ! அந்தச் சிங்கள இராணுவ குண்டு வீச்சுக்கிடையே - சிதறியோடும் - சிறுவர்கள் சிறுமியர் - சிலராவது செத்துப் பிழைத்தனர் என்ற சேதியும் கூட அறவே அற்றுப்போய் - இன்று கூண்டோடு சாகின்றனரே - பூண்டோடு அழிகின்றனரே -

மனித நேயமற்ற மாபாவிகளின் சேட்டையால்; இத்தனை ஆண்டுகள்; இழித்தும் - பழித்தும் - இறுதியாக அழித்தும் ஒழிக்கப்படுகிறதே உலகை ஆண்ட ஓர் இனம் - அந்த இனத்தை இறுதியாக இலங்கையில் விடப்பட்டுள்ள இந்த அறைகூவலில் இருந்து எப்படி மீட்கப் போகிறோம்?

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் நாம் வாழுகிறோம் என்பதால் நம்மை அரவணைத்துக் காத்திடும் பொறுப்பை இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் - ஆம், பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உரிமையோடு எதிர்பார்க்கிறோம். நமக்கு பாதுகாப்பு தருவதாயினும் - பாதிப்பு களைவதாயினும் இரண்டையும் சீர்தூக்கி செயல்படுத்தி, இந்த மாநில மக்களுக்கும் - இந்த மாநில மக்களாம் தமிழ்க்குடி மக்களின் நலத்திற்கும் நமது தொப்புள் கொடி உறவு கொண்ட இலங்கைத் தமிழ் மக்களின் நலத்திற்கும் உத்திரவாதமளிக்கக் கூடிய பொறுப்பு; - உலகில் எங்கு இனப் படுகொலை நடந்தாலும் தட்டிக் கேட்கும் உணர்வும், உரிமையும் கொண்ட இந்தப் பெரிய ஜனநாயக நாடாம் இந்தியத் திருநாட்டில் மக்களாட்சியை நடத்துகிற மத்திய ஆட்சியின் கரங்களில் இருக்கும் போது; நாம் அந்தக் கரங்களைப் பிடித்துக் கொண்டுதான்; இலங்கை யில் சீரழியும் - செத்து மடியும் எங்கள் தமிழ்ச் சாதியைக் காப்பாற்றுக என்று கண்ணீர் மல்கக் கேட்கிறோம்.

கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட - ஆவன செய்திடுக என்று!

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் - இன்றே போர் நிறுத்தம் இலங்கையில் - அடுத்து அரசியல் தீர்வு - தொடர்ந்து அமைதி.

எனவே அந்த நல்ல விளைவை எதிர்பார்த்து; இந்த மாமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இறுதித் தீர்மானமாக இதனை முன்மொழிகிறேன்"

- என்று இவ்வாறு நான் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையிலே போர் நிற்கவில்லை; தொடர்ந்து நடந்தது; விபரீதமான விளைவுகளுக்குப் பிறகு, ஓய்ந்தது. எனினும், உரிமைகளுக்கான போராட்டம் இலங்கையிலே உச்சக் கட்டத்திலே இருந்தபோது, ஜெயலலிதா அம்மையார் என்ன சொன்னார் என்பதை இங்குள்ள தமிழர்களும், இலங்கையிலே உள்ள தமிழர்களும் மறந்திருக்க மாட்டார்கள். 18.1.2009 அன்று ஜெயலலிதா அளித்த பேட்டியில், "இலங்கை வேறு நாடு. எனவே, அந்த நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு ஒரு எல்லை உண்டு. இலங்கையில் ஈழம் என்ற ஒரு நாடு இன்னும் அமையவில்லை. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று, சிங்கள இராணுவம் எண்ணவில்லை. ஒரு போர் நடைபெறும்போது, அப்பாவி மக்கள் கொல்லப் படுவார்கள். இதிலே எந்த நாடும் விதிவிலக்கல்ல" என்று சொல்லியிருந்தார். அப்படிச் சொன்னவருக்கு ஆதரவாகத்தான் - ஈழத் தமிழர்களுக்காக தான் மட்டுமே பிறவி எடுத்ததாகச் சொல்லிக் கொள்ளும் - ஒருசிலர்; குரல் உயர்த்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பதை; வரலாறு உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வுதான் நிரந்தரமாகப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் பின்னணியில், இன்றைய(18.10.2010) "இந்து" நாளேடு தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. அதில், போரின்போது இடப் பெயர்ச்சிக்கு ஆளான தமிழர்களை மறு குடியமர்த்தலும், அவர்களுக்கான மறுவாழ்வும் முக்கியமானப் பிரச்சினையாகும் என்றும்; அதிபர் ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத் தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்திற்கு திருத்தம் கொண்டுவருவதென்பது இயலக் கூடியதாகும் என்றும்; இலங்கைத் தமிழர் களுடைய - இலங்கை இஸ்லாமியர்களுடைய நீண்டநாள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டுமானால் அரசியல் சட்டத்திருத்தம் தேவையான ஒன்றாகும் என்றும்; தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவையான அதிகாரப் பங்கீடு ஒன்றுதான் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும் என்றும்; இதுவரை இல்லாத வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்பே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு வேண்டு மென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத்தான்; இன்றைய "இந்து" தலையங்கம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது என்பதை நீ அறிவாய்!

"இன்னமும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையே" என்று திரு.ராஜபக்சே போன்றோர் காரணம் சொல்லிக் கொண்டிருப்பது; கவைக்குதவாத வாதமாகவே இருக்கிறது - அந்த வீண்வாதங்களையும், பிடிவாதங்களையும் விட்டுவிட்டு; இலங்கையில் தமிழர்கள், இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - என்று தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது.

இந்த ஏக்கத்தைப் போக்க வேண்டியக் கடமை இந்தியப் பேரரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி; அந்தக் கடமையை காலத்தே நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

அன்புள்ள,
மு.க.

முரசொலி

 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 24, 2010 4:00 pm

ங்கொய்யால ,,,இன்னும் நாங்க உங்களை நம்புரோமுன்னு நினைகிறீங்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 24, 2010 4:03 pm

பயம் பயம் பயம் பயம் பயம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இவரு கடிதம் மட்டும்தான் எழுதுவார்.

 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! U தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! D தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! A தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Y தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! A தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! S தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! U தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! D தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! H தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 4:06 pm

ரபீக் wrote:ங்கொய்யால ,,,இன்னும் நாங்க உங்களை நம்புரோமுன்னு நினைகிறீங்களா ?

ஆனால் இவர்தானே மீண்டும் முதல்வராகப் போகிறார்! இது மக்களின் முட்டாள்தனமா? அல்லது இவர்களது தந்திரமா?

 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 24, 2010 4:13 pm

சிவா wrote:
ரபீக் wrote:ங்கொய்யால ,,,இன்னும் நாங்க உங்களை நம்புரோமுன்னு நினைகிறீங்களா ?

ஆனால் இவர்தானே மீண்டும் முதல்வராகப் போகிறார்! இது மக்களின் முட்டாள்தனமா? அல்லது இவர்களது தந்திரமா?

தல ,,தமிழகத்தில் பதிரிகைத்துரையும் செய்தி ஊடகங்களும் இவர்களின் கையில் உள்ளன ,அதை வைத்து இவர்கள் அப்படியொரு மாயையை ஏற்படுத்துகிறார்கள் ,,,எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வரும் அப்போ இவங்க யாரும் தப்ப முடியாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 24, 2010 4:18 pm

ரபீக் wrote:
தல ,,தமிழகத்தில் பதிரிகைத்துரையும் செய்தி ஊடகங்களும் இவர்களின் கையில் உள்ளன ,அதை வைத்து இவர்கள் அப்படியொரு மாயையை ஏற்படுத்துகிறார்கள் ,,,எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வரும் அப்போ இவங்க யாரும் தப்ப முடியாது

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் இவர்களை பகைத்துக் கொண்டால் அழிந்துவிட வேண்டியதுதான் என்ற மாயை தீர வேண்டுமானால் வரும் தேர்தலில் இவர்கள் படு தோல்வியைச் சந்திக்க வேண்டும். மீறி இவர்கள் வெற்றி பெற்றால் மற்ற அரசியல் கட்சியினர் அனைவரும் தங்களது கட்சிகளைக் களைத்துவிட்டு இவர்களுடன் இணைந்து கொள்வதே சாலச்சிறந்தது!

 தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Oct 24, 2010 4:23 pm

சிவா wrote:
ரபீக் wrote:
தல ,,தமிழகத்தில் பதிரிகைத்துரையும் செய்தி ஊடகங்களும் இவர்களின் கையில் உள்ளன ,அதை வைத்து இவர்கள் அப்படியொரு மாயையை ஏற்படுத்துகிறார்கள் ,,,எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வரும் அப்போ இவங்க யாரும் தப்ப முடியாது

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் இவர்களை பகைத்துக் கொண்டால் அழிந்துவிட வேண்டியதுதான் என்ற மாயை தீர வேண்டுமானால் வரும் தேர்தலில் இவர்கள் படு தோல்வியைச் சந்திக்க வேண்டும். மீறி இவர்கள் வெற்றி பெற்றால் மற்ற அரசியல் கட்சியினர் அனைவரும் தங்களது கட்சிகளைக் களைத்துவிட்டு இவர்களுடன் இணைந்து கொள்வதே சாலச்சிறந்தது!

நூத்துல ஒரு வார்த்த ,,,,,, சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 24, 2010 5:47 pm

முதலைக் கண்ணீர்...நம்பாதீர்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 24, 2010 7:52 pm

சிவா wrote:
ரபீக் wrote:
தல ,,தமிழகத்தில் பதிரிகைத்துரையும் செய்தி ஊடகங்களும் இவர்களின் கையில் உள்ளன ,அதை வைத்து இவர்கள் அப்படியொரு மாயையை ஏற்படுத்துகிறார்கள் ,,,எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வரும் அப்போ இவங்க யாரும் தப்ப முடியாது

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் இவர்களை பகைத்துக் கொண்டால் அழிந்துவிட வேண்டியதுதான் என்ற மாயை தீர வேண்டுமானால் வரும் தேர்தலில் இவர்கள் படு தோல்வியைச் சந்திக்க வேண்டும். மீறி இவர்கள் வெற்றி பெற்றால் மற்ற அரசியல் கட்சியினர் அனைவரும் தங்களது கட்சிகளைக் களைத்துவிட்டு இவர்களுடன் இணைந்து கொள்வதே சாலச்சிறந்தது!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம்  தாய்த் தமிழகத்தின் ஏக்கம் - என்று தணியுமோ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 24, 2010 8:10 pm

வயதால் பெரியவர் குணத்தால் மிக சிறியவர் ஒரு தலைவன் எப்படியோ அப்படியோ நாடும் மக்களும் இவரை போன்ற தலைவர்கள் இருக்கும்வரை தமிழகம் இருளில் இருந்து வெளிவராது இன்னொன்று இலங்கை தமிழர்களுக்கு தீர்வு ஒன்று மட்டுமே தமிழ் ஈழம் மட்டுமே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக