புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_m10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_m10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_m10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_m10மனைவியை கொல்லும் கணவர்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை கொல்லும் கணவர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:32 pm

ஆண்களின் கொடூர மனநிலையின் பகீர் பின்னணி

எதிர்ப்பு இல்லாத காதலா? காதல் ஜோடி ராஜேஷ்- அனுபமா காதலுக்கும் எதிர்ப்பு இருக்கவே செய்தது. எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இனிமையாகத் தொடங்கிய அவர்களின் காதல் வாழ்வு ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு குரூரமாக முடிந்து போயிருக்கிறது. ஆமாம், காதலித்து கைபிடித்த மனைவி அனுபமாவை கொன்று 72 துண்டுகளாக்கி குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட் டிருக்கிறான் ராஜேஷ்.

திருமணத்துக்கு முன்பு திகட்டத் திகட்ட இனித்த காதல், திருமணத்திற்குப் பிறகு ஒரேயடியாய் கசந்து போகும் அளவுக்கு அவர்களுக்குள் என்னதான் நடந்தது?

ராஜேஷ் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஓட்டலில் அனுபமாவை சந்தித்தான். முதல் சந்திப்பிலேயே அனுபமா மீது ராஜேசுக்கு காதல் அரும்பியது. அவளிடம் பேச்சுக் கொடுத்து பழகத் தொடங்கிய ராஜேஷ் விரைவிலேயே தன் காதலையும் வெளிப்படுத்தினான். அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருந்தது. படிப்பு முடிந்த பிறகு முறைப்படி பெற்றோரிடம் பேசி திருமணம் முடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்..

படிப்பு முடிந்ததும் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் பற்றி பேசினர். இரு வீட்டிலும் எதிர்ப்பு தொடரவே, காதல் ஜோடி ரகசிய திருமணம் செய்து கொண்டது. ஒரிசாவைச் சேர்ந்த அனுபமா, ராஜேசுடன் பதிவு திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடியேறினாள். அப்போது ராஜேசுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்தது. வசந்தமான வாழ்க்கை கனவுகளுடன் அமெரிக்காவில் குடியேறினார்கள்.

கணவன் வேலைக்குச் சென்றதும் வீட்டில் தனிமையில் இருந்த அனுபமா, தனது படிப்பிற்கேற்ற ஒரு வேலையை தேடினாள். அதற்கு பலன் கிடைக்க, அனுபமாவும் பணிக்குச் சென்று வந்தாள். இது ராஜேசுக்குப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிடும்படி வாக்குவாதம் செய்தான். இதனால் நாளுக்கு நாள் சண்டையும், குழப்பங்களும் அதிகரிக்க, அனுபமா தனது வேலையை ராஜினாமா செய்தாள். கோபத்தில் அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பியவள், தனது பெற்றோருடன் வசிக்கத் தொடங்கினாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அமெரிக்காவில் தனியாக இருந்த ராஜேஷ் தனிமையின் கொடுமையை உணர்ந்து அனுபமாவைத் தேடி வந்தான். அவளது பெற்றோருடன் பேசி சமாதானப்படுத்தி அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றான்.

பிரிவு அவர்களுக்கு இடையே அன்பை அதிகரித்திருந்தது. ராஜேஷ், அனுபமா மீது கூடுதல் பாசத்தை பொழிந்தான். சந்தோஷ வாழ்க்கையில் அனுபமா 2 குழந்தைகளை பெற்றெடுத்தாள். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு புயல் குறுக்கிட்டது.

2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ராஜேஷ்-அனுபமா ஜோடி வாழ்விலும் எதிரொலித்தது. ராஜேஷ் வேலை இழந்தான். இதனால் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய நிலை. திரும்பவும் வேலை தேட, கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. மனைவி- குழந்தைகளை டெல்லியில் விட்டுவிட்டு கொல்கத்தாவிற்கு பணிபுரியச் சென்றான். இப்போது தனிமை ராஜேசை தவறிழைக்கச் செய்தது. உடன் பணிபுரிந்த ஜ×மா என்ற பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரகசிய கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் அனுபமாவுக்கு இது தெரியவந்தபோது ஆத்திரமானவள், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தாள். இந்த நிலையில் அந்த நிறுவனத்திலும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், டெல்லி திரும்பினான் ராஜேஷ்.

டேராடூனில் புதிய வேலை கிடைத்தது. அங்கு குடும்பத்துடன் குடியேறினான் ராஜேஷ். கொஞ்சநாள் சென்ற பிறகு ராஜேஷ் மீண்டும் ஜ×மாவை தொடர்பு கொள்ள ஆரம்பித்தான். இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் அவர்கள் பழக்கம் தொடர்ந்தது. இதைக்கண்டு கொதித்த அனுபமா போலீசில் புகார் செய்தாள்.

வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அனுபமா தனக்கு கணவர் மாதம் தோறும் 40 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று வாதிட்டாள். அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்று கோர்ட்டும் தீர்ப்புக்கூறி விவாகரத்து வழங்கியது.

விவாகரத்து செய்த பிறகும் ராஜேஷ்-அனுபமா ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர். ஒரு முறை அனுபமாவின் செல்போனுக்கு அண்ணன் சுஜன் தொடர்பு கொண்டபோது, ராஜேஷ் போனை எடுத்துப் பேசினான். அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாகக் கூறிவிட்டு வைத்து விட்டான். பல நாட்கள் கழித்து பேசியபோதும் அனுபமாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் வரவே, சுஜன் தன் நண்பர் ஒருவரை தங்கையின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். `அம்மா ஆச்சி வீட்டிற்கு சென்றிருப்பதாக குழந்தைகளும், `அனுபமா மார்க்கெட் சென்றிருப்பதாக, ராஜேசும் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர், சுஜனிடம் விவரத்தைக் கூறினார்.

சுஜன் போலீசாரின் உதவியை நாட, ராஜேஷ் கைது செய்யப்பட்டான். விசாரணையின்போது மனைவியை கொலை செய்து விட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டான்.

"ஜீவனாம்சமாக தன்னால் 20 ஆயிரம் தான் வழங்க முடிந்தது. அவள் 40 ஆயிரம் கேட்டு வற்புறுத்தியதால் அவளை அடித்து உதைத்தேன். தலையணையை வைத்து முகத்தை அழுத்தியபோது அவள் இறந்து விட்டாள். பிறகு சந்தைக்குச் சென்று ஒரு பிரீசரும், டைல்ஸ் கற்களை வெட்டும் எந்திரமும் வாங்கி வந்தேன். அதைக் கொண்டு மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரீசரில் வைத்து விட்டேன். சில துண்டுகளை வெளியில் வீசி விட்டேன்'' என்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்.

இப்போது ராஜேஷ் ஜெயிலில் வாழ்கிறான். அவனது குழந்தைகள் வெளியில் வாடுகின்றன.

இப்படி அன்பால் உருகி காதலித்த மனம், ஏன் ஒரு நொடியில் ஆளைக் கொல்லும் அளவுக்கு கடினமாகிவிடுகிறது. கொலை செய்யத் தூண்டும் உள்ளுணர்வுதான் எது? ஒரு உளவியல் விசாரணை...

ராஜேஷ் தனது மனைவி அனுபமாவுடன் சண்டையிடும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி இருக்கிறது. அந்த உள்ளுணர்வுக்குப் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

"டெஸ்ட்டோஸ்டெரோன், கார்ட்டிசால் மற்றும் அட்ரீனலின் ஆகிய 3 ஹார்மோன்களுக்கு கொடிய குற்றம் புரிதல் உணர்வோடு நெருங்கிய தொடர்பிருக்கிறது. விபத்து, மிரட்டல் போன்ற பாதகமான சூழலை சந்திக்கும்போது ஒருவனது நரம்பு மண்டலம் தப்பித்துச் செல்வதா, எதிர்கொள்வதா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடும். அப்போது அட்ரீனலின் ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு நாடித்துடிப்பு அதிகரித்து ஆத்திரம் வருகிறது. இதனால் மனிதன் அதிக சக்தியையும், கட்டுப்படுத்த முடியாத நிலையையும் ஒரு சேர சந்திப்பதால் குற்றம் நிகழ்ந்துவிடுகிறது. குற்றம் நடந்தபிறகுதான் அதை அவனால் உணர முடியும்'' என்கிறார் அமெரிக்க மனநல அறிஞர் விக்டோரியா ஹார்கன்.

"சில குற்றங்கள் தெளிவான திட்டமிடுதல் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. பணப்பயன் கருதியோ, வேறு பயனை எதிர்பார்த்தோ செய்யப்படும் குற்றங்கள் இவை. பெற்றோரின் நல்ல வளர்ப்பு முறை இந்தக் குற்றத்தை உள்ளுணர்வால் தடை செய்தாலும், குற்றத்தால் கிடைக்கும் பயன் அந்தக் குற்றத்தை திட்டமிட்டு செய்ய சம்மதிக்க வைக்கிறது'' என்கிறார் பிரியூட் என்ற அமெரிக்க ஆய்வாளர்.

"மனிதர்கள் பிறவியிலேயே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. மோனோ அமெய்ன் ஆஸ்மேன்- ஏ என்ற நொதியை மனிதனின் மரபணுக்கள் கட்டுப்படுத்தத் தவறும்போது அட்ரீனலின் ஹார்மோன் உந்தப்பட்டு மன அழுத்தம் உண்டாகிறது. இதனால் கோபம் அதிகமாகி மனிதன் குற்றம் இழைக்கிறான்'' என்கிறது அமெரிக்க ஆய்வு.


தினதந்தி



மனைவியை கொல்லும் கணவர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Feb 16, 2011 4:31 pm

பயங்கரமாக இருக்கிறதே சோகம்
வேலை சரியாக அமையாத கணவனை விட்டு பிரிந்து வந்தால் கணவன் தனிமையில் தவறு செய்து சோகம் பின் எப்படியோ குடும்பமாய் சேர்ந்தப்பின்னும் இப்படி தவறு செய்யலாமா சோகம்
குழந்தைகளின் எதிர்காலம் கூட யோசிக்காமல் இப்படி செய்தது தப்பாச்சே சோகம்
40000 கொடுக்க முடியாத சூழல் இருப்பதை அனுபமா புரிந்து கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம் சோகம்
இப்ப எல்லாருமே எல்லாம் இழந்து நிற்பது வேதனையை தருகிறது சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனைவியை கொல்லும் கணவர்கள் 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 4:35 pm

அப்ப அவங்க ரெண்டுபேருடைய காதல் எந்த அளவு உண்மையானது.
உண்மையான காதல் குறைகளை ஏற்று கொள்ளுமே.ஒருத்தருக்கொருத்தார் புரிதல் இல்லாததால் வந்த வினை இது.

இறந்த அந்த பெண்ணுக்கு ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.





மனைவியை கொல்லும் கணவர்கள் Uமனைவியை கொல்லும் கணவர்கள் Dமனைவியை கொல்லும் கணவர்கள் Aமனைவியை கொல்லும் கணவர்கள் Yமனைவியை கொல்லும் கணவர்கள் Aமனைவியை கொல்லும் கணவர்கள் Sமனைவியை கொல்லும் கணவர்கள் Uமனைவியை கொல்லும் கணவர்கள் Dமனைவியை கொல்லும் கணவர்கள் Hமனைவியை கொல்லும் கணவர்கள் A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 5:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மனைவியை கொல்லும் கணவர்கள் 812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக