ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 8:21 pm

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by ayyasamy ram Today at 7:35 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Today at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Today at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Today at 7:13 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by ayyasamy ram Today at 7:11 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Today at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Today at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Today at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Today at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Today at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

Admins Online

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Page 1 of 2 1, 2  Next

Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by தாமு on Mon Nov 01, 2010 7:14 am

எச்.ஐ.வி / எய்ட்ஸ் அடிப்படைகள்

எய்ட்ஸ் என்றால் என்ன?

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.
எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.


எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.
எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.
எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.
அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.


யாருக்கு எய்ட்ஸ் வரும்?

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்பதை அறிய எச்.ஐ.வி எண்ணி .)
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.
எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். "நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.
எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை .)


எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.

3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.


எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.
2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.
5.ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள் (தமிழக பள்ளி மாணவர்கள் அடிக்கடி எழுப்பிய கேள்விகளின் முதல் இன்டர்நெட் தொகுப்பை பார்க்க கிளிக் செய்க.)

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.


எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.
* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.


பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.

3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.
5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


by-வானவில்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by Thanjaavooraan on Mon Nov 01, 2010 12:39 pm

பயனுள்ள செய்தி.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
மதிப்பீடுகள் : 21

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Mon Nov 01, 2010 4:59 pm

பயனுள்ள கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி தாமு!


மேலும் தகவல்களுக்கு!

https://www.eegarai.net/-f14/std-hiv--t550.htm


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by புவனா on Mon Nov 01, 2010 5:53 pm

எய்ட்ஸ் தாக்கியதர்க்கான சில அறிகுறிகள்...

1.அடிக்கடி உடல் சோர்வு
2.அடிக்கடி உடல் நல குறைவு.(அடிக்கடி காய்ச்சல் தலைவலி )
3.திடீர் உடல் எடை குறைவு.
4.உடல் இணைப்பு பகுதிகளில்(முழங்கால் மடிப்பு ) அடிக்கடி தங்க முடியாத வலி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3356
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Mon Nov 01, 2010 5:55 pm

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 10748-32

இன்னும் கொஞ்சம் பக்கத்தில் புகைப்படம் எடுத்திருந்தால் முகம் நன்றாகத் தெரியும்! இப்பொழுது பூக்களை மட்டுமே ரசிக்க முடிகிறது புவனா! முகம் தெரியவில்லையே!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by புவனா on Mon Nov 01, 2010 5:58 pm

எடுத்தவரை தான் கேட்க வேண்டும் .
பக்கத்தில் எடுத்த புகைப்படத்தை விரைவில் பதிகிறேன் அண்ணா...
உடனே பதிந்தால் ஒரு suspanse இருக்காது அதனால் தான்...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3356
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Mon Nov 01, 2010 6:01 pm

@புவனா wrote:எடுத்தவரை தான் கேட்க வேண்டும் .
பக்கத்தில் எடுத்த புகைப்படத்தை விரைவில் பதிகிறேன் அண்ணா...
உடனே பதிந்தால் ஒரு suspanse இருக்காது அதனால் தான்...

ஹா ஹா ஹா...!!! நீங்கள் கூறுவதும் உண்மைதான்! தங்கையின் புகைப்படத்தைக் காணக் காத்திருக்கிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by புவனா on Mon Nov 01, 2010 6:05 pm

தீபாவளியை அடுத்து பதிவிடபடும் அண்ணா...
சிரி சிரி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3356
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Mon Nov 01, 2010 6:06 pm

@புவனா wrote:தீபாவளியை அடுத்து பதிவிடபடும் அண்ணா...
எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 705463

ஓ, தீபாவளிக்குதான் ரிலீஸா? சரி... சரி..! சிரி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by புவனா on Mon Nov 01, 2010 6:07 pm

சிரி சிரி சிரி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3356
இணைந்தது : 14/08/2010
மதிப்பீடுகள் : 81

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by Aathira on Mon Nov 01, 2010 6:17 pm

இது போன்ற கட்டுரைகள் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையாக பல முறை வலம் வருதல் வேண்டும்.. ப்திவுக்கு நன்றி தாமு.. எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 678642


எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Tஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Hஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Iஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Rஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Mon Nov 01, 2010 6:23 pm

@Aathira wrote:இது போன்ற கட்டுரைகள் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையாக பல முறை வலம் வருதல் வேண்டும்.. ப்திவுக்கு நன்றி தாமு.. எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 678642

நன்றி அக்கா! இதே கட்டுரையை தினமும் பதிவேற்றிவிடுகிறேன்! நிச்சயம் பலமுறை வலம் வரும்! எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 230655


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by Aathira on Mon Nov 01, 2010 6:33 pm

@சிவா wrote:
@Aathira wrote:இது போன்ற கட்டுரைகள் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையாக பல முறை வலம் வருதல் வேண்டும்.. ப்திவுக்கு நன்றி தாமு.. எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 678642

நன்றி அக்கா! இதே கட்டுரையை தினமும் பதிவேற்றிவிடுகிறேன்! நிச்சயம் பலமுறை வலம் வரும்! எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 230655
என்ன இது சின்னப்புள்ளத்தனம்.. எப்போதும் கூறிக்கொண்டே இருக்க வேண்டிய அறிவுரைகள் என்று சில உள. அவற்றில் இது போன்றதும் அடங்கும் சிவா. நம்ம ஈகரையில் தலைமுடி பற்றிய பதிவு என்று 8 லிங்க் கொடுத்து உள்ளீர்களே.. சில கட்டுரைகளை விட்டு விட்டே அத்தனை இருக்க இது போன்ற முக்கிய பதிவுகள் எவ்வளவு இருக்க வேண்டும்!!! (அதாவது சாதாரன மயிர் பிரச்சனைக்கே இத்தனை என்றால் உயிர் பிரச்சனைக்கு எத்தனை வேண்டும்???) மன்னிக்கவும்.. இப்ப நான் ஜூட்... எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 230655 எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 230655


எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Tஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Hஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Iஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Rஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by சிவா on Mon Nov 01, 2010 6:35 pm

ஏன் இல்லை! இதைவிடவும் தெளிவாக எழுத வேண்டுமா அக்கா!

https://www.eegarai.net/-f14/std-hiv--t550.htm


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by Aathira on Mon Nov 01, 2010 8:52 pm

@சிவா wrote:ஏன் இல்லை! இதைவிடவும் தெளிவாக எழுத வேண்டுமா அக்கா!

https://www.eegarai.net/-f14/std-hiv--t550.htm
தெளிவாக என்று சொல்லவில்லை சிவா. அடிக்கடி நினைவூட்ட வேண்டிய பதிவு என்றுதான் கூறினேன். அதாவது சின்னக் குழந்தைக்கு கை கழுவிட்டு சாப்பிடு என்று நாள்தோறும் கூறிக்கொண்டே இருப்பது போல.. இது தற்போதைய அத்தியாவசியத் தேவை என்றேன். எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் 440806


எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Tஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Hஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Iஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Rஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Aஎய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம் Empty Re: எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum