புதிய பதிவுகள்
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 4:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am

» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 2:41 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
23 Posts - 70%
T.N.Balasubramanian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
5 Posts - 15%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
1 Post - 3%
venkat532
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
435 Posts - 67%
T.N.Balasubramanian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
6 Posts - 1%
THIAGARAJAN RV
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:12 am

First topic message reminder :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Netaji10

பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945


#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 9:54 pm

சுயராஜ்யக் கட்சி உதயமும் சட்டமன்றப் பிரவேசமும்

1922 மார்ச் மாதம் அஹமதாபாதில் காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அந்த மகாநாட்டுக்கு சித்தரஞ்சன தாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். என்றாலும், அப்போது அவர் சிறையிலிருந்தது காரணமாக அவர் எழுதி அனுப்பிய உரையை சரோஜினி நாயுடு வாசித்தார். .சி.ஆர்.தாஸின் மனைவி வசந்தி தேவியும், சகோதரி ஊர்மிளா தேவியும் உருக்கமாக வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள்.

1922 ஜூன் 7ம் தேதி அன்று அன்றைய அரசியல் நிலையை ஆராய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடியது. மோதிலால் நேரு அப்போதுதான் சிறையிலிருந்து வந்திருந்தார். இந்தக் கூட்டத்தில் காந்திஜியின் சாத்விக சட்ட மறுப்புத் திட்டத்தைப் பற்றி ஆராய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஹக்கீம் அஜ்மல்கான், மோதிலால் நேரு, ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் அன்ஸாரி, கஸ்தூரிரங்க ஐயங்கார் ஆகியவர்கள் அதன் உறுப்பினர்கள். இந்தக் கமிட்டியின் அறிக்கை 1922 அக்டோபர் 22ம் தேதி வெளியாகியது. முறைப்படி அது அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த சி.ஆர்.தாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை காந்திஜிக்குப் பெரும் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு அதே கையோடு, அன்றைய சூழ்நிலையில் சாத்விக சட்ட மறுப்பு ஒத்து வராது என்று விட்டது. கமிட்டியின் பாதிப் பங்கு உறுப்பினர்கள் சாத்வீக சட்ட மறுப்பு அறவே கைவிடப்பட வேண்டிய ஒன்று என்றும், சட்டமன்றங்களில் பிரவேசிப்பது என்ற நோக்கத்துடன் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள். இந்தக் கருத்தைக் கொண்டிருந்தவர்கள்

மோதிலால் நேரு, ஹக்கீம் அஜ்மல்கான், வித்தல்பாய் பட்டேல் ஆகியோர். "காலம் மாறி விட்டது. சூழ்நிலைகளும் மாறி விட்டன. போராட்டம் இழுத்தடித்துக் கொண்டே போகிறது. வருஷா வருஷம், மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சட்டங்களை இயற்றிக் கொண்டே போகிறார்கள். புதிய வரிகளைச் சுமத்திக் கொண்டே போகிறார்கள். மக்கள் வேறு வழியின்றி இந்தச் சுமைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் எவ்வளவு நாள் மக்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்க இயலும்? நாம் சட்ட மன்றத் தேர்தல்களைப் புறக்கணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்குப் போட்டு விட்டார்கள் என்றால் நம் வாதங்கள் எதுவுமே செல்லுபடியாகாமல் போய் விடும்." என்றார்கள் அவர்கள்.

இது ஒரு புறம் இருக்க, 1922 செப்டம்பரில் சுபாஷ் சந்திர போஸ் சிறையிலிருந்து விடுதலையானார். அப்போது வங்காளத்தின் வடக்குப் பகுதி பெரு வெள்ளத்தில் சிக்குண்டு தவித்தது. சர்.பி.சி.ராய் தலைமையில் காங்கிரஸ் ஒரு நிவாரணக் கமிட்டி அமைத்தது. அந்தக் கமிட்டிக்கு சுபாஷ் சந்திர போஸ்தான் செயலாளர். பம்பரம் போலச் சுற்றிச் சுழன்று உழைத்தார் அவர். ரூபாய் 4 லட்சம் நிதி, உணவுப் பொருட்கள், துணிமணிகள் என்று வந்து குவிந்தன. அப்போதுதான் பதவி ஏற்றிருந்த கவர்னர் லிட்டன் பிரபு சுபாஷின் சேவையை மனம் விட்டுப் பாராட்டினார். சுபாஷ் தமது முதல் அரசியல் சொற்பொழிவு என்று சொல்லக் கூடிய உரையை இந்த சந்தர்ப்பத்தில்தான் நிகழ்த்தினார். இதில் அவர் வலியுறுத்திச் சொன்ன விஷயங்கள்: "துன்பத்தைச் சகித்துக் கொள்வது; மனப்பூர்வமான சேவை; சமுதாயப்பணி; சமூகச் சீர்கேடுகளைக் களைவது."

1922 டிசம்பரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கயாவில் கூடியது. இதற்கு சித்தரஞ்சன தாஸ் தலைமை வகித்தார். தமது உரையில் அவர், சட்டமன்றத்தில் பிரவேசிப்பது அவசியம் என்று வலியுறுத்திப் பேசினார். சட்ட மன்றத்தில் பெருவாரியான இடங்களைப் பிடித்து தேச நலனுக்கான தீர்மானங்களை இயற்ற வேண்டும். அப்போது பிரிட்டிஷ் அரசு, இந்த தீர்மானங்களை ஏற்று செயல் படுத்தவேண்டும். அல்லது, நிராகரிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டும். அப்படி நிராகரித்தால் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும். மீண்டும், தேர்தலுக்கு நின்று பதவி ஏற்று, அதே தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும். அதற்குப் பிறகும் அரசாங்கம் மசியவில்லை என்றால், வரிகொடா இயக்கம், சாத்வீகச் சட்ட மறுப்பு போன்றவற்றைத் தொடங்கலாம் என்றார்.

ராஜகோபாலாச்சாரியாரின் நிலைப்பாடோ, ஒத்துழையாமை இயக்கம் தொடங்க வேண்டும், சட்டமன்றப் பிரவேசம் கூடாது என்பதே. இதற்கு ஆதரவாக 1740 வோட்டுகளும், எதிராக 890 வோட்டுகளும் விழுந்தன. எனவே, சட்டமன்றப் பிரவேசம் கூடாது என்ற தீர்மானம் நிறைவேறி விட்டது.

1922 நவம்பரில், சி.ஆர்.தாசும் கைது செய்யப்பட்டிருந்த மற்ற பல தலைவர்களும் விடுதலையாகி வந்தார்கள். 1923 ஜனவரி 1ம் தேதி சி.ஆர்.தாசும் மோதிலால் நேருவும் சுயராஜ்யக் கட்சியை ஆரம்பித்து விட்டார்கள். சி.ஆர்.தாஸ்தான் இந்தக் கட்சியின் தலைவர். மோதிலால் நேரு செயலாளர். இந்தக் கட்சி காங்கிரஸிலேயே உள் அமைப்பாக இருந்து செயல்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அட்வகேட் ஜெனரல் பதவியை விட்டு அப்போதுதான் காங்கிரஸில் சேர்ந்த சீனிவாச ஐயங்கார், சத்தியமூர்த்தி, முத்துரங்க முதலியார் போன்றவர்கள் இந்தக் கட்சியில் சேர்ந்தார்கள். இந்தக் கட்சியின் சார்பில் பங்களா சுதா என்ற வங்காள தினசரியும், Forward என்ற ஆங்கில தினசரியும் வெளியிடப்பட்டன. இரண்டுக்கும் சுபாஷ் சந்திர போஸ்தான் ஆசிரியர். இரண்டு பத்திரிகைகளிலும் வெளிவந்த சுபாஷின் அனல் பறக்கும் கட்டுரைகள் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

1923 செப்டம்பரில் காங்கிரஸின் விசேஷக் கூட்டம் ஒன்று டில்லியில் நடை பெற்றது. இதற்கு மவுலானா அபுல் கலாம் ஆஸாத் தலைமை வகித்தார். ராஜகோபாலாச்சாரியார் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. லாலா லஜபதி ராய் காங்கிரஸில் ஒற்றுமை வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். மவுலானா முஹமது அலி எரவாடா சிறையிலிருந்து காந்திஜி அனுப்பியதாக ஒரு செய்தியை வெளியிட்டார். சுயராஜ்யக் கட்சியினர், விருப்பப்பட்டால் தேர்தலில் கலந்து கொள்ளலாம் என்றும் சட்டமன்ற நுழைவுக்கு எதிரான பிரசாரத்தைக் காங்கிரஸார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த செய்தி கூறியதாகத் தகவல். அதற்கேற்ப, சுயராஜ்யக் கட்சியினர் தேர்தலில் நிற்க அனுமதி வழங்கியும், அதை எதிர்த்து காங்கிரஸார் யாரும் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேறியது.(பின்னர்தான் தெரிய வந்தது, காந்திஜி அப்படி எதுவும் செய்தி அனுப்பவில்லை என்று.... அந்தக் காலத்திலும் அரசியல் இப்படித்தான் போலும்!)

சுயராஜ்யக் கட்சி பரபரப்பாகச் செயல்பட்டது. தீவிரப் பிரசார இயக்கம். சுபாஷின் மனதுக்குப் பிடித்த வேலை. (இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில், சுபாஷின் பெயர் விடுபட்டுப் போயிருந்தது!) பல மாகாணங்களில் சுயராஜ்யக் கட்சி பெருவாரியான இடங்களைப் பிடித்தது. மத்திய சட்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடங்களில், பாதிக்குச் சற்றே குறைவான இடங்களை அந்தக் கட்சி பெற்றது.

தேர்தல் முடிந்து சில தினங்களில், டிசம்பர் இறுதியில், காக்கிநாடாவில் காங்கிரஸ் கூடியது.முஹமது அலி தலைமை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சுயராஜ்யக் கட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில், நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டு, சாத்வீ¢க சட்ட மறுப்புக்குத் தயாராக வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1924 பிப்ரவரி 5ம் தேதி காந்திஜி விடுதலையானார். மே 24ம் தேதி அவர் சட்டமன்றப் பிரவேசம் பற்றி சொன்ன கருத்து: "நாம் சட்ட மன்றத்தில் இருப்பதை விட வெளியில் இருப்பதே நாட்டுக்கு நல்லது. என்றாலும், சுயராஜ்யக் கட்சி நண்பர்கள் வேறு விதமாக நினைக்கிறபடியால், அவர்கள் சட்ட மன்றத்துக்குள் இருப்பதே அனைவருக்கும் நல்லது. சட்டமன்றத்தில் பிரவேசித்துள்ள பலர், அனுபவம் மிக்கவர்கள். தூய தேச பக்தர்கள். தங்கள் வழி பயனற்றது என்று அனுபவபூர்வமாக அவர்கள் உணர்ந்தால் ஒழிய அவர்கள் பதவி விலகுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.. அவர்கள் வழி பலனடைந்து, நாடு நன்மை பெறுமானால், உண்மையிலேயே சந்தோஷப்படுபவர்கள் தவற்றினை ஒத்துக் கொள்வோம். அதே போல தங்கள் வழி பலனளிக்கவில்லை என்று கண்டுகொண்டால் தேச பக்தி மிக்க அவர்கள் பதவி விலகி விடுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.."



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 9:56 pm

ஒன்றுபட்டது காங்கிரஸ்

தேசபந்து தாஸ் மற்றும் மோதிலால் நேருவின் அயராத உழைப்பால் சுயராஜ்யக் கட்சியின் செல்வாக்கு நாடெங்கும் பெருகியது. பிரபல காங்கிரஸ் தலைவர்கள் நகராட்சி மன்றத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பம்பாய் மாநகராட்சிக்கு வித்தல்பாய் பட்டேல், அஹமதாபாதில் வல்லபபாய் பட்டேல், பாட்னாவில் ராஜேந்திர பிரஸாத், அலஹாபாதில் ஜவஹர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்கத்தா மாநகராட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.ஆர்.தாஸ். தேசபந்து சுபாஷை கல்கத்தா மாநராட்சியின் பிரதம நிர்வாக அதிகாரியாக நியமித்தார். மாத சம்பளம் ரூபாய் 3000. சுபாஷோ தமது சம்பளத்தை. ஆயிரத்தைந்நூறு ரூபாயாகக் குறைத்துக் கொண்டு விட்டார். அதையும் ஏழைக் குழந்தைகளின் உபகாரச் சம்பளமாகக் கொடுத்து விட்டார்.

ஐ.சி.எஸ். படித்திருந்த சுபாஷுக்கு நிர்வாகம் கைவந்த கலை. தூங்கி வழிந்து கொண்டிருந்த நிர்வாகத்தைத் தூசு தட்டி முடுக்கி விட்டார். மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் கதராடை அணிந்து வரும்படி ஏற்பாடு செய்தார். ஆரம்பக் கல்வி இலவசம், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பசும்பால், சுகாதாரம், துப்புரவில் தனிக் கவனம், கல்வி முறையில் சீர்திருத்தங்கள், புதிய மருத்துவ மனைகள், இலவச மருத்துவ வசதி.. கல்கத்தா நகர வீதிகளுக்கும், புதிய கட்டிடங்களுக்கும் தேசத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப் பட்டன.

அரசாங்கத்துக்கு பயம் வந்து விட்டது. சி.ஆர். தாசின் தலைமையில், சுபாஷின் நேரடி நிர்வாகத்தில் இயங்கும் நகரசபை இப்படித் திறமையாக இயங்கிக் கொண்டிருந்தால் இந்தியர்கள், தேசியவாதிகள் நல்ல பெயர் எடுத்து விடுவார்களே? மக்கள் அத்தனை பேரும் அவர்கள் பக்கம் திரும்பி விடுவார்களே? என்ன செய்வது? அரசாங்கத்துக்கு நல்லதொரு வாய்ப்பு போல, அந்தக் காலகட்டத்தில் வங்காளத்தில் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் உச்சகட்டத்தில் இருந்தன. இதைக் காரணம் காட்டி தீவிரவாதிகளின் தலைவர் சுபாஷ்தான் என்று வீண் பழி சுமத்தியது அரசு. அவசர அவசரமாக ஓர் ஆள் தூக்கி அவசர சட்டத்தைப் பிரகடனம் செய்தது. 1924 அக்டோபர் 25ம் தேதி பொழுது விடிவதற்கு முன்னால் போலீஸ் அதிகாரிகள் சுபாஷின் வீட்டுக் கதவைத் தட்டி அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதை எதிர்பார்த்திருந்தவர் போல சுபாஷ் புன்முறுவலுடன் போலீஸ் வண்டியில் ஏறிக் கொண்டார். சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை என்பார்களே, அதே போலப் பொலிவு! அவருடன் பல சட்ட மன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டார்கள். தேச பக்தர்கள் இதற்கெல்லாம் கவலைப்பட்டவர்கள் இல்லை. அவர்கள் சிறைச்சாலைகளை அரசாங்க விருந்தினர் விடுதிகள் என்பார்கள். தியாகிகளின் பாதம் பட்டு அவை கோவில்கள் என்றே கூடச் சொல்லப்பட்டன.

சுபாஷ் தீவிரவாதி என்று பழி சுமத்தப்பட்டு சிறையிடப்பட்டது தேசபந்துவுக்குக் கடுங்கோபத்தை எழுப்பியது. அவர் ஓர் அறிக்கை விடுத்தார். அதில் அவர் சொன்னது, "தேசபக்தி கொண்டிருப்பது ஒரு குற்றமானால், நானும் ஒரு குற்றவாளிதான். சுபாஷ் சந்திர போஸ் ஓர் அப்பழுக்கற்ற தேச பக்தர். அவர் அப்படி இருந்தது குற்றம் என்றால் நானும் அதே குற்றத்தைச் செய்கிறவன்தான். ஆகவே, கார்ப்பரேஷன் பிரதம நிர்வாக அதிகாரியைக் குற்றவாளியாகக் கருதிக் கைது செய்தது போல மேயராகிய என்னையும் அதே குற்றத்துக்காகக் கைது செய்ய வேண்டும்.” சுபாஷின் கைதும், தேசபந்துவின் உணர்ச்சி மிக்க உரையும், வங்க மக்களிடையே பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தின. வங்கம் முழுதும் கிளர்ச்சி. தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், தீர்மானங்கள். அக்டோபர் 31ம் தேதி ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக் கூட்டம், கல்கத்தா நகரையே கிடுகிடுக்க வைத்தது.




நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 9:56 pm


சுயராஜ்யக் கட்சியின் பிரதான எதிரிகளான சீனிவாச சாஸ்திரி, ஜின்னா, காந்திஜி ஆகியோரும், இந்தக் கைது நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். அக்டோபர் 3ம் தேதி காந்திஜி யங் இந்தியாவில் எழுதியது: "இது வங்காளத்துக்கும் அதன் மூலம், இந்தியாவுக்கும் பிரிட்டிஷ் அரசு அளிக்கும் புது வருஷப் பரிசு.. தேசபந்து தாஸ், வங்காள கவுன்சிலில் தன் பணியின் மூலம், பிரிட்டிஷ் அரசுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று காட்டி விட்டார். வங்காளத்தில் தமது கட்சியின் அசைக்க முடியாத தலைவராக தேசபந்துவை ஆக்கியதற்காக வங்க மக்களைப் பாராட்ட வேண்டும். எனக்கும் அவருக்கும் கருத்து மாறுபாடு உண்டு என்றாலும், கொழுந்து விட்டெறியும் அவரது தேச பக்தியும் மகத்தான தியாகமும் எனக்கு நன்றாகவே தெரியும். அவரது வலது கரத்தினை அரசு துண்டித்து விட்டது."

நவம்பர் 6ம் தேதி காந்திஜி, தாஸ், மோதிலால் நேரு ஆகிய முப்பெரும் தலைவர்களும் ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அதன் முக்கிய அம்சம் மத்திய, மாகாண சட்ட மன்றம் சம்பந்தமான பணிகளைக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுயராஜ்யக் கட்சி மேற்கொள்ள வேண்டும். இது காங்கிரஸ் பணிகளுடன் ஒருங்கிணைந்த பணியே. இந்தப் பணிக்கு சுயராஜ்யக் கட்சியினர் தாங்களே விதிமுறைகளை நிர்ணயம் செய்து கொண்டு, நிதி நிர்வாகமும் செய்யலாம்.

இந்த அறிக்கை குறித்து காந்திஜி சொன்னது: "சுயராஜ்யக் கட்சியினரிடம் இவ்வாறு சரணடைவதற்கான மன வலிமையை எனக்குக் கொடுத்தது குறித்துக் கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். "சுயராஜ்யக் கட்சியினர் தீவிர உறுதி, கட்டுப்பாடு. ஒழுங்கு, கட்டமைப்பு இவற்றுடன் தங்கள் கொள்கைக்காகப் பணி புரிந்துள்ளார்கள். இதற்காக மேலிடத்தின் கட்டளையையும் மீறத் துணிந்தார்கள். இந்திய சட்டமன்றங்களில் ஒரு புதிய எழுச்சியை அவர்கள் உண்டாக்கி விட்டார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.”. காந்திஜியுடன் சேர்ந்து சட்டமன்ற நுழைவை எதிர்த்தவர்கள் காந்தி "பல்ட" அடித்து விட்டார் என்று சொல்லி மனம் வருந்தினார்கள். இதற்கு காந்திஜி சொன்னது: நான் சரணடைந்து விட்டேன் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மைதான். சுயராஜ்யக் கட்சியின் இந்த இக்கட்டான நிலைமையில் நான் அவர்களுக்குத் துணையாக இல்லாமல் போனேனானால், நான் நமது தேசத்தின் முன் பொய்யனாவேன். அவர்கள் பயங்கரவாதத்துக்குத் துணை போனார்கள் என்று நிரூபிக்கப்படாத வரையில் நான் அவர்களை ஆதரித்தே ஆக வேண்டும். சரியோ தவறோ, நாடு நான் வழி காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. சுயராஜ்யக் கட்சிக்கு, அவர்களது திட்டப்படிப் பணியாற்ற முழு வாய்ப்பையும் தருவதுதான் நாட்டுக்கு நல்லது என்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன்."

நவம்பர் 21ம் தேதி பம்பாயில் நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் முப்பெரும் தலைவர்களின் கூட்டு அறிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது. தொடர்ந்த பெல்காம் காங்கிரஸ் மகாநாட்டில் இது அங்கீ£கரிக்கப்பட்டது. இந்த மகாநாடு பிரிந்த இரு தரப்பினரும் ஒன்று கூடிய நெகிழ்ச்சி மகாநாடாக அமைந்தது. தலைவர்கள் அனைவரும் கரம் கோத்து, சுயராஜ்யக் கட்சியின் திட்டங்க¨ளை மனமார ஆதரிப்பதாகக் கூறினார்கள். தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் விஷயங்களைத் தெளிவு படுத்தினார். இனி இணைந்து செயல்படுவதற்கான வழி வகைகளையும் எடுத்துரைத்தார். "சட்டசபைகளுக்கு நாம் செல்வதால் மட்டுமே சுயராஜ்யம் கிடைத்து விடாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சட்ட சபையின் மூலம் அரசாங்கம் நமது முன்னேற்றத்தைத் தடை செய்ய முடியும். ஆகவே அதைக் கருத்தில் கொண்டு, அந்தத் தடையை சபையில் இருந்தபடியே தகர்த்தெறிய வேண்டும்.”. இவ்வாறு பேசிய அவர், காந்திஜியின் நிலைப்பாட்டைப் பெரிதும் பாராட்டினார். இதுதான் சி.ஆர். தாஸ் கலந்து கொண்ட கடைசி காங்கிரஸ் மகாநாடு.

கல்கத்தா மத்திய சிறையில் இருந்து அரசு சுபாஷை அலிப்பூர் சிறைக்கு மாற்றியது. அங்கிருந்தபடியே, காங்கிரஸில் ஏற்பட்ட ஒற்றுமையைப் பற்றி அறிந்து அவர் மனம் மகிழ்ந்தார். அவ்வாறே மாநகராட்சி நிர்வாகப் பணிகளையும் கவனித்தார்.

சுபாஷுக்கு அளித்த தண்டனை போதாது என்று எண்ணிய அரசு மேலும் என்ன கொடுமை விளைத்தது?



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2021 11:13 pm

மாந்தாலய்ச் சிறைவாசம்

ஜனவரி 25,1925 அன்று சுபாஷை அலிப்பூரிலிருந்து கல்கத்தா மத்தியச் சிறைக்கு மாற்றியிருப்பதாக ஒரு தந்தி வந்தது. அவரது சக கைதிகள் இந்த மாற்றம் அவர் விடுதலை செய்யப்படுவதற்கான முன்னேற்பாடு என்று நினைத்து விட்டார்கள். அவருக்கு ஒரு பிரிவுபசார விழாவும் நடத்தினார்கள். அதில் பரண்ராய் என்ற ஒரு சக கைதி அவரை இந்தியாவின் எழுஞாயிறு என்று பாராட்டினார். பின்புதான் தெரிய வந்தது அவர் பர்மாவில் உள்ள மாந்தாலய்ச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று. அப்போது பர்மா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திலகர் பெருமான் ஆறு வருஷம் இருந்து கீதா ரஹஸ்யம் எழுதிய புனிதத் தலம் மாந்தாலய்ச் சிறை. லாலா லஜபதி ராய் பாதம் பட்டுப் புனிதம் அடைந்ததும் இந்தக் கோயில்தான். இங்கு சிறைப் பட்டிருந்த வீர சாவர்க்கரின் தியாகம் நிறைந்த வாழ்க்கைப் பகுதியையும் மறந்து விட முடியாது.

சிறையில் இருந்தபோது 1925, ஜூன் 16ம் தேதி அவரது குருநாதர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் இயற்கை எய்திய செய்தி பேரிடி போல் அவரைத் தாக்கியது. தமது குருவினைப் பற்றி சுபாஷ் சொல்வது: "எனது இதயத்தின் ஆழ்ந்த பற்றையும் பக்தி கலந்த அன்பையும் நான் அவருக்கு வழங்கினேன். அரசியல் அரங்கில் நான் அவரது தொண்டன் என்பதால் மட்டும் அல்ல; அவரது தனிப்பட்ட வாழ்வைப்பற்றியும் நான் அறிந்திருந்ததாலும் கூட. சரியாகச் சொல்லப் போனால் அவருக்குத் தொண்டர்களையும் சகாக்களையும் தவிரக் குடும்பம் என்பது ஒன்றே கிடையாது. ஒருமுறை சிறையில் நாங்கள் எட்டு மாதம் இருந்தோம்.இரண்டு மாதம் ஒரே அறையில். ஆறு மாதங்கள் அடுத்தடுத்த அறைகளில். அவரை இவ்வாறு நான் நன்கு அறிந்திருந்ததால்தான் அவர் பாதங்களில் நான் சரண் அடைந்தேன்.."

சிறையில் இருந்தபடியே தமது தோழர்களுக்கும் தொண்டர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் கடித இலக்கிய வரலாற்றில் அழியா இடம் பெற்றவை. அவ்வளவு காவிய நயம். அவ்வளவு தத்துவ சிந்தனைகள். ஆழ்ந்த கருத்துகள். தனி மனித , ஸ்தாபன நடைமுறைகளுக்கான அறிவார்ந்த கருத்துகள்! மாதிரிக்குச் சில தேன் துளிகளை ரசிப்போம்.

"- - -சேவாஸ்ரமத்துப் பையன்களுடைய சராசரி அறிவுத் திறன் எப்படி இருக்கிறது? சேவாஸ்ரமத்தைப் பற்றித் தெரிந்தவரை விவரமாக எழுதவும்.அதைப் படித்தால் நான் உங்களுக்குச் சில யோசனைகள் சொல்ல முடியும். பிள்ளைகளுக்கு எந்த விதமான ஆகாரத்தைக் கொடுக்கிறீர்கள்? அவர்களுக்கு நோய் நொடி வந்தால் எந்த விதமான சிகிச்சையைச் செய்கிறீர்கள்? என்ன செலவாகிறது--"

"எங்களுடைய உண்ணாவிரதம் வீணாகப் போகவில்லை. சர்க்கார் மத சம்பந்தமான எங்கள் உரிமையை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று- - -இந்த உண்ணாவிரதத்தினால் ஏற்பட்ட பெரிய லாபம் என்னவென்றால் எங்கள் உள்ளத்தில் மூண்ட தெளிவுதான் ---ஆனந்தம்தான் -நாங்கள் அடைந்த உரிமை எல்லாம் எங்கள் வரைக்கும் சாரமற்றவையே. கஷ்டத்தை அனுபவிக்காவிட்டால் மனிதன் ஒருக்காலும் தன் ஆதர்சத்தை ஒட்டி நடக்க முடியாது. இம்மாதிரி அக்கினிப் பரீட்சைகளால்தான் அபார மனச்சாந்தியை அவனால் அனுபவிக்க முடியும். இந்த அனுபவத்தினாலேயே என்னுடைய நிஜ ரூபத்தை நான் கண்டுகொண்டேன்; என் மீதே எனக்கு நூறு மடங்கு அசையாத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.."

"தேக ஆரோக்யத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்யவும், திரைப்படங்கள் காண்பிக்கவும் பவானிபுரத்திலும் அதன் அக்கம்பக்கங்களிலும் ஏற்பாடு செய்தால் நன்மை விளையும். ஏழைகள் எங்கெங்கே இருக்கிறார்களோ அங்கங்கே இம்மாதிரியான காரியங்களை நடத்த வேண்டியது அவசியம். முடியுமானால் சேவா சமிதிக்கு ஒரு மாஜிக் லேந்தர்னை வாங்குங்கள். திரைப்படங்கள் மூலம் சொன்னால் ஜனங்கள் மனத்தில் பதியும். அப்படி வாங்க முடியாது போனால்- சித்திரக்காரன் ஒருவனைக் கொண்டாவது படம் வரைந்து காட்டுங்கள்."

"சமூகத்தொண்டின் முக்கிய நோக்கம் ஏழைகளுக்கு உதவி செய்வதே. அவர்களைக் கொண்டு தொழில்களை நடத்துவதே. வெறும் தானம் வழங்கி தர்ம சத்திரம் நடத்துவதன்று- -எவன் ஒருவன் உதவியைப் பெற்று பதிலுக்கு உதவி செய்யப் பின் வாங்குகிறானோ, அவனுக்கு உதவி செய்யாமல் இருப்பதே நலம்."

" நாம் வர வரப் பிச்சைக்கார ஜாதியினராக மாறி வருகிறோம். இந்தப் பிச்சைக்கார மனப்பான்மையை ஒழிப்பது எளிதான காரியமன்று. இதை அடியோடு ஒழிக்கும் தொண்டில் நமக்கு எல்லையற்ற பொறுமை இருக்க வேண்டும்"





நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2021 11:14 pm

கண்ட கண்ட புத்தகங்களை வாங்க வேண்டாம் என்று அனில் பாபுவிடம் சொல்லுங்கள். புத்தகங்களைச் சேகரிப்பதில் ஓர் ஒழுங்கை அனுசரிக்க வேண்டும். முதலில் வங்காளி மொழியிலும்,பிறகு ஆங்கிலத்திலும் பிறகு பிற மொழிகளிலும் உயர்ந்த இலக்கியங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.பாரத நாட்டின் வரலாறு சம்பந்தமான நூல்கள், மற்றைய நாடுகளின் வரலாறுகள்,அறிவியல் தொடர்பான நூல்கள்,வாழ்க்கை வரலாறுகள்,அரசியல், விவசாயம், வாணிகம் சம்பந்தமான புத்தகங்களைச் சேகரியுங்கள். எதற்கும் உதவாத புத்தகங்களை ஒதுக்கி விடுங்கள்."

" உனக்கு ஏற்பட்டிருக்கும் அமைதியின்மைக்குக் காரணம் என்னவென்று நீ தெரிந்து கொண்டிருக்கிறாயோ என்னவோ, எனக்கு நன்றாகப் புரிகிறது. வெறும் வேலையில் ஈடுபடுவதனால் மட்டுமே மனிதன் ஆத்ம சக்தியைப் பெற்று விடுவதில்லை. வெளிக்காரியங்களைச் செய்வதோடு படிப்பதிலும் எழுதுவதிலும் மனதைச் செலுத்த வேண்டும். காரியங்களைச் செய்வதனால் வெளியிலிருக்கும் கோளாறுகள் அழிந்து போகின்றன.படிப்பதனாலும் எழுதுவதனாலும் நமது உள்ளம் கட்டுப்பாடு அடைகிறது. சாதனைகள் செய்வதன் உத்தேசம்

1)காமம்,பயம்,சுயநலம் போன்று உள்ளத்தில் உலாவும் விரோதிகளை வெல்வது.
(2)அன்பு,சக்தி, தியாகம் நல்லறிவு போன்ற உயர்ந்த பண்புகளை வளர்த்துக் கொள்வது."

"ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களைப் படியுங்கள். அவருடைய கடிதங்களும் உரைகளும் இப்போது உங்களுக்கு மிகவும் தேவையானவை. "பாரத தேசமும் விவேகானந்தரும்" என்ற புத்தகத்தில் இவையெல்லாம் வருகின்றன. இதை விட்டு விட்டு சமய தத்துவம் ஞான யோகம் போன்ற புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து விடாதீர்கள். "ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதத்தையும் படியுங்கள். கவி ரவீந்திரரின் கவிதைகள் சில உங்களுக்கு உணர்ச்சி ஊட்டக் கூடியவை"

ஆரம்பக் கல்விக்கும் உயர்நிலைக் கல்விக்கும் உள்ள வித்தியாசம் இதுவே: புதிய உண்மைகளைப் புகட்டுவதே ஆரம்பக் கல்வியின் நோக்கம் ஆகும். புதிய உண்மைகளைக் கற்றுக் கொண்டு அவற்றை ஆராயும் ஞானத்தையும் தருகிறது உயர்தரக் கல்வி."

"இறைவனுடைய கிருபையால், நான் இங்கு அமைதியாகவே இருக்கிறேன். வேண்டுமானால், என் முழு வாழ்நாளையும் இங்கே கழித்து விடுவேன். அத்தகைய உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் சுபத்தைக் கோரினால் போதுமா? சர்வ ஜனனியான தாயின் இச்சை சுபமாகவே இருக்க வேண்டும். அவளுடைய ஆசீர்வாதமே உங்களை ஒரு ரட்சா கவசம் போலக் காக்க வேண்டும். அன்னையிடம் நம்பிக்கை வை. அவளுடைய அருளினால் நீ மோகாந்தகாரத்தையும் இடையூறுகளையும் கடந்து வருவாய். செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து விட்டு லோக மாதாவின் சரணங்களில் இதயத்தை சமர்ப்பணம் செய்."

"இன்று வங்காளத்தில் தொண்டு செய்பவர்களிடையே வியாபார புத்தியும் காசு குவிக்கும் மனப்பான்மையும் பரவிக் கொண்டே வருகின்றன. "தாஓ தாஓ பிரே நாஹி சாஓ தாகே ஜதி ஹ்ருதய ஸம்பல்" இதுவன்றோ உண்மைத்தொண்டின் ஆதர்சம் என்று நான் நினைத்திருந்தேன்!" "கொடு;கொடு(உழைப்பைக் கொடு) திரும்பிப் பாராதே.(விளைவை விரும்பி.) உள்ளத்தில் ஊறும் இன்பமே போதுமானது (சுயநலமற்று உழைத்தோம் என்ற மகிழ்ச்சி)"

என்னுடைய சொந்த நலன்களைப் பற்றிக் கேட்கிறீர்கள். எனக்குப் பிடித்த ரவி பாபுவின் கவிதை ஒன்றின் மூலமாக என் நிலைமையைச் சொல்கிறேன்: "கற்பனை உலகில் இந்த வெஞ்சிறை இன்னும் ஓர் ஆரண்யமாகவே திகழ்கிறது. மவுனமான மனோபாவனைகளே இன்னும் வருகின்றன. இங்கு தொழிலின்றி இருக்கும் நான் ஓர் ஏகாந்த சாதனையையே செய்து வருகிறேன். அல்லும் பகலும் உட்கார்ந்து உட்கார்ந்து அகத்தின் வாக்கைக் கேட்டு நாளைக் கழிப்பதுதான் எனது வேலை. இந்தப் பாறைச் சுவர்களின் மடியில் நான் வளர்ந்து வருகிறேன். என் மனத்தை என் இஷ்டப்படியே ஆக்கிக் கொள்கிறேன். பிறகு நான் செய்ய இருக்கும் பெரும் காரியத்துக்குத் தகுதி அடைய என் முயற்சி யாவும் நடை பெறுகின்றன. என் விடுதலை நெருங்கி விட்டதென்று நான் மனம் விட்டுக் கூறும் காலமும் வருமோ? எல்லாரும் வாருங்கள். என்னைப் பின் தொடர்ந்தே.பரமகுரு நம் யாவரையும் கூவி அழைக்கிறான்.என் வாழ்வைப் பார்த்து நீங்களும் புத்துயிர் பெறுவீர்கள். ஜகத்தோரே! உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்!"




நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2021 11:16 pm

மாந்தாலய்ச் சிறையிலும் மக்கள் மனச்சிறையிலும்..

மாந்தாலயின் வெப்பதட்ப நிலை மற்றும் வெங்கொடுமைச் சிறைவாசம் காரணமாக சுபாஷின் உடல்நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. காசநோய் ஏற்பட்டு முற்றிப் போனது. படுத்த படுக்கையானார். இந்தச் செய்தி வங்க மக்களை அடைந்ததுதான் தாமதம். அனைவரும் வெகுண்டெழுந்தார்கள். ஆங்காங்கே கிளர்ச்சிகள். ஆர்ப்பாட்டங்கள். என்றாலும் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு. இந்த நிலையில் அரசைப் பணிய வைக்கப் புதியதொரு முயற்சியை மேற்கொண்டது காங்கிரஸ் கட்சி. 1928ம் ஆண்டு வங்காள சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. அதற்கு வேட்பாளர்களாக சுபாஷையும் மற்றோர் அரசியல் கைதியான எஸ்.சி.மித்ரா என்ற காங்கிரஸ் தலைவரையும் நிறுத்திவைக்கக் காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த முடிவை ஏற்றுக்கொண்டு சுபாஷ் தமது வேட்பு மனுவைச் சிறை அதிகாரிகள் மூலமாகவே தாக்கல் செய்தார். தம்மை ஆதரிக்கும்படி தமது வடகல்கத்தா தொகுதி மக்களுக்கு அவர் எழுதிய வேண்டுகோள் கடிதத்திலிருந்து ஒரு பகுதி:

"..எனக்கு விரோதமாக இவர்கள் தொடுத்திருக்கும் குற்றச்சாட்டுகள் யாவும் பொய் என்று மக்கள் அறியும்படி நிரூபிக்க என்னை விடவில்லை. நான் செய்த குற்றம் வேறு ஒன்றுமில்லை. அடிமை வாழ்வை நிரந்தரமாக ஒழிக்க, சுதேச சேவைக்குப் பாடுபடக் காங்கிரஸின் எளிய தொண்டனாக உடலையும் உயிரையும் சமர்ப்பணம் செய்ய முற்பட்டதேயாகும். இதற்காகச் சொந்த நாட்டின் சிறை ஒன்றில் அடைத்து வைக்காமல் என்னை அயல்நாட்டில் அல்லவோ அடைத்து வைத்திருக்கிறார்கள்! என் வங்க தேசத்தின் மண், காற்று இவற்றின் புனித ஸ்பரிசத்திலிருந்து இத்தனை நாள் நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் இந்தச் சிறை வாழ்வு வீணாகப் போகாதென்னும் உறுதியே எனக்கு ஆறுதலை அளிக்கிறது. இங்கு வருவதற்கு முன் நான் வங்க நாட்டையும் பாரத பூமியையும் எல்லாரையும் போலவேதான் நேசித்திருந்தேன். இன்று நான் பொன்னான என் வங்கமாதாவிடமிருந்தும் புண்ணியம் மிகுந்த பாரததேவியிடமிருந்தும் பிரிக்கப்பட்டிருப்பதனால் அவர்களை நூறு மடங்கு நேசிக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். அழகிய வானமும் தண்மையான காற்றும் கூடி, இனிய கனவுகளையும் நினைவுகளையும் மூட்டும் வங்க மாதாவின் வசீகர வடிவம் இன்று எவ்வளவு தூய்மையாகவும் அழியாக் கவினுடனும் என் மனத்தில் திகழ்கிறது? ஆன்மாவையே சமர்ப்பிக்கும் ஒரு பெரிய ஆதர்சத்தையே மேற்கொண்டு நான் என் பணியைச் செய்யப் புகுந்து விட்டேன். வெஞ்சிறை என்னும் உரைகல்லின் கடின பரீட்சையே இந்தப் பெரிய வேள்விக்கு என்னை அருகதை உடையவனாகச் செய்திருக்கிறது. வங்காளத்தில் விரிகூந்தலாகப் பெருகியோடும் பாகீரதியிலும் கதிர்கள் அசையும் அதன் பசுமை நிறைந்த வயல்களிலும் நிலவும் ஒரு பேருண்மை வங்காளிகளிடையே அறிவுச்சுடரையும் உயர்ந்த லட்சியத்தையும் வளர்த்திருக்கிறது. ரிஷி பங்கிம் தொட்டுத் தேசபந்து வரை, பேராற்றல் படைத்த அநேகர் சாதனையின் மூலமாகக் கண்டறிந்து இலக்கியத்தில் தீட்டிய வங்கத்தாயின் விசித்திர ரூபம், கணக்கற்ற கலை வல்லார்க்கும், கவிவாணர்க்கும் வழிகாட்டியாக இருக்கிறது. இன்று அதன் ஓர் அம்சத்தை மட்டுமே கண்டு களிப்புற்றேன். அதை நுகரும் புண்ணியத்தினால் எனது இரண்டு வருஷச் சிறைவாசம் வீண் போகவில்லை என்றே தோன்றுகின்றது. இத்தகைய அன்னையின் பொருட்டுத் துயரை விரும்பி அழைத்துக் கொள்வது என் அதிருஷ்டமே!

இந்த ஆழ்ந்த அனுபவத்தின் பயனாக என் மனத்தில் உண்மை உதயமாகிறது. முள் நிரம்பிய பாதை வழியாக என் லட்சியம் கிட்டும்வரை நான் செல்ல வேண்டும். அதற்குப் பங்கம் நேராதபடி என் விரதத்தை நீடிக்க வேண்டும்.- - -அடிமையாக இருக்கும் ஜாதியின் ஆற்றல் யாவும் வீணே. அதன் கல்வி, சாதனை, முயற்சி யாவும் சுவாதீனம் அடையும் மார்க்கத்துக்கு அனுகூலமாக இராமற்போனால், வியர்த்தமே. என் உள்ளத்திலிருந்து ஒரு வாக்கு கவனித்துக் கொண்டே இருக்கிறது.: சுவாதீனம் இராத வாழ்வை யார் விரும்புவர் என்பதே அது. கைகுவித்து வேண்டிக் கொள்கிறேன்: என்னை நீங்கள் ஆசீர்வதியுங்கள். சுயராஜ்யம் பெறுவதற்கான இந்தப் புண்ணிய கைங்கர்யமே என் இஷ்ட மந்திரமாகவும் நான் செய்யும் தவமாகவும் இருக்க வேண்டும். என் கடைசி மூச்சுப் போகும் வரை, பாரத நாட்டை விடுதலை செய்யும் பெரும்போரில் ஈடு பட்டிருக்க வேண்டும் என்பதே என் பிரதிக்ஞை.."@

தீர்க்கதரிசனம் போல, கடைசி மூச்சு உள்ள வரை சுதந்திரப் போரில்தான் ஈடுபட்டிருந்தார் சுபாஷ் என்பதை இறுதியில் பார்க்கப் போகிறோம்..

சுபாஷின் இந்த அறிக்கையில், சிறைபட்டிருப்பதற்காக அல்லாமல், வங்கத்தை விட்டு வெளியே இருப்பதற்கான ஏக்கமே நமக்கு நன்கு புலப்படுகிறது. இது நமக்கு பாரதியாரின் கவிதை ஒன்றை நினைவுபடுத்துகிறது. "லஜபதியின் பிரலாபம்" என்பது அந்தக் கவிதையின் தலைப்பு. சிறையில் இருப்பதற்காக அல்ல, பாஞ்சாலத்தை விட்டுப் பிரிந்திருப்பதற்காகப் புலம்புவதாக அந்தக் கவிதை அமைந்துள்ளது. சூட்டோடு சூடாக அந்தக் கவிதையையும் ரசிக்கலாமே?

"தொண்டுபட்டு வாடும் என்றன் தூய பெருநாட்டில்
கொண்டு விட்டு அங்கு எனைக் கொன்றாலும் இன்புறுவேன்.
எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையில் இட்டாலும்
தத்துபுனல் பாஞ்சாலம் தனில் வைத்தால் வாடுகிலேன்."

இது இருக்கட்டும். இத்தகைய உருக்கமான வேண்டுகோள் வங்க வாக்காளர்களைச் சென்றடைந்ததா? இல்லவே இல்லை. அரசாங்கம் அதை முடக்கி வைத்து விட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய் விடுமா என்ன? மக்கள் தங்கள் மனச்சிறையில்தான் சுபாஷைப் பிடித்து வைத்திருக்கிறார்களே? சுபாஷும் அவரது தோழரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.





நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 7:16 pm

நாட்டைப் பிரிந்த நலிவு


மக்கள் தீர்ப்பைப் பார்த்து விவேகமுள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அவரை விடுதலை செய்து சட்டமன்றத்தில் பங்கேற்கச் செய்திருக்க வேண்டுமல்லவா? அதைச் செய்யவில்லை பிரிட்டிஷ் அரசு. மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். நாடு முழுதும் கிளர்ச்சிகள். சிறைவாசத்தால் சுபாஷின் உடல் நிலை பாழானது ஒரு பக்கம். வெற்றிக் கனியைப் பறித்தும் அனுபவிக்க விடாமல் தடுக்கும் அரசின் ஆணவப் போக்கு ஒரு பக்கம். மக்கள் மனக்கொதிப்பு கொந்தளிப்பாக மாறியது. நிலைமையை எப்படியாவது சமாளிக்க விரும்பிய அரசு மாந்தாலய்ச் சிறையில் இருந்த சுபாஷை ரங்கூனுக்குக் கொண்டு வந்து இந்தியாவிலிருந்து ஒரு மருத்துவக் குழுவை அனுப்பிப் பரிசோதிக்கத் தீர்மானித்தது. அந்தக் குழுவில் லெப்டினண்ட் கர்னல் கெல்சா என்ற மருத்துவரும், சுபாஷின் அண்ணனான டாக்டர் சுனில் சந்திரபோஸும் இருந்தார்கள். ரங்கூனுக்குச் சென்று பரிசோதனையை முடித்து வந்த குழு அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில்,சுபாஷுக்குக் காசநோய் கண்டிருக்கிறது;அவரை இனியும் மாந்தாலய்ச் சிறையில் வைத்திருப்பது சரியல்ல, ஏதாவது சுகவாசஸ்தலத்துக்கு அனுப்பிச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

1927 மார்ச் 21ம் தேதி வங்காள சட்ட மன்றத்தில் இது சம்பந்தமாக அனற்பொறி பறந்தது. அங்கத்தினர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை எந்தக் காரணமும் காட்டாமல் சிறையில் வைத்திருப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பிய உறுப்பினர்களைச் சமாளிக்க அரசு தரப்பால் முடியவில்லை. காச நோயால் அவதிப்படும் சுபாஷுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் நாடு பொங்கி எழும் என்று உறுப்பினர்கள் எச்சரித்தார்கள். இதற்கு, லார்டு மோபர்லி அளித்த பதில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று. அவர் என்ன சொன்னார்? இந்தியாவில் அவசரச் சட்டம் அமலில் இருக்கும் காலம் வரை(1930) அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப் பட மாட்டார். வேண்டுமானால், அவர் ஐரோப்பாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் அவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்காமல் நேரடியாக ரங்கூனில் இருந்து ஐரோப்பாவுக்குப் போய்விடவேண்டும். 1930 வரை அவர் ஐரோப்பாவிலேயே இருக்க வேண்டும். இதற்குச் சம்மதித்தால், அவரை விடுதலை செய்வது சம்பந்தமாக அரசு யோசிக்கும். இது எப்படி இருக்கிறது பாருங்கள். சுபாஷ் பிறந்து வளர்ந்த நாடு இது. பாரதி சொன்னது போல் அவரது தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த நாடு இது. இதில் அவர் காலடி வைக்கக் கூடாது என்று எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் கூறுகிறார்கள். என்ன கொடுமையடா இது! நெஞ்சு பொறுக்குதில்லை என்று மக்கள் கொதித்தனர்.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் தொழிற் கட்சித் தலைவராக இருந்த லார்டு லான்ஸ்பரி என்பவர் பிரிட்டிஷ் அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்."சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவரை, அவசரச் சட்டத்தின் துணை கொண்டு விசாரணையில்லாமல் சிறையில் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கும் சர்வதேச விதிகளுக்கும் புறம்பானதாகும். அதிலும் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்படும் சுபாஷின் வைத்தியச் செலவைக்கூட அரசாங்கம் ஏற்காது என்று லார்டு மோபர்லி அறிவித்திருப்பது மிருகத்தனமான வஞ்சக மனப்பான்மையாகும்." என்று முழங்கினார் அவர்.

தன்மானம் மிக்க சுபாஷ் எப்படி ஏற்பார் இந்த நிபந்தனையை? தமது சகோதரர் சரத் சந்திர போஸுக்கு ரங்கூன் இன்சின் மத்திய சிறையிலிருந்து அவர் எழுதிய இரு கடிதங்களிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:

"சின்ன அண்ணா சுனில் சந்திர போஸ் அளித்த அறிக்கைக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அறிக்கை அளிப்பதற்கு முன்னோ பின்னோ அவர் என்னைக் கலந்து ஆலோசிக்கவில்லை. அவர் வைத்தியர் என்ற முறையில் என்னைப் பரிசோதித்திருக்கிறார். அதே முறையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். உண்மையாகவும் பாரபட்சம் இல்லாமலும் ஒரு நிபுணர் என்ன செய்வாரோ அதை அவர் செய்திருக்கிறார். இந்த நோயுள்ள எவருக்கும் அவர் இப்படியேதான் சொல்லியிருப்பார். இந்த ஸ்விஸ் ஆரோக்கிய நிலையங்கள் செல்வந்தர்களுக்கே ஏற்கும். இந்த நிலையில் நான் எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படத் தயாராக இல்லை. சின்ன அண்ணா என் நோயைப் பற்றிக் கூறிய அறிக்கையை அங்கீகரிக்காமல், எனது ஆரோக்கியத்துக்காக அவர் வெளியிட்டுள்ள வழிகளை மட்டும் இந்த அரசு ஏற்றுக் கொண்டுள்ளது போல் தெரிகிறது.

"சுபாஷ் அதிகமாக நோயினால் பீடிக்கப்படவில்லை. இன்னும் சக்தியுடன்தான் இருக்கிறார் என்பதை எல்லாரும் அறிவார்கள்.” என மோபர்லியே தெளிவாகக் கூறுகிறார். என் முன்னுள்ள வழிகள் இரண்டே. ஒன்று, விடுதலை அடையும்வரை சிறையில் இருப்பது. அல்லது இரண்டாவது, உடல் நிலையை சரிப்படுத்திக் கொள்ள வெளிநாட்டுக்குச் சென்று, திரும்பி வர உத்தரவு வரும் வரை அங்கேயே இருப்பது. இந்த அவசரச் சட்டம் 1930க்குப் பிறகு புதிய உருவில் வராது என்பது என்ன நிச்சயம்? ஸ்விட்சர்லாந்தில் மந்தை மந்தையாக உள்ள சி.ஐ.டிக்கள் இழைக்கும் வீண் தொல்லைகளிலிருந்து இந்திய அரசாங்கத்தார் என்னைக் காப்பாற்ற வழி தேடுவார்களா? வெளிநாட்டில் நிழல் போல் பின் தொடர்ந்து இந்த வேவுகாரக் கூட்டத்தார் என் வாழ்வைத் தீராத் தொல்லைகளுக்கு உட்படுத்தி சகிக்க முடியாதபடி செய்வார்கள். இதுவா நான் சரீர ஆரோக்யத்தையும் மனச் சாந்தியையும் தேடப் போவதன் அழகு? ஸ்விட்ஸர்லாந்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஸ்விஸ், இத்தாலிய, பிரெஞ்சு, ஜெர்மன், இந்திய ஒற்றர்களுக்குக் கணக்கு வழக்கில்லை. கருமமே கண்ணாக உள்ள ஓர் ஒற்றன் நான் புரட்சியை மூட்டும் ஒர் இயக்கத்தில் சேர்ந்திருப்பதாக புரளியைச் செய்ய மாட்டான் என்பதற்கு என்ன அத்தாட்சி?. பார்லிமெண்ட் அங்கத்தினர் போன்ற ஒருவரது உதவி இல்லாது போனால் லாலா லஜபதிராய் போன்ற பிரபல தேசத் தலைவர் இந்தியாவுக்குத் திரும்பியிருக்கவே முடியாது. என் வாழ்க்கையையும் நான் ஆற்றவேண்டியிருக்கும் தேசப் பணிகளையும் எண்ணும்போது ஏனோ இவர்கள் இப்படியெல்லாம் என்னைச் செய்கிறார்கள் என்று வருத்தமே ஏற்படுகிறது.. ..

இந்த ஒன்றரை வருஷ காலமாக அயல்நாட்டில் இருக்கிறேன். இதன் மத்தியில் என் குடும்பத்தவரையோ என் அருமைத் தாய் தந்தையரையோ சந்திக்கும் பாக்கியத்தைக் கூட சர்க்கார் வஞ்சித்து விட்டார்கள். இதோடு நிற்காமல் நான் வெளிநாட்டில் இருக்கப் போகும் இரண்டொரு வருஷங்களுக்கு இடையில் என் உற்றார் உறவினரைக் காணக் கூட அனுமதி தர மாட்டார்களாம். 1924ல் நான் எப்படி இருந்தேனோ அதே ஆரோக்கியத்தோடு என்னை வெளியே அனுப்ப வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்..... ஐரோப்பாவில் நான் குணமடையும் வரை என் செலவுகளை அரசாங்கம் பார்த்துக் கொள்வதுதான் நியாயம்.

அவசரச் சட்டம் போனாலும் இன்னொரு சட்டத்தின் கீழ் வெளியே வராமல் என்னை அடைத்து வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனது ஜென்ம பூமியைத் துறந்து இன்னொரு நாட்டில் உயிர் வாழ்வதை விட சுய நாட்டில் சிறையில் உயிர் விடுவது சிலாக்கியம் அன்றோ?

நிச்சயமாய் நான் எந்த அக்கினிப் பரீட்சைக்கும் உட்படத் தயார். என்னுடைய ஜாதியினர் செய்த சகல விதமான பாவங்களுக்கும் நான் பரிகாரம் செய்து கொள்கிறேன். இதுவே எனக்கு அளவற்ற திருப்தியைக் கொடுக்கிறது. என் சிந்தனைகளும் நான் பின்பற்றும் ஆதர்சமும் நீடூழி நிலவும். சர்வ தேச நன்மைக்காக என் மனம், மொழி, மெய் என்றும் உதவும். பின்னால் வரப்போகும் வீரர்கள் என் நம்பிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையினாலேயே இந்த இடும்பைகளையும் அநீதிகளையும் முக மலர்ச்சியுடன் ஏற்றுக் காலம் கழிக்கிறேன்..

சுதந்திரம், சத்தியம் இவையே நம்முடைய ஆதர்சம். இரவு கழிந்ததும் பகல் வருவது போல நமது முயற்சி அனைத்தும் முடிவில் வெற்றியே பெறும். இதனால் நமது உடல் அழிந்தாலும் அழியும். ஆனால் அசையாத நம்பிக்கையும் எதற்கும் அஞ்சாத சங்கல்பமுமே நமக்கு ஜயத்தைத் தருவன.

சுபாஷின் இந்தக் கடித வரிகளின் பின்னணியில் லஜபதியின் பிரலாபம் என்ற பாரதியின் கவிதை ஒப்பு நோக்கிப் பார்ப்பதற்கு உரியது. முழுக் கவிதையையும்தான் வாசிப்போமே?


லஜபதியின் பிரலாபம்



நாடிழந்து மக்களையும் நல்லாளையும் பிரிந்து
வீடிழந்து இங்குற்றேன் விதியினை என் சொல்கேனே?

வேதமுனி போன்ற விருத்தராம் எந்தை இரு
பாதமலர் கண்டு பரவப் பெறுவேனோ?

ஆசைக் குமரன் அர்ச்சுனன் போல்வான் தன்
மாசற்ற சோதி வதனம் இனிக் காண்பேனோ?

வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு பிரிந்த நலிவினுக்கென் செய்கேனே?

திரு மறை தோன்றிய நல் ஆரிய நாடென்னாளும்
நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு.

சிந்து எனும் தெய்வத் திருநதியும் மற்று அதில்சேர்
ஐந்துமணிறும் அளிக்கும் புனல் நாடு.

ஐம்புலனை வென்ற அறவோர்க்கும் மாற்றலர்தம்
வெம்புலனை வென்ற எண்ணில் வீரர்க்கும் தாய்நாடு.

நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான் கௌரவராம்
புல்லியரைச் செற்றாழ்ந்த புனிதப் பெருநாடு.

கல் நாணும் திண்தோட் களவீரன் பார்த்தன் ஒரு
வில்நாண் ஒலி கேட்ட மேன்மைத் திருநாடு.

கன்னன் இருந்த கருணை நிலம், தர்மன் எனும்
மன்னன் அறங்கள் வளர்த்த புகழ்நாடு.

ஆரியர்தம் தர்ம நிலை தரிப்பான் வீட்டுமனார்
நாரியர்தம் காதல் துறந்திருந்த நன்னாடு

வீமன் இருந்த விறல் நாடு, வில் அசுவத்
தாமன் இருந்து சமர் புரிந்த வீரநிலம்.

சீக்கர் எனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கம் உயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு

ஆரியர் பாழாகாது அருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திரு நாடு.

என்னருமைப் பாஞ்சாலம் என்றேனும் காண்பேனோ?
பன்னரிய துன்பம் படர்ந்திங்கே மாய்வேனோ?

ஏதெல்லாம் பாரதத்தே இன்னாள் நடப்பனவோ?
ஏதெல்லாம் யானறியாது என் மனிதர் பட்டனவோ?

என்னை நினைந்து இரங்குவரோ? அல்லாது
பின்னைத் துயரில் என் பேரும் மறந்திட்டாரோ?

தொண்டு பட்டு வாடும் என்றன் தூய பெருநாட்டில்
கொண்டு விட்டங்கு என்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன்,

எத்தனை ஜன்மங்கள் இருட் சிறையில் வைத்தாலும்
தத்துப் புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன்.





நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 7:18 pm

நிபந்தனையின்றி விடுதலை


நாடெங்கும் சுபாஷ் பற்றி பல வதந்திகள் பரவின. அவர் இறந்தே விட்டார்; அரசாங்கம் இந்தச் செய்தியை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கிறது என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். வங்காளத்தில் பெரும் கொந்தளிப்பு. அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு வளைந்து கொடுத்தது. அவரை இந்தியாவுக்கு வரவழைத்து அல்மோரா சிறையில் வைத்துச் சிகிச்சை கொடுப்பதாகத் தீர்மானித்தது.

1927ம் வருஷம் மே மாதம்15ம் தேதி பகல் 11 மணிக்கு அரோண்டா கப்பல் கல்கத்தா வந்தடைந்தது. சுபாஷ் அதில் படுத்த படுக்கையாய் இருந்தார். அவரை ஏற்றி வர ஒரு நீராவிப் படகு கப்பலுக்குச் சென்றது. அதில் சுபாஷின் அண்ணா சரத் சந்திர போஸ் சென்றார். சரத் சுபாஷை கப்பலிலிருந்து தூக்கி வர, "சுபாஷ¤க்கு ஜே" என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுபாஷ் படகிலேயே இருக்க, ஒரு மருத்துவ நிபுணர் குழு அவரைப் பரிசோதித்தது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேலும் அவரைச் சிறையில் வைத்திருப்பது பத்தானது என்றும் அந்தக் குழு அறிவித்து விட்டது. கவர்னர் நீண்ட நேரம் லோசனைகள் நடத்திக் கொண்டிருக்கிறார். சுபாஷ் படகில். அவருடன் ஹிங்ஸ்டன் என்ற மருத்துவர் மட்டும் இருக்கிறார். மக்களிடையே ஒரே கவலை "சுபாஷை விடுதலை செய்" என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

அரசாங்கம் தீவிர லோசனைக்குப் பின், வேறு வழியில்லாமல், சுபாஷை நிபந்தனையின்றி விடுதலை செய்வது என்று தீர்மானித்தது. மே மாதம் 16ம் தேதி எலும்பும் தோலுமாக வெளியே வந்த சுபாஷைப் பார்த்து அவரது குடும்பத்தினரும், பொது மக்களும் கண்ணீர்க் கடலில் மூழ்கினர்.

மகாத்மா காந்தி 'யங் இந்தியா'வில் எழுதினார்:- " மரணப் படுக்கையில் இருக்கும் சுபாஷை அவரது உறவினர் மத்தியில் கொண்டு தள்ளிவிட்டு தான் குற்றவாளி இல்லை என்று நடிக்கும் வங்க அரசின் போக்கு கோழைத்தனம் மிக்கது. மக்கள் ஒரு விஷயத்தைக் குறித்து மகிழ்ச்சி அடையலாம். அதுதான் சுபாஷின் தீரம். நிபந்தனையோடு அவரை விடுதலை செய்ய வங்க அரசு முன் வந்தும், அவரது சகோதரர்கள் கூட அந்த நிபந்தனைகளை ஏற்கும்படி வற்புறுத்தியும், ஒரு சுத்த வீரருக்கே உரிய மன உறுதியுடன் அந்த அவமானத்தை ஏற்க மறுத்துப் போராடினாரே, அதை எவ்வாறு பாராட்டுவது? அந்த வீரர் விரைவில் உடல் நலம் பெற நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்."

விடுதலை அடைந்த சுபாஷின் உடல் நிலை தேறவே இல்லை. இத்தனைக்கும் டாக்டர் சுனில் சந்திர போசும் டாக்டர் பி.சி.ரேயும் மிக கவனமாகத்தான் சிகிச்சை அளித்து வந்தார்கள். சுபாஷால் பேசக்கூட முடியவில்லை!

1927 ஜூன் மாதம் 2ம் தேதி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய மந்திரியாக இருந்த லார்டு லிண்டர்ட்டன் என்பவர் பச்சைப் புளுகுகளைப் பதில்களாக அள்ளி வீசினார். சுபாஷை ஒரு நீதிமன்றத்தில் நிறுத்தினார்களாம். பதில் தர அவகாசம் தந்தார்களாம். அவர் பதில் தர மறுத்து விட்டாராம். ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பார்கள். அப்படிப்பட்ட பொய்.

இந்த பதிலுக்கு முதுகெலும்பை முறிக்கும் வகையில் பதில் அளித்தார் சுபாஷ் ஓர் அறிக்கையில். வெளிநாடுகளிலிருந்து யுதங்களை வரவழைக்கவும், வெடிமருந்துகளைத் தயாரிக்கவும் போலீஸ் அதிகாரிகளைக் கொலை செய்யவும், சதி செய்யும் சதிகாரக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் நானும் சேர்ந்திருப்பதாகவும் தாரமற்ற குற்றச்சாட்டுகளை என் முன் ஒரு போலீஸ் அதிகாரி அடுக்கினார். அதை நான் திடமாக மறுத்தேன். என்னை நீதிமன்றத்தில் நிறுத்தினால் குற்றச்சாட்டுகள் அவ்வளவும் பொய் என்று நிரூபித்துக் காட்டுவதாகவும் சொன்னேன். இதுதான் நிஜம்" என்றார் அவர்.

18.8.1927 அன்று, தாம் சிறையில் இருந்தபோதே, தமது வேண்டுகோள் அரசாங்கத்தாரால் முடக்கி வைக்கப் பட்டிருந்த நிலையிலும் தமக்குப் பெரும்பான்மை தரவு தந்த வட கல்கத்தா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். "என்னைச் சுற்றிலும் புதிய எழுச்சியின் அறிகுறிகள் தோன்றுகின்றன. தேசிய வாழ்வில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு வரும் ஓசை என் காதில் விழும்போது நானும் அதில் குதிக்கச் சித்தமாக இருப்பேன்" என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 7:19 pm

பூரண சுதந்திரத் தீர்மானம்


கல்கத்தா எர்ஸ்கின் ரோட்டில் இருந்த அவரது இல்லத்தில் இருந்தபடியே சுபாஷின் சிகிச்சை தொடர்ந்தது. நாட்டு மக்கள் அவர் உடல் நிலை பற்றிக் கலக்கமுற்றிருந்தார்கள். ஆலயங்களில் விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவர் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று இறைவன் சித்தம் இருந்ததாலும், "காலா, என் காலருகே வாடா, உன்னை மிதிக்கிறேன்" என்ற அவரது மன வலிமையாலும் சுபாஷ் பூரண குணம் அடைந்தார். அது மட்டுமல்லாமல், அரசியலிலும் தீவிரப் பங்கு கொண்டார்.

வங்காள மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மாகாண காங்கிரஸ¤க்குள்ளேயே சில பிணக்குகள் ஏற்பட்டன. ஜே.எம்.சென் குப்தா என்பவரும் சுபாஷைப் போலவே, தீனபந்து சித்தரஞ்சன் தாஸின் அணுக்கத்தொண்டர். தொழிற்சங்கவாதி. சுபாஷ் சிறைவாசம் இருந்த பொழுதில், வங்காளக் காங்கிரஸில் அவர் தனிப் பெருந்தலைவராகக் கோலோச்சிக் கொண்டிருந்தார். வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவர் அவரே. சுபாஷ் வெளி வந்து அரசியலில் பங்கு கொள்ள ஆரம்பித்ததும் தமது செல்வாக்கு மங்கி விட்டதாக அவர் உணர்ந்தார். மாநிலக் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு சுபாஷ¤க்குப் போனதும், எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆயிற்று. காழ்ப்புணர்ச்சி வளர்ந்தது. காங்கிரஸில் சென் குப்தா கோஷ்டி, சுபாஷ் போஸ் கோஷ்டி என்று இரு கோஷ்டிகளே உருவாகி விட்டன. இந்த கோஷ்டிப் பூசல் மாநகராட்சித் தேர்தலிலும் பிரதிபலித்தது. மேயர் தேர்தலுக்கு போட்டி வேட்பாளராக சென் குப்தா நின்றார். இறுதிக் கட்டத்தில் அவர் தமது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இருந்த போதிலும், இந்த உட்பகை காரணமாக, பி.கே.போஸ் என்ற மூன்றாமவர் 9 வாக்கு வித்தியாசத்தில் சுபாஷைத் தோற்கடித்து மேயர் ஆனார். கட்சியின் இந்த உட்பகை நெடு நாளைக்கு நீடித்துக் கொண்டே இருந்தது. மேலிடம் எம்.எஸ்.ஆனே என்பவரை சமரசத்துக்கு அனுப்பியது. எந்தப் பயனும் இல்லை.

1927 டிசம்பரில் 42 வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதற்கு எம்.ஏ.அன்ஸாரி என்ற இஸ்லாமியர் தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேருவுக்கு இந்தப் பதவியைக் கொடுக்க வேண்டும் என்று அவரது தந்தை மோதிலால் விரும்பினார். ஆனால், காந்திஜியின் நோக்கம் வேறு விதமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்து முஸ்லிம் வேறுபாடு தீவிரமாக இருந்ததால், ஒரு முஸ்லிமைத் தலைவராக்குவது நல்லது என்று காந்தி கருதினார். இதில் ஜவஹருக்கும் உடன்பாடே. இந்த மகாநாட்டில் வங்காள காங்கிரஸ் குழுவின் தலைவராக சுபாஷ் போஸ் கலந்துகொண்டார். பர்மாச் சிறையிலிருந்து மீண்டவர் என்பதாலும், மரண வாயிற் கதவைத் தட்டி விட்டுத் திரும்பி தேச சேவையில் ஈடுபட்டிருக்கிறவர் என்பதாலும், மக்கள் மன நாயகராக சுபாஷ் விளங்கினார். அவருக்குச் சென்னை நகரில் உற்சாகமான வரவேற்பு. இளைஞர்கள் அவரை ஈ மொய்ப்பது போல் மொய்த்துக் கொண்டார்கள். இந்த மகாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூவரும் இளைஞர்கள். அவர்களில் சுபாஷ் போஸ¤ம் ஒருவர். மற்றவர்கள், ஜவஹர்லால் நேரு, சாஹிப் குர்ஷி.

சுபாஷ் அகில இந்திய காங்கிரஸில் பெற்ற முதல் பதவி சென்னையில்தான் கிடைத்தது. விவேகானந்தரைப் போலவே, சுபாஷ¤ம் சென்னை மக்களை மறக்க முடியாது என்பார்.

ஜவஹர்லால் நேரு அப்போதுதான் ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, புதிய உற்சாகத்துடனும், புரட்சிக் கருத்துகளுடனும் நாடு திரும்பியிருந்தார். மகாநாட்டில் அவர் சுதந்திரம், போர் அபாயம், ஏகாதிபத்தியத்துக்கு எதிரான லீக் போன்ற பல தீர்மானங்களை முன்மொழிந்து அவை அனைத்தும் ஏற்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் சர்வ தேசிய விஷயங்களைக் கவனித்துக் கொள்பவர் என்ற புதிய முகம் அவருக்கு உருவாயிற்று. காங்க்¢ரஸ¤க்கும் புதிய பிம்பம் ஏற்பட்டது.

இந்த மகாநாட்டில், பூரண சுதந்திரமே நமது லட்சியம் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அனல் பொறி பறக்கும் ஒரு உரையை சுபாஷ் நிகழ்த்தினார். இந்தத் தீர்மானத்தை ஜவஹர்லால் நேருவும் சீனிவாச ஐயங்காரும் ஆதரித்தார்கள். தீர்மானம் நிறைவேறியது.

காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காந்திஜி கலந்து கொள்ளவில்லை. பொது சபையில் மட்டுமே பங்கு கொண்டார். காங்கிரஸின் போக்கில் ஏற்பட்ட புதிய மாறுதல் அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் எழுதினார் "அமல் படுத்த முடியாது என்று தெரிந்து கொண்டே வருஷா வருஷம் இத்தகைய தீர்மானங்களைப் போடுவது, காங்கிரஸை மட்டப் படுத்துவது ஆகும். இதன் மூலம், நம் இயலாமையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கிறோம். நம்மை விமர்சிப்பவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இடம் தருகிறோம். எதிர்ப்பாளர்களின் ஏளனத்துக்கு உள்ளாகிறோம். காங்கிரஸ் எதிர்க்க முடியாத சக்தியாக இருந்தது. இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். சரியாக யோசியாத, எழுதிய தாளோடு முடிந்து விடுகிற தீர்மானங்களைப் போடுவதனால், இது சாத்தியம் இல்லாமல் போகிறது. ஏறத்தாழப் பள்ளிக் கூடப் பிள்ளைகளின் பட்டி மன்றம் போல ஆக்கிவிட்டோம், நம் அமைப்பை!"

பூரண சுதந்திரத் தீர்மானத்தை விளக்கியும், அதற்கு ஆதரவு கோரியும், சுபாஷ் போஸ¤ம் ஜவஹர்லால் நேருவும் பம்பரம் போல் சுழன்று உற்சாகமாகப் பல மேடைகளில் பேசினார்கள்.

1927 டிசம்பர் மாதம் மேதினிபூர் இளைஞர் சம்மேளனத்தில் சுபாஷ் ஆற்றிய உரை ஒன்றின் சில பகுதிகளை இங்கே தருகிறோம். அல்லயன்ஸ் கம்பெனி வெளியிட்ட புதுவழி என்ற புத்தகத்திலிருந்து இந்தப் பகுதி எடுத்தாளப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியாக்கம் செய்தவர் த.நா.குமாரஸ்வாமி.

"எவ்வளவோ கனவுகள் எத்தனையோ பேருக்கு; அமரர் உலகில் வாழும் தீனபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்களுக்கு ஒரு சொப்பனம் இருந்தது. அதுவே அவருக்கு சக்தியைக் கொடுத்த ஊற்று. அன்னாருக்கு இன்பத்தைத் தந்த அருவி அதுவே. அவர் கண்ட சொப்பன லோகத்தின் உரிமையாளர்கள் நாம் இன்று. ஆகவே நமக்குமொரு கனவு உண்டு. நாம் எழுவது, நடமாடுவது, பேசுவது, செயல் புரிவது எல்லாம் அதன் தூண்டுதலினாலேயே ஏற்படுவனவாகும். அந்தக் கனவு அல்லது ஆதர்சத்தின் நோக்கம் யாது? எத்திசையிலும் விடுதலை அடைந்த ஒரு பூரண சமுதாயமும் சுதந்திரமான ஆட்சி முறையும் அமைவதே. பெண்களும் சரிசமமாக ஆண்களுடன் விடுதலை பெற்று தேசத்துக்குப் புரியும் தொண்டுகளில் தம் பங்கைச் செலுத்தும் காலம் வந்தால் பொருளாதாரத்தில் எந்தவிதமான வேற்றுமையும் தலைகாட்டாது. எந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவனுக்கும் படிப்பும் சம உரிமையும் வாய்க்குமோ, அதில் உண்மை உழைப்பாளிகளுக்கு மதிப்பு ஏற்படும். சோம்பித் திரிபவர்களுக்கு அதில் இடமே இராது. அந்நியரின் பிடியிலிருந்து எந்தச் சமுதாயம் விலகி நிற்கிறதோ, நம் சொந்த முன்னேற்றத்துக்கு எந்த ஆட்சிமுறையின் இயந்திரம் சுழல்கிறதோ, பாரத மக்களின் குறைகளை நீக்கி அவர்களது ஆதர்சத்தை நிறைவேற்ற எந்த சமுதாயம் தயங்காமல் நிற்கிறதோ, அத்தகையதோர் ஆதர்ச நாட்டை - சமுதாயத்தை - ஆட்சியை நான் சொப்பனத்தில் காண்கிறேன். என் மட்டில் இந்தக் கனவு பொய்யன்று. அவ்வளவும் உண்மை. இதற்கென்று எதை வேண்டுமானாலும் செய்வேன். உயிரையே ஈடு வைப்பேன். துன்பங்களை ஏற்பேன். அது நிறைவேறுவதற்காக மரணத்தையும் எதிர்கொள்வேன். என் இள நேயர்களே, உங்களுக்கு அளிக்கத் தகுதியான உயர்ந்த பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை. இருப்பதெல்லாம் இந்தக் கனவே. இதுவே எனக்கு அளவற்ற சக்தியும் உற்சாகமும் கொடுத்து என் சிறிய வாழ்வினைப் பயனுறச் செய்தது. இந்த சொப்பனத்தை உங்களுக்கு பரிசாக அளிப்பேன். ஏற்பீர்!.. ..

இப்பொழுதுள்ள காங்கிரஸில் நீங்கள் புதிய திட்டத்தைச் சமர்ப்பியுங்கள். அதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கொண்டாலும் நடைமுறையில் பயனில்லாதபடி செய்வார்கள். அதாவது உள்ளூற ஏற்கமாட்டார்கள். நம்மிடையே 'ப்ரொக்ராம், ப்ரொக்ராம்' என்று கூச்சலிடுவோர் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் புகுந்து பார்ப்பதில்லை. புதிய மனிதனை இதற்கென தயார் படுத்தினால்தானே இந்தத் திட்டத்துக்குள்ள மதிப்பு வெளிப்படும்? அது யாருக்குத் தெரியப் போகிறது? 1927 ம் ஆண்டு தொடங்கி இந்தக் கேள்வியே என் மனத்தை அலைத்துக் கொண்டிருக்கிறது. புதிய திட்டம் ஒன்று நமக்கும் உண்டு. அனால், அந்தத் திட்டத்தை வெளியிடும் நாள் இன்னும் வரவில்லை. என்று வருகிறதோ. அன்று புது மனிதனும் தோன்றுவான். அதை உணர்ந்து அதன்படி வேலை செய்யும் உண்மை ஊழியன் வருவான். இச்சமயம் நான் அத்தகைய ஆட்களைத் தேடும் முயற்சியைத்தான் கைக்கொண்டுள்ளேன். ஆகவே இந்த இரண்டு வருஷங்களாக மாணவர் இயக்கம், இளைஞர் இயக்கம், பெண்கள் இயக்கம் போன்ற எழுச்சிகளுக்கு வழிகோலி வருகிறேன். இந்த இயக்கங்களின் மூலம் புது மனிதர்கள், ஆண்களும் பெண்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் புதிய திட்டத்தை ஒப்படைத்தால் நிச்சயம் எதிர்பார்த்ததற்கு மேல் அது பயன் தரும்.

இந்த மாதிரி இயக்கங்களுக்கு பிராண சக்தியைத் தர வேண்டுமானால் ஒரு புது ஆதர்சத்தை முன்னால் நிறுத்துவது அவசியமாகும். என் ஆதர்சம் தேசம், சமூகம் இவற்றின் முழு விடுதலையே. இந்த முக்தி மந்திரம் ஊர் ஊராக, நகரம்தோறும், வீட்டுக்கு வீடு பரவவேண்டும். சுதந்திரத்தின் உண்மை உருவை எல்லாருக்கும் காட்டவேண்டும். சுதந்திரத்தின் பிளவுபடாத இந்த உருவை நம்மில் பெரும்பான்மையோர் இன்னும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அகண்ட ரூபமான இந்த உணர்வு, மக்களின் மனக்கண் முன் திடீரென ஒரு நாள் தோன்றும் காட்சியல்ல. தவத்தின் மூலமாகவும் கடினமான சாதனை வழியாகவும் துண்டு துண்டாக நுகர்ந்த பின்பே நிறைவான எழிலைக் கண்போம். என்று இந்த அவா அடக்க முடியாமல் துள்ளுமோ, அன்றே சுதந்திரப் பித்தர்கள் ஆவோம்.

முழுச் சமத்துவக் கொள்கை மீதே புதிய சமூகத்தை எழுப்ப வேண்டும். வகுப்பு வேற்றுமை, ஜாதி என்னும் நெடிய மதில்களைத் தகர்த்துப் பொடிப் பொடியாக்குங்கள். பெண்மைக்கு மரியாதை செய்யுங்கள். அவர்களை சரிக்கொத்த தோழியராகக் கருதுங்கள். சமூகத்திலும் ஆட்சி முறையிலும் எல்லாத் துறையிலும் சம உரிமை வழங்குங்கள். பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வை ஒழித்துவிட வேண்டும். நிறம் மதம் இந்த பேதங்களைப் பாராமல் எல்லா மக்களுக்கும் கல்வியும் முன்னுக்கு வரச் செளகரியங்களும் அளிக்கவேண்டும். சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட நிறைவான சுதந்திரமுள்ள ஆட்சி, பலமான அடித்தளத்தின் மீது நிற்பதற்கான முயற்சிகள் செய்யவேண்டும்.

இதைப் போன்ற புதுமை பாரதத்தில் பிறந்தவர்கள் உலக சுதந்திர மக்கள் கூடும் சபையில் கவுரவமான இடத்தைப் பெருவார்கள். இந்தியா மீண்டும் விஞ்ஞானம் தத்துவம் கலை வீரம் இத்தகைய ஒப்பற்ற பண்புகளுடன் பேரரசுகள் முடிவணங்கும் நாடாக விளங்கும்.

நம் கடமை என்ன என்பதை இன்னும் தெளிவாக எப்படிக் கூறுவது? நாமல்லவோ புதிய பாரதத்தைப் பார்ப்பவர்கள்? ஆகவே ஒன்று சேர்ந்து நம் அன்னையின் புனிதமான வேள்வியில் ஈடுபடுவோம். நம் அன்னை மீண்டும் ராஜராஜேஸ்வரியாக அரியாசனத்தில் அமர்வாள். இன்று நாம் காணும் அந்தப் பிச்சைக்காரி, பத்துத் திசையும் பரந்த தோளுடன், மங்களங்கள் பொருந்திய திவ்விய வடிவினளாக நம் கண்களைக் குளிர்விப்பாள், நம் வாழ்வு பயனுறும். வாரீர் என் சகோதர மணிகளே! கண நேரமும் தயங்காமல் அந்தத் தாயின் சேவடிக் கீழ் அனைத்தையும் அர்ப்பணம் செய்வீர்."



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 19, 2023 7:20 pm

கல்கத்தாவில் கருத்து மோதல்


தமது பரமார்த்த சிஷ்யன் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜவஹர்லால் இப்படி அதி தீவிரமாகப் போவது காந்திஜிக்குப் பிடிக்கவில்லை. தமது மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி ஜனவரி 4,1928 ல் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்."நீங்கள் அதி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் நிதானித்து நமது சூழ்நிலைக்குப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் முன்மொழிந்து நிறைவேறிய தீர்மானங்களை ஒரு வருஷம் ஒத்திப் போட்டிருக்கலாம். குடியரசு சேனையில் நீங்கள் மூழ்கிப் போனது அவசரப்பட்ட செயல். இது கூடப் பெரிதில்லை. விஷமக்காரர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் நீங்கள் ஆதரவு கொடுப்பது எனக்கு வேதனை தருகிறது. கலப்படமற்ற அஹிம்சையில் இன்னும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படியே நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருந்தாலும், கட்டுப்பாடற்ற, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் நாட்டுக்கு விடுதலை கிடைத்து விடும் என்று நீங்கள் நினைப்பதற்கில்லை. உங்கள் ஐரோப்பிய அனுபவங்களின் அடிப்படையில், நமது நாட்டு நடப்புகளை ஊன்றிக் கவனித்து நமது வழிமுறைகள் தவறு என்று நீங்கள் கருதினால், நீங்கள் உங்கள் வழியில் சென்று கொள்ளலாம்."

விஷமிகள், கலகக்காரர்கள், வன்முறை என்பது பற்றியெல்லாம் காந்திஜி எழுதியதன் பின்னணியில் ஏதாவது இருக்க வேண்டும். அது நமக்குத் தெரியவில்லை.

இந்தக் கடிதத்துக்கு ஜவஹர் நீண்ட நெடியதொரு பதில் எழுதினார். அதில் அவர் சொன்னது:"நாங்கள் எல்லாம் பள்ளிக்கூடப் பட்டிமன்ற அளவுக்குப் போய்விட்டோம்தான்.. நீங்கள் கோபக்காரப் பள்ளிக்கூட வாத்தியார் போல எங்களைக் கண்டிக்கிறீர்கள். ஆனால் எங்களுக்குப் பாடம் சொல்லித் தராமல், வழிகாட்டாமல், அவ்வப்பொழுது எங்களைக் கண்டித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான். அது மட்டுமல்லாமல், உங்கள் ஹிந்த் ஸ்வராஜிலிருந்து சுய சரிதை வரை படித்ததிலிருந்து உங்கள் கருத்துக்கும் என் கருத்துக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்று உணர்கிறேன்." கதர், ராமராஜ்யம், மேற்கத்திய கலாச்சார எதிர்ப்பு இவை பற்றிய காந்திஜியின் கருத்துக்கள் எவையும் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

இதை எதிர்பார்க்காத காந்திஜிக்கு இது அதிர்ச்சியை அளித்தது. இவ்வளவு நாள் இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு நீங்கள் மனம் புழுங்கிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். செயற்கையாக உங்களைக் கட்டுப் படுத்திக் கொண்டிருந்திருக்கிறீர்கள்.. .. என்னிடமிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இதுகாறும் நீங்கள் பணிவாக,கேள்வி கேட்காமல் என்னைப் பின்பற்றி வந்த நிலையிலிருந்து விடுதலை அளிக்கிறேன். நமக்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆழமானவை. பரந்து பட்டவை. உங்கள் பாதையில் நீங்கள் செல்ல ஆரம்பிப்பதற்கான ஒரு கெளரவமான வழியைச் சொல்கிறேன். உங்கள் கருத்துகளை விளக்கி ஒரு கடிதம் எழுதுங்கள். அதை ‘யங் இந்தியா’வில் பிரசுரித்து என் பதிலையும் பிரசுரிக்கிறேன்."

ஜவஹர் அதிர்ந்து போனார்." உங்களிடம் எனக்கு இருக்கும் அன்பையும் மரியாதையையும் மாற்ற எதனாலும் முடியாது என்று உறுதியளிக்கிறேன். அரசியலில் நான் உங்கள் குழந்தைதான். ஒருவேளை தப்பு செய்து, தடம் மாறிக் கொண்டிருக்கிற குழந்தையாக இருக்கலாம்.. .. இந்த விவகாரம் முழுவதையுமே மறந்து விடுங்கள்" என்று காந்திஜியை அவர் கேட்டுக் கொண்டார். பின்னொரு நாளில், காந்திஜி"நேருவே எனது அரசியல் வாரிசு. இப்போது அவர் எனக்கு மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும், பின்னால் அவர் எனது மொழியிலேயே பேசுவார்“ என்று அறிவித்தார். இதற்குக் காரணம், தனிப்பட்டு எந்தக் கருத்துகளைக் கொண்டிருந்தாலும், காந்தியிடம், பூரண சரணாகதி நிலையில் இருந்தார் ஜவஹர்.

இது ஒருபுறம் இருக்க, லண்டனில் இந்திய மந்திரியாக இருந்த ப்ரிக்கன்ஹெட் பிரபு அனாவசியமாக இந்தியர்களை வம்புக்கு இழுத்தார்."நான் மூன்று வருஷங்களாக இந்திய விவகாரங்களைக் கவனித்து வருகிறேன். இதுவரை இரண்டு முறை , உங்கள் கோஷ்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கான ஓர் அரசியல் அமைப்பைத் தீட்டிக்கொண்டு வாருங்கள் என்று அறிவிப்பு விட்டேன். இன்னும் பதிலே இல்லை."

அவர் சொன்னது ஒரளவுக்கு சரிதான். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், என்று அவர் அவர்களுக்கு தனித்தனி சிந்தனைகள். மிதவாதிகள், தீவிரவாதிகள் வேறு. சமஸ்தானாதிபதிகள் தனி கோஷ்டி. இத்தனை பேரையும் இழுத்துக் கட்டிக் கொண்டு போவது சுலபமான காரியம் இல்லை. இது காந்திஜி , மோதிலால் போன்ற சீனியர் தலைவர்களுக்குத் தெரியும். ஜவஹர்லால், சுபாஷ் போன்ற இளம் தலைவர்களுக்குத் துடிப்பு, வேகம்.

இது இருக்கட்டும். ப்ரிக்கென்ஹெட் சொன்னது எல்லோருக்கும் ரோசம் பொத்துக் கொண்டு வந்தது. காங்கிரஸ் எல்லாக் கட்சிக்காரர்களையும் இழுத்து மோதிலால் நேருவின் தலைமையில் ஒரு சர்வகட்சிக் கமிட்டி அமைத்தது. இந்தக் கமிட்டிக்குள் ஏகப்பட்ட இழுபறிகள். இறுதியாக, பல யோசனைகளுடன், குடியேற்ற நாடு அந்தஸ்துடன் கூடிய நாடாக இந்தியா அமைவதற்கான ஒரு அரசியல் அமைப்பை எழுதிக் கொடுத்து விட்டார்கள். இதை காந்திஜி ஏற்றுக் கொண்டார்.

ப்ரிக்கென்ஹெட்டின் கைங்கர்யம் இன்னொரு காரியம் செய்தார். இந்தியாவுக்கான அரசியல் அமைப்பை நிர்ணயிப்பது பற்றி ஆராய சைமன் என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை அனுப்பி வைத்தார். இதில் உறுப்பினர்கள் ஆறு பேரும் ஆங்கிலேயர்கள். இந்தியர்கள் யாரும் இல்லை. இதைப் புறக்கணிப்பது என்று காங்கிரஸ் தீர்மானித்தது. மற்ற பல அமைப்புகளும் இதே நிலை எடுத்தன. ஜின்னாவுக்கு எதிரான முஸ்லிம் லீக் கட்சியின் பிளவு கோஷ்டி மட்டுமே சைமனை வரவேற்கத் தீர்மானித்தது. 1928 பிப்ரவரி 3 ம் தேதி சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தது. சென்ற இடம் எல்லாம்"சைமன், திரும்பிப் போ" என்ற கோஷங்கள். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள். பம்பாயில் துப்பாக்கிச் சூடு. சென்னையிலும் அதே போல. லாகூரில் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, மார்பில் போலீஸ் குண்டாந்தடியால் நொறுக்கியதில், அவர் படுத்த படுக்கையாகி இறந்தே போனார். இதற்குப் பதிலடியாக சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டார். இது குறித்து காந்திஜி ஒரு அறிக்கை வெளியிட்டார்:"லாலாஜியின் மரணத்துக்குப் பழி வாங்குவது என்பது இந்தியாவின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதன் மூலமே முடியும். இதை இந்திய இளைஞர்கள் உணரட்டும். உண்மையான வீரமாக இருந்தாலும், பழிவாங்குதல் மூலம் தேச சுதந்திரத்தை அடைய முடியாது. சுதந்திர ஆலயத்தை நிர்மாணிப்பதற்கு இளைஞர்களும் முதியவர்களும், ஆண்களும் பெண்களுமான பதினாயிரக்கணக்கான மக்களின் பொறுமையான, புத்திசாலித்தனமான ஆக்க பூர்வமான முயற்சிகள் தேவை. நாம் வருத்தப்படும் இத்தகைய செயல்கள்,அமைதியான நிர்மானப் பணிகளைப் பின்னடையச் செய்கின்றன. வேறு எதுவும் செய்யாவிட்டாலும், நிர்மானப்பணியில் ஈடுபட்டுள்ள எண்ணற்றவர்களின் கவனத்தை இவை திசை திருப்புகின்றன."

இளைஞர்கள் பலருக்கும் காந்திஜியின் இந்த உபதேசியார் போக்குப் பிடிக்கவில்லை. இந்தக் கிழவர் வேக வேகமாக ஏதாவது செய்யாமல், இப்படி எல்லாம் பிதற்றிக் கொண்டு திரிகிறாரே என்ற எண்ணம். காந்திஜிக்கோ, நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களையும் ஈடுபடுத்தி, ஆட்சியோடு ஒத்துழைக்க மறுத்து மக்களின் சம்மதமில்லாமல் ஆட்சியை நடத்த முடியாது என்ற நிலைக்குத் தள்ளவேண்டும் என்பது. அதற்கான முயற்சியில் படிப் படியாக முன்னேறுவது என்ற பணியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். வன்முறையற்ற இந்த முறையினாலேயே, நிலையான, நீடித்த ,அனைத்து மக்களுக்குமான பூரண சுதந்திரம் பெற முடியும் என்பது அவர் தீர்மானம். அவசர அவசரமாக, விவேகம் இல்லாமல்,"குண்டக்க மண்டக்க" என்பது போல் ஏதாவது செய்து காரியத்தைக் கெடுக்கிறார்களே இந்த இளைஞர்கள் என்பது அவரது வேதனை. இந்த இரண்டு விதப் பார்வைகளையும் புரிந்து கொண்டால் பின்னால் சுபாஷ¤க்கும் காந்திஜிக்கும் ஏற்படப் போகிற தீவிரக் கருத்து வேறுபாடுகளின் காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.



நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக