புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
13 Posts - 25%
prajai
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
2 Posts - 4%
Rutu
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
1 Post - 2%
சிவா
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
1 Post - 2%
viyasan
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
10 Posts - 83%
Rutu
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
காதலா??   காய்ச்சலா?? Poll_c10காதலா??   காய்ச்சலா?? Poll_m10காதலா??   காய்ச்சலா?? Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலா?? காய்ச்சலா??


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 14, 2011 10:02 pm

காதல் காய்ச்சல் வந்தாச்சா???

காதலா??   காய்ச்சலா?? Image-47803f5ca1f238c379c6ab642e16955f-happy-valentines-day

ஏபரல் முதல்தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கண்டுபிடிங்க பார்க்கலாம். நீங்க காதலர்க்களாக இருந்தால் கண்டிப்பாக இதைக் கண்டுபிடிக்க முடியாது. இல்லாவிட்டால் கண்டுபிடித்து இருப்பீர்களே.. ஆமாம்... அதேதான்.. அதேதான். இரண்டும் முட்டாள்கள் தினம்தான்.

காதலர் தினத்துக்கு எனக்கு ரிங் கொடுப்பீங்களா என்று காதலி கேட்டவுடன், ம் கண்டிப்பா கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா? ன்னு காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கி விடும் காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிகனல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் ஏதோ மாதிரி தெரு தெருவா அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் காதலியும் கொண்டாடும் காமத்திருநாள் காதல் திருநாள். காதல் மோகம் தீர்ந்து புளித்துப் போனவுடனேதான் புரிகிறது அது ஒரு மாயவலை என்று.

காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14. இது என்னடா சாமி. ஏபரல் சொன்னீங்க, பிப். 14 சொன்னீங்க. இப்ப நவம்பர் 14 சொல்றீங்க. இதுவும் முட்டாள்கள் தினமா என்றால் இல்லை. இல்லவே இல்லை. பத்து மாதங்கள் கழித்து காதலர்களின் குவா குவா கொண்டாடும் நாள் இது. ஆனால் அந்தக் குவா குவா இந்நாளை கொண்டாடுமா? அல்லது கொண்டாடும் முறையில் காதல் அமைகிறதா? என்பதுதான் இன்று நம் முன் இருக்கும் வினாக்கள்.

காய்ச்சல் வந்தவரின் அருகில் சென்றால் காய்ச்சல் தொற்றிக்கொள்வது போல காதல் அயல் நாட்டில் இருந்து நம்நாட்டுக்குத் தொற்றிக்கொண்டு விட்டது. இது ஒரு தொற்று நோய் போல பரவியுள்ளது

விழி
இருந்தும்
வழி இல்லாமல்
மன்னன் பழி
தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து, நின் மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல்
மக்களுக்காக
பலியாடாகப்
போகிறேன் - நீ
ஒளியாய் வாழு!
பிறருக்கு
வழியாய் இரு!!
சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

-உன்னுடைய வலண்டைன்.

நன்றாக இருக்கிறதா? இந்த காதல் கவிதையே இன்றைய நம் கலாச்சார சீரழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த கவிதை. ஆம் பாதிரியார் வாலண்டைன் எழுதிய காதல் கவிதை. காதலை எதிர்த்த ஒரு மன்னனுக்கு எதிராக காதலர்களை வாழவைத்த ஒரு பாதிரியாரின் நினைவு நாளைக் காதலர் தினமாக இன்று உலகமே கொண்டாடுகிறது.

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை
விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி
பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி. துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது. உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக்
கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ்வரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது
செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்கும் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள். இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது. அரசனின் இந்த முடிவு
அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார். அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல்
தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது.அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச்சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள். ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.ன்அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான். வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து
வந்த அந்த அட்டையின் வரிகளைத் தோழி வாசிக்க அஸ்டோரியசின்
கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன. அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்தான் இவை.

ஆனால் தமிழர்கள் எந்தக் காலத்திலும் காதலை எதிர்த்ததில்லை. ஆண்டாண்டு காலமாய்க் காதலுக்கு மரியாதை தந்த இனம் தமிழினம். கடைக்கண் பார்வை வீசிப்பிடிக்கும் காதலுக்கு இலக்கணம் வகுத்த இனம் தமிழினம். காதலர்கள் ஒரே காதலில் நின்று அடுத்தக் கட்டமான
கற்பு என்ற திருமணத்தில் இணையப் போதிய வழிகளையும் சொல்லித் தந்த இனம் நம்மினம். காட்சி, ஐயம், குறிப்பறிதல், ஊடல், கூடல், என்று தொடங்கி காதலனுடன் ஓடிப்போவதற்குக் கூட உடன் போக்கு என்று அழகான இலக்கணத்தைச் சொல்லவில்லையா நம் தொல்காப்பியர். அந்த இனம் இன்று இந்த அந்நிய சடங்கினை ஏற்று நம் பெருமையைக் குலைத்து வருகிறது. இன்று பிரச்சனை வந்த பிறகு காதலை வாழ வைத்த
வாலைண்டைனைத் தெரிந்த அளவு, காதலர்களுக்கு தொல்காப்பியரைத் தெரியல்லை.
“பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”

முத்தச்சுவையை இதைவிட அழகாக யாரால் சொல்ல முடியும். இனிய சொற்களைப் பேசுகின்ற என் காதலியாகிய இவளின் வாயில் இருந்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த சுவை என்று கூறவில்லையா திருவள்ளுவர்? இனிக்க இனிக்கக் காதலுக்கு அழகிய இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் என்பதும் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.


இளசுகளின் இன்ப நாளான காதலர் தினத்தை ஏன் இப்படி குறை கூறுகிறீர்கள்
என்று பலர் கேட்பது புரிகிறது. இன்றைய காதலர்கள் என்ன அம்பிகாபதி-அமராவதி, லைலா மஜ்னு போல அமரத்துவமாக, ஆழமாக காதல் செய்கின்றனரா? காதல் என்பது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. கேட்டால் காதல்
என்பது காய்ச்சல்போல... வரும், பிறகு போய்விடும். ஆண்டுக்கொருமுறை வரும் ஆனால் ஆறு மாதத்தில் போய்விடும் என்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இந்த ஜுரம் வரவில்லை
என்றால் அவன் ஹியூமனே இல்லை என்ற எண்ணமும் வந்து விட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல் (வாசகர்கள் சந்தேகமிருந்தால் ஆசிரியர்களைக் கேட்டு உறுதிப் படுத்திக்கொள்ளலாம்) அவனுக்கு ஒரு டாவு
இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அவனுக்குப் பெருத்த அவமானம். அவனைச் சக மாணவர்கள் மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சீறழிவுகளுக்கெல்லாம் யார் ரோடு போட்டுக் கொடுக்கிறார்கள்? வேறு யார்.. வியாபாரிகள். இதெல்லாம் வியாபார நுணுக்கம்.. ஆம் ரோஜாப்பூக்களில் தொடங்கி, கிஃப்ட் ஆர்ட்டிக்கள் என்று நீண்டு இன்று நட்சத்திர விடுதிகள் வரை காதலர் தின ஸ்பெஷல் என்று எதையாவது அறிவித்து லாபத்தைக் கொழித்துக்கொண்டு இருக்கின்றன.

வாழ்த்து அட்டைகள் வியாபாரம் அமோக வியாபாரம் அன்று. ஹால்மார்க்
நிறுவனம் மட்டுமே சுமார் 200 மில்லியன் வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கின்றனவாம். நம் குழந்தைகள், இன்றைய பெரும்பான்மையான காதலர்கள் குழந்தைகள்தான். கால்ப்பகுதியில் கிழிந்து போன பேண்டைப் போட்டுக்கொண்டு அதை டான் செய்ய இருபது ரூபாய் செலவு செய்ய முடியாத குழந்தைகள் (காதலர்கள்) வாழ்த்து அட்டைகளை 50 ரூபாய் 100 ரூபாய் கொடுத்து வாங்கி தன் காதலியான மாணவிக்கு கொடுக்கின்றனர்.

அன்றைய தினம் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் ரோஜாப்பூக்களின் வியாபாரம். இதைக் கொடுப்பதில் ஏழை பணக்காரர்கள் என்ற வேறுபாடு இல்லை.
காதலா??   காய்ச்சலா?? Images?q=tbn:ANd9GcS5G3i-WalgRGCdPO5KcJfLXnRsF2XveGLNJrZ58wiMEDA9c0cJ&t=1

இவை தவிர பரிசுப்பொருள்கள் வியாபாரம். கண்ணாடியால் ஆன இதயம், இதயத்தைக் குத்திக்கிழித்துக்கொண்டு போகும் அம்பு, என்று எல்லாம் இதயத்தையே குறிவைக்கும். காதல் தோல்வி ஏற்பட்டு உடையப்போவது உங்கள் இதயம் என்பதை சிம்பாளிக்காகச் சொல்லும் உத்தியுடன் ஆக்கப்பட்ட
பரிசுப்பொருள்களின் அணிவகுப்பு. வாழ்த்து அட்டையில் இதயம், கேக்கில் இதயம் என்று தொடங்கி இன்று காதலர் தினத்தன்று ஹோட்டலில் இட்லியிலும் தோசையிலும்கூட இடம்பிடித்து விட்டது இதயம்.

பிப்ரவரி மாதத்தில் ரெஸ்டாரண்ட்கள் நிரம்பி வழிகின்றன. அலுவலக வேலை, பிற வேலைகள் என்று அவசரமாக எந்த ஊர் சென்றாலும் காதலர்கள் அல்லாதவர்கள் பிளாட்பாமில்தான் தங்க வேண்டும்.

அன்று போலிஸ் காரர்களுக்கும் மஜாய்தான். சில்லரை வாங்கும போலிஸ்காரர்களுக்கு அந்த மஜாய். வாங்காத போலீஸ்காரர்களுக்கு, சாதனை செய்ததாய் ஒரு நான்கு ஜோடிகளை அத்து மீறி பொது இடத்தில் நடந்து கொண்டனர் என்று உள்ளே தூக்கிப் போடும் மஜாய்.

பூங்காக்கள், சினிமா அரங்கங்கள், கடற்கரை தோறும் முகத்தோடு முகம் வைத்து, ரஜினி பாணியிலும் கமல் பாணியிலும் முத்தம் கொடுப்பவர்கள், முகம் காட்டி, முகம்காட்டாமல் முதுகு மட்டும் காட்டி, வெட்கியும், வெட்கமற்றும் காதலர்களின் போஸ் கொடுக்கும், சூடான வண்ணப்படங்கள் நிரம்பிய நாளிதழ்கள். வியாபார தந்திரத்தில் அவைகள் மட்டும் என்ன குறைந்தா போய்விடும்.

காட்சி ஊடகமான தொலைக்காட்சியின் அரிய சேவை கேட்கவே வேண்டாம்.,
காதலர்கள் தினம் தேவையா? தேவையில்லையா? என்று நிகழ்ச்சி தயாரித்து விடும். கோபிநாத்தும் நடுவில் நின்று உசுப்பேற்றி உசுப்பேற்றிக் காதலர்களையும் காதல் எதிர்ப்பாளிகளையும் மோத வைத்து, ரணகளப்படுத்தி மரணப்படுக்கையில் தள்ளியேவிடுவார்.

கேட்கிறார்களோ கேட்கவில்லையோ நாங்கள் ஊதும் சங்கை ஊதியே
தீருவோம் என்று சில அமைப்புகளின் எதிர்ப்புக் குரல்கள். இத்தனையும் மீறி காதல் தேவைதானா என்றால் தேவைதான். ஆனால்
அது எப்போது. நம் வயிற்றுப் பாடு நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு அது தேவைதான். அப்படின்னா எப்ப காதலிக்கலாம். பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்கு உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும்
அளவில் உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபின்பு காதலித்தால் உங்கள் காதல் வெற்றிபெறும். அதை விடுத்து ஏய் மச்சி ஏப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித்தாடா. காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரனும்டா“ன்னு கேக்கர நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை. சிந்தியுங்கள் காதலர்களே!!



நன்றி குமுதம் ஹெல்த்




காதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Tகாதலா??   காய்ச்சலா?? Hகாதலா??   காய்ச்சலா?? Iகாதலா??   காய்ச்சலா?? Rகாதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 12:05 am

காதலர் தினத்தைப் பற்றிய இத்தகு அருமையான கட்டுரை எம் கண்ணில் இன்றே பட்டது. வாசித்து மகிழ்ந்தேன். மருத்துவக்குறிப்புக்களை வழங்கிவந்த நமது டாக்டர் ஆதிரா காதல் நோயைப்பற்றியும் அரிய கருத்துக்களையும் பாதிரியாரின் கதையையும் விவரித்து அருமையான விளக்கங்களை அளித்துள்ளார்.

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 11:39 am

மிக அருமையான கட்டுரை பானு...

வேலண்டைன்ஸ் டே கான அர்த்தம் விளக்கமாக இப்ப தான் அறிந்தேன்னு சொன்னால் கிண்டல் செய்யாதப்பா...
பாதிரியாரின் அந்த கவிதை வரிகள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அளவுக்கு அதை தமிழாக்கிய விதம் மிக அருமை பானு...

அருமையான கட்டுரையை இத்தனை நாள் பாக்காததுக்கு என்னை அடிச்சிடுங்க நேர்ல வந்தால்.... அன்பு வாழ்த்துக்கள் பானு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலா??   காய்ச்சலா?? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 11:46 am

அடிக்கறதுக்கு ஆயுதம் சப்ளை செய்யனும்னா சொல்லுங்க ஆதிரா.. ஜாலி

- ஆயுதவியாபாரி கலை உடுட்டுக்கட்டை அடி வ




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 21, 2011 1:19 pm

அருமையான கட்டுரை ஆதிரா அக்கா.இத்தனை நாளா இத பார்க்காம விட்டுட்டேனே.
இன்னிக்கு காதல் செய்யவில்லை என்றால் அது இரு பாலருக்கும் அவமானம் தரும் ஒரு நிகழ்வாக உள்ளது.காதல் மனது சம்பந்தப்பட்டது என்பது போய்
காதல் கவுரவத்துக்கு ஒரு அடையாள சின்னம் என்பது போல் ஆகிவிட்டது




காதலா??   காய்ச்சலா?? Uகாதலா??   காய்ச்சலா?? Dகாதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Yகாதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Sகாதலா??   காய்ச்சலா?? Uகாதலா??   காய்ச்சலா?? Dகாதலா??   காய்ச்சலா?? Hகாதலா??   காய்ச்சலா?? A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 1:41 pm

கலை wrote:அடிக்கறதுக்கு ஆயுதம் சப்ளை செய்யனும்னா சொல்லுங்க ஆதிரா.. காதலா??   காய்ச்சலா?? 755837

- ஆயுதவியாபாரி கலை காதலா??   காய்ச்சலா?? 246975

அச்சச்சோ மஞ்சு விடு ஜூட்... காதலா??   காய்ச்சலா?? 230655



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலா??   காய்ச்சலா?? 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 21, 2011 3:21 pm

காதலா??   காய்ச்சலா?? 677196 காதலா??   காய்ச்சலா?? 677196 காதலா??   காய்ச்சலா?? 677196 காதலா??   காய்ச்சலா?? 677196 காதலா??   காய்ச்சலா?? 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காதலா??   காய்ச்சலா?? 812496
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Feb 21, 2011 8:40 pm

கலை wrote:காதலர் தினத்தைப் பற்றிய இத்தகு அருமையான கட்டுரை எம் கண்ணில் இன்றே பட்டது. வாசித்து மகிழ்ந்தேன். மருத்துவக்குறிப்புக்களை வழங்கிவந்த நமது டாக்டர் ஆதிரா காதல் நோயைப்பற்றியும் அரிய கருத்துக்களையும் பாதிரியாரின் கதையையும் விவரித்து அருமையான விளக்கங்களை அளித்துள்ளார்.

பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஆதிரா..!
காதலர் தினத்துக்கு எழுதினா.. குழந்தைகள் தினத்தில் படிக்கும் உங்களை என்ன செய்ய.. காதலா??   காய்ச்சலா?? 246975
பட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. காதலா??   காய்ச்சலா?? 705463
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கலை.



காதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Tகாதலா??   காய்ச்சலா?? Hகாதலா??   காய்ச்சலா?? Iகாதலா??   காய்ச்சலா?? Rகாதலா??   காய்ச்சலா?? Aகாதலா??   காய்ச்சலா?? Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Feb 21, 2011 8:53 pm

குழந்தைகள் தினமா...??? வேலை கொஞ்சம் பிசி தான் ஒத்துக்கிறேன் ... ஆனா காலண்டர் கண்ணுக்கு எதிரில மாட்டி இருந்தும் இப்படி ஆயிப்போச்சே எங்க ஆதிரா நிலைமை...சோகம்

நவம்பர் 14 - ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் இந்தியா முழுக்க குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பைத வே ... இன்னைக்கு தேதி : பிப்ரவரி 21...

ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா... இப்பவே கண்ணைக் கட்டுதே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக