புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
21 Posts - 64%
heezulia
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
148 Posts - 55%
heezulia
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
2 Posts - 1%
prajai
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சத்தியமே சாயி.... Poll_c10சத்தியமே சாயி.... Poll_m10சத்தியமே சாயி.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியமே சாயி....

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 25, 2011 2:05 pm

உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் பக்தர்களைப் பெற்றிருப்பது அத்தனை சுலபம் அல்ல. அதிலும், அறிவுஜீவிகளையும் மிக உயர்ந்த பதவிகளில் உள்ள மெத்தப்படித்த மனிதர்களையும் பக்தர்களாக ஆட்கொள்ள முடிந்தது என்றால் அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், அதை நிகழ்த்திக்காட்டியவர் சாய் பாபா.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ மேஜிக் என்றோ தள்ளிவிடவா முடியும்? பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் உருவான முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரும், தன்னை ஒரு நாத்திகன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் சட்ட அமைச்சர் துரைமுருகனும்கூட சத்ய சாய் பாபாவின் அபிமானிகளாக மாறி இருக்கிறார்கள் என்றால் பாபாவின் பேராற்றலை சித்து விளையாட்டு என்று வர்ணிக்கவா முடியும்?

கூவத்தைச் சுத்தப்படுத்தி லண்டன் தேம்ஸ் நதிபோல மாற்ற வேண்டும் என்று நினைத்தால், இதோ நிதியுதவி நான் தருகிறேன் என்று முன்வந்தது நாத்திகவாதியோ, பகுத்தறிவுவாதியோ அல்ல, சாய்பாபா என்கிற ஆன்மிகவாதிதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பகுத்தறிவு பேசுபவர்கள் தங்கள் அறக்கட்டளையிலிருந்து பொது நன்மைக்குச் செலவிட்டதைவிட, தனியார் கல்லூரிகளை நிறுவி அறக்கட்டளையின் சொத்துகளை விரிவுபடுத்த முற்படும் நேரத்தில், இந்த ஆன்மிக ஞானியின் செயல் நம்மை அவரைத் தலைவணங்கச் செய்கிறது என்பதுதானே நிஜம்?

அவர் முன்பாக உட்கார்ந்தால் மனஅமைதி ஏற்படுவதாகவும் அதனால்தான் அங்கே செல்வதாகவும் கூறியவர்கள் பலர். அவர் முன்பு உட்கார்ந்திருந்த போதுதான், தீர்வு காணப்படாத ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வு கண்டதாகச் சொல்லிய அரசியல் தலைவர்களும், நிர்வாகிகளும், மருத்துவர்களும், தொழிலதிபர்களும் பலர். அவரிடம் மானசீகமாக முறையிட்டு வீட்டுக்கு வந்தபோது, வேண்டிய காரியம் நடந்திருப்பதைக் கண்டேன் என்று குசேலரைப்போல மகிழ்ந்தவர்கள் பலர்.

இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்விக்கு இன்றைய அறிவியலும், பாராசைக்காலஜி ஆய்வுகளும் தெரிவிக்கும் முடிவுகள் பதிலாக அமைந்திருக்கின்றன. ஒரு மனிதர் தன் மனஒருமைப்பாட்டின் உச்சநிலை அடையும்போது- அதாவது எண்ணங்கள் இல்லாத, மனது அற்றுப்போன பரிசுத்த நிலையில் இருக்கும்போது- மூளையில் உள்ள பிட்யூட்ரி சுரப்பியில் ஒருவித திரவம் சுரக்கிறது. அது அதீத ஆற்றலுக்குக் காரணமாக இருக்கிறது. சக்தியை அலையலையாக வெளியிடுகிறது. இந்த சக்தி, அடுத்தவரின் செல்களில் மாறுதல் நிகழ்த்தும் அளவுக்கு இருக்கிறது. ஆகவே, அந்த மகான் தொட்டதால் ஒரு பக்தர் குணமானார் என்பது வெறும் கதைகள் அல்ல என்று இன்றைய பாரா சைக்காலஜி ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கியதோடு, கடந்த அரை நூற்றாண்டு காலக்கட்டத்தில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புக்கு சொத்துகளை உருவாக்கி, அதில் பள்ளிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனை என்று மக்கள் அளித்ததை மக்களுக்காகத் திருப்பி அளித்த மகாத்மா என்கிற அளவில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே மகான்களுக்கே என்பதை மன்பதைக்கு நிரூபித்தவர்.

அவர் லிங்கம் எடுத்துக் கொடுத்ததும், மாலைகள் வரவழைத்ததும் மாயவித்தைகளா அல்லது அருள்வலியா என்பதெல்லாம் வீண் வாதங்களில் போய் முடியும். ஆசிரமத்தில் நடைபெற்ற ஒரு கொலை மற்றும் சில சம்பவங்களை வைத்து, பாபாவைக் குற்றம் சுமத்தியவர்கள்கூட, பின்னாளில் அவரது மானுடச் சேவையின் முன்பாக மண்டியிட்டுத் தலை கவிழ்ந்தார்கள். பிறரது குற்றச்சாட்டுகளுக்கும் வசைச் சொற்களுக்கும் மதிப்பளிக்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பெருமானைப் போல மக்களுக்குச் சேவை செய்துகொண்டிருந்தார். அவதூறு பேசுவோருக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால், பயணம் தடைபடும், பாதைகள் மாற நேரும் என்பதை உணர்ந்திருந்த மகான் அவர். யாருடைய குற்றச்சாட்டுக்கும் அவர் பதில் கூறியதில்லை.

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதோடு, துன்பத்தில் துடிக்கும் உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தொடங்கியதுதான் புட்டபர்த்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்த மருத்துவமனையில் சேவை செய்த சாய் மன்றத் தொண்டர்களும் பல லட்சம். இந்தச் சேவையின் பலனைத் தான் மட்டுமே பெறுவதாக இல்லாமல், இதில் அத்தனை தொண்டர்களுக்கும் பங்கிருப்பதாக மாற்றியதால்தான் அவரது அறக்கட்டளை இன்று ரூ. 40,000 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.

‘உற்றநோய் நோன்றல், உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்கிறது வள்ளுவம். அதாவது ஏற்பட்ட துன்பத்தைத் தாங்குதல், துன்பம் ஏற்பட்டதற்காகவோ அல்லது ஏற்படுத்தியவர்கள் மீதோ தான் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டும் தவத்தின் வடிவம் என்கிறார் வள்ளுவர். அந்த வழி வாழ்ந்தவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இருவர்தான். ஒன்று காஞ்சி சங்கர மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா.

நன்றி தினமணி

சத்தியமே சாயி.... A.P.J.Abdul+Kalam+Shakes+hands+with+sai+babaசத்தியமே சாயி.... DSCF2135

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2011 4:30 pm

அழகான படங்களுக்கும், நல்ல பதிவிர்க்கும் நன்றி மணி புன்னகை
ஜெய் சாயி ராம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 4:40 pm

நல்ல பதிவு நண்பா... அவர் மறைந்தாலும் அவரால் உதவி பெற்று வாழ்ந்து வரும் பல லட்சம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்

சத்தியமே சாயி.... Power-Star-Srinivasan
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Mon Apr 25, 2011 6:42 pm

maniajith007 wrote:

கூவத்தைச் சுத்தப்படுத்தி லண்டன் தேம்ஸ் நதிபோல மாற்ற வேண்டும் என்று நினைத்தால், இதோ நிதியுதவி நான் தருகிறேன் என்று முன்வந்தது நாத்திகவாதியோ, பகுத்தறிவுவாதியோ அல்ல, சாய்பாபா என்கிற ஆன்மிகவாதிதான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பகுத்தறிவு பேசுபவர்கள் தங்கள் அறக்கட்டளையிலிருந்து பொது நன்மைக்குச் செலவிட்டதைவிட, தனியார் கல்லூரிகளை நிறுவி அறக்கட்டளையின் சொத்துகளை விரிவுபடுத்த முற்படும் நேரத்தில், இந்த ஆன்மிக ஞானியின் செயல் நம்மை அவரைத் தலைவணங்கச் செய்கிறது என்பதுதானே நிஜம்?

இந்த மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கியதோடு, கடந்த அரை நூற்றாண்டு காலக்கட்டத்தில், ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புக்கு சொத்துகளை உருவாக்கி, அதில் பள்ளிகள், பல்கலைக்கழகம், மருத்துவமனை என்று மக்கள் அளித்ததை மக்களுக்காகத் திருப்பி அளித்த மகாத்மா என்கிற அளவில் மனித்தப் பிறவியும் வேண்டுவதே மகான்களுக்கே என்பதை மன்பதைக்கு நிரூபித்தவர்.

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதோடு, துன்பத்தில் துடிக்கும் உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தொடங்கியதுதான் புட்டபர்த்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்த மருத்துவமனையில் சேவை செய்த சாய் மன்றத் தொண்டர்களும் பல லட்சம். இந்தச் சேவையின் பலனைத் தான் மட்டுமே பெறுவதாக இல்லாமல், இதில் அத்தனை தொண்டர்களுக்கும் பங்கிருப்பதாக மாற்றியதால்தான் அவரது அறக்கட்டளை இன்று ரூ. 40,000 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.

‘உற்றநோய் நோன்றல், உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்கிறது வள்ளுவம். அதாவது ஏற்பட்ட துன்பத்தைத் தாங்குதல், துன்பம் ஏற்பட்டதற்காகவோ அல்லது ஏற்படுத்தியவர்கள் மீதோ தான் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டும் தவத்தின் வடிவம் என்கிறார் வள்ளுவர். அந்த வழி வாழ்ந்தவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இருவர்தான். ஒன்று காஞ்சி சங்கர மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா.

நன்றி தினமணி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 7:10 pm

அவர் கடவுளா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் மானிடருக்கும் மேலானவர் என்பதில் ஐயமே இல்லை.

அவரது அருமைகளைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அறிந்ததை விட இனி வருங்காலம் கண்டிப்பாக உணரும்.

நம்மால் ஒரு ஐம்பது பேரின் மனத்தில் கூட இருக்க இயலாத நிலையை நான் அனுபவ பூர்வமாக உண்ர்ந்துவிட்ட இந்நிலையில் கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்.

தலை வணங்குகிறேன் அவரது மகானுத்துவத்துக்கு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Apr 25, 2011 7:13 pm

சபாஷ் கலை அண்ணா!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 25, 2011 7:28 pm

கலைவேந்தன் wrote:அவர் கடவுளா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் மானிடருக்கும் மேலானவர் என்பதில் ஐயமே இல்லை.

அவரது அருமைகளைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அறிந்ததை விட இனி வருங்காலம் கண்டிப்பாக உணரும்.

நம்மால் ஒரு ஐம்பது பேரின் மனத்தில் கூட இருக்க இயலாத நிலையை நான் அனுபவ பூர்வமாக உண்ர்ந்துவிட்ட இந்நிலையில் கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்.

தலை வணங்குகிறேன் அவரது மகானுத்துவத்துக்கு..!

உண்மையான வரிகள் அண்ணா... மனிதர்களில் நம்மை விட உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

சத்தியமே சாயி.... Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 25, 2011 9:09 pm

கலைவேந்தன் wrote:அவர் கடவுளா இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் மானிடருக்கும் மேலானவர் என்பதில் ஐயமே இல்லை.

அவரது அருமைகளைப் பற்றி அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அறிந்ததை விட இனி வருங்காலம் கண்டிப்பாக உணரும்.

நம்மால் ஒரு ஐம்பது பேரின் மனத்தில் கூட இருக்க இயலாத நிலையை நான் அனுபவ பூர்வமாக உண்ர்ந்துவிட்ட இந்நிலையில் கோடிக்கணக்கானவர் மனதில் வீற்றிருக்கும் அவர் மனிதரல்ல. மகான் தான்.

தலை வணங்குகிறேன் அவரது மகானுத்துவத்துக்கு..!

உண்மையே கலை சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சத்தியமே சாயி.... 47
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Mon Apr 25, 2011 9:14 pm

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என
ஏய்க்கும் சிலருக்கு மத்தியில் உண்மையாகவே
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
சேவை புரிந்தவர் பாபா அவர்கள்.
அவருடைய ஆசிகள் என்றும் நம்மோடு இருக்கும் !
அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என சொல்லும்
தகுதி இங்கு எவருக்கும் இல்லை. எனவே அவருடைய
ஆசிகள் நம்மிடம் தங்கட்டும் என இறையருளை இறைஞ்சுவோம்.

சத்தியமே சாயி.... 677196சேதுமாதவன்.நா சத்தியமே சாயி.... 677196
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 25, 2011 9:17 pm

நன்றி அசூரன்... லட்சுமணன்... மஞ்சு..! நன்றி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக