ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Yesterday at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

Obesity என்றால் என்ன?

Page 1 of 2 1, 2  Next

Go down

Obesity என்றால் என்ன? Empty Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:17 pm

நம் உடலில் மில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல. வடிவிலும் செயலிலும் அவை பல்வேறு வகைகளாக இருக்கின்றன. அதில் ஒரு வகை செல்கள்தான் Fat cells என்கிற கொழுப்பு செல்கள். இந்த செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம். ஒன்று இருக்கிற செல்கள் அளவில் பெரிதாவது அல்லது இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த அடிப்படை மாற்றம்தான் மருத்துவர்களால் Obesity - உடல் பருமன் என்று சொல்லப்படுகிறது. இன்னும் புரிகிறபடி சொன்னால் உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு சேர்வது.

இந்த செல்களில்தான் சக்தி சேமிக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது. உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து விடுகின்றன.

உடல் எடை செலவழிக்கப்படுகிற சக்தி கலோரிகளைப் பொறுத்தது. குறைவான செலவு அதிக எடையை உருவாக்கி விடும். அதிக செலவு குறைந்த எடையை உருவாக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:20 pm

எந்த எந்த காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.

1. வயது: உடல் பருமன் எந்த வயதிலும் ஏற்படலாம். பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமன் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிக பருமர்கள் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்தான் இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் இந்த வயதுகளில் உடலில் சேமிக்கப்படுகிற சக்தியை செலவழிக்கிற திறன் செல்களுக்கு குறைந்து விடுகிறது. கூடவே வயதாகும் போது குறைகிற உடல் சார்ந்த வேலைகளும் பருமனை நோக்கி நகர வைக்கிறது.

2. குறையும் உடல் சார்ந்த வேலைகள்: வயதிலோ அல்லது வயது அதிகமோ உடல் சார்ந்த வேலைகள் (நடப்பது, ஓடுவது உடற்பயிற்சி, மாடிப்படி ஏறுவது) குறையும் போது செலவழிக்கப்பட வேண்டிய கலோரிகள் அளவு குறைந்து தேவையின்றி உடலில் சேமிக்கப்படுகின்றன. பலன் உடல் பருமன்.

3. ஜீன் வழி வருகிற மரபு குறிப்புகள்: சில குடும்பங்களில் வழி வழியாக வருகிற பிள்ளைகள் எல்லோருமே குண்டாக இருப்பார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ உடல் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அதிக கலோரிகளை எரித்து செலவழித்து உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர்கள் ஜீன்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.

4.குடும்பத்தின் அமைப்பு: சில உயர் குடும்பங்களில் இயல்பாகவே அடிக்கடி ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது, பிட்ஸா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது ஒரு ஸ்டேட்டஸ் சார்ந்த விஷயமாக இருக்கும். பணக்காரர்களுக்கு என்றே இருக்கிற விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு பெற்றோர்கள் பிள்ளை வளர்ந்திருக்கிறானா என்று பார்க்கும்போது பிள்ளை கண்டபடி வளர்ந்திருப்பான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:26 pm

5. சாப்பிடும் பழக்கம்: சிலர் சாப்பிடுவதை மட்டுமே ஒரே பொழுது போக்காக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் விலங்குகளுக்கும், மனிதர்களைப்போல உடல் எடை கூடுமா? என்ற கேள்வி இருந்தது. கூடும் என்று நியூயார்க்கின் ராக் பைல்லர் பல்கலைக்கழகம் நிரூபித்திருக்கிறது. இதற்கு காரணமாக அவர்கள் கண்டுபிடித்திருப்பது ‘பாஸ்ட்’ என்கிற ஒரு வைரஸ் தொற்று. இந்த வைரஸ் விலங்குகளின் மூளையில் தொற்றுவது அவற்றின் உடல் எடை கூட முக்கியமான காரணம் என்கிறார்கள். டி.வி. பார்த்துக் கொண்டே கொறிப்பது பழக்கமாக இருக்கும். ஒரு எபிசோட் தருகிற திகிலில் இரண்டு தட்டு நொறுக்குகள் காலியாகி இருக்கும். பார்க்கிற சுவாரஸ்யத்தில் சிலர் நொறுக்குகளோடு சேர்ந்து கைவிரல்களையும் கொறித்துக் கொள்வதும் கூட உண்டு. சில வீடுகளில் பெண்கள் எல்லோரும் சாப்பிடும் வரை அமைதியாக இருப்பார்கள் முடிந்ததும் மிச்சம் மீதி இருக்கிற எல்லாவற்றையும் பேசிக் கொண்டே சாப்பிட்டு விடுவார்கள். திடீரென்று ஒருநாள் கீழே உட்கார்ந்திருந்து எழுந்திருக்க முடியாமல் யாராவது கை பிடித்து தூக்கி விடும்போதுதான் உடல் எடை கூடி குண்டாகி இருப்பது கவனத்துக்கு வரும்.

6. வாழ்க்கை முறை பழக்கம்: சிலருக்கு அதிக எண்ணெய் போல கொழுப்பு இருக்கிற உணவுகள்தான் பிடிக்கும் எதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ அதுதான் சுவையாக இருப்பதாகத் தோன்றும். விளைவு பெரிய எடையுடன் கூடிய உடல்.

7. மணம் சார்ந்த பிரச்னைகள்: கோபம், வருத்தம், கவலை போன்ற உணர்வுகளுக்கு சுலபமாக சாப்பிடும் பழக்கத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் சக்தி உண்டு. பல குண்டான பெண்களின் எடை கூடிய காரணம் மன அழுத்தம் இருக்கும் போதெல்லாம் சாப்பிடுவது.

8. பசித்த வாய்: சிலருக்கு வயிற்றில் பசி இருக்காது. ஆனால் எதையாவது பார்த்தால் வாய் மட்டும் பரபரக்கும். சாப்பிடுவார்கள். முடிவு பருமன்.

9. ஹார்மோன் குறைகள்: தைராய்டு பிரச்னைகள் ஸ்டீராய்ட் மருந்துகள் கர்ப்பத் தடை மாத்திரைகள். மன அழுத்தக் குறைபாட்டிற்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவை உடல் எடையைக் கூட்டி பருமனை உருவாக்கக் கூடியவை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:28 pm

உடல் பருமனை எப்படி கணக்கிடுவது?

அதிக உடல் எடை உடல் பருமன் இவற்றைக் கணக்கிடும் முன், நம்முடைய இயல்பான உடல் எடையை பிரதிபலிக்க உடல் நான்கு விதமான சேர்க்கையை வைத்திருக்கிறது. இந்த நான்கும் சேருதலை Body Composition என்று சொல்லலாம். இந்த நான்கு விஷயங்களும் சேர்ந்துதான் உடல் எடையைத் தீர்மானிக்கிறது.

1. தசை, கல்லீரல், இருதயம் போன்ற மொத்தமான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குகிற எடை.

2. கொழுப்பு உருவாக்குகிற எடை.

3. செல்களுக்கு வெளியே இருக்கிற திரவ பொருட்கள் உருவாக்குகிற எடை (உ_ம்) இரத்தம் நிணநீர்.

4. தோல், எலும்புகள் போன்ற இணைக்கும் சமாச்சாரங்கள் சேர்ந்து உருவாக்குகிற எடை

இதில் Obesity உடல் பருமன் என்பது இரண்டாவதாக வருகிற கொழுப்புகளின் எடை கூடுவதால்தான் வருகிறது.

பார்த்தாலே தெரிகிறது ஒருவர் எடை அதிகமாக இருக்கிறார் அல்லது பயங்கரமாக குண்டாகி விட்டார் என்பது நம் பார்வை வழி செய்கிற கணக்கு. ஆனால் மருத்துவ அறிவியலின்படி உடல் பருமனைக் கணக்கிட ஐந்து வழிகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது பிஎம்ஐ என்கிற பாடி மாஸ் இன்டெக்ஸ் பெயர்தான் ஏதோ சிக்கலான விஷயம் மாதிரி இருக்கும். ஆனால் ரொம்பவும் எளிமையான கணக்கு இது. இதன் மூலம் உயரத்திற்கும் உங்கள் வயதுக்கும் ஏற்ற சரியான எடையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

எடை (KG), உயரம் X உயரம் (M)

உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ. எடை 60 கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிஎம்ஐ எப்படி கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.

60 / (1.6 X 1.6) = 60 / 2.56 = 23.5

இந்த பிஎம்ஐ அளவை வைத்துக் கொண்டு எப்படி ஒருவர் அதிக எடையில் இருக்கிறார்? சரியான எடையில் இருக்கிறார்? அல்லது உடல் பருமனியல் இருக்கிறார்? என்று சொல்ல முடியும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:31 pm

இந்த விஷயமும் படு சிம்பிள் ஏற்கனவே மருத்துவர்கள் கணக்கிட்டு நமக்கு வாழைப்பழத்தை உரித்து வைத்திருக்கிறார்கள். எந்த சிரமமுமின்றி அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

மேற்சொன்ன எளிமையான கணக்கின் முடிவில் வருகிற பிஎம்ஐ 20-க்கும் கீழே இருந்தால் நீங்கள் தேவைப்படுகிற எடையை விட குறைவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பிஎம்ஐ 25 -29,9க்குள் வருகிறது என்றால் நீங்கள் தேவைப்படும் உடல் எடையை விட அதிகமான எடையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இது ஒரு வேளை.

உங்கள் பிஎம்ஐ 30_க்கும் அதிகமாக இருக்கிறது என்றால் நீங்கள் Obesity உடல் பருமன் என்ற நிலையை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். இது கண்டிப்பாக ரெட் சிக்னல்.
இது தவிர சிலருக்கு தலை, கை கால், மார்புப் பகுதி என எல்லாம் ஓகேவாக இருக்கும் வயிறு மட்டும் பெரிதாகி பாடாய் படுத்தும் அங்கு மட்டும் தேவைக்கும் அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கும் இதை வயிற்றின் பருமன் Abdominal Chesity என்று ஒரு பெயர் கொடுத்துச் சொல்கிறார்கள்.

இந்த அளவை Waist/Hip ration என்கிற வழியில் கணக்கிடுகிறார்கள். எளிமையாகச் சொன்னால் இடுப்பின் சுற்றளவு என்று சொல்லலாம்.

இந்த அளவு 1_க்கும் அதிகமாகப் போனால் ஆண்களுக்கு வயிற்றின் பருமன் ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம். 0.8க்கு அதிகமாகப் போனால் பெண்களுக்கு தொப்பை வந்து விட்டது என்று அர்த்தம்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் என்ன? அதிகப்படியான சோர்வு, ஆஸ்துமா, மன இறுக்கம், குறட்டை, ஹைப்பர் டென்ஷன், இருதய இரத்தக்குழாய் கோளாறுகள், வெரிகோஸ் வெயின்ஸ் என்கிற இரத்தக் குழாய்கள் சுருண்டு கொள்ளும் நிலை, இடுப்பு எலும்பு, முட்டி எலும்புகள் தேய்ந்து ஆர்த்ரைடிஸ், கீழ்முதுகு எலும்பில் வலி, தேவையற்ற பிரச்னைகள், செக்ஸ் குறைபாடுகள், மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஸ்ட்ரோக், கல்லீரல் பிரச்னைகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:37 pm

உடல்பருமனைக் குறைப்பது எப்படி? அதற்கான வழி சிகிச்சைகள் என்ன?

உடல் பருமனைக் குறைக்க முற்படும்போது ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். டயாபடீஸ், இரத்த அழுத்தம் போல் உடல் பருமன் என்பதும் ஒரு நீண்டநாள் பிரச்னை எப்படி உடல் எடை ஒவ்வொரு நாளாகக் கூடுகிறதோ அப்படியே உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதுதான் நல்லது. உடனடியாக பத்து கிலோ, பதினைந்து கிலோ என உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தீர்கள்.

உடல் பருமனுக்கான சிகிச்சையை மூன்று விதமாகப் பிரித்துக் கொள்ளலாம்.

1. முதல் வழி: மருந்து மாத்திரைகள் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பது

2. இரண்டாவது வழி: மாத்திரைகளின் வழி உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பது

3. மூன்றாவது வழி : அறுவை சிகிச்சை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:38 pm

யாருக்கு எந்த வழி சிறந்தது.

பிஎம்ஐ 30க்கும் அதிகமாக இருக்கிறவர்கள் பிஎம்ஐ 27 உடலில் டயாபடீஸ் அல்லது ரத்த அழுத்த நோய் இருக்கிறவர்கள் உணவு உடற்பயிற்சிகளுடன் மருந்துகளின் சிகிச்சையும் எடுத்துக் கொள்வது நல்லது.

இயல்பான எடையை விட அதிகம் எடைகூடி இருக்கிறவர்கள் உணவு, உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றலாம். உடல் எடையைக் குறைக்கத் தொடங்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கை முறையில் மெல்ல 3 முதல் 6 மாதங்களுக்கு மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் உணவில் மாற்றங்கள், இதுவரை செய்ததை விட அதிக உடல் உழைப்பு போல சில விஷயங்களை தொடர்ந்து மாற்றிக் கொள்வது நல்லது.

உடல் எடையைக் குறைப்பதற்கான முதல் வழி. மருந்து மாத்திரைகள் இல்லாத வழி உணவில் மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:41 pm

உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

1. உணவின் மூலம் கிடைக்கக் கூடிய கலோரி அளவைக் குறைப்பது. பொதுவாக உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களிடம் உலகம் முழுவதும் முதன் முதலில் சொல்லப்படுகிற அட்வைஸ் இதுதான். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கலோரிகளைக் குறைக்க வேண்டும். கண்டபடி சாப்பிடாமல் இருப்பது உடலில் எலக்ரோலைட் இம்பேலன்ஸ் _ உருவாக்கும் ஜாக்கிரதை கூடவே பித்தப்பை கற்கள். கலோரி குறைப்பதால் ஏற்படுகிற எடை இழப்பில் 50 சதவிகிதம் மாறுபடியும் இரண்டு வருடங்களில் திரும்ப வந்து விடுகிறது. நம் மூளையில் இருக்கிற, ‘லெப்டின்’ என்கிற பொருள் ஏற்கனவே இருந்த எடைதான் சரியான எடை என்று தவறாக நினைத்துக் கொண்டு திரும்ப எடையை பழையபடி கூட்டிவிடுகிறதாம். கலோரி குறைந்த உணவுகளால் ஏன் பயம் இல்லை? ஒரு நாளைக்கு 2500 கலோரி சாப்பிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சமமான அளவில் சக்தி செலவழிக்க நம் உடல் டியூன் செய்யப்படுகிறது. திடீரென்று 1000 கலோரியாக குறைக்கும் போது உடலும் தனது வளர்சிதை மாற்றத்தை 1000 கலோரி செலவழிப்பிலேயே நடத்திக் கொள்கிறது. இந்த ‘‘அட்ஜஸ்ட்’’ சமாச்சாரம்தான் பருமர்களின் எதிரி. ஆக கலோரி குறைந்த உணவு எடை குறைக்காமல் இருப்பதற்கும், கலோரி அதிகமான உணவு எடை கூட்டாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:43 pm

2. உணவில் கொழுப்பு சத்தைக் குறைப்பது: உடல் எடை கூடுவதில் கொழுப்புதானே அதிக பங்கு வகிக்கிறது. அதனால் கொழுப்பைக் குறைத்தால் உடல் எடை குறையும் என்கிற நோக்கத்தில் இந்த அட்வைஸ் கொடுக்கப்படுகிறது. ஆய்வின்படி உணவில் கொழுப்பு பொருட்களைக் குறைப்பதால் ஏற்படுகிற எடை இழப்பு 3_4 கிலோ தான். இதுவும் ஒவ்வொருவருக்கும் சரியாக உதவுவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு நாடுகளிலும் மக்கள் குறைவான அளவுதான் கொழுப்பை சாப்பிடுகிறார்கள். ஆனால் எடை குறைவதில்லை. காரணம் கொழுப்பைக் குறைக்கிற அவர்கள் கலோரியை அதிகரித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலிய ஆய்வு வேறொரு கருத்தை முன் வைக்கிறது. கொழுப்பில் சாச்சுரேட் மற்றும் அன் சாச்சுரேடட் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் சாச்சுரேடட் நமக்கு நல்லது செய்வதில்லை துரதிஷ்டவசமாக அதில்தான் நமக்கு பெரும்பாலான உணவு கிடைக்கிறது. இந்த கொழும்பு கொலஸ்டிராவை உயர்த்தி இருதய அடைப்புகளை உருவாக்கும். ஆனால், அடுத்த வகையில் வருகிற கொழுப்புகள் மிக நல்லவை. உடலுக்கு பெரும் நன்மைகளைச் செய்கின்றன. மீன் சன், பிளவர், ஆயில், சனோவா ஆயில் இவற்றிலெல்லாம் இந்த கொழுப்பு கிடைக்கிறது. இது நமது இருதயத்தின் தோழர்கள் நல்லதே செய்யும் நண்பன். எடையைக் குறைக்கிறேன் என்று உணவின் மூலம் வருகிற நல்ல கொழுப்புகளை துரத்தி விடுவது நல்லது அல்ல. அதே சமயம் எடை குறைக்க கொழுப்பை குறைப்பது உதவாது என்று நினைப்பதும் தவறானது. கொழுப்பை குறைப்பதன் மூலம் மூளையில் இருக்கிற லெப்டின் வயிற்றுக்கு சிக்னல் தந்து பசியைக் குறைக்கும். எடுத்துக் கொள்கிற அளவு குறைவு. இருக்கிற சக்தி செலவழிப்பு மூலம் உடல் எடை குறைய கொழுப்பும் கொஞ்சம் உதவும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:44 pm

3. கார்போஹைட்ரேட் உணவு வகைகளில் மாற்றம்? நாம் அதிகமாகச் சாப்பிடுகிற அரிசி வகை உணவுகள் இந்த லிஸ்டில் வரும் இவற்றைக் குறைப்பதன் மூலம் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் எடை குறைப்பில் கார்போஹைட்ரேட் உணவுகளின் பங்கு பற்றித்தான் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பழைய உடல் எடை குறைப்பு பார்முலாக்கள் கார்போஹைட்ரேட்டை அதிகப்படுத்தச் சொல்லியிருந்தன. ஆனால், இப்போது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. கிட்னி பல்கலைக் கழகத்தின் நியுட்ரிஷன் துறை _ பேராசிரியர் ப்ரான்ட் மில்லர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். சாதம் வெள்ளை பிரட், கேக்குகள் காலை உணவுகளில் சேர்க்கப்படுகிற சமாச்சாரங்கள் எல்லாம் கொழுப்புக்கு மாற்றமான உணவாக நினைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவை அதிக அளவில் உடலில் க்ளுகோஸ் உருவாக வைப்பதால் இருதயத்திற்கும் முக்கியமான எதிரியாக மாறி விட்டன. இப்போது ஆய்வாளர்கள் கார்ப்போ ஹைட்ரேட் உணவுகளை இரண்டு வகையாகப் பிடித்து பார்க்கிறார்கள். இதில் குறைவான ஜிஐ உடையவைகளை உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:45 pm


4. புரோட்டீன் வகை உணவுகளில் மாற்றம்:
நிறைய புரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக ஒரு நாளின் உணவில் 10_15% கலோரி கொடுக்கும் புரோட்டீன்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளச் சொல்லி நிறைய மருத்துவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். காரணம் அதிக புரோட்டீனை அதிக நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும் போது குடல் புற்றுநோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


5. நார்ச்சத்து மிகுந்த உணவுகள்: அதிகம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் 2 கிலோ எடை குறைப்பில் உதவுகின்றன. சிலருக்கு உணவில் மாற்றம் செய்ய விருப்பம் இருக்கும். ஆனால் எப்படி அவற்றைக் கணக்கிடுவது எப்படி ஒரு நிபுணரின் உதவியை கேட்டுப் பெறுவது என்பதை யோசிக்காமல் காலம் கடத்துவார்கள். சிலருக்கு சோம்பேறித்தனம் யாராவது ரெடிமேடாக கொடுத்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்ற நினைப்பு இருக்கும். இவர்களைப் பிடித்து பணம் பெற்று கையில் வெயிட் லாஸ் டயட்டைத் திணித்து விடுகிற கம்பெனிகள் நிறைய இருக்கின்றன. இவை சிலருக்கு உதவும் சிலருக்கு உதவாது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:46 pm

வெளிநாடுகளில் இப்படி கிடைக்கும் சில டயட்களின் கண்ணோட்டம் இது.

1. அட்கிஸன் டயட்: ‘நிறைய புரோட்டீன், குறைவான கொழுப்பு, குறைவான கார்ப்போ ஹைட்ரேட் ‘‘இதுதான் இந்த உணவின் அடிப்படை.

2. வெயிட் வாட்ச்சர்ஸ்: அமெரிக்காவில் 40 வருடமாக இந்த உணவு மில்லியின் கணக்கில் எடை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் அதிக புரோட்டீன்கள் தான் சூட்சுமம்.

3. ஸோன் டயட் மற்ற வகை டயட்களை விட இது அதிகம். பயனுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், டாக்டர்கள் மற்றும் துறைகள் சார்ந்த நிபுணர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பில் செயல்படும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் சூட்சுமம்.

4. ஸ்கார்ஸ்டேல் டயட்: இதில் குறிப்பிட்ட அளவு பழங்கள், காய்கறிகள் மற்றும் அதிகபட்ச புரோட்டீன் அனுமதிக்கப்படுகிறது. கூடவே பசியைக் குறைக்கும் ஹெர்பல் பொருட்களும் இருக்கும்.

5. ஆனி கோலின்ஸ் டயட் இதை உருவாக்கியவர் ஆனி கோலின்ஸ் என்கிற ஜரிஷ் பெண்மணி வெயிட் லாஸ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ட் 25 வருடஙகளாக மார்க்கெட்டிங்கில் இருக்கும் இந்த டயட்தான் இருப்பதிலேயே விலை குறைவானது. இவர் நிறைய டயட் பிரான்சுகளைக் கொடுத்து தேவையானதை தேர்ந்து எடுக்க வழி சொல்கிறார்.

6. இடியட் ப்ரீப்டயட் : இது இப்பொழுது பரபரப்பாக பேசப்படுகிறது இதற்கு அடிப்படையாக இவர்கள் ‘Shifting theory’ என்ற ஒரு விளக்கத்தைச் சொல்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:49 pm

நம்முடைய வளர்சிதை மாற்றம் என்கிற மெட்டா பாலிக்க்டிவிட்டி நாம் சாப்பிடும் உணவு பழக்கத்தைச் சார்ந்தது. இதுவரை நாம் எப்படிச் சாப்பிடுகிறோம். என்பதைப் பொறுத்து அதற்கு ஒரு கருத்து இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் எப்படி சாப்பிடுவோம் என்று அதற்கு தெரியாது. அதற்கு தாயாராகவும் இருக்காது. ஒரு புதிய டயட்டை நம் உடலுக்கு அனுப்பும்போது அதற்கு எப்படி செயல்படுவது என்று புரியாது. திடீரென்று கலோரிகளை ஷிப்ட்_மாற்றம் செய்வதின் மூலம் சேமிக்கிற நிலை குறைந்து அதிக சக்தி செலவழிக்கப்பட்டு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு சில நாட்களும் டயம் மெனுவை மாற்றி மாற்றி உடலுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இதன் சூட்சுமம். நம் உடல் மெட்டபாலிசம் இந்த உணவை சுலபத்தில் எரிக்க வசதியாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எரித்து முடித்த உடனேயே இருக்கிற கொழுப்புகளின் பக்கம் மெட்டா பாலிஸத்தின் கவனம் திரும்பி அவைகளை எரிக்கத் தொடங்கும்.

இவற்றை எல்லாம் தாண்டி இப்போது உலகம் முழுக்க உடல் பருமனைக் குறைக்கும் ஒரு தேநீர் பரபரப்பாக விற்பனையாகிறது. அந்தத் தேநீரின் பெயர் WULong. இதை சீனா, ஜப்பானில் மேஜிக்கல் ஸ்ம்மிங் டீ என்று சொல்கிறார்கள்.

இருப்பதிலேயே இது சிறந்தது என்பதற்கு ஆய்வு முடிவுகள் (Japan University of Tokushima School of Medicine) கீழே சொல்லப்பட்ட 8 விஷங்களை வரிசைப்படுத்துகிறது.


நீங்கள் சாப்பிட்டு முயற்சிக்கும் க்ரீன் டீயை விட அதிகமாக (2.5 சதவிகிதம்) கலோரிகளை செலவழிக்கிறது.


நம்மைப் போல அரிசி உணவு அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை கூட காரணம். இதனால் அதிகரிக்கிற இன்சுலின் ஹார்மோன். சாப்பிடும் முன் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாக இந்த தேநீரை சாப்பிட்டால், சாப்பாட்டிற்கு பிறகு உயருகிற இன்சுலினை கட்டுப்படுத்தும்.

ஒரு மாதத்தில் உங்கள் தோலை அழகாக மாற்றி விடுகிறது.

வயதாகிற தோற்றத்தைக் கட்டுப்படுத்தி இளமையை திரும்ப வரவழைக்கிறது. ஒரு ஆண்டி ஆக்ஸிடென்ட் போல செயல்பட்டு உடலில் தங்கும். ‘‘ப்ரீ ராடிகல்’ என்ற நச்சுகளைக் குறைக்கிறது.

உறுதியான பற்கள் உருவாகின்றன. பற்குழிகள் உருவாவது தடை செய்யப்படுகிறது.


உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மன அமைதி தருகிறது.

நூறு சதவிகிதம் இயற்கையான உடல் எடை குறைக்கும் பொருள்.


உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கூடவே இத்தனை நல்ல விஷயங்களும் நடப்பதால் இப்போது இந்த ‘டீ’ சீனா, ஜப்பானில் விற்பனையில் பறக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:50 pm

உடற் பயிற்சி

உடல் பருமனைக் குறைப்பதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. உணவு மாற்றத்துடன் உடற்பயிற்சிகளும் சேரம்போது உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகமாகிறது. உடற்பயிற்சிகள் மூலம் 1 முதல் 4 கிலோ வரை எடை குறைக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை செய்வது சிறந்த வழி முடியாதவர்கள் நடப்பது ஜாகிங். நீந்துவது போன்ற விஷயங்களை முயற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை இம்மாதிரி விஷயங்களில் ஈடுபடத் தொடங்குவது நல்லது. விருப்பம் இருக்கிறவர்கள் டான்ஸ் கூட ஆடலாம். நடனம் ஆடுவதின் மலம் 350 கலோரிகள் ஒரு மணிநேரத்திற்கு செலவாகின்றன.

உடற்பயிற்சிகளின் நோக்கம் இரண்டு விஷயங்கள்தான் ஒன்று உடல் எடை குறைப்பது, இரண்டாவது பிட்னெஸ் உடற்பயிற்சி செய்வதால் உடலின் மெட்டபாலிஸத்தின் வேகம் கூட்டப்படுகிறது. நிறைய கலோரிகள் எரிக்கப்படுகின்றன. மனதுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. மன அழுத்தம் குறைகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by சிவா on Wed Nov 05, 2008 9:54 pm

டயட்பில்ஸ்

இந்த மாத்திரைகள் உலகம் முழுக்க நிறைய மருந்து கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. எந்த பத்திரிகையைத் திறந்ததும் ஏதாவது ஒரு டயட் பில்ஸ் வசீகரமாக கன்னடித்து ஐஸ்வர்யாராய் மாதிரி ஆகிவிடலாம் என அழைக்கிறது.

இவைகள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை? இப்படி ஒரு ஆய்வை அமெரிக்காவின் வெயிட் லாஸ் இன்ஸ்டிடியூட் நடத்தி கீழ்க்கண்ட டயட் பில்ஸ்களைப் பரிந்துரைக்கிறது.
கடையில் கிடைக்கிற இவைகள் அப்படியே வாங்கி பயன்படுத்துவது நல்லது. அல்ல உங்கள் டாக்டர்தான் இதை முடிவு செய்ய முடியும்.

1. xerisan asa: இப்போது அமெரிக்காவில் விற்பனையில் இருக்கிற டயட் மாத்திரைகளில் இதுதான் பெஸ்ட் என்று கணிக்கப்படுகிறது. இதில் இருக்கிற முக்கியமான பொருள் பாஸீல்ஸ் வல்காரீஸ் இது கார்ப்போஹைட்ரேட் மெட்டபாலிஸத்திற்கு உதவும் என்ஸைமை தடை செய்கிறது. பக்க விளைவுகள் ஏது இல்லை.

2. Solidax adx: இது பசியை கட்டுப்படுத்துகிறது குறுகிய காலத்தில் 9 கிலோ வரை குறைக்கிறது. தவிர கொலஸ்டிரால் அளவையும் குறைக்கிறது. பக்க விளைவுகள் இதில் நிறைய உண்டு படபடப்பு. தூக்கமின்மை, வாய் உலர்ந்து போதல் போன்ற சிலவும் வரும்.

3. kavaherbal: இது ஹெர்பல் என்று சொன்னாலும் பயன்படுத்தியதில் நிறைய நபர்களுக்கு கல்பீரல் பாதிப்பு வந்திருக்கிறது.

4. fat absorber tdsl: அதிக கொழுப்பு, குறைவான கார்ப்போஹைட்ரேட் டயட்டில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் பக்க விளைவுகள் இல்லை.

5. xenical: இது ஆர்லிஸ்டேட் என்கிற மருந்தை அடிப்படையாகக் கொண்டது. இது கொழுப்பு சேமிக்கும் வழியைத் தடை செய்யும். இது உடல் பருமனான கூடவே டயாபடீஸ். இரத்த அழுத்தம். இருதயம் பிரச்னை போன்றவைகள் இருக்கும் நபர்களுக்கு உதவும். நிறைய பக்கவிளைவுகள் உண்டு ஜாக்கிரதை.

6. bontril: பசியைக் கட்டுப்படுத்துகிறது. நிறைய பக்க விளைவுகள் உண்டு.

7. meridia: இதுவும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. நிறைய பக்க விளைவுகள் உண்டு.


மேற்சொல்லப்பட்ட மருந்துகள். ஜஸ்ட் உங்கள் கவனத்திற்குத்தான் எந்த எடை குறைப்பு மருந்துகளைப் பயன்படுத்தவும் உங்களுக்கு உங்கள் டாக்டரின் உதவி தேவை. ஆலோசனை இல்லாமல் நேரடியாக பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Obesity என்றால் என்ன? Empty Re: Obesity என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum