ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Yesterday at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Yesterday at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Yesterday at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Yesterday at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Yesterday at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Yesterday at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Yesterday at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Yesterday at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Yesterday at 6:35 am

Admins Online

உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்

Go down

உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள் Empty உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்

Post by Guest on Tue May 17, 2011 8:22 pm

உங்கள் வயது என்ன? உங்களது இரத்த அழுத்தம் எவ்வளவு? அது எவ்வளவாக இருக்க வேண்டும்?

இரத்த
அழுத்தத்தில் இரண்டு அலகுகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
சாதாரண இரத்த அழுத்தம் 120/80 எனக் குறிக்கப்படுகிறது. மேலுள்ளது
சுருக்கழுத்தம் Systolic blood pressure (SBP), கீழுள்ளது விரிவழுத்தம்
Diastolic blood pressure (DBP) என அவை இருவகைப்படும். இதில் எதைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது?

ஐம்பது
வயதிற்கு மேற்பட்டவர்களில் சுருக்கழுத்தத்தை (SBP) கட்டுப்பாட்டில்
கொண்டு வருவதையே மருத்துவர்கள் இலக்காகக் கொள்ள வேண்டும் என The Lancet
என்ற சஞ்சிகையில் ஜீன் 18ல் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்று கருத்து
வெளியிட்டுள்ளது.

இதற்குக் காரணம் என்ன? இப்பொழுது வயதானவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் 50 வயதிற்கு பின்னர்
பெரும்பாலானவர்களின் இரத்த அழுத்தம் அதிகரித்து வருவதும் தெரிந்ததே.
அவர்களில் விரிவழுத்தத்தை (DBP) விட சுருக்கழுத்தமே (SBP) பெரும்பாலும்
அதிகரிக்கின்றது. வயது கூடக் கூட சுருக்கழுத்தம் அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. ஆனால் விரிவழுத்தம் பொதுவாக 50 வயது வரையே அதிகரிக்கிறது.
அதற்கு மேல் அதிகரிப்பது குறைவு. அது மட்டுமல்ல பல தருணங்களில் அது
குறையவும் செய்கிறது.

இன்னொரு விதமாகப் பார்த்தால் இரத்த அழுத்த
நோயுள்ளவர்களில் 75% சதவிகிதத்திற்கு மேலானவர்கள் 50வயது அல்லது அதற்கு
மேலான வயதுள்ளவர்களே. இவர்களுக்குதான் மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள்
வருவதற்கான சாத்தியம் அதிகம். இதன் காரணமாக இத்தகையவர்களது இரத்த
அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மிக முக்கியமானதாகும்.

முன்னைய
காலங்களில் விரிவழுத்தம் (DBP) தான் முக்கியமானது என மருத்துவ உலகில் ஒரு
கருத்து நிலவியது. அதைக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் இலக்காக இருக்க
வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் மேற் கூறிய கருத்துக்களின்
அடிப்படையில் பாரக்கும் போது இக்கருத்து தவறானது, சுருக்கழுத்தமே
முக்கியம் என்பது வெளிப்படை. மேற் கூறிய கட்டுரையாளர்கள் ஒரு படி மேலே
போய் 50வயதிற்கு மேலானவர்களுக்கு சுருக்கழுத்தத்தை மட்டுமே அளவிட்டால்
போதுமானது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் நான்கு காரணங்களைக்
கூறுகிறார்கள்.

முதலாவது காரணம். சுருக்கழுத்தமானது மிகவும்
சுலபமாகவும் தெளிவாகவும் அதிக தவறின்றியும் அளவிடக் கூடியது. அத்துடன்
அதுவே மாரடைப்பு, பக்கவாதம், போன்ற நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமும்
ஆகிறது.

பிரஸர் மானியுடன், ஸ்டெதஸ்கோப் கிடைக்காத நிலையில்
நாடித்துடிப்பை தொட்டுப் பார்பதன் மூலம் கூட சுருக்கழுத்தத்தை அண்ணளவாக
அளவிட முடியும். அதனால் மருத்துவர்கள் இல்லாதபோது, மருத்தவ தாதி அல்லது
மருத்துவ உதவியாளர் கூட இவ்வாறு சுலபமாக அளவிட முடியும். நோயாளிகளுக்கு
கூட சிறு பயிற்சி மூலம் சுருக்கழுத்தத்தை அளவிடுவதற்கு பழக்கிவிடலாம்.
எனவே அளவிடுவதும், கட்டுப்படுத்துவதும் இலேசானது.

ஆனால் இப்பொழுது சுலபமாக வாங்கக் கூடிய இலக்ரோனிக் பிரஸர் மானிகளை எந்த
மருத்துவ
அறிவு இல்லாதவரும் பட்டன்களை அழுத்துவதன் மூலம் இயக்கி, பிரஸரை உடனடியாக
அறிய முடியும் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இரண்டாவது
காரணமாவது, தனது பிரஸர் என்ன, அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதற்கு
இரண்டு அலகுகளை வைத்துக் கொண்டு நோயாளிகள் குழம்ப வேண்டியதில்லை. மேலும்
அந்த இரண்டில் எது முக்கியம் என்ற கேள்வியும் அவர்களுக்கு எழாது.

மருத்துவர்களும்
கூட அதுவா இதுவா முக்கியம் என அல்லாட வேண்டியதில்லை என்பது மூன்றாவது
காரணமாகும். நான்காவதாக, பிரஸர் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரைகளை
சுகாதார இலாகாவினர் பொது மக்களிடையே எடுத்துச் செல்வதற்கும்
திட்டமிடுவதற்கும் கூட ஒரு இலக்கமென்பது சுலபமாயிருக்கும்.

சரி
இப்பொழுது உங்களது பிரஸருக்கு வருவோம். ஐம்பது வயதிற்கு மேற்பட்ட உங்கள்
பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும். 140/90 க்கு மேற்படாது இருக்க வேண்டும்.
நீரிழிவும் சேர்ந்திருந்தால் 130/80 க்குக் குறைவாக இருக்க வேண்டும் என்றே
இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் மேற் குறிப்பிட்ட புதிய முறையில்
கூறுவதாயின் இவற்றை முறையே 140, 130 என்று நீங்கள் குறிப்பிட்டால்
போதுமல்லவா?

ஆம் எவ்வளவு சுலபம் நினைவில் வைத்திருக்க?

டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள் Empty Re: உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்

Post by ந.கார்த்தி on Tue May 17, 2011 8:28 pm

நல்ல பதிவு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
மதிப்பீடுகள் : 950

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள் Empty Re: உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்

Post by முரளிராஜா on Wed May 18, 2011 7:40 am

பயனுள்ள பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள் Empty Re: உங்கள் பிரஸர் பற்றிய சில புதிய தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum