புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_m10நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 8:01 am

நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  Rajin4தமிழகத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மே 13-ல் நடிகர் ரஜினி உடல்நிலைப் பற்றி தமிழ்நாடு முழுவதும் வதந்திகள் பரவின. அந்த வதந்திகளை அவருடைய மனைவி லதா ரஜினி மறுத்தார்.
ரஜினி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் டி.வி.யில் தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் லதா ரஜினி தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் ரஜினி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினியின் நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவருடைய கால்கள் வீங்கியிருப்பதாகவும், இதற்காகவே ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
ரஜினி உடல்நிலை பற்றி மருத்துவர் நிர்வாகம் சார்பில் நேற்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், "புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரஜினி மூச்சுக்குழாய் தொற்று கிருமி தாக்குதல் (ரெஸ்பிரேட்டரி இன்பக்ஷன்), வயிற்றில் குடல் பிரச்னைகள் ஆகியவற்றுக்காக தீவிர பரிசோதனை செய்வதற்காக, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.









கடந்த சில வாரங்களாக அவர் இந்த கோளாறுகளால் அவதிப்படுகிறார். அவருக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அல்லாமல், வார்டில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவர் உடல்நிலை முன்னேறி வருகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், முழு ஓய்வு எடுக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டு இருந்தது.
போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரஜினி 15 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஜினியை பார்ப்பதற்காக நடிகர் விஜயகுமார் நேற்று போரூர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் பின்னர் கூறுகையில், "ரஜினிகாந்துக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காகவே நான் இதுவரை அவரை வீட்டில் போய் பார்க்கவில்லை. வெளியில் அவர் உடல்நிலை பற்றி பல்வேறு விதமாக பேசப்படுவதால், ஒரு நண்பராக மருத்துவமனை போய் அவரை பார்த்தேன்.
நான் சென்ற போது, ரஜினி நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அதனால் அவரை தொந்தரவு செய்யாமல், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்திடம் உடல் நலம் விசாரித்தேன். ரஜினி நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். ரஜினி தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. வார்டில் உள்ள ஒரு அறையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்றார்.
ரஜினிகாந்துக்கு இந்த அளவுக்கு திடீர் பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி அவருடைய அண்ணன் சத்யநாராயணா, "ராணா படத்தில், ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதற்காக, அவர் உடல் எடையை குறைப்பதற்காக, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டார்.
இருபதே நாட்களில், பதினைந்து கிலோ எடை குறைந்தார். இதுதான் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட காரணம் என்று கருதுகிறேன்," என்று கூறினார்.
'ராணா' படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், "ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால், வெளியில் பேசப்படுகிற அளவுக்கு அவர் உடல்நிலை மோசமாக இல்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்து, சில நாட்கள் ஓய்வு எடுத்தபின், 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்காக, நான் தாய்லாந்து மற்றும் புக்கட் தீவுக்கு சென்று வந்தேன்," என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறை பதவியேற்கும் விழா இன்று நடைபெற்றது.
முன்னதாக, இன்றும் ரஜினியின் உடல் நிலை குறித்து வதந்திகள் வெகுவாக பரவின. இதனால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பரபரப்புடன் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் வதந்தியே என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.


விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 8:19 am

ரஜினி?

கிளினிக்கல் ரிப்போர்ட்




'நிலவே முகம் காட்டு... எனைப் பார்த்து...’ என 'எஜமான்’ படத்​தில் சோகம் சொட்டும் ஒரு பாடலை, ரஜினி பாடுவார். இப்​போது அந்தச் சூழ்நிலையில்தான் அவரது அகில உலக ரசிகர்களும் உருகி வழிகிறார்கள். ரஜினி குறித்துப் பரவும் வதந்திகளால், ரசிகர்கள் மனம் உடைந்து​கிடக்கிறார்கள்.
உண்மையில் ரஜினி நிலை என்ன?
''கடந்த 13-ம் தேதி எல்லோரும் தேர்தல் முடிவை டி.வி-யில் ஆவலோடு பார்த்துக்​கொண்டு இருந்தபோது, ரஜினியும் தனது போயஸ் கார்டன் வீட்டில் சக நண்பர்களோடு கமென்ட் அடித்தபடி, தேர்தல் முடிவுகளைப் பார்த்​தார். இரவு 11 மணிக்கு லேசாக மூச்சுத்திணறல் ஏற்பட, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சூழலில், மீடியாக்கள் படையெடுப்பு அந்த மருத்துவமனையை நெருக்க... 'ரஜினி வந்தார்... சிகிச்சை செய்தோம். அவர் திரும்பிப் நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  P46aபோய்விட்டார். இப்போது இங்கு இல்லவே இல்லை!’ என்று திருப்பி அனுப்பினர். ஆனால், ராமச்சந்திராவில் 7-வது தளத்தில் இருக்கும் டீலக்ஸ் அறையில்தான் இருக்கிறார் ரஜினி.
'ரஜினிக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல், வயிற்றில் கோளாறு’ என்று லதா ரஜினிகாந்த் திரும்பத் திரும்பச் சொன்னாலும்... உண்மை அது அல்ல. ''ரஜினிக்கு முதலில் நுரை​யீரல் தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பிறகு, ராமச்சந்தி​ராவில் ரஜினியின் உடல் முழுவதையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தார்கள். வயிற்று வலியால் அவதிப்பட்ட ரஜினியின் கல்லீரல் சோதிக்கப்பட்டது. ஒருவேளை, இது கொடூரமான வியாதிக்கான அறிகுறி​யாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயாப்ஸி எடுத்து, கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சாம்பிள் அனுப்பி இருக்கிறார்கள். சிறுநீரகத்திலும் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கை, கால்கள் அடிக்கடி வீங்கிக்கொள்கிறது. இதனால் அவஸ்தையில் தவிக்கிறார். நடக்க முடியாமல், வீல் சேர் மூலம்தான் செல்கிறார். இதய நிபுணர் டாக்டர் தணிகாசலம், ராமசாமி உடையார் மகன் வெங்கடாசலம், ரஜினியின் இளமைக் காலத்து நண்பர் ராஜ்பகதூர் ஆகியோர் அருகில் இருந்து கவனித்துக்கொள்கின்றனர்.
ரஜினிக்கு 61 வயது. 'ராணா’ படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என்று மூன்று வேடங்கள். அதற்காக பட பூஜைக்கு முன்பில் இருந்தே, எடையைக் குறைத்தார். அதனால், அடிக்கடி மயக்கம் ஏற்பட்டதாம். ஆனால், அதைக் குடும்ப உறுப்பினர்களிடம்கூட சொல்லாமல் மறைத்தார் ரஜினி. அவருக்கு சர்க்கரை வியாதியும் இருப்பது இப்போது தெரிய வந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துப் போயிருந்​தால், இவ்வளவு தூரம் பிரச்னை ஆகியிருக்காது!'' என்று ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் புலம்புகிறார்கள்.
ரஜினி, தன் அண்ணன் சத்யநாராயண ராவைத் தன் தந்தை ஸ்தானத்தில்வைத்து வணங்குகிறவர். அவராலேயே ரஜினியைப் பார்க்க முடியவில்லை என்று ஒரு செய்தி உலவ... பெங்ளூருவில் இருக்கும் சத்யநாராயண ராவிடம் பேசினோம்.
''என் தம்பிக்கு உடம்புல எனர்ஜியே இல்லை. ரொம்ப இளைச்சுப்போயிட்டான். ராமச்சந்திரா ஆஸ்பத்தியில அவனுக்கு ட்ரீட்​மென்ட் எடுக்குற டாக்டருங்க, கொஞ்ச நாள் தங்கிட்டு, அப்புறமாப் போகலாம்னு சொல்லி இருக்காங்க... வேற ஒண்ணும் பெருசா பிரச்னை இல்லை...'' என்றார் உறுதியாக.
அவரிடம், ''நீங்கள் உங்கள் தம்பியைப் பார்த்தீர்களா?'' என்று கேட்டோம். ''நான் அவரைப் பார்க்க பெர்மிஷன் இல்​லேன்னு சொல்லிட்டாங்கப்பா...'' என்றார் வருத்த​மாக!
''உப்பு, சர்க்கரையை பிரிக்கும் செயல்​பாடு சரிவர நடைபெறவில்லை என்பதால் உடம்பில் வீக்கம் ஏற்படுகிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்கள் விரைவில் அமெரிக்காவில் இருந்து ரஜினிக்காக வர இருக்கிறார்கள்!'' என்கிறார்கள் மருத்துவமனை தரப்பில். எப்போதும் படுத்தே கிடக்கும் ரஜினி, கடந்த 16-ம் தேதி காலையில் மருத்துவ​மனை வளாகத்தில் வாக்கிங் கிளம்பி இருக்கிறார். அப்போது திடீரென்று மயக்கம் வரவே, கீழே விழுந்து விட்டார். உடனடியாக மருத்துவர்கள் பதறிப்போய் ரஜினியை சூழ்ந்துகொண்டு தீவிர சிகிச்சை அளித்தார்கள். அந்தக் காட்​சியை ஆஸ்பத்திரியில் பார்த்த ஒருசில ஊழியர்கள், 'ரஜினிக்கு ஆபத்து’ என்று தகவல் அனுப்ப, தமிழகம் முழுவதும் தவ​றான வதந்தி றெக்கைகட்டி பறந்தது.
''நான்கரை ஆண்டுகளுக்கு முன்​னால் ரஜினிக்கு சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது சிகரெட் போன்ற வஸ்துகளை தவிர்க்கச் சொன்னார்கள். ஆனால் டென்ஷன் காரணமாக அவரால் தவிர்க்க முடியவில்லை. இதுவே நோய் முற்றியதற்கு முழுக் காரணம். மூச்சுத்​திணறல் அதிகமாக இருப்பதால் வெளி​நாட்டுக்கு அழைத்துச் செல்வதிலும் சிரமம் இருக்கிறது!'' என்று சொல்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்.
ஜெய​லலிதா பதவியேற்பு விழாவுக்கு வந்த நரேந்​திரமோடி, சந்திரபாபு நாயுடு இருவரும் அன்று மாலை 4 மணிக்கு, ரஜினியை நேரில் பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். அமெரிக்கா, புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது தமிழ்​நாட்டில் பதற்றம் கிளம்பியது. அதனைத் தவிர்ப்பதற்காக வீடியோ ஷூட் செய்து, அந்தக் காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பினர். அதுபோலவே, ராமச்​சந்திரா மருத்துவமனையில் ரஜினி ஓய்வு எடுக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து சேனல்களுக்கு கொடுக்க இருக்கிறாராம், லதா ரஜினிகாந்த்.
இதற்கிடையில் 16-ம் தேதி ரஜினியோடு சேர்ந்து மதிய உணவு சாப்​பிட்டார், தனுஷ். இந்த தகவலை, தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்து ரசிகர்கள் நெஞ்சில் பால் வார்த்து இருக்கிறார், தனுஷ்.
- எம்.குணா
படம்: சு.குமரேசன்

ஜீனியர் விகடன் நடிகர் ரஜினி உடல்நிலை.. தீயாகப் பரவி வரும் வதந்திகள்..!  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக