ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Today at 8:31 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by சக்தி18 Today at 8:20 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Today at 8:17 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by சக்தி18 Today at 8:10 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Today at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Today at 6:59 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by ayyasamy ram Today at 6:22 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Today at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Today at 5:16 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 5:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

Admins Online

மூட்டுவலிக்கு டாட்டா....

Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty மூட்டுவலிக்கு டாட்டா....

Post by தாமு on Tue Jun 07, 2011 11:12 am

''ஐயோ, வலி உயிர் போகுதே...''

- கை, கால்களில் தைலம் தேய்த்தபடி, வலி தோய்ந்த வார்த்தைகளால் அலறும் பெண்களை விளம்பரங்களில் மட்டும் அல்ல... பல வீடுகளிலும் பார்க்கிறோம். சமையல் அறை தொடங்கி அலுவலகம் வரை பலவித பணிகளாலும் பம்பரமாகச் சுழலும் பெண்களைப் பெரிதாக வருத்துவது மூட்டுவலிதான்.

''ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்!'' என வேதனையோடு சொல்லும் கோயம்புத்தூர், கங்கா மருத்துவமனையின் ஆர்த்தோபீடிக் மற்றும் ஸ்பைன் சர்ஜரி துறைத் தலைவரும் பேராசிரியருமான ராஜசேகரன், கொஞ்சம் விரிவாகவே பேசினார்.

''ஆர்த்தோவின் முக்கியமான நோய்... 'ஆர்த்ரைட்டீஸ்’ எனப்படும் மூட்டுவலிதான். நம் தொடையையும், காலையும் இணைக்கும் பகுதியான மூட்டுப் பகுதியில்தான் 'கார்டலெஜ்’ (carilage) எனும் ஜவ்வு உள்ளது. அன்றாட வாழ்க்கைச் சூழல், செயல்பாடுகள், மாற்றங்களால் அந்த ஜவ்வு தேய ஆரம்பிக்கும். அப்போது மூட்டு வலி, மூட்டு வீக்கம், இடுப்பு வலி ஏற்படும். இதுதான் ஆரம்ப அறிகுறி. இந்த வலி அதிகரிக்கும்போது, அன்றாட வேலைகளைக்கூட நம்மால் செய்ய முடியாது. கால் வளைந்து போகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்!'' என்றவர், மூட்டுவலி வருவதற்கான காரணங்களை அடுக்கினார்.

''உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூட்டு வலி வர வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனச் சாப்பிடுவது, தேவையான நடைபயிற்சி இல்லாதது போன்றவையும் இதற்கு காரணமாகிவிடுகின்றன. கூடவே, எலும்புகளும் தசையும் வலுவிழக்கவும் செய்கின்றன.

மரபணு ரீதியாக இளவயதினருக்குக்கூட மூட்டுப் பிரச்னைகள் வரக்கூடும். இதை 'மூட்டு வாதம்’ (ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ்) என்பார்கள். இது பரம்பரை நோய். இதன் காரணமாக மூட்டுவலி, வீக்கம் ஏற்பட்டு நடப்பதே சிரமமாகிவிடும்!'' என்றவர் மூட்டுவலியைத் தடுக்கும் முறைகள் குறித்து தொடர்ந்தார்.

''சிறு வயதிலிருந்தே தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் வேகமாக நடைபயிற்சி செய்ய வேண்டும். அதற்காக ரன்னிங், ஜாக்கிங் என்று அதிகமான உடற்பயிற்சி தேவை இல்லை. சாதாரண நடை பயிற்சியே போதுமானது.

மூட்டுவலியின் அறிகுறிகள் தெரிந்தால்... சம்மணம் போடுவதையும் குத்தங்கால் போட்டு அமர்வதையும் தவிர்க்க வேண்டும். மாடிப்படி ஏறக்கூடாது. வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பயன்படுத்துவது நல்லது.

தினமும் சத்தான உணவுகளைச் சேர்ப்பது நல்லது. குறிப்பாக கால்சியம் அதிகமான உணவு, கீரை, மீன் உணவுகளை உட்கொள்வது அவசியம். காலை, மாலை இருவேளையும் பால் குடிப்பது நல்லது.

முக்கியமாக வயதுக்கேற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதிக எடை ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். மூட்டுவலி வருவதுபோல் தோன்றினால், முதலில் உங்களது எடையில் 10 சதவிகிதம் குறைத்துவிட்டாலே போதும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயாளிகள், எடையைக் கட்டுப்பாடாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

மூட்டுக்கு சூடு உத்தடம் கொடுக்கலாம். இது நல்ல கை வைத்தியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி 'மூட்டு பெல்ட்’ Knee Belt முட்டியில் பொருத்திக்கொண்டால்... மூட்டுகள் அசையாமல் இருப்பதுடன் வலியும் குறையும்.

தரமான ஆயில் மசாஜ் செய்வது, தினமும் யோகா மற்றும் பிசியோதெரபி முறைகளைக் கடைபிடித்தால் தசைகள் உறுதியாக இருக்கும்.

மூட்டுவலிக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடுவதால் வயிற்றில் புண், அல்சர், கிட்னி பாதிப்புகள் வரலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ராஜசேகரன், அடுத்து சொன்னதுதான் முக்கிய மாகக் கவனிக்க «வண்டியது.

''குடும்பம் மற்றும் அலுவலகப் பணிகளால் மூட்டுவலிக்கு ஆளாகும் பெண்கள், 'வலி என் விதி’ என்று அசமந்தமாக இருந்துவிடுகிறார்கள். ஆரம்பத்திலேயே மூட்டுவலியைச் சரிசெய்யாமல் விட்டால், இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்றாகிவிடும். இந்த சிகிச்சை செய்வதற்கு சுமார் 1.25 லட்சம் ரூபாய் செலவாகும். 'கடைசி காலத்தில் எதுக்கு இந்த ஆபரேஷன்... நான் என்ன ரன்னிங் ரேஸுக்கா போகப் போறேன்?’ என்கிற சலிப்பில் குடும்பப் பெண்கள் அதனையும் தவிர்த்துவிடுவதுதான் பெரிய சோகம். விளைவு, கழிப்பறைக்குப் போகவேண்டும் என்றால்கூட அடுத்தவரின் உதவி தேவை என்று நிலைமை மோசமாகிவிடும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 25 முதல் 30 வருட காலங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கலாம்.

இப்போது எல்லாம் 40 வயதினருக்குக்கூட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. திருமணம் ஆகாத ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டாலும், குத்தங்கால், சம்மணமிட்டபடி உட்காருவதற்கு என்றே சிறப்பு உபகரணங்கள் பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படும். இதனால், வளைந்திருந்த கால்கள் நேராகும். கால்கள் அதிக எடை தெரியாமல் லைட்டாக இருக்கும். வலி என்பதே இருக்காது!'' எனச் சொல்லும் ராஜசேகரன்... முத்தாய்ப்பு அறிவுரையாக இப்படி முடிக்கிறார் -

''நமக்கு 'மூடு’ எந்த அளவுக்கு முக்கியமோ... அந்த அளவுக்கு மூட்டு முக்கியம். 'மூடு’ சரி இல்லை என்றால்கூட அடுத்த சில நிமிடங்களில் சகஜமான மனநிலை உருவாகிவிடும். ஆனால், மூட்டு சரி இல்லை என்றால்... அடுத்தடுத்து துரத்தும் பிரச்னைகள் அதிகமாகிவிடும். அதனால், ஆரம்ப வலி வருகிறபோதே அக்கறையாக செயல்பட வேண்டும்!''

- செ.திருக்குறள் அரசி,
படம்: தி.விஜய்


அ.வி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty Re: மூட்டுவலிக்கு டாட்டா....

Post by JUJU on Tue Jun 07, 2011 11:21 am


தினமும் சத்தான உணவுகளைச் சேர்ப்பது நல்லது. குறிப்பாக கால்சியம் அதிகமான உணவு, கீரை, மீன் உணவுகளை உட்கொள்வது அவசியம். காலை, மாலை இருவேளையும் பால் குடிப்பது நல்லது.


குழந்தைகளுக்கு கொடுத்தால் எதிர்கால சந்த்ததிஎனர் நன்றாக வளருவார்கள்.
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty Re: மூட்டுவலிக்கு டாட்டா....

Post by ஹாசிம் on Tue Jun 07, 2011 11:23 am

நல்ல பதிவு நண்பரே நன்றி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty Re: மூட்டுவலிக்கு டாட்டா....

Post by தாமு on Tue Jun 07, 2011 11:48 am

நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty Re: மூட்டுவலிக்கு டாட்டா....

Post by முரளிராஜா on Tue Jun 07, 2011 11:53 am

பயனுள்ள பதிவு நண்பரே அருமையிருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty Re: மூட்டுவலிக்கு டாட்டா....

Post by தாமு on Tue Jun 07, 2011 11:55 am

நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மூட்டுவலிக்கு டாட்டா....  Empty Re: மூட்டுவலிக்கு டாட்டா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum