ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Padappaijoe Today at 6:38 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:16 pm

» Pdf need book
by Padappaijoe Today at 5:57 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by சிவனாசான் Today at 4:55 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Today at 4:21 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:49 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Today at 3:27 pm

» புத்தகம் தேவை
by Guest Today at 2:03 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

Admins Online

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

Go down

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Empty வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

Post by சிவா on Mon Sep 14, 2009 1:31 am

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பின்னணியில் பல கதைகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு சில இடங்களில் மட்டும் அவர் தான் கூறிய குறளுக்கு எடுத்துக்காட்டான கதைகளை அவரே வெளிப்படையாகக் கூறுகிறார். இந்திரன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் (அடி அளந்தான்), இலட்சுமி, மூதேவி, பிரம்மா (உலகு இயற்றினான்) என்று பெயர் சொல்லிக் கூறுகிறார். இன்னும் சில இடங்களில் புராணக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதைகளையும் மனதில் வைத்துப் பாடியிருக்கிறார். இவைகளை உரைக்காரர்கள் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் திருவள்ளுவர் இரண்டு, மூன்று குறள்களில் பேய்களைப் பற்றியும் பேசுகிறார். அதில் ஒன்று சுவையான பேய்க் கதையாகும்.

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து


மக்களால் எளிதில் காணப்பட முடியாத கோபக் கனல் வீசும் முகத்தையுடைய மன்னனிடம் செல்வம் இருந்தால் அது ''பேய் காத்த செல்வம்'' போலப் பயன்படாது என்று வள்ளுவர் கூறுகிறார். அது என்ன ''பேய் காவல் காக்கும் செல்வம்'' என்று பலரும் வியப்படையலாம். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் பழங்காலக் கதை ஒன்றே அடிப்படை. சுவாமி விவேகானந்தரின் குரு - ஸ்ரீ இராமகிருஷ்ணர். அவர் கூறிய கதை இது:-

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருந்தான். அவன் அரசனுக்கு முடிவெட்டி விடுவான். அவ்வாறு முடி வெட்டுகையில், அரசன் அவனிடம் சாதுர்யமாகப் பேச்சுக் கொடுத்து நாட்டு மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்ப்பார். நாவிதனும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கிறார்கள் என்று கூறுவான். உடனே அரசனும் சந்தோஷப்பட்டு அவனுக்குக் கூடுதலாகவே பணம் கொடுத்து அனுப்புவார்.

ஒருநாள் அந்த நாவிதன் ஒரு காட்டு வழியாகப் போனான். திடீரென்று மரத்தின் மீதிருந்து ஒரு பேய் (பிரம்மராக்ஷஸன்) குரல் கொடுத்தது. உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா? என்று பேய் கேட்டது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ''ஆமாம், ஆமாம், ஏழு ஜாடித் தங்கம் வேண்டும்'' என்று அவன் சொன்னான்.

''இதோ இந்த மரத்துக்கடியில் மண்ணைத் தோண்டிப் பார். ஏழு பெரிய ஜாடிகளில் தங்கக் காசுகள் இருக்கும்'' என்று பேய் கூறியது. அவன் தோண்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்! ஆனால் ஒரே ஒரு குறை. ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் சிறிது குறைவாக இருந்தது. சரி, அதற்கென்ன, அதை நிரப்பிவிட்டுச் செலவு செய்வோம் என்று கருதிக் கடுமையாக வேலை செய்தான். கிடைத்த பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அதில் போட்டு வந்தான் நாவிதன். ஆனால் ஏழாவது ஜாடி நிரம்பவே இல்லை. நாள் ஆக ஆக முகத்தில் வாட்டமும் மனதில் கவலையும் அதிகரித்தன. எல்லா வருமானத்தையும் தங்கக் காசுகளாக மாற்றி ஜாடியில் போட்டதால் வயிறும் வாடியது. உடலும் மெலிந்தது.

இதற்குள் ராஜாவுக்கு முடிவெட்டும் நாளும் வந்து சேர்ந்தது. ராஜா வழக்கம் போல், ''நாட்டு மக்கள் நலமாக இருக்கிறார்களா? நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மழுப்பலாகப் பதில் தந்தான் நாவிதன்.

அடுத்த மாதம் ராஜாவுக்கு முடிவெட்டப் போவதற்குள் நாவிதன் உடல் நிலை மிகவும் மோசமானது. ராஜாவுக்கு முடிவெட்டி முடித்தவுடன், நாவிதனின் நிலையைப் பார்த்த ராஜா, ''என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கம் கண்டவன் கதை போல அல்லவா இருக்கிறது உன் நிலை'' என்று மளமளவென்று கூறினார். அவ்வளவுதான் நாவிதனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது. நாம் 7 ஜாடித் தங்கம் எடுத்த விஷயம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டதே என்று பயந்து ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினான். ராஜா தனக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறார் என்று எண்ணி நடுங்கினான்.

ராஜாவோவெனில் கடகட என்று சிரித்துவிட்டு, ''அட மூடா, இன்றிரவே அதனை அந்த மரத்தின் அடியில் மீண்டும் புதைத்துவிடு. நீ பழைய படி மகிழ்ச்சியுடன் வாழ்வாய்'' என்று அறிவுரை கூறினார். அது பேய் காத்த செல்வம். அது யாருக்கும் பயன்படாது என்றும் சொன்னார். நாவிதனும் அவ்வாறே ஏழு ஜாடிகளயும் பழைய இடத்திலேயே புதைத்து விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் வீட்டுக்கு நடந்தான். மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள். இந்தப் பேய் காத்த-யாருக்கும் பயன்படாத - செல்வத்தைத் தான் வள்ளுவர் குறளில் கூறினார் என்றால் அது தவறில்லை.

- ச. சாமிநாதன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Empty Re: வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

Post by மீனு on Mon Sep 14, 2009 1:53 am

மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள்

வள்ளுவர் சொன்ன பேய் கதை ..ஷிவா அண்ணாவால் நாமும் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றிகள் அண்ணா..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Empty Re: வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

Post by ரூபன் on Mon Sep 14, 2009 2:05 am

வாழ்க்கையில் திருப்தி என்பது மிக முக்கியமான ஒன்று அதுதான் எங்கள் மனநின்ம்தியை மாற்றியமைக்கும் கருவி என்றே கருதலாம் எப்பொழுது உங்களுக்கு இது போதும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறதோ அப்போது நிங்கள் வாழ்க்கையில் ஜெயித்தவர் ஆகிவிடுகிரிர்கள் ஆனால் எங்களுக்குத்தான் அது ஏற்ப்படுவது இல்லையே இதுவேனும் அதுவேணும் என்று இருக்கிறோமே இதற்க்கு காரணம் ஆசைதான்
உலகமோ ரொம்ப சிறிது எங்கள் ஆசைகளோ மிக மிக பெரியவை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Empty Re: வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 03, 2011 10:50 pm

நல்ல பேய்க்கதை சிவா அவர்களே....நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Empty Re: வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum