ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by ayyasamy ram Today at 9:17 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

Admins Online

தழும்பே போ.. அழகே வா! - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி

Go down

தழும்பே போ.. அழகே வா!  - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி Empty தழும்பே போ.. அழகே வா! - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி

Post by மஞ்சுபாஷிணி on Fri Jul 01, 2011 1:49 am

தழும்பே போ.. அழகே வா!

- பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி

தழும்பே போ.. அழகே வா!  - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி P37c
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் காஸ்மெடிக் சர்ஜரியை எத்தனை முறை செய்துகொண்டாலும், தழும்புகள் முழுமையாக மறைவது இல்லை. ஓரளவு தெரியத் தான் செய்கிறது என்பது பலருக்கும் உள்ள வருத்தம். இந்த குறையைத் தீர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுக மாகி விட்டது.

சென்னை குளோபல் மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜன் பேராசிரியர் வி.பி.நாராயணமூர்த்தி இதுபற்றி நம்மிடம் சொல்கிறார்...

''காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. இதைப் புதிய தொழில்நுட்பம் என்று கூற முடியாது. ஏனென்றால் எண்டோஸ்கோபி அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கருவியை பிளாஸ்டிக் சர்ஜரியில் பயன்படுத்துவதை வேண்டுமானால், புதிய டெக்னிக் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படு கிறது.

ஏஜிங் எனப்படும் வயதானதை மறைக்கும் அறுவைச் சிகிச்சைகளில் அது பெரும் அளவு பயன்படுகிறது. முகத்தில் சுருக்கங்களைச் சரி செய்யும் 'ஃபேஸ் லிஃப்டிங்’, 'ஐப்ரோ லிஃப்டிங்’ எனப்படும் புருவத்தை உயர்த்தும் அறுவைச் சிகிச்சை மற்றும் மார்பகத்தைப் பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காக தலையில் இருந்து காது பகுதி வரை அறுத்து, எலும்பை ஒட்டி உள்ள தோலின் அடிப்பகுதியை இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தழும்பு மறைவாக இருக்கும்.

எபிடெர்மிஸ் எனப்படும் மேல்புறத் தோல், சுருக்கத்துக்குக் காரணம் இல்லை. அடிப்பகுதியில் உள்ள டெர்மிஸ்தான் காரணம். அதனால், முன்பு முகத்தில் காதுப் பகுதியில் முழுவதும் அறுக்க வேண்டி இருந்தது. இப்போது எண்டோஸ்கோபியில் 1 செ.மீ-க்கும் குறைவான அளவுக்கே துளையிடப்படுகிறது. அந்த துளை வழியாக டியூப் செலுத்தப்படுகிறது. அந்த டியூப்புக்குள் அறுவைச் சிகிச்சை செய்யும் கருவி, கேமரா மற்றும் லைட் போன்றவற்றை உள்ளே செலுத்தி, தோலின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கிறோம். அதன் பிறகு, தோலின் அடிப்பகுதியை இழுத்துத் தையல் போடுகிறோம். இதனால் பெரிய அளவில் தழும்புகள் ஏற்படுவதில்லை. 10 ஆண்டுகள் வரை சுருக்கமும் ஏற்படாது.

தழும்பே போ.. அழகே வா!  - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி P37a

புருவம் உயர்த்தும் அறுவைச் சிகிச்சையில் காதுப் பகுதியில் தொடங்கி தலை, மீண்டும் அடுத்த காது வரை தோல் அறுக்கப்பட வேண்டும். தலைப் பகுதியில் பெரிஸ்டியம் என்ற லேயரை உரித்து மண்டை ஓட்டில் இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தலையில் லேசான தழும்பு இருக்கும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. நெற்றி பரந்த பகுதி என்பதால், இங்கு மூன்று துளையிடப்பட்டு அதன் உள்ளே கருவிகள் செலுத்தப்பட்டு, பெரிஸ்டியம் லேயர் இழுத்துத் தைக்கப்படுகிறது. இதிலும் தையல் போடுவதற்குப் பதில், ஃபைபரின் க்ளூ எனப்படும் பசைகொண்டு ஒட்டும் முறை வந்துள்ளது.

மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சையிலும் எண்டோஸ்கோபியை பயன்படுத்த முடியும். வழக்கமாக மார்பகத்தின் அடிப்பகுதியில் 5 செ.மீ. அளவுக்கு அறுத்து, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகள் செலுத்தப்படும். தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியைக் கொண்டுசெல்கிறோம். பின்னர், அங்கு அறுவைச் சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். இதனால் தழும்பு வெளியே தெரியாது.
தழும்பே போ.. அழகே வா!  - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி P37b
இதயம் செயல் இழந்துவிட்டால் எப்படி மாற்று இதயம் பொருத்துகிறோமோ, அதுபோல கை, கால் துண்டானால் மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை முறைகளும் பிளாஸ்டிக் சர்ஜரியில் வந்துள்ளன. உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே நடக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள உரிமம் கேட்டு நாங்கள் விண்ணப்பித்து உள்ளோம். அதேபோல, கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியும் நவீன கருவிகளும், அப்படி குறை இருந்தால் கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும் முறையும் வந்துள்ளது. கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும்போது தழும்பு தெரியா மல் போய்விடும். இந்த சிகிச்சை முறைகள் எல்லாம் இங்கு வர சில காலம் ஆகும்.

உடலில் மிக நீளமானது தோல்தான். அதில் தீக்காயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றிவிட வேண்டும். அப்போதுதான் அதில் சீழ் பிடிக்காது. 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டு, 20 சதவிகிதம் நன்றாக இருந்தால்கூட இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். தோல் எடுத்த இடத்தில் மீண்டும் தானாகவே தோல் வளர்ந்துவிடும். முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக் காக, செயற்கைத் தோல் சிகிச்சை இருக்கிறது என்றாலும் இதற்கான செலவு மிக மிக அதிகம். ஒரு சதுர அடிக்கும் குறை வான அளவு செயற்கைத் தோலின் விலை 1 லட்சம் ஆகும். வரும் காலத்தில் உள்நாட்டிலேயே செயற்கைத் தோல் உற்பத்தி செய்யப்படும்போது, விலை வெகுவாக குறைந்து மக்களுக்குப் பேருதவி யாக இருக்கும்'' என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் நாராயணமூர்த்தி!

நன்றி விகடன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum