புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
78 Posts - 50%
heezulia
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
120 Posts - 54%
heezulia
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_m10இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Aug 12, 2011 4:43 am

சென்னை: ""இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விமர்சனம் செய்துள்ள கோத்தபய ராஜபக்ஷேக்கு, இந்தியத் தூதர் மூலம், மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, தமிழக அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
"இலங்கை உள்நாட்டுப்போரில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐ.நா., சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என, கடந்த ஜூன் 8ம் தேதி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் சகோதரரும், ராணுவத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்ஷே விமர்சனம் செய்து பேட்டியளித்தது குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. விவாதத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டசபை மார்க்சிஸ்ட் தலைவர் சவுந்தர்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன், புதிய தமிழகம் உறுப்பினர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் பேசினர். "தமிழக அரசின் தீர்மானத்தை கிண்டல் செய்த இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக, தமிழக முதல்வர் தீர்மானத்தை கொண்டுவரவில்லை. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, முதலில் மத்திய அரசை ஏற்கச் செய்ய வேண்டும்' என, உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இலங்கை உள்நாட்டுப்போரில், இனப் படுகொலை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளி என அறிவிக்க, ஐ.நா., சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கிடைக்கும் வரை, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், கடந்த ஜூன் 8ம் தேதி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரியவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்குத் தயார் என, இலங்கை அரசு அறிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் பேட்டி அளித்து வருவது, செய்த தவறை, மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை, சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது தான், இதுபோன்ற பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபக்ஷேக்கு அளித்திருக்கிறது என்ற சந்தேகம், நடுநிலையாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
நியாயம் கிடைக்கும் வரை அரசு ஓயாது: இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கும் கிடைக்கும் வரை, என் தலைமையிலான அரசு ஓயாது. தமிழர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை என் அரசு எடுக்கும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டியளித்துள்ள கோத்தபய ராஜபக்ஷேக்கு, இந்திய தூதர் மூலம், தன் கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். (முதல்வர்
கருணாநிதியின் கண்துடைப்பு நாடகங்கள் முதல்வர் பேசும்போது குறிப்பிட்டதாவது: "அனைத்துக்கட்சி கூட்டம், சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டசபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, எம்.பி.,க்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக்கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு' என, பல்வேறு வகையான கண்துடைப்பு நாடகங்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி நடத்தியபோது, கோத்தபய ராஜபக்ஷே வாய் திறக்கவில்லை. ஆனால், நான் கொண்டுவந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்தளவிற்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை, சபை உறுப்பினர்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார்.
கோத்தபய ராஜபக்ஷே பேட்டிக்கு ஜெ., எதிர்ப்பு: ""அரசியல் ஆதாயத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றியதாக, கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஐ.நா., சபை அமைத்த மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அரசியல் ஆதாயத்திற்காக நிறைவேற்றப்படவில்லை,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
"இலங்கை உள்நாட்டுப்போரில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐ.நா., சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்' என, கடந்த ஜூன் 8ல், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை ராணுவத் துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷே விமர்சனம் செய்தது குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் மீது நடந்த விவாதத்திற்கு பதிலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: சட்டசபை தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை ராணுவத் துறை செயலர் கோத்தபய ராஜபக்ஷே, தனியார் "டிவி'க்கு பேட்டி அளித்திருப்பது, இலங்கை அரசு தான் செய்த தவறை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்த தீர்மானத்தை, நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டுவந்து நிறைவேற்றியதாக, கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஐ.நா., சபை அமைத்த மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, அரசியல் ஆதாயத்திற்காக நிறைவேற்றப்படவில்லை. சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் நடத்தப்படுகின்றனர் என்றும், மற்றவர்களை விட, தங்கள் நாட்டு குடிமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் கோத்தபய ராஜபக்ஷே கூறியிருக்கிறார். இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மிகப்பெரிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என, இலங்கை அரசு அறிவித்த பின்னரும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு இலங்கை ராணுவம் காரணமாக இருந்தது என்றும், ஐ.நா., குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளில் இருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது. "இலங்கை கடல் பகுதியில், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோத்தபய ராஜபக்ஷே அறிவுரை கூறியுள்ளார். "கச்சத்தீவிற்கு வந்து செல்லும் இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகளிடம், பயண ஆவணங்களையோ அல்லது நுழைவதற்கான அனுமதியையோ பெற வேண்டும் என இலங்கை அரசு கேட்காது' என, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தான் வேதம் ஓதுகிறது: இதை, பார்லிமென்டில் தெளிவுபடுத்தும் வகையில், இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என, அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டுவிட்டு, தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிப்பது தான் தற்போதைய முக்கியப் பணி என்றும், போர்க் குற்றவாளிகள் என தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டியளித்திருக்கிறார். போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணவோ, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எவ்வித நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
தினமலர்



இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Pஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Oஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Sஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Iஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Tஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Iஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Vஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Eஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Emptyஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Kஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Aஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Rஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Tஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Hஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Iஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  Cஇலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழக அரசு ஓயாது-முதல்வர்  K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 12, 2011 9:50 am

அம்மா இந்த ஓபனிங்கு எல்லாம் நல்லாதான் இருக்கு........ஆனா பினிசிங்க் சரி இல்லையே...

எப்படியோ அவர்களுக்கு நீதி கிடைதால் சரிதான்.



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Aug 12, 2011 9:50 am

ஜெயலலிதா முழுமையாக நம்பக் கூடிய ஒருவர் அல்ல..!

1996 கலைஞர் பதவிக்கு வரும் முன்.. இவரின் செயற்பாடுகள் சந்திரக்காவோடு சேர்ந்த ஒன்றாக இருந்தது. இவை இலகுவில் மறக்கக் கூடிய விடயங்கள் அல்ல. இருந்தாலும்...

இன்றைய தேவை ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையைப் பயன்படுத்தி தமிழக மக்களின் தார்மீக ஆதரவை வளர்த்துக் கொள்வதுதான். அதைவிடுத்து ஜெயலலிதா எமக்காக துணிந்து பல விடயங்களை செய்ய முன்வருவார் என்பது போல படம் காட்டுவது தற்போதைய சூழலில் ஆபத்தானது.

ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ளாத வகையில் சில நெருக்காமான உறவாடல்களை அவரோடு பேணி அவரின் கடந்த கால நிலைப்பாடுகளில் இருந்த தவறுகளைச் சுட்டிக்காட்டினால்.. ஒருவேளை அவர் தனது நிலைப்பாடுகளை திருத்தக் கூடும். அதற்கான வாய்ப்பை ஆராய்ந்து பார்த்து அதனை மேற்கொள்ள வேண்டும்.

ஜெயலலிதா உண்மையில் திருந்தா விட்டாலும்.. அவர் திருந்தியவராக நடிக்க வேண்டிய தேவையை.. தமிழக மக்களின் ஈழத்தமிழர் மீதான அனுதாபம் அவருக்கு இன்று ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் மீதான தமிழக மக்களின் அனுதாபத்தை தனது அரசியல் முதலீடாக பயன்படுத்தி ஜெயலலிதா மத்தியில் தான் பிரதமராக அமரும் வாய்ப்பையும் தேடிக் கொள்ள முனைவார். அந்த வகையில் தான் நான் முதல்வராக ஒரு எல்லைக்குள் தான் செயற்பட முடியும் என்பதை கோடிட்டு காட்டியுள்ளார். என்னை மத்தியில் செல்வாக்குச் செய்ய வாக்களியுங்கள் நான் ஈழத்தமிழர்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொடுப்பேன் என்றும் நாளை அவர் சொல்வார்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது துயரம் தமிழக திராவிட அரசியல்வாதிகளின் முதலீடாகியுள்ளது. அந்த முதலீட்டினை அவர்கள் பாவிக்கும் போது நாமும் அதனூடு எமக்கான பயனைப் பெற முனைய வேண்டும்.

கருணாநிதியின் வீழ்ச்சி எமக்கு சாதகமற்ற அவரின் அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வி மட்டுமன்றி.. ஈழத்தமிழர்களின் துயர் என்பது மீண்டும் 80களின் பின் தமிழக அரசியலில் செல்வாக்குச் செய்யும் அளவிற்கு அது தமிழக மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வலியை தமிழக மக்கள் உணரச் செய்த இனக் கடமையை செய்தவர்கள்.. அண்ணன் சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயா போன்றவர்களும்.. இன்னும் பல ஈழத்தமிழின ஆதரவாளர்களுமாவர். அவர்களின் தொடர்ச்சியான அரசியல் மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஒத்துழைப்புக்களும் எமக்கு அவசியம்... அவையே எமது பலம்.

ஜெயலலிதா சில விடயங்களில் கொண்டிருக்கும் தெளிவின்மையை போக்க வேண்டியதில்.. தாயக கட்சிகளுக்கும்.. புலம்பெயர் அமைப்புக்களுக்கும்.. தமிழக ஈழ ஆதரவு அரசியல் தலைவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஒரு கடமை உள்ளது. அவர் அவற்றை கேட்டு தெளிகிறாரோ இல்லை நடிக்கிறாரோ நாம் அதனை இட்டு முயற்சிக்க வேண்டும். அவரின் உண்மைச் சொரூபத்தையும் தமிழக மக்கள் முன் தோலுரித்துக் காட்டும் இராஜதந்திரம் மூலம் அவரை எம் ஜி ஆர் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டோடு இணைந்து எடுத்த பொது முடிவுக்கு இணக்க நகர்த்தி வர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் பெரு வீழ்ச்சி.. அதுவும் ஈழத்தமிழர்களின் துயர் தொடர்பில் ஒரு நீலிக்கண்ணீர் வடிக்க வகை செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. திமுக விற்கும் அதே நிலை. இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி தமிழக மக்களின் மனங்களில் இடம்பிடித்து.. ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட அவர்களின் பேராதரவை தமதாக்கிக் கொள்வதே பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் எமது குரலுக்கு அங்கீகாரம் கிடைக்கக் கூடிய ஒற்றுமையை வாங்கித் தரும்.

அதன் மூலமே சிங்களத்திடமிருந்து சர்வதேசத்தை எமக்கு நாம் விரும்பும் வடிவில் ஆகக் குறைந்த ஒரு தீர்வையாவது நாம் நிம்மதியாக எம் மண்ணின் மைந்தர்களை தொழுது வாழ பெற்றுத் தர வகை உந்தச் செய்ய முடியும்..!

சிந்திப்போம் செயற்படுவோம். வெறும் உணர்ச்சிப் பெருக்குகளால் உந்தப்பட்டு இருப்பதிலும்.. சரியான சூழலை சரியாக பாவிக்கும் திறனே எமக்கு இன்று அவசியமாக உள்ளது. மற்றவர்களை நம்பி நடப்பதிலும் அவர்கள் நம்மை நம்ப நடப்பது எமக்கு பலம்..! .

-நன்றி புரட்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Aug 12, 2011 10:11 am

ஒருவன் வீடு எரியும் வரை எரியவிட்டு, எரித்தவனுக்கு வக்காலத்தும் வாங்கி இறுதியில் உதவி செய்கிறேன் பேர்வழி என்றால் தமிழன் என்ன காமடி பீசா?



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக