ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 12:06 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 8:20 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by சக்தி18 Yesterday at 7:53 pm

» கால்பந்தின் காட்ஃபாதர் மரடோனா மரணம் - ரசிகர்கள் சோகம்
by சக்தி18 Yesterday at 7:47 pm

Admins Online

சினைப் பை புற்று நோய் காரணம் என்ன?

Go down

சினைப் பை புற்று நோய் காரணம் என்ன? Empty சினைப் பை புற்று நோய் காரணம் என்ன?

Post by சிவா on Fri Sep 23, 2011 3:10 am

சினைப் பை புற்று நோய்க்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பரம்பரை காரணம், 55 வயதைத் தாண்டியவர்கள், கர்ப்பமே தரிக்காதவர்களுக்கு, இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. அடி வயிற்றில் வலி, வயிறு உப்புசம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது, கீழ் முதுகில் வலி, கால் வலி, திடீரென மாதவிடாய் ஏற்படுதல் ஆகியவை, அறிகுறிகள்.

சாதா கட்டிகளா இவை?

இல்லை. சாதா கட்டிகளா, புற்றுநோய் கட்டிகளா என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் உள்ளன. சாதா கட்டிகள் ஆபத்தானவை அல்ல. நீக்கிவிட்டால், பயமில்லை. புற்றுநோய் கட்டிகள், எப்போதும் முற்றிய நிலையில் தான், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டாலும், தொடர் மருத்துவக் கண்காணிப்பு அவசியமாகிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சினைப் பை புற்று நோய் காரணம் என்ன? Empty Re: சினைப் பை புற்று நோய் காரணம் என்ன?

Post by சிவா on Fri Sep 23, 2011 3:15 am

சினைப்பை புற்று: சித்தத்தில் தீர்வு

சினைப் பை என்ற அந்த சின்னஞ் சிறிய பைகளுக்குள் தான் எத்தனை உயிர் அணுக்கள். இனப் பெருக்கத்தின் சூட்சுமத்தை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் அதிசய சுரப்பி அது.

ஒரு பெண், கருவாக இருக்கும்போதே, சினைப் பைகள் உருவாகி விடுகின்றன. பெண்மைக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சினைப் பையில் சுரக்கின்றன.

கர்ப்பப் பையின் இரு பக்கத்திலும் இருக்கும் சினைப் பைகளுக்குள் குழந்தை பருவத்தில், லட்சக்கணக்கான உயிரணுக்கள் குவிந்திருக்கின்றன. ஆனால், பெண் பருவமடைந்தவுடன், இந்த உயிரணுக்கள், ஆயிரமாக குறைந்து விடுகின்றன. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கு பின், இதில் ஒரு உயிரணு, சினை முட்டையாக வளர்ந்து, கர்ப்ப பைக்கு வந்து, ஆண் உயிரணுவுக்காக காத்திருக்கிறது.

ஆண் உயிரணு வந்தால், இணைந்து, கருவாக மலர்கிறது. இல்லையேல், கர்ப்பப் பையிலேயே தங்கியிருந்து, அடுத்த மாதவிடாயின் போது வெளியேறி விடுகிறது.

கரு முட்டை உருவாக, ஒவ்வொரு முறையும், மூளையின் அடிப்பகுதியில் உள்ள, "பிட்யூட்டரி' சுரப்பி, சினைப் பையை தூண்டுகிறது. தூண்டுதலின் காரணமாக சினைப் பையில் உள்ள உயிரணு, சினை முட்டையாக வளர்கிறது.

மரபணு கோளாறு அல்லது வேறு காரணங்களால், இந்த செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு, சினைப் பை அடிக்கடி தூண்டப்பட்டால், அதில் செல்கள் சிதைந்து, மாறுபட்டு வளர்ந்து, புற்றுநோயாக மாறுகிறது.

அதற்காக, சினைப் பையில் உருவாகும் கட்டி எல்லாம் புற்றுக் கட்டி என, கணித்துக் கொள்ள வேண்டாம். அவை, நீர்க்கட்டியாகவும் இருக்கலாம்.

* இயற்கை பாதுகாப்பு

குளிர் பிரதேச நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா போன்ற வெப்ப மண்டல பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு சினைப் பை புற்றுநோய் வருவது குறைவு . ஆனால், விஞ்ஞானத்தை துணையாகக் கொண்டு, நாம் இயற்கையையும், சுற்றுச் சூழலையும் சிதைத்து வருவதால், இயற்கைக்கு மாறாக இப்போது, சினைப் பை புற்றுநோய் அதிகரித்து வருகிறது.

பொதுவாக, மாதவிடாய் முற்றிலும் நின்ற பிறகு அல்லது நிற்கும் காலத்தில், சினைப் பை புற்றுநோய் வருகிறது. பாரம்பரியமாக, "பி.ஆர்.சி.ஏ.1, பி.ஆர்.சி.ஏ.2' மரபணு சிதைவு இருப்பவர்களுக்கு, இளம் வயதிலேயே இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம். குழந்தையில்லாதவர்களுக்கு, இயற்கையாகவே, "பிட்யூட்டரி' சுரப்பி, சினைப் பையை அதிகமாகத் தூண்டும். மேலும், குழந்தையின்மை சிகிச்சையில், சினைப் பையைத் தூண்டும் மருந்துகளை, நீண்டநாள் எடுப்பதால், அதுவும் சினைப் பையில் புற்று வளர காரணமாகிறது.

* அறிகுறி இருக்காது

ஆரம்ப நிலையில் இந்த நோய்க்கு அறிகுறி இருக்காது. நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் உயிர் பிழைப்போர் எண்ணிக்கை குறைவு. வயிற்று வலி, வயிற்றில் நீர்கோர்த்தல், முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, மலக்கட்டு உடல் தளர்ச்சி, சோர்வு, சோம்பல் ஆகியவை வெளிப்படையாக தெரியும் அறிகுறிகள்.

புற்றுநோய்க்கு காரணமான மரபணுக்களால், ரத்தத்தில் புரதச்சத்து அதிகமாகும். இந்த புரதச் சத்தை, சி.ஏ., 125 என்ற ரத்த பரிசோதனை மூலம் கண்டுபிடித்து, புற்றுநோயை உறுதிப் படுத்தலாம். ஸ்கேன், திசு பரிசோதனை மூலமும் உறுதிப்படுத்தலாம்.

* மஞ்சளின் மகிமை

சித்த மருத்துவத்தில், 5,000 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் குறித்து, "தசை வன்கழலை' என்றும், "நச்சு மறுவை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவே மருந்து என்ற கோட்பாட்டின் படி மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்ற வாசனைப் பொருள்களுக்கு, புற்று செல்களை தடுத்து, கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. தினமும் உணவில் தவறாமல், மஞ்சள், இஞ்சி, பூண்டை சேர்த்துக் கொண்டால் புற்றை, விரட்டி அடிக்கலாம்.

எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களிலும், முட்டைகோஸ், காலி ப்ளவர் போன்ற காய்கறிகளிலும், ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக உள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.

சேராங்கொட்டை, சித்திர மூலம் போன்ற மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து, சினைப் பை புற்றுக்கு, நல்ல தீர்வாக உள்ளது. நோயின் தன்மைக்கு ஏற்ப உலோக உப ரசப் பொருட்களில் தயாரிக்கப்படும் மருந்துகள், நித்யகல்யாணியில் இருந்து தயாரிக்கப்படும் "வின்கிரிஸ்டின், வின்பிளாஸ்டின்' ஆகிய மருந்துகளும் நல்ல பலனைத் தருபவை.

சிந்தில் கொடி, அமுக்கரா போன்ற மூலிகைப் பொருள்களும் சிறந்த ஆதரவு மருந்தாக உள்ளன.

நம் முன்னோர் காட்டிய வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்து, நமது பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் நம்மை நெருங்காது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum