ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

Go down

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை Empty புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

Post by முஹைதீன் on Fri Oct 28, 2011 4:24 pmபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை


மனித குலத்துக்குச் சவாலாக இருக்கும் நோய்களில் ஒன்று, புற்று நோய்! 'யாருக்கு வேண்டுமானாலும்... எப்போது வேண்டுமானாலும் வரலாம்’ என்று மிரட்டிவரும் புற்று நோய்க்கு மருத்துவத் துறையின் நவீன வளர்ச்சியால் பல்வேறு சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. அதில் லேட்டஸ்ட், ரேப்பிட் ஆர்க் எனப்படும் கதிர் வீச்சு சிகிச்சை முறை. இந்தச் சிகிச்சை முறை குறித்து வி.எஸ். மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியன் மற்றும் தலைமை கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் பாலசுந்தரத்திடம் பேசினோம்.

'புற்று நோயைப் பொறுத்தவரை அறுவை சிகிச்சை, கதிர் வீச்சு, கீமோதெரபி என மூன்று வகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. இதில் கதிர்வீச்சு சிகிச்சை மிகவும் பயன் அளிக்கக்கூடியது. தற்போது ஐ.எம்.ஆர்.டி. (IMRT), ஐ.ஜி.ஆர்.டி. (IGRT), எஸ்.ஆர்.டி. (SRT), வி.எம்.ஏ.டி. (VMAT) போன்ற கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த சிகிச்சைகள் தினமும் 15 முதல் 30 நிமிடங்களுக்கு சுமார் ஆறு வாரங்கள் வரை அளிக்கப்படுகிறது. ஆனால், தற்போது வந்திருக்கும் ரேப்பிட் ஆர்க் சிகிச்சையின் மூலம் முன்பைவிட பல மடங்கு துல்லியமாகவும் வேகமாகவும் சிகிச்சை அளிக்க முடியும்.

இந்த சிகிச்சையானது லினாக் இயந்திரம் மூலம் தரப்படுகிறது. புற்று நோயாளியை முதலில் சி.டி., எம்.ஆர்.ஐ. அல்லது பெட் ஸ்கேன் செய்து, புற்று நோயின் தன்மை, நிலை, பரவிய அல்லது பரவக்கூடிய இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிவோம். பின்னர் சிகிச்சை முறை வடிவமைக்கப்பட்டதும், நோயாளிக்கு ரேப்பிட் ஆர்க் சிகிச்சையைத் தொடங்குவோம்.

நோயாளியை லினாக் இயந்திரத்தின் கீழே படுக்கவைப்போம். பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்ட கருவிகள் மூலம் உடல் அசையாமல் பிடித்துக்கொள்ளப்படும். அந்த இயந்திரத்தில் உள்ள ஸ்கேன் கருவி, நோயாளியைப் படம் பிடிக்கும். அந்தப் படத்தைக்கொண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் கண்டறியப்படும். அந்தப் பகுதிக்கு மட்டும் கதிர் வீச்சு செல்லுமாறு கம்ப்யூட்டர் மூலம் சிகிச்சை வடிவமைக்கப்படும்.

கதிர் வீச்சு செல்லும் இடமும், புற்று நோய்க் கட்டி இருக்கும் இடமும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றிலும் அதாவது 360 டிகிரி கோணத்தில் கதிர் வீச்சு செலுத்தப்படும்.

முந்தைய சிகிச்சையில் ஒரே பக்கத்தில் இருந்து கதிர் வீச்சு செலுத்தப்படும். அதனால் புற்று நோய் பாதிப்புள்ள திசுவுடன் சேர்ந்து நல்ல திசுவும் ஓரளவு பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. அதனால் நோயாளிக்கு கூடுதல் பாதிப்பும் வேதனையும் ஏற்படும். ஆனால், இந்த ரேப்பிட் ஆர்க் சிகிச்சை முறையில் அந்த பாதிப்புக்கு சிறிதும் இடம் இல்லை. இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே இந்த சிகிச்சை முடிந்துவிடுகிறது.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

பொதுவாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும்போது, நீண்ட நேரம் படுத்திருப்பதால் நோயாளியின் உடல் அசையவும், அதனால் நோய் இருக்கும் இடத்தைத் தாண்டி நல்ல திசுக்கள் மீதும் படுவதற்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இந்த ரேப்பிட் ஆர்க் சிகிச்சை மிகக் குறுகிய காலத்திலேயே முடிந்துவிடுவதாலும், உடல் அசையாமல் பிடித்துக் கொள்ளப்படுவ தாலும் நோயாளியின் உறுப்புகள் அசைவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லை. இது தவிர ஸ்கேட்டரிங் எனப்படும் கதிர் சிதறலும் மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது. இது போன்ற காரணங்களால் நல்ல திசுக்கள் சிறிதளவும் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை.

இந்த ரேப்பிட் ஆர்க் கதிர்வீச்சை, ரத்தப் புற்று நோய் தவிர்த்து மற்ற அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் அளிக்க முடியும். மற்ற கதிர்வீச்சு சிகிச்சைகளைப் போலவே இந்த சிகிச்சையும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குத் தரப்படும். நோயின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் குறையவும் வாய்ப்பு உண்டு. மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக சிகிச்சை அளிக்கும் இந்த சிகிச்சையால் நோயாளிக்குப் பக்க விளைவுகள் இல்லாமல் போகிறது. இது தவிர சிகிச்சை நேரமும் எட்டில் ஒரு பங்காகக் குறைகிறது!' என்றார்.

புற்றுநோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம் தான்!

http://www.thedipaar.com/news/news.php?id=35812
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum