ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by ayyasamy ram Today at 9:17 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

Admins Online

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

Go down

மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது? Empty மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

Post by முஹைதீன் on Mon Oct 31, 2011 6:49 pmமாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?

Monday 31 October 2011

இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள் கிடைக்காமல் ஒரு பகுதியில் தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு என்பது என்ன?

இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடைக்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்புக் காரணங்கள்
1. இரத்த அழுத்த நோய்
2. அதிகமான கொழுப்புச்சத்து
3. புகைபிடித்தல்
4. நீரிழிவு நோய்
5. அதிக எடை
6. பரம்பரை
7. தேவையான உடற்பயிற்சி இல்லாமை
8. அதிக கோபம் கொள்ளுதல்
9. குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள் அதிக அளவு
10. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது
மாரடைப்பு நோயின் அறிகுறிகள் :
1. நெஞ்சுவலி 2. மூச்சுத் திணறல்
3. தலைச்சுற்றல் 4. படபடப்பு 5. வாந்தி
6. நினைவு தடுமாற்றம் 7. நீலம்பூரி த்தல்
மாரடைப்பு நோயின் வகைகள் :
1. மிதமான மாரடைப்பு (Unstable Angina)
2. தீவிரமான மாரடைப்பு (Myocardial Infarction)
3. அறிகுறியற்ற மாரடைப்பு (Silent Myocardial Infarction)
மாரடைப்பு நோயை நிர்ணயிக்க உதவும் ஆய்வுக் கூடச் சோத¬கைள் :
1. மின் இருதய வரைபடம் (ECG)
2. நொதிச் சோதனைகள் (Enzyme Study)
3. உயிர்வேதியியல் சோதனைகள் (Biochemical Test)
4. மார்பு எக்ஸ்ரே (XrayChest)
5. இருதய இரத்தக் குழாய்க்குள் இரசாயனப் பொருளைச் செலுத்தி இரத்தக் குழாய்களின் அமைப்பைக் கண் டறிதல் (Angiogram)
6. மிக நவீன சோதனையான கலர் இருதய ஸ்கேன் (Echocardiogram)
7. இருதய வேலைப்பளு சோதனை (Cardiac Stress Analysis)
8. ஐசோடோப் ஸ்கேன் இருதய பைபாஸ் ஆப்ரேஷன் (Bypass Operation
) என்றால் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட இரத்தக் குழாய்கள் அடைபட்டு மாரடைப்பு நோய் ஏற்படும் போது நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வும் தொடர்ந்து ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும், மறுபடியும் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்கிறது. இந்த சிகிச்சைக்கு முன்னால் இருதய இரத்தக் குழாயினுள் ஒரு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்கிறார்கள். இந்த பரிசோதனையில் இரத்தக் குழாய் அடைப்பட்ட இடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். அதன் பின்பு காலிலிருந்து சிறிய சிரை களை எடுத்து இந்த அடைப்பு களை இணைக் கிறார்கள். இதன் மூலம் அடைபட்ட இடத் தைத் தாண்டி இரத்த ஓட்டம் இருதயத் திற்குக் கிடைக்கிறது. இருதயம் பலன் பெற்று அதிக ஆயுளைப் பெறுகிறது.

இருதய நோயாளிகள் உணவு வகைகள் :உணவில் சிறிது காரம், புளி, உப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும். தேங்காய், தேங்காய் எண்ணை, நெய் போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.

சாப்பிடக்கூடியவை :

வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எ டுத்த பால், இட்லி, தோசை (எண்ணை குறைவாக விட்டு) வெண் பொங்கல், இடியாப்பம், புட்டு, ஆப்பம், ஆரஞ்சுச்சாறு, பயறுவகை (பாசிப்பயறு) சிறிதளவு மாமிசம் அல்லது கோழி, சிறிய மீன் வகைகள்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

காபி, டீ, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி, முந்திரிப் பருப்பு, பேக்கரி உணவுகள்.

இரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சத்து இருப்பது மாரடைப்பிற்கு முக்கிய காரணம். ஆதலால் கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை இருதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அசைவம் :

ஈரல், மூளை, சிறுநீரகம், முட்டை மஞ்சள் கரு, கோழி தொடைப்பகுதி, கொழுப்புள்ள கறி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, நண்டு வகைகள்.
சைவம் :

பாலாடை, நெய், வெண்ணெய், தேங்காய், தேங்காய் எண்ணெய், இனிப்புப் பண்டங்கள் சாக்லெட், பாதாம் பருப்பு வகைகள் ஐஸ்கிரீம்கள், பேக்கர் உணவுகள், குல்பி எனும் இனிப்பு.

கொலஸ்டிரால் குறைக்க உதவும் உணவு

வகைகள் :

சிறிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு பாசிப்பயறு, ஆடை எடுத்த பாலின் தயிர்.

உப்பு அதிகம் உள்ள உணவுகள் :

இரத்தக் கொதிப்பு உடையவர்களும் இருதய நோயாளிகளும் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவோ தவிர்க்கவோ, வேண்டியதி ருக்கும். கீழ்கண்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அசைவம் :

கருவாடு, மீன், ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டு இறைச்சி
சைவம் :

இட்லிப்பொடி, ஊறுகாய், அப்பளம், வடகம், சீஸ், வெண்ணெய், ரொட்டி, உப்பு பிஸ்கட், உலர்ந்த பழங்கள், சோடா உப்பு, தக்காளி, பட்டாணி, பீட்ரூட், வறுத்த முந்திரிப் பருப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

எந்த எண்ணெய் உபயோகிப்பது :

தாவர எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் சோயா பீன்ஸ் எண்ணெய் நல்லது மாமிசம் சாப்பிடலாமா?

மாமிச வகைகளைத் தவிர்த்து நல்ல சைவ உணவு சாப்பிடுவது மிகவும் நல்லது. கண்டிப்பாக மாமிச வகைகள் வேண்டு மெ ன்றால் சிக்கன் அல்லது மீன் வாரம் இரண்டு முறை சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகள், அதிக நார்ச்சத்து அடங்கிய உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகள் கவனிக்க வேண்டியவை :
1. இரத்த அழுத்தத்தில் கட்டுப்பாடு


2.நீரிழிவு நோய் கட்டுப்பாடு

3. உடல் எடை குறைத்தல்

4. குடி, புகை பிடித்தல் பழக்கங்களை விட்டொழித்தல்

5. குறிப்பிட்ட உடற் பயிற்சி

6. குனிந்து நிமிரும் வேலைகள் செய்யாமை

7. கனமான பொருட்களைத் தூக்கிக் கொண்டு நடக்கக்கூடாது

8. பலமாக முயற்சி செய்து மலங்கழிக்கக் கூடாது

9. ஒழுங்காக நேரம் தவறாமல் மருந்துகள் உட்கொள்ளுதல்

10. மருத்துவப் பரிசோதனை ஒரே சீரான இடைவெளியில்.

உடல் பருமன்

இருதய நோயுள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது அவசியம். உடல்பருமன் ஒருவருடைய பாரம்பரியத்தைப் பொருத்து உண்டாகலாம், ஆனால் அதிக அளவு உணவினாலும், உடற்பயிற்சி இல்லாத
தாலும், மதுபானங்களை அதிகமாக அருந்து வதாலுமே உடல் பருமன் அடைகிறது.

வரவும் செலவும் கணக்கிடப்பட வேண்டும். இந்த கணக்கில் செலவு அதிகமானால் உடல் மெலியும், வரவு அதிகமானால் உடல் பருமனடையும், நாம் செய்யும் வேலைக்கும் உடற்பயிற்சிக்கும் தகுந்த அளவு அதிகமாக உண்ணும்பொழுது உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அடைகிறது.

சில நாளமில்லாச் சுரப்பிகளின் வியாதியால் அதிக எடை ஒருவருக்கு உண்டாகலாம். ஆனால் அது ஆயிரத்தில் ஒன்றாக இருக்கும். உதாரணம் தைராய்டு சுரப்பி.

ஒரு பவுண்டு கொழுப்புப் பொருள் உணவு 3500 அதாவது ஒரு வாரத்தில் ஒரு பவுண்டு இழக்க தினமும் உணவில் 500 கலோரிகளைக் குறைக்க வேண்டும்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரை 25 (Calorie)
ஒரு அவுன்ஸ் முந்திரிக் கொட்டை 162 (Calorie)
ஒரு அவுன்ஸ் அரிசி 420 (Calorie)
31/2 அவுன்ஸ் கேக் 420 (Calorie)
கலோரி இல்லாது உணவுகள் :

உணவைக் கட்டுப்படுத்தும் போது இடையிடையே பசிக்கும். அதற்கு நாம் முட்டைக்கோஸ், தக்காளிச்சாறு, வெண்ணெய் இல் லாத மோர், காய்கறி சூப், எலுமிச்சை சாறு, காரட், வெள்ளரிக்காய், காலிஃபிளவர், கீரை வகைகள் போன்றவைகளை உண்பது நல்லது.

எடையை அதிகரிப்பதில் உப்பு பெரும்பங்கு வகிக்கிறது. ஏனெனில் உப்பு தான் உடலில் நீரைத் தேக்கி வைக்கிறது. எனவே உணவில் உப்பைக் குறைத்து விட்டால் உடலில் நீர்த்தேக்கம் குறைகிறது. உடல் எடையைக் குறைக்க நம் பிரியம் போல் ம ருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான மருந்துகளை உட்கொள்ளலாம்.

அனுமதிக்கப்பட்ட பொருட்கள் :

சிறிய மீன், கிழங்குகள் அற்ற காய்கறிகள், சாலட்டுகள், பருப்பு, தேயிலை, காபி, சோடாபானம் பால், மோர், பழங்கள் (மா, பலா, தவிர)

குறைந்த அளவில் அனுமதிக்கப்படுபவை :

முட்டை வெள்ளைக்கரு, உருளைக் கிழங்கு, ரொட்டி, சப்பாத்தி, துண்டு மீன்கள், கோழிக்கறி.

தவிர்க்க வேண்டியவை :

வெண்ணெய், க்ரீம், ஐஸ்கிரீம், நெய், சர்க்கரை, ஜாம், தேன், எண்ணெய்கள், சாக்லெட்டுகள், இனிப்புப் பொருட்கள், உலர்ந்த புட்டியில் அடைக்கப்பட்ட பழங்கள், கொட்டைகள், பிஸ்கோத்துகள், கேக்குகள், மதுபானங்கள், ஈரல், சிறுநீரகம், மூளை, பன்றி, மாடு இறைச்சிகள், கிழங்கு வகைகள்.


இருதய, நலத்திற்கு இதமான ஆலோசனைகள் :

ஸீ மன நிறைவு, மன அமைதி மிகவும் தேவை. எதிலும் திருப்தியான வாழ்க்கை அவசியம். அதிவிரைவில் வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற கொள்கை இதயம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோயை விரைவில் கொண்டு வரும்.

மன அழுத்தத்தை, உளைச்சலை குறைக்க, இளைப்பாறக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்ந்து இளைப்பாறுதல், ஆழ்ந்து சுவாசித்தல், இசையில் இன்புறுதல், மனம் விட்டுப் பேசுதல், இறைவனோடு ஆன்மீக வழிபாடு, ஐக்கியம் மிக முக்கியம்.

ஒரு ஆசானின் உதவியுடன் தியானம் மூலம் குறைக்கலாம்.

தேகப் பயிற்சி டாக்டர் ஆலோசனைப்படி செய்யவும். மிதவேகமான நடை அல்லது சைக்கிளிங். ஒரு நாளைக்கு 20 நிமிடம் 2 வேளை பண்ணலாம். எடை தூக்குதல், தள்ளுவது, இழுப்பது தவிர்க்கவும்.

ஒரு நாளைக்கு ஒரு ஆஸ்பிரின் மாத்திரை இதய தாக்குதலைத் தவிர்க்கிறது.

குளிர்காலத்தில் வெளியில் நடை (walking) போவது நல்லதல்ல. குளிர்ந்த நீரை குடிக்கவும், குளிக்கவும் உபயோகிப்பது நல்லதல்ல.

முழு வயிற்றிற்கு திருப்தியாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அரை
அல்லது முக்கால் வயிறு நிறைந்தவுடன் திருப்தி அடையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகாரம் சாப்பிட்டவுடன் நடப்பது, தேகப்பயிற்சி செய்வது கூடாது. அப்படி சூழ்நிலை ஏற்பட்டால் நாக்கின் அடியில் Sorbitrate (or) Isordil
மாத்திரை வைக்க வேண்டும்.

உணவில் உப்பு, கொழுப்பு, இனிப்பு குறைத்தோ, இல்லாமலோ உண்பது நலம்.

தினம் அமைதியான எட்டு மணிநேரம் தூக்கம் அவசியம்.

மாரடைப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு வைத்தியம் சிறிது நாட்களுடன் முடிவதில்லை. வைத்தியம் நீண் டதொரு முறையாகும். வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் ஒன்று, மருந்துகள் ஒழுங்காக சாப்பிட வேண்டும்.

இதய தாக்குதல், இரத்த அழுத்த நோய்கள் வராதபடி தடுத்து வாழ்வது மேலானது. வந்து விட்டாலும் நல் ஆலோசனைகளாலும் கட்டுப்பாடான வாழ்க்கை முறையின் படியும் மீண்டும் இதய தாக்குதலுக்கு வழிவகுத்து விடாதபடி வாழ்ந்து, நீண்ட ஆயுளுடன், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பிரயோஜனமான வாழ்க்கை நடத்துவது சாத்தியம். அது உங்கள் கையில் இருக்கிறது.

Health Diet இதய நோய்களைத் தடுக்கும்
உணவுத் தயாரிப்பு
கோதுமை ரவா பொங்கல்
தேவையான பொருள்கள்:
கோதுமை (உடைத்தது) 2 கோப்பை
பயத்தம் பருப்பு லு கோப்பை
சீரகம் லு தேக்கரண்டி
மிளகுத்தூள் 1 சிட்டிகை
கடுகு ரு தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு வேண்டிய அளவு

செய்முறை:

2 கோப்பை உடைத்த கோதுமையை வேகவிடவும். (4லு கப் தண்ணீர் மற்றும் லு கோப்பை பயத்தம் பருப்புடன்) வறுத்த கடுகு, கறிவேப்பிலை, சீரகம் கொண்டு தாளிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

சத்து மதிப்பீடு
(கால் தட்டிற்கு (Quarter plate) )
சக்தி (energy) 139 கலோரி
மாவுப் பொருள்
(Carbohydrate) 27.26 கிராம்
புரதம் (Protein) 5.6 கிராம்
கொழுப்பு (Fat) 0.57 கிராம்

http://www.thedipaar.com/news/news.php?id=36072
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum