புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
47 Posts - 47%
heezulia
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
246 Posts - 49%
ayyasamy ram
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
12 Posts - 2%
prajai
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
9 Posts - 2%
jairam
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
புரிதல்- கதை  Poll_c10புரிதல்- கதை  Poll_m10புரிதல்- கதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரிதல்- கதை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 6:18 pm

புரிதல்
- திருவாரூர் பாபு

பில்டரில் இருந்து டிகாக்ஷனை ஊற்றிய குமுதா, வாசலில் ஆட்டோ சப்தத்தை உணர்ந்து ஜன்னல் வழியே பார்த்தாள். ப்ரியா இறங்கிக் கொண்டிருந்தாள். கையில் சூட்கேஸ். கடந்த இரண்டு நாட்களாக அவள் அலைபேசியில் பேசியதன் சாரம் உள்ளுக்குள் உறைக்க, வசந்தன் எங்கே இருக்கிறான் என்று கவனித்தாள். பாத்ரூமில் இருப்பது புரிந்தது.

"வாம்மா'' என்றவள், ப்ரியாவின் கையிலிருந்து சூட்கேஸை வாங்கி கட்டிலுக்கு அடியில் தள்ளினாள்.

"எதுவா இருந்தாலும் உங்க அண்ணன் ஆபீஸுக்குப் போன பின்னாடி பேசிக்கலாம்''

ப்ரியா வேகமாக அவர்களின் பெட்ரூமிற்குள் நுழைந்து கட்டிலில் படுத்தாள்.

தலையை துவட்டியபடி வெளியே வந்த வசந்தன், தங்கையை கட்டிலில் உணர்ந்து கேள்விக்குறியாக மனைவியைப் பார்க்க, "பிரகாஷ் டூர் போயிருக்காராம். ரெண்டு நாள் இங்க தங்கி ரெஸ்ட் எடுத்திட்டுப் போகலாம்னு வந்திருக்கா''

"ப்ரியா ரெஸ்ட் எடுக்கட்டும். அவளுக்குப் பிடிச்ச வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் செஞ்சு கொடு. சாயங்காலம் ஆபீஸ்லேந்து வந்து உடனே வெளிய போகலாம். சந்தோஷ் ஸ்கூலுக்குப் போயிட்டானா?''

"போயிட்டாங்க. இப்பதான் ஆட்டோ வந்துச்சு''

மனதுக்குள் ப்ரியா வந்திருப்பதன் காரணம் புரிந்தும், அதை எப்படி கணவனுக்குத் தெரியாமல் சமாளிக்கப் போகிறோம் என்கிற பரிதவிப்பில், குமுதா அவசரம் அவசரமாக கணவனை அலுவலகம் அனுப்புவதில் பிஸியானாள்.

அவன் ஆபீசுக்குப் புறப்பட்டுப்போனதும்...

குமுதா கீரை ஆய்ந்தபடி ப்ரியாவை பார்த்து சிரித்தாள்.

"வீட்டுக்காரர் டூர் போயிருக்காரு. ரெஸ்ட் எடுக்க வந்திருக்கேன்னு உங்கண்ணனை சமாளிச்சு ஆபீஸுக்கு அனுப்பி வச்சிருக்கேன்''

ப்ரியா கடுகடுத்தாள்.

"பிடிக்கல அண்ணி... காதலிக்கிறதுக்கு முந்தி பேசினது ஒண்ணு. இப்ப நடந்துக்கறது வேற. வெறுப்பா இருக்கு''

`என்ன நடந்துக்கறது பிடிக்கல?''

ப்ரியா படபடத்தாள்.

"அறுபதாயிரம் சம்பளம்னு சொன்னாரு. ஆனா கையில ஐம்பதாயிரம்தான் வருது. கல்யாணமான உடனே பெங்களூருக்கு டிரான்ஸ்பர் வாங்கிடறேன்னு சொன்னாரு. இப்ப ரெண்டு வருஷம் ஆகுங்கிறாரு. காலைல நான் எழுந்திருக்க லேட்டாயிடுது. மதியம் சாப்பாடு கட்டித் தரலேன்னா திட்டறாரு. இப்படி எல்லாத்துலேயும் பிடிக்கல அண்ணி''

குமுதா ப்ரியாவை வியப்பாகப் பார்த்தாள்.

"இதுக்காகத்தான் பெட்டிய தூக்கிட்டு அண்ணன் வீட்டுக்கு வந்திட்டியா''

"ம்''

"இப்ப நீ என்கிட்ட சொன்ன எல்லாத்தையும் ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணியிருக்கீங்களா?''

"டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கு அண்ணி? என் எதிர்பார்ப்புக்கு சரியா இல்லாத ஒண்ணை கட்டாயப்படுத்தி நான் ஏன் அவர்கிட்டயிருந்து வாங்கிக்கணும்?''

குமுதாவுக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது.

ஈகோ ப்ராப்ளம் கணவன் மனைவிக்குள் வரவே கூடாத ஒன்று.

"என்னைப் பொறுத்தவரைக்கும் என் வீட்டுக்காரர் உனக்கு அண்ணன் மட்டும் இல்ல ப்ரியா, அப்பாவும் கூட. எங்க பாதுகாப்புல இந்த வீட்டுல இருந்து தான் காலேஜ் படிச்ச, காதலிச்ச, கல்யாணம் பண்ணிக்கிட்ட. உங்கண்ணனுக்கு உன் கல்யாணத்துல விருப்பமே இல்ல. ஆனா அம்மா அப்பா இல்லாத தங்கச்சி ஆசைய நிறைவேத்தணுங்கறதால சம்மதிச்சாரு. நான் உங்கிட்ட பர்சனலா ஒரு கேள்வி கேட்கிறேன்.

உங்களுக்குள்ள தாம்பத்யம் எப்படி?''

"அண்ணி''

"அதுதான் செக்ஸ்''

"அதுக்கென்ன அண்ணி குறைச்சல். தினம் தினம் தான் நடக்குதே''

குமுதா சிரித்தாள்.

"கல்யாணமாகி ரெண்டு வருஷம் எங்களுக்குள்ளே அது நடக்கவே

இல்ல ப்ரியா''

"அண்ணி''

"தப்பு எம்மேலே இல்ல. பிரச்சினை உங்கண்ணன்கிட்டேதான். கல்யாணமாகி ரெண்டாவது நாளே எனக்கு தெரிஞ்சிட்டுது. ஆனாலும் அத நான் காட்டிக்கவே இல்ல. உங்கண்ணனுக்கு குற்ற உணர்ச்சி ஜாஸ்தியாயிட்டுது. உனக்கு ஞாபகம் இருக்கா, கல்யாணமான ரெண்டாவது மாசம் உங்கண்ணன் ஒரு வாரம் வீட்டுக்கு வரவே இல்ல. நாமெல்லாம் எப்படி துடிச்சோம்! ஊர்லயிருந்து எங்கம்மா அப்பா வந்து, எவ்வளவு பிரச்சினை ஆச்சு. அப்ப உங்கண்ணன் என்ன சொன்னாரு, ஆபீஸ் வேலை பெங்களூர் போயிட்டேன்னு. ஆனா உண்மையில என்னை பார்க்க கூச்சப்பட்டுக்கிட்டு தலைமறைவாயிட்டாரு.''

ப்ரியா அதிர்ச்சி விலகாமல் அண்ணியையே பார்த்தபடி இருந்தாள்.

"நான்தான் அவர சரி பண்ணினேன். செக்ஸாலாஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அது சம்பந்தமான புத்தகங்களை வாங்கி கொடுத்து படிக்கச் சொன்னேன். தன்னம்பிக்கை கொடுத்தேன். ஆறு மாசத்துல ஜம்முன்னு ஆயிட்டாரு. ஒன்றரை வருஷத்துல சந்தோஷ் பிறந்தான். இப்ப எங்களுக்கு என்ன குறைச்சல்? உங்கண்ணன் பிரகாஷ் அளவுக்குக்கூட சம்பாதிக்கல. ஆனாலும் சந்தோஷத்துக்கு குறைச்சலே இல்ல, ப்ரியா! காரணம் அது நாம அமைச்சுக்கறது.

திருமண வாழ்க்கைல ஒரு பொண்ணு எதிர்பார்க்கற முக்கிய விஷயத்துலயே ஏமாற்றத்த சந்திச்சு நான் அதுலிருந்து மீண்டு சந்தோஷமா இருக்கேன். ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்காக பொட்டிய தூக்கிட்டு அண்ணன் வீட்டுக்கு வந்திருக்க. கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்''

ப்ரியா கண்களில் மளுக்கென்று நீர் தளும்பியது.

"அண்ணி நீங்க சொன்னது''

"ஏன் நம்பிக்கை வரலியா? நூறு சதவிகித உண்மை. ஒரு பொண்ணுக்கு அப்பா அம்மா மாப்பிள்ள பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கறது அவங்கவங்க கையிலதான் இருக்கு ப்ரியா. இப்ப நீ பிரச்சினையோட வந்திருக்கேன்னு தெரிஞ்சா உங்கண்ணன் மனசு நொறுங்கிடுவாரு''

குமுதாவின் அலைபேசி ஒலித்தது.

"உங்கண்ணன் தான்'' என்றபடி எடுத்தாள்.

"ப்ரியா எழுந்திரிச்சிட்டாளா?''

"எழுந்திரிச்சிட்டா. பக்கத்துலதான் இருக்கா''

அலைபேசியை அவளிடம் நீட்டினாள்.

"சொல்லுண்ணா?''

"எப்படிடா இருக்க?''

"பைன் அண்ணா?''

"நாலு மணிக்கே ஆபீஸ்லேர்ந்து வந்திடறேன். தியேட்டர்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருக்கேன். படம் பார்த்துட்டு அப்படியே வெளிய டின்னர் முடிச்சிட்டு வந்திடலாம். நல்லா ரெஸ்ட் எடு''

"சரிண்ணா''

அலைபேசியை அண்ணியிடம் நீட்டினாள்.

ப்ரியா குமுதாவை ஆழமாக ஊடுருவிப் பார்த்தாள்.

"எப்ப வீட்டுக்கு கிளம்பற? உங்கண்ணன்கிட்ட உன் வீட்டுக்காரர் வெளிïரு போயிருக்கார்ன்னு சொல்லிட்டேன். என்ன பண்ணலாம்?ராத்திரி படம் பார்த்துட்டு டின்னர் முடிச்சிட்டுன்னா ரொம்ப நாழியாயிடுமே பரவாயில்லையா?''

"அண்ணி''

"இல்ல... தினம்தினம் தான் நடக்குதுன்னு சொன்னியே, லேட்டானா பிரச்சினை இல்லையா?''

ப்ரியா அண்ணியின் தோளில் சாய்ந்து கொண்டாள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

இரவு

"என்ன பிரகாஷ் டூர் போயிருக்கறதா சொன்னா... ஹோட்டல்லயிருந்து அப்படியே வீட்டுக்குப் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னா, ஊர்லயிருந்து திரும்பிட்டானாமா? குமுதா கணவனை உற்றுப் பார்த்தாள்.

வசந்தன் சிரித்தான்,

"அவ பெட்டியோட இறங்கறத பார்த்திட்டுதான் பாத்ரூமுக்குள்ளயே போனேன்''

"சாரிங்க... அவன் கன்வின்ஸ் பண்றதுக்காக ஒரு பெரிய பொய்ய சொல்லிட்டேன். ஒண்ணுமே இல்லாதத பெரிய பிரச்சினையா நினைச்சுகிட்டு கிளம்பி வந்திட்டா. எப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் இருக்குதுன்னு ரீல் விட்டேன். கிளம்பிட்டா''

"தேங்க்ஸ் குமுதா''

"எதுக்குங்க?''

"அம்மா ஸ்தானத்துல இருந்து ப்ரியாவுக்கு நல்லபடியா அட்வைஸ் பண்ணி புருஷன்கிட்ட அனுப்பி வச்சதுக்கு''

***

தினத்தந்தி ஞாயிறு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புரிதல்- கதை  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக