புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
62 Posts - 57%
heezulia
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
104 Posts - 59%
heezulia
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_m10விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _ Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டுச் சென்ற ஆண்டில் தமிழ்சினிமா - ஒரு பார்வை _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Jan 01, 2012 9:28 am

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொலிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, கமல் இருவரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளியாகாமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறிவிட்டது. ஆனால் அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பலரின் படங்களும் இவ்வாண்டில் வெளியாகின

உண்மையில் பொங்கலுடனேயே இவ்வாண்டு சினிமா சூடுபிடிக்க ஆரம்பமானது. ஆடுகளம், சிறுத்தை, காவலன், இளைஞன் ஆகிய நான்கு படங்களே பந்தையத்தை ஆரம்பித்து வைத்தன. இதில் ஆடுகளம், சிறுத்தை 14ஆம் திகதியும் காவலன், இளைஞன் 15ஆம் திகதியும் வெளியானாலும் இவையே போட்டியாகப் பார்க்கப்பட்டன.

என்னதான் அளவுக்கதிகமாக திரைப்படங்கள் வெளியான போதிலும் கடந்த வருடத்தினை விடக் குறைவான படங்களே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. இருந்தாலும் இவ்வாண்டின் ஆரம்பத்தின் முதலே தமிழ் சினிமா இன்னும் சோடை போகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல படங்கள் அமைந்திருந்தன. இவற்றில் பல வணிக ரீதியாக வெற்றியடை யாவிட்டாலும் நல்ல விமர்சனங்களை அள்ளிச் சென்றன.

2010 ஆம் அண்டிற்கான தேசிய விருதுகளில் 13 விருதுகளைக் குவித்து தமிழ் சினிமாவும் களத்தில் இருப்பதை இந்தியளவில் உணர்த்திய ஆண்டு இது. இதில் இவ்வாண்டின் ஆரம்பத்தில் வெளியான ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தன. இதுபோல எதிர்வரும் ஆண்டுகளிலும் இடம்பெறலாம் என இவ்வாண்டில் வெளியான படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன.

குறிப்பாக ஆரண்ய காண்டம், வாகை சூடவா, தூங்கா நகரம், அழகர் சாமியின் குதிரை, முரண், வர்ணம், வெங்காயம், யுத்தம் செய், குள்ளநரிக்கூட்டம் பயணம் போன்ற படங்கள் வசூலில் சாதிக்கவில்லை என்றாலும் பலரது பாராட்டையும், சில விருது களையும் பெற்றுக்கொண்டன. இவற்றுடன் ஆடுகளம், தெய்வத் திருமகள், அவன் இவன், வானம், மயக்கம் என்ன படங்கள் பராட்டுக்களுடன் நின்றுவிடாமல் ஓரளவு சிறப்பான வசூலினை ஈட்டியது.


ஆண்டின் மாபெரும் வெற்றித் திரைப்படமாக வணிக ரீதியாகவும் தியேட்டரில் ஓட்டப்படாமல் ஓடிய உண்மையான வெற்றிப்படங்களாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் மங்காத்தா படத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதேபோல அயன் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தினை தந்த கே.வி ஆனந்தின் கோ படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மங்காத்தா, கோ இவ்விரு படங்களுமே இந்த வருடத்தில் அதிகளவான இலாபமீட்டிய திரைப்படங்களாக உள்ளன.

இவற்றுடன் சேர்த்து லோரன்ஸின் இயக்கத்தில் வெளியான காஞ்சனா, கார்த்தியின் நடிப்பில் வெளியான சிறுத்தை படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. மேலும் பலரின் கவனத்தை ஈர்த்து பெரும் வரவேற்பைப் பெற்ற அறிமுக இயக்குநரான எம். சரவணன் இயக்கத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றியடைந்தது.

இவற்றுடன் விஜயின் காவலன், நாடோடிகள் வெற்றிக்குப் பின்னர் சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் வெளியான போராளி, சிம்புவின் ஒஸ்தி முதலுக்கு மோசமில்லாத படங்களாக மாறின. இவை தவிர சில பெரிய பட்ஜெட் படங்கள் விளம்பரங்களில் வெற்றி கண்டாலும் உண்மையில் தயாரிப்பாளரின் கையைக் கடித்துவிட்டது.

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவைப் பொறுத்தளவில் 50 நாட்கள் படங்கள் ஓடுவதென்பது மலையில் மாடேற்றும் கதையாகிவிட்டது. இதனாலேயே என்னவோ சில படங்கள் வெளியாகி 2 தொடக்கம் 5 நாட்களிலேயே விண்ணைப் பிளக்கும் வெற்றி, மாபெரும் வெற்றி என விளம்பரப்படுத்தி விளம்பரங்களில் வெற்றி கண்டதே தவிர நிஜத்தில் ஏமாற்றமளித்தது என்றுதான் கூற வேண்டும்.

தீபாவளிக்கு வெளியான விஜயின் வேலாயுதம் மற்றும் சூர்யாவின் 7ஆம் அறிவு திரைப்படங்களின் நிலைவரங்கள் புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் நடிகர், இயக்குனர் தரப்பிலிருந்து வெற்றி என அறிவித்திருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இதுவரையில் எவ்விதமான கருத்துக்களும் வெளிவரவில்லை. ஆரம்பத்தில் 7ஆம் அறிவு தொடர்பாக சில பொக்ஸ் ஒபிஸ் தகவல்கள் வெளியாகின.

குறித்த தீபாவளிப் படங்கள் இரண்டும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியுள்ளன எனலாம். இதில் விஜயின் வேலாயுதம் சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தினை விட சற்று அதிமான இலாபத்தையே கொடுத்துள்ளது. 7ஆம் அறிவு படத்தின் பட்ஜெட் சுமார் 85 கோடியிலும் வேலாயுதம் திரைப்படம் 45 கோடியிலும் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய பட்ஜெட் படங்களாக அமைந்தன.

இவற்றினைத் தவிர்த்து பெரும்பாலான படங்கள் படுமோசமான தோல்விகளையே சந்தித்துள்ளன. வருடத்தின் இறுதியில் வெளியான மம்பட்டியான் சற்று சிறப்பான ஆரம்ப வசூலினை ஈட்டியுள்ளது. மற்றும் ஒஸ்தி, ராஜபாட்டை படங்கள் சிறந்த ஆரம்ப பொக்ஸ் ஒபிஸ் நிலைமைகள் காணப்பட்ட போதும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதுடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படங்களினால் மேலும் இவற்றின் வசூல் நிலைகள் பாதிக்கப்படலாம்.

இவ் ஆண்டில் தற்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் சற்று சிறப்பாகவே அமைந்துள்ளது எனலாம். இதில் விசேட அம்சம் என்னவென்றால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஸ் என முன்னணியிலுள்ள நடிகர்கள் அனைவரும் இவ்வாண்டில் களத்தில் குதித்தனர்.


இதில் அஜித் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அசல் படத்தின் சறுக்கலுக்கு பின்னர் ஆண்டின் பெரிய வெற்றியாக மங்காத்தா அமைந்துவிட்டதால் ஆண்டின் வெற்றி நாயகனாக தனக்குரிய இடத்தினை தக்கவைத்து ஏனைய நடிகர்களுக்கு தானும் போட்டியில் இருப்பதனை உணர்த்தியுள்ளார். இவருடன் விஜயும் தன் தொடர்ச்சியான 3 வருட சறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவலன் மூலம் தனது மீள்வருகையை பலப்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரின் அடுத்தடுத்த படங்கள் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.

என்னதான் அடுத்த தலைமுறை நடிகர்களில் அஜித், விஜய் பற்றி அதிகம் பேசினாலும் கடந்த 5 ஐந்து வருடங்களில் சத்தமில்லாமல் அதிக வெற்றிகளைக் கொடுத்து தனக்கென தனியான ஒரு வட்டத்தினை உருவாக்கியிருப்பவர் சூர்யா தான். 7ஆம் அறிவில் சிறிய சறுக்கல் என்றாலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக (ரஜினி, கமல் தவிர்த்து) மாறியுள்ளார் சூர்யா. இவரின் அடுத்த படம் வெற்றிபட இயக்குனராக மாறியுள்ள கே.வி. ஆனந்த்தின் மாற்றான் திரைப்படம் என்பதால் இவரது வெற்றி தொடரலாம்.

அடுத்ததாக தேசிய விருது நடிகர் விக்ரம் அந்நியனுக்கு பிறகு பெரிய வெற்றிகள் இன்றி பரிதவிக்கிறார். தெய்வத்திருமகள் நல்ல பெயரை ஏற்படுத்தினாலும் பெரிய வெற்றியாக அமையவில்லை. அது ராஜபாட்டையிலும் கிடைக்காது போல தெரிகிறது. தமிழ்சினிமாவின் புதிய தேசிய விருது நடிகர் தனுஸுக்கு 2011 சிறந்த ஆண்டாகவே உள்ளது. ஆடுகளம், மயக்கம் என்ன என நடிப்பில் பாராட்டுக்ளை குவித்ததுடன் ஆடுகளத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

சிம்பு வானம் படத்தில் கிடைத்ததை ஒஸ்தியில் மேலும் ஒஸ்தியாக்க முடியாமல் போய்விட்டது. விஷால் அவன் இவன் படத்தின் மூலம் நடிகராக நல்ல வரவேற்புகளை பெற்றார். தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் வெடியில் கோட்டை விடடார். கோ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வரிசையாக சிங்கம் புலி, ரௌத்திரம், வந்தான் வென்றான் வரிசையாக 3 தோல்விகளால் தவிக்கிறார். ஜெய் சென்ற வருடத்தில் ஏற்பட்ட தோல்விகளுக்கு எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார். விமல் வாகை சூடவா மூலம் நல்ல நடிகர் என்ற பெயரினை பெற்றார்.

கார்த்தி சிறுத்தையுடன் தனது வெற்றியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவி பேராண்மை படத்திற்கு பிறகு தில்லாலங்கடி இவ்வாண்டு எங்கேயும் காதல் என தோல்வியில் பயணிக்கிறார். அமீர் இயக்கத்தில் ஆதிபகவன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்பார் எனலாம். வானம் படத்தில் 2ஆவது நாயகனாக தோன்றினார். பின்னர் யுவன் யுவதி படத்தில் நாயகனாக தோன்றினாலும் படம் சரியாகப் போகவில்லை.

பார்த்திபன் வித்தகனுடன் பொன்விழா படத்தினை பூர்த்தி செய்திருந்தார். வருட இறுதியில் வெளியான மம்பட்டியான் பிரசாந்திற்கு ஒரு வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த், மாதவன், ஆதி போன்றோரின் படங்கள் வெளியாகவில்லை. சத்தியராஜ் சட்டப்படி குற்றம், வெங்காயம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நாயகனாக அல்லாமல் நடித்து வரவேற்பினை பெற்றார்.

இவற்றுடன் நடிகைகளில் அஞ்சலி தவிர வேறு நடிகைகள் பெரிதாக பிரகாசிக்கவில்லை. எங்கேயும் எப்போதும் படத்திற்காக அனன்யாவும் காவலனில் அசினும் பராட்டுக்களை பெற்றனர். சிறுத்தையில் தமன்னா, மங்காத்தாவில் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின்களாக தோன்றினர். புது வரவுகளில் ஸ்ருதி ஹாசன், ரிச்சா மனதில் நிற்கின்றனர்.

இசையமைப்பாளர்கள் ஜீவீ. பிரகாஸ், யுவன் சங்கர் ராஜா இவ் ஆண்டு முழுவதும் பேசப்பட்டனர். ஹரீஸ் ஜெயராஜ் கோ படத்தில் வெற்றிபெற்றார். அறிமுக இசையமைப்பாளர் அநிருத் வை திஸ் கொலைவெறி பாடலினால் நம்பிக்கை அளிக்கிறார்.

மணிரத்தினம், சங்கர், பாரதிராஜா, ரவிக்குமார் போன்றோரின் படங்கள் வெளியாகவில்லை. வெற்றிமாறன், ஏ.எல். விஜய், சற்குணம், மிஸ்கின், கே.வி. ஆனந்த் போன்றோர் தங்களை முன்னணி இயக்குனர்களாக அடையாளம் காட்டினர். வெங்கட் பிரபு மங்காத்தாவினால் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். பிரபு தேவா இயக்கிய வெடி, எங்கேயும் காதல் இரண்டும் தோல்வியாக அமைந்தன. முருகதாஸ், கௌதம் மேனன் சற்று சறுக்கலை சந்தித்தனர். அறிமுக இயக்குனர் எம். சரவணன் எங்கேயும் எப்போதும் படத்தினால் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வடிவேலு, விவேக், கஞ்சா கருப்பு என அனைவரையும் ஓரங்கட்டி விட்டு இந்தாண்டும் சந்தானமே கொமடியனாக ஜெயித்துள்ளார். அரசியல் காரணங்களால் வடிவேலு ஓரிரு படங்களிலேயே தோன்றினார். இதனால் இவரின் இடைவெளி வருடம் முழுவதும் காணப்பட்டது. மொத்தத்தில் 2011ஆம் ஆண்டு தமிழ்சினிமாவில் சில சறுக்கல்கள் காணப்பட்ட போதும் பல ஏற்றங்களுக்கு வழிவகை செய்துள்ளது. மேலும் பலருக்கு திருப்பமாக அமைந்துள்ளதால் எதிர் நோக்கும் வருடம் சிறப்பாக அமையுமெனலாம்.

2011இல் வெற்றிப் படங்களை விட மிக அதிகமான தோல்விப் படங்கள் வெளிவந்த போதிலும் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கும விதத்தில் பல படைப்புக்கள் கிடைத்துள்ளதால் வரும் வருடங்களில் சிறந்த படைப்புக்கள் பலவற்றை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு அளிக்கும் என எதிர்பார்ப்போம். _
நன்றி கேசரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக