ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by ayyasamy ram Today at 5:22 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Today at 5:16 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 5:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

Admins Online

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்

Go down

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Empty 40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்

Post by சிவா on Sun Jan 15, 2012 12:44 pm

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Eyes

- கண்கள்.
- மனித உடலில் மிக இன்றியமையாத, மென்மையான உறுப்புகள்.


கண்களில் எப்போது வேண்டுமானாலும் பாதிப்புகள் வரலாம். ஆனாலும் 40 வயது வரை இந்த உலகை கலர் கலராய், விதவிதமாய் பார்த்து ரசித்தவர்கள் அதன் பின்பு `என்ன கொஞ்சம் சிரமமாக இருக்கிறதே' என்று புலம்ப தொடங்கு கிறார்கள்.

40 வயதுக்கு பிறகு கண்களில், அது தரும் காட்சிகளில் லேசான அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டாலே, உடனே கவனித்து அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டால், தொடர்ந்து முழுமை யான பார்வை பலனை அனுபவிக்கலாம். பொதுவாக 40 வயதுக்கு பிறகு கண்களில் என்னென்ன பிரச்சினை ஏற்படும்? அதற்கு என்ன தீர்வு? என்பதனை விளக்குகிறது, இந்த கட்டுரை.

40 வயதுக்கு மேல் செய்தித்தாள் படிப்பது சிரமமாக உள்ளது, சிறிய எழுத்துக்கள் தெரிவதில்லை. இது எதனால் ஏற்படுகிறது?

40 வயதுக்கு மேல் அனைவருக்கும் இந்த நிலை ஏற்படும். இது ஒரு நோய் அல்ல. இதை சாளேஸ்வரம் அல்லது வெள்ளெழுத்து (presbyopia) என்று கூறுவர். நமது கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸ் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இதனால் 40 வயதுக்கு முன்பு சிறிய எழுத்தையும் படிக்க இயலும். இந்த சுருங்கி விரியும் தன்மை 40 வயதுக்கு மேல் படிப்படியாக குறைகிறது. இதுவே சிறிய எழுத்துகளை படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த குறைபாட்டை எப்படி சரி செய்யலாம்?

40 வயதுக்கு மேல் சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும். கண்ணின் லென்சின் சுருங்கி விரியும் தன்மை படிப்படியாக குறைவதினால் 2 வருடத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வெள்ளெழுத்தினால் கண்களுக்கு வேறு பாதிப்பு ஏற்படுமா?

வேறு பாதிப்புகள் ஏற்படாது. இந்த வெள்ளெழுத்து 40 வயதுக்கு மேல் அனைவருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான வயது சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஒருவர் 40 வயதுக்கு முன்பு கண் மருத்துவரை அணுகாமல் இருந் திருக்கலாம். ஆனால் 40 வயதில் ஒவ்வொருவரும் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி அணியவேண்டும். கண்ணாடியில் பைபோகல், புரோகிரசிவ் (progressive) என இருவகைகள் உள்ளன.

கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்கள், கண்ணாடி அணியாமலே வெள்ளெழுத்து குறைபாட்டை சரி செய்ய இயலுமா?

சரி செய்ய இயலும். அதற்கு நவீன அறுவை சிகிச்சை உள்ளது. அந்த அறுவை சிகிச்சையின் பெயர் prelex (presbyopic lens exchange) ஆகும். இந்த சிகிச்சையில் கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸை அகற்றி விட்டு, அந்த இடத்தில் விசேஷ செயற்கை லென்ஸ் (மல்ட்டி போகல்) பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சை 2 கண்களிலும் அடுத்தடுத்து செய்யவேண்டும். இந்த சிகிச்சைக்கு பிறகு ஆயுள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டாம். தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அறுவை சிகிச்சை ஒரு வரப் பிரசாதமாகும். காரணம், 40 வயதுக்கு மேல் இந்த சிகிச்சை செய்து கொண்டால் கண்ணாடி அணியாமல் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.

40 வயதுக்கு மேல் கண்களில் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன?


40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்கள் கண்களையும் பாதிக்கும். எனினும் ஆரம்ப நிலையில் இவை கண்களில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே மேற்கண்ட நோய்கள் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை 'Diabetic Retinopathy' என்று கூறுவர். இதனை லேசர் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

கண் பார்வை குறைவதற்கு வேறு காரணங்கள் உண்டா?

40 வயதுக்கு மேல் கண்களில் `க்ளோக்கோமா' என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கண்ணின் அழுத்தம் இயல்பை விட (6-21 mm Hg) அதிகமானால் அதனை க்ளோக்கோமா என்று அழைக்கிறோம். இந்த நோய் வயதானவர்களுக்கே வரும். கண்ணில் அழுத்தம் அதிகம் ஆவதால் பார்வை நரம்பு பலவீனம் அடைகிறது. இதன் விளைவாக பக்கப்பார்வை (side vision) பறிபோகும். இந்த நோயால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை முழுமையாக சரிசெய்ய இயலாது.

க்ளோக்கோமாவின் அறிகுறிகள் என்ன?

க்ளோக்கோமா ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே 40 வயது ஆனவுடன் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது க்ளோக்கோமா பாதிப்பு இருந்தால் தவறாமல், மருத்துவரை அணுகவேண்டும். க்ளோக்கோமா நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்தால் பார்வை பாதிப்பு ஏற்படாது. தற்போது இந்த நோயை குணப்படுத்த பலவிதமான நவீன சிகிச்சைகள் உள்ளன. சொட்டு மருந்து தவிர நவீன லேசர் சிகிச்சையும் உள்ளது. இந்த சிகிச்சையால் அறுவை சிகிச்சையின் அவசியம் குறைந்து உள்ளது. க்ளோக்கோமாவின் தீவிரம் அதிகமானால் பார்வை மிகவும் மோசம் அடைந்து விடும்.

40 வயதிலேயே கண்புரை (Cataract) பாதிப்பு ஏற்படுமா?

பொதுவாக கண்புரை 50-55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வரும். எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு முன்பே வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை கட்டுப்பாடு சீராக இல்லை என்றால் 40 வயதிலேயே கண்புரை வரலாம். இதை தவிர கண்ணில் அடிபட்டால் அல்லது ஸ்டிரொய்டு (steroid) வகை மருந்துகள் உட்கொண்டால் 40-45 வயதிலேயே புரை வர நேரிடும். இதனை கண்புரை அறுவை சிகிச்சையால் சரி செய்திடலாம்.

-டாக்டர். அருள்மொழி வர்மன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Empty Re: 40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்

Post by இளமாறன் on Sun Jan 15, 2012 1:11 pm

நல்ல தகவல் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum