புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_m10மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2012 11:59 am



மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Ambika1

மகளிர் சுய உதவிக்குழு தலைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சுய உதவிக்குழுவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது தெரியவந்துள்ளது.

கழுத்தை அறுத்து கொலை

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 43). இவர் ஓட்டல் மானேஜராக பணிபுரிகிறார். இவருடைய மனைவி அம்பிகா (38). மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்தார். மேலும் பல்வேறு குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று கொடுத்தார்.

கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அம்பிகாவை போலீஸ் உடையில் வந்த இரண்டு பேர், ``மகளிர் சுய உதவிக்குழு மூலம் வங்கியில் வாங்கிய கடனில் ஊழல் நடந்துள்ளது என்றும், அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். எங்களோடு வாருங்கள்'' என்றும் கூறினார்கள். அவருடைய கணவர் ரவி வீட்டிற்குள் சென்று சட்டையை மாட்டிக்கொண்டு வருவதற்குள் வெளியே நின்று கொண்டிருந்த அம்பிகாவை காணவில்லை. ரவி தனது மகனுடன் தேடிப்பார்த்தபோது, வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அம்பிகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

வங்கியில் தீ விபத்து

இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், அம்பிகா பயன்படுத்திய செல்போனில் உள்ள நம்பர்கள், தோழிகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

பணம் கொடுக்கல், வாங்கலில்தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். இதற்கிடையே போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ள கூட்டுறவு வங்கியில் அம்பிகா சுய உதவிக்குழுக்களுக்கு பணம் வாங்கி கொடுத்து வந்ததும். இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் 10-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

வாக்குமூலம்

இதனால் அம்பிகா மூலம் அதிக கடன் தொகை பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை போலீசார் தயார் செய்து விசாரித்ததில் ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், 4-வது தெருவை சேர்ந்த சுமித்ரா, குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரியை சேர்ந்த சுசீலா மற்றும் மாலா என்பது தெரியவந்தது.

இதனால் அந்த 3 பேரிடமும் அம்பிகா கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் அளித்தனர். மேலும் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதில் வங்கியில் கடனாக வாங்கிய ரூ.52 லட்சம் பணத்தை கட்டாமல் இருக்க அம்பிகா எங்களிடம் ரூ.12 லட்சம் கமிஷன் பணம் கேட்டதால் கொன்று விட்டோம், என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Ambika2

பணம் கேட்டார்

கொலைக்கான காரணம் குறித்து 3 பெண் கொலையாளிகளும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நாங்கள் மூன்று பேரும் அம்பிகாவுக்கு நெருங்கிய தோழிகளாக இருந்தோம். பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து வங்கிகளில் கடன் வாங்கி கொடுப்பது, நகைகளை அடகு வைத்து பணம் பெற்று தருவது போன்றவற்றை செய்து வந்தோம். அம்பிகா மூலம் நாங்கள் கூட்டுறவு வங்கியில் கடந்த வருடம் ரூ.52 லட்சம் கடன் வாங்கினோம். அதனை உரிய முறையில் கட்டிக்கொண்டு வருவதற்குள் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து விட்டன. அதனால் பணத்தை திருப்பி கட்டாமல் இருந்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை கட்டுங்கள் என்று அம்பிகாவை கேட்டனர்.

அம்பிகாவும் எங்களிடம் வந்து, ``நீங்கள் வாங்கிய பணத்துக்கெல்லாம் ஆதாரம் நான் தான்; என்னிடம் வங்கி அதிகாரிகள் கேட்கிறார்கள். நீங்கள் மூன்று பேரும் ரூ.12 லட்சம் எனக்கு கொடுங்கள். மீதமுள்ள தொகையை நீங்கள் கட்டவேண்டிய தேவையில்லை அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார். ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் அந்த தொகையை எனக்கு கொடுத்து விட வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் போட்டார். இல்லாவிட்டால் போலீசில் மாட்டி விடுவேன் என்று அம்பிகா மிரட்டினார்.

தீர்த்துக்கட்ட திட்டம்

கடன் வாங்கி தந்ததற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரை அம்பிகா கமிஷன் பெற்று இருந்தார். மீண்டும் ரூ.12 லட்சம் கேட்டதோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்தது எங்களுக்கு கோபம், ஆத்திரம் ஏற்பட்டது. `நம்மிடமே பணத்தை கறக்க பார்க்கிறாளே? இவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். அதற்கு சுமித்ராவின் கள்ளக்காதலனான அம்பத்தூரை சேர்ந்த அன்னமுத்துவிடம் ஆலோசனை கேட்டோம். அம்பிகாவை தீர்த்துக்கட்ட நாங்கள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் கூலியாக கொடுப்பதாக தெரிவித்தோம். அதற்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தோம்.

அன்னமுத்து, அவருடைய நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரும் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வந்தனர். அவர்களுடன் திலீபன், இன்னொரு ராஜ்குமார் ஆகியோரும் சேர்ந்து அம்பிகாவை கொல்ல திட்டம் தீட்டினார்கள். அதற்கு முன்னதாக அம்பிகாவின் வீட்டை சுமித்ரா காண்பித்தார். 3 நாட்கள் அம்பிகாவின் வீட்டை கண்காணித்து, கொலையை எவ்வாறு செய்வது என்று ஒத்திகை பார்த்தார்கள். கொலையை எப்படி செய்வது என்று திட்டம் தீட்டிய போதுதான் அம்பிகாவின் கணவர் தினமும் இரவு வீட்டிற்கு தாமதமாக வருவதை அறிந்து கொண்டு நள்ளிரவில் ஊர்க்காவல் படை உடையில் அன்னமுத்துவும், ராஜ்குமாரும் வந்தனர்.

சிறையில் அடைப்பு

ஆனால் அந்த நேரத்தில் அம்பிகாவின் கணவர் வீட்டில் இருந்ததால் அதிர்ச்சியடைந்து, ``நாங்கள் போலீஸ்; உனது மனைவியிடம் விசாரணை செய்ய வேண்டும்'' என்றனர். ரவி வீட்டிற்குள் சென்று சட்டையை போட்டுக்கொண்டு வெளியே வருவதற்குள் அம்பிகாவை தனியே அழைத்துச் சென்றனர். அங்கு தயாராக இருந்த திலீபன், ராஜ்குமார் ஆகியோர் வாயை பொத்தி கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.

மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Ambika3

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

7 பேர் கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகள் சுமித்ரா, சுசீலா, மாலா மற்றும் அன்னமுத்து, ராஜ்குமார், இன்னொரு ராஜ்குமார், திலீபன் ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரு பெண்ணை கொலை செய்ய 3 பெண்கள் கூலிப்படையை அமர்த்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-

சினிமா பாணியில் அம்பிகாவை தீர்த்துக்கட்டிய கொலையாளிகள்

அம்பிகாவை கொலை செய்தது எப்படி என்று கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். `அம்பிகாவை அவரது வீட்டில் வைத்தே தீர்த்துக் கட்ட வேண்டும் என்று தான் சென்றோம். ஆனால் அவருடைய கணவர் இருந்ததால் திடீரென்று திட்டத்தை மாற்றினோம். எங்களை போலீஸ் என்று கூறி, அம்பிகாவை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்தோம். வீடு அருகே தெரு விளக்குகள் அதிகமாக இருந்தது. கொலை செய்யும் போது அம்பிகா சத்தம் போட்டால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி தெரு விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டோம்.

பருத்தி வீரன் சினிமா படத்தில் பெண் சாராய வியாபாரியை சாக்கு துணியால் முகத்தை மூடி, பன்றியை அறுப்பது போல, கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சி வரும். அதே போன்று மறைந்திருந்த திலீபன், ராஜ்குமார் ஆகியோர் அம்பிகாவின் முகத்தை மூடி, கை, கால்களை மடக்கி பிடித்து கொண்டு, பின்னர் பன்றியை அறுப்பது போல் அறுத்து கொலை செய்து விட்டனர்'' என்று கொலையாளிகள் கூறினார்கள்.

-

ஒரு கொலைக்கு மட்டும் பணம் வாங்கியதால் கணவனின் உயிர் தப்பியது

கொலையாளிகள் முழுக்க, முழுக்க அம்பிகாவை மட்டும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி அங்கு சென்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவருடைய கணவர் வீட்டில் இருந்ததால் அவரையும் சேர்த்து கொன்று விடலாம் என்று நினைத்தனர்.

ஆனால் தாங்கள் ஒரு கொலை செய்ய மட்டுமே பணம் வாங்கியதாலும், இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அம்பிகாவை கொலை செய்ய முடியாது என்று எண்ணியும், வீட்டில் வைத்து அவரை கொலை செய்யும் திட்டத்தை திடீரென்று மாற்றி, தங்களை போலீஸ் என்று கூறி, விசாரணை செய்யவேண்டும் என்று அழைத்துச்சென்று அம்பிகாவை மட்டும் கொன்று விட்டனர். ரவி உடை மாற்றுவதற்காக வீட்டுக்குள் சென்றது கொலையாளிகளுக்கு வசதியாக போய்விட்டது. அது அவரையும் காப்பாற்றியது.

-

பேராசையால் இறந்து போன அம்பிகா

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளில் கடன் பெற்று தரும் அம்பிகா, வங்கியில் கடன் பெற்றுக் கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்துக்கு ரூ.8 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் பெற்று வந்தார். பெரிய அளவில் கடன் தொகையை வாங்கி தந்த அம்பிகாவுக்கு அடித்தது யோகம். வங்கியில் கடனாக வாங்கியவர்களின் ஆவணங்கள் எல்லாம் எரிந்து விட்டதால் கடன் பெற்றவர்களின் விவரம் அம்பிகாவுக்கு மட்டுமே தெரியும். இதனை பயன்படுத்திக்கொண்ட அம்பிகா பணத்தை திருப்பி கட்டாமல் இருக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார். அம்பிகாவின் இந்த பேராசையே அவரது உயிருக்கு உலைவைக்கும் காரணமாக அமைந்து விட்டது.



மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 12:09 pm

செய்த தவறுக்கு தண்டனை கிடைதது ஆனால் இந்த தண்டனை கொஞ்சம் அதிகம் "பேராசை பெரு நஷ்டம் "

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 12:16 pm

அதிர்ச்சி பேராசை பெருநஷ்டம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 12:18 pm

ராஜா wrote: அதிர்ச்சி பேராசை பெருநஷ்டம்

அண்ணா இது ரொம்ப பெரிய தண்டனை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 12:46 pm

bagavathi wrote:
ராஜா wrote: அதிர்ச்சி பேராசை பெருநஷ்டம்
அண்ணா இது ரொம்ப பெரிய தண்டனை
தவறு செய்தவர்களுக்கு தண்டனை உடனுக்குடன் வழங்கபடுகிறது , இது தான் இறைவனின் தீர்ப்பு....

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 1:08 pm

ம்ம்ம்ம... கூலிப்படை அமைப்பதில் ஆண்களுக்கு சமமாக இப்பொழுது பெண்களும் வந்தாயிற்று. ஆண்களுக்கு நிகா் பெண்களும் சமமாயிற்று. இனி பெண்ணூிமையாளா்கள் திருப்தி பட்டுக் கொள்ளலாம்.
சமத்துவம் மலா்ந்தது. வாழ்க பாரதம்.



மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் 154550மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் 154550மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் 154550மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் 154550மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Feb 13, 2012 1:26 pm

"ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை காணென்று கும்மியடி"



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக