புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
78 Posts - 60%
heezulia
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
41 Posts - 32%
T.N.Balasubramanian
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
120 Posts - 61%
heezulia
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_m10கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 5:36 pm




'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்’ என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது.

'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்’ என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ’ ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ?

இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்த​போது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை’ என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்​பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு’ என்றீர்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை.

இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பௌத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பௌத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.

அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்’ என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்’ என்றுதான் சொல்லி இருக்க வேண்டும்!

அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழ ஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்’ என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்​பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசி​வந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?

இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை’ என்கிறீர்கள். இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்த​போது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்​பிடித்தீர்களே ஏன்?

நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்க​வில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்?

பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடி​னார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள்?

'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்’ என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய இரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்’ என்று அப்போது சொன்னது ஏன்?

'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்’ என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?

'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்​கூடாது’ என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபாய ராஜ​பக்ச கோபப்படுகிறாரே?

ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்?

இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?


ஜூனியர் விகடன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 5:43 pm

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

இந்த மனுஷன் வீட்டுக்கு ஆட்டோ வராம இருந்தா சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 5:57 pm

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு சீமான் அவர்களே , இந்த மாதிரி செருப்படிக்கெல்லாம் நான் அசைஞ்சுக்கொடுக்க மாட்டேன், எனக்கு சூடு சொரணை எல்லாம் போயி 40 , 50 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது என்பதனை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
இப்படிக்கு
******

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 6:00 pm

ராஜா wrote:என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு சீமான் அவர்களே , இந்த மாதிரி செருப்படிக்கெல்லாம் நான் அசைஞ்சுக்கொடுக்க மாட்டேன், எனக்கு சூடு சொரணை எல்லாம் போயி 40 , 50 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது என்பதனை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
இப்படிக்கு
******

ஆமாம் அவர்தான் 7 முறை தமிழகத்தை ஆண்டவர் ஆயிற்றே அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் கலைஞர்  ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Sat Apr 28, 2012 6:21 pm

அண்ணா நம் தமிழனுக்காக போராடிய தலைவர் பிரபாகரன் யுருடன் இருகிறார இல்லையா. என் சந்தேகத்திற்கு கொஞ்சம் விரிவான விளக்கம் தேவை





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 28, 2012 6:47 pm

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்''

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 7:10 pm

இவணுக ஒரு பயலையும் நம்ப யாரும் தயாரில்லை. சீமான் மட்டும் என்னத்த கிழிச்சிடப் போராறு?




avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 7:48 pm

கொலவெறி wrote:இவணுக ஒரு பயலையும் நம்ப யாரும் தயாரில்லை. சீமான் மட்டும் என்னத்த கிழிச்சிடப் போராறு?

பேசவாவது ஆள் இருக்கே யினிவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 7:51 pm

புரட்சி wrote:
கொலவெறி wrote:இவணுக ஒரு பயலையும் நம்ப யாரும் தயாரில்லை. சீமான் மட்டும் என்னத்த கிழிச்சிடப் போராறு?

பேசவாவது ஆள் இருக்கே யினிவன்
அதத்தான சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அய்யா பேசிட்டு இருக்காரு - மாத்தி மாத்தி - ஓகோ அவரு போர் அடிச்சதால வேற யாராவது பேசட்டும்ன்னு சொல்றீங்களா?




avatar
Guest
Guest

PostGuest Sun Apr 29, 2012 10:40 am

கொலவெறி wrote:
புரட்சி wrote:
கொலவெறி wrote:இவணுக ஒரு பயலையும் நம்ப யாரும் தயாரில்லை. சீமான் மட்டும் என்னத்த கிழிச்சிடப் போராறு?

பேசவாவது ஆள் இருக்கே யினிவன்
அதத்தான சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அய்யா பேசிட்டு இருக்காரு - மாத்தி மாத்தி - ஓகோ அவரு போர் அடிச்சதால வேற யாராவது பேசட்டும்ன்னு சொல்றீங்களா?
சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக