புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
30 Posts - 50%
heezulia
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
72 Posts - 57%
heezulia
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_m10சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்] Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடு சொரணையும் ! தமிழனும்!?[சொரணை வர வைப்போம்]


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon May 28, 2012 5:20 pm

நா னும் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் இந்தக் கேள்வி என்னை நோக்கியே. ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?

தமிழன் போன்ற பிரிந்துகிடக்கும் சொரணையற்ற சமுதாயம் உலகில் எங்கும் இருக்க முடியாது. எந்தப் பிரச்சனைகளுக்கும் கோபம் கொள்ளத்தெரியாத சொரணையற்ற சமுதாயம். அன்றாட வாழ்விற்கு சில ரொட்டித்துண்டுகளும் , தனது சுயநலமும் நிறைவேறிவிட்டால் அவனவன் அவன் குடும்பம் தாண்டி தெருவரைகூட சிந்திக்கமாட்டான்.

சாதியாலும், மதத்தாலும் பொருளாதார வர்க்க பேதங்களாலும் ஒவ்வொருவனும் ஒரு தனி உலகம். அறிவு சீவி என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும் சும்பன்கள் எல்லாம் ஒரு தனி இரகம். இவர்கள் எதற்கும் கவலைப்படாமல் எல்லாப்பிரச்சனையையும் எப்படி கதையாக , கவிதையாக மாற்றிக் கல்லாக் கட்டலாம் என்று மட்டும் நினைக்கும் சாம்பிராணிகள் கூட்டம். சமூகம் சார்ந்த கோபம் இல்லை யாருக்கும்.

நீங்கள் உலகப்பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிடுங்கள். உங்கள் மாநிலத்தில் உங்களின் ஒருவனாக மீனவர்கள் தினந்தோறும் சாகிறார்கள். இது ஒரு கொந்தளிப்பாக வந்து இருக்க வேண்டாமா?

தொடரும் மீனவர்கள் படுகொலை
http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_25.html

கடற்புறத்தை எல்லையாகக் கொண்ட மாநிலத்தில் , மீனவ வாழ்க்கை இன்றியமையாதது. அதற்காக உங்களுக்கு எந்த சமூகக் கோபமும் இல்லையா?

எந்த அரசியல் கட்சிக்காவது அல்லது எந்த தமிழனுக்காவது இதில் என்ன மாற்றுக் கருத்து இருக்க முடியும்? ஏன் உங்களால் ஓரணியில் சேரமுடியவில்லை?

மீனவர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, காவிரி, மலம் திண்ணும் பிரச்சனை , தேர் இழுக்கும் பிரச்சனை என்று எதுவுமே யாரையுமே பாதிப்பது இல்லை. இந்த வள்ளலில் இவர்கள்தான் ஈழம் குறித்து கவலைப்படுவார்களாம்.

தான் வாழும் தெரு அளவில்..
ஊர் அளவில்..
மாநிலம் அளவில் தமிழனாக இணைந்து ஒரு பிரச்சனைக்காக குரல் கொடுக்க முடியாதவன் இதையெல்லேம் ஒன்று சேர்த்து ஈழம் வாங்க உதவி செய்யப்போகிறானாம்.

இவர்கள் எல்லாம் தமிழர்கள்தான். தினமும் கடலுகுச் செல்லும் மீனவனும் , கச்சேரிக்கு செல்லும் மைலாப்பூர் மாமிகளும், சினிமாத் தியேட்டரில் கூடும் கூட்டமும், என் போன்றவர்களும் டமிலர்கள்தான்.

1.ம‌லையகத் தமிழன்
2. யாழ்பாணத் தமிழன்
3.கொழும்புத் தமிழன்
4.இலங்கைவாழ் இஸ்லாமியத் தமிழன்
5.கனடாத் தமிழன்
6.மலேசியாத் தமிழன்
7.மொரிசியஸ் தமிழன்
8.மயிலாப்பூர் தமிழன்
9.சிங்கப்பூர் தமிழன்
10.உலகத் தமிழன்
11.தலித் தமிழன் ,அய்யர் தமிழன் அய்யங்கார் தமிழன்

இன்னும் நிறைய டமிலர் வெரைட்டி இருக்கு. எந்த பொதுவான எதிரியை வைத்து அல்லது பொதுவான காரணத்தை வைத்து இவர்களை ஒன்று சேர்ப்பது?. சும்மா நாம் டமிலர் என்று சொன்னால் எவன் தமிழன் என்று கேள்வி வரத்தான் செய்யும்.

இந்தக் கொடுமையைப் பாருங்கள். இது எல்லாம் டமில்நாட்டில் மட்டுமே நடக்கும்.

//இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.//
http://maniyinpakkam.blogspot.com/2011/01/blog-post_13.html


லீனா மணிமேகலை என்பவர் தற்போது எடுத்துள்ள ஒரு சினிமா செங்கடல். http://www.sengadal.com/ தற்போது அது சென்சார் போர்டால் மறுக்கப்பட்டுள்ளது. அந்த சினிமாவை மக்கள் பார்வைக்கு கொண்டுவர சினிமாக்காரர்களான பாரதிராஜா அல்லது சீமான் அல்லது விஜயகாந்த் அல்லது தங்களை இன உணர்வாளர்களாக் காட்டிக்கொள்ளும் சினிமா மக்கள் என்ன செயல்திட்டம் வைத்துள்ளார்கள்?

லீனாவின் ஈழம் குறித்த பார்வையும் மற்றவர்களின் பார்வையும் ஒன்றாக இல்லாவிட்டாலும் அவர் சொல்லவரும் கருத்தைப் பரப்பவாவது ஈழம் என்ற ஒற்றைக் குறிக்கோளில் நின்று செயல்திட்டம் வகுக்கவேண்டுமே? இவர்கள் ஏன் சிந்திப்பது இல்லை.

தனக்குச் சாதகமான வியாபாரம் (அரசியல்,சினிமா, புத்தகம் )இல்லாவிட்டால் இவர்கள் ஒரே கருத்தில் இணையமாட்டார்கள்.


தமிழகம் மாநிலமாக...
கரையோர எல்லைபுற மாநிலமான தமிழகத்திற்கு, அதை ஒட்டியுள்ள இலங்கை என்னும் நாட்டின் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் முக்கியப் பங்கு உள்ளது. இலங்கை குறித்த இந்திய மத்திய அரசின் எந்த முடிவுகளும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படக்கூடாது. சிறப்புச் சட்டம் தேவை. சேது திட்டம் தொடங்கி அன்றாட மீனவர் பிரச்சனைவரை சொம்புதூக்கிகளாகவே தமிழகம் உள்ளது.

இதற்கு தமிழகத்தில் நல்ல அரசியல் தலைமை தேவை. ஏன் என்றால் கச்சத்தீவு போல அரசியல் ஒப்புதலுடனே தாரைவார்க்கும் அபாயமும் உள்ளது.

தமிழ் ஒரு இனமாக...
சாதி, மதம் தாண்டி தமிழன் ஒரு இனமாக் கூடி , மலையக மக்கள் தொடங்கி, மலேசியாத் தமிழர் தொட்டு , தமிழகத்தில் மலம் திண்ண வைக்கப்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் என்ன செய்யலாம் என்று ஒரு தீர்க்கமான அஜென்டா இருக்க வேண்டும்.


வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

இயக்குநர் வைகோ. ஈழம் இனப்படுகொலை
http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_23.html
.

தமிழன் என்ற ஒரு இனம் இல்லை. பல உட்பிரிவுகள் (பொருளாதாரம், சாதி, மத , வர்க்க உட்பிரிவுகள்) அவர்களுக்கான நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன.

.
வெட்கப்படுகிறேன் வருத்தப் படுகிறேன் என்று சொல்வதற்குக்கூட வெட்கப்படும் ஒருவன் நான்
----
கல்வெட்டு
----
சொரணை வர வைப்போம்
தொடரும் ...

avatar
Guest
Guest

PostGuest Mon May 28, 2012 5:25 pm

நீயா தமிழனின் பிள்ளை?

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை
சொல்லடா நீயா தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை! - நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை
கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்
சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ
சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்
தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட
ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்
அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்
இன்னொருவன் கொடி பறக்கும்! - அட
நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்
நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

---
கூடல்
---
சொரணை வர வைப்போம்
தொடரும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 28, 2012 5:38 pm

சிறந்த பகிர்வு . நன்றி
சிறிது நேரம் இதற்க்கு என்ன பின்னூட்டம் போடுவதென்றே தெரியவில்லை மதன்.
இப்போதெல்லாம் சிலரின் பின்னூட்டங்களையும் பதிவுகளையும் பார்க்கும்போது மனம் மரத்துபோகிறது.


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 5:43 pm

சிந்திக்க வைக்கும் பதிவு புரட்சி சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Mon May 28, 2012 5:51 pm

முல்லைப் பெரியாறு போராட்டத்தில்.. தமிழனை மலையாளி நாய்களும் கடிக்கின்றன.. கேரள போலீஸ்காரனும் உதைக்கின்றான் தமிழக போலீஸ்காரனும் உதைக்கிறான் கேட்க நாதியற்றுப் போனானே தமிழன் ஏன்?

இடுக்கி மாவட்டத்தில் இருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இடுக்கி மாவட்டம் 80 சதவீதம் தமிழர்கள் வாழும் மண். தமிழனின் பூமி. இதைக் கேரளாக்காரனுக்கு தூக்கிக் கொடுத்தவன் யார் என்பதில் இருந்துதான் ஆரம்பமாகிறது முல்லைப் பெரியாறு பிரச்சனை.


இடுக்கி மாவட்டம் கேரளாகாரனுக்கு போனது பற்றி கவியரசு கண்ணதாசன் என்ன சொன்னார்; தினமணி கட்டுரையில் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா என்ன சொல்கிறார்? ஜூனியர் விகடன் என்ன சொல்கிறது? தென்மாநிலம் இதழ் என்ன சொல்கிறது? என்ற தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவியரசு கண்ணதாசன் சொன்னது:
"ஆடும் மாடும் அமைச்சர்களாயின
மேடும் குளமும் கேரளர்க்காயின
என்பது கவியரசு கண்ணதாசனின் கவிதை.
மேடு என்பது பீர்மேடு; குளம் என்பது தேவிகுளம்..."
சரி...
ஆடும் மாடும் என்று யாரைச் சொல்கிறார்?

இந்தக் கேள்விக்கான விடையை பின்வரும் ஜூனியர் விகடன் இதழ்ச் செய்தியில் காண்க:
தினமணிக் கட்டுரையில் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா சொல்வது என்ன?
(18.01.2012 தினமணியில் சத்திய மேவ ஜெயதே என்ற கட்டுரை)
தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, இடுக்கி போன்றமேற்குத் தொடர்ச்சி மலைகள் தமிழர்க்குரியவை. இடையிடையே கேரள அரசு மலையாளிகளைச் செறுகிய பின்னரும் இன்றும் அவை தமிழர் பகுதிகளாகவே விளங்குகின்றன.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த மேற்கண்ட பகுதிகள் மலையாளிகளுக்கு அதன் மலைவளம் காரணமாக உடைமையாக்கப்பட சதிச் செயல்கள் நடந்தபோது; அன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரசு அரசு மீளா உறக்கத்தில் இருந்தது.

மண்ணில் தமிழ்மண் என்றும் மலையாளி மண் என்றும் வேறுபாடில்லை. ஆனால் அதில் வாழும் மக்களால் அது பிரிவிளைப் பெறுகிறது. விளைவுகளை எண்ணிப் பார்க்கும் திறனும் உணர்ச்சியும் அற்ற அன்றைய தமிழ்நாட்டுக் காங்கிரஸ் அரசு, மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பதையே அர்த்தமற்றதாக்கிய மலையாளிகளின் சதிச் செயல்களுக்கு உடன்பட்டு; தேக்கடி தொடங்கி இடுக்கி வரை உள்ள தமிழ்மண்ணைத் தமிழர்களோடு சேர்த்து கேரளத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்த கேட்டினைத்தான் இன்றைக்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

-
என்னய்யா கருப்பையா?
அரசு எப்படி அய்யா உறக்கத்தில் இருக்க முடியும்? திறமையும் உணர்ச்சியும் அரசுக்கு எப்படி அய்யா இருக்க முடியும்?
உறக்கத்தில் இருந்த மனிதன் யார்?
திறமையும் உணர்ச்சியும் அற்ற மனிதன் யார்?
சொல்லும் துணிவு உனக்கு இல்லையா?
18.01.2012 ஜூனியர் விகடன் கேள்வி பதில் பகுதியில் சொல்வது என்ன?
கேள்வி: முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு காரணம்; அன்று தேவிகுளம் பீர்மேடு பகுதியைக் கேரளாவுடன் இணைத்த காமராசர்தான் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே!

பதில்: 92% தமிழர்கள் வாழும் தேவிகுளம் பீர்மேடு பகுதி தமிழகத்துடன் இணைக்கப் பட வேண்டும் என்று தமிழர்கள் கேட்டார்கள். அதனால் பசுமலைத் தேயிலைத் தோட்டத்தில் நான்கு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆனால் மொழிவாரி கமி­ன் தலைவராக சர்தார் கே.எம்.பணிக்கர் இருந்தது அவர்களுக்கு வசதியாகப் போனது. அன்றைய பிரதமர் நேருவின் நெருக்கமான நண்பர் வி.கே.கிருஷ்ண மேனன் அதற்கான முயற்சிகள் செய்தார்.
அப்போதைய முதல்வராக இருந்த காமராசரிடம் கேட்டபோது ‡ (தேவி)குளமாவது; (பீர்)மேடாவது... ரெண்டுமே இந்தியாவில் தானே இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.
பிற்காலத்தில் கேரளாஇப்படி நடந்துகொள்ளும் என்று காமராசர் எதிர்பார்க்கவில்லை.

டாக்டர் ந.சேதுராமனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் தென்மாநிலம் என்ற இதழில் தமிழன் என்பவர் எழுதிய கட்டுரை என்ன சொல்கிறது?

மூன்று ஆறுகள் ஓடுவதால் அந்த நிலத்திற்குப் பெயர் மூணாறு பேரி மரங்களை தடவி வருவதாலோ அல்லது பெரிய என்ற சொல் பேரி என்றநீட்டல்காரம் என்பதாலோ பெரியாற்றுக்குப் பேர் பேரியாறு. மலை இடுக்கிற்குள் இருப்பதால் இடுக்கி.

இதே போல் வண்டிப் பெரியாறு; பீர்மேடு; தேவிகுளம் என்று அடங்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் எல்லாம் எம் தேசத்தின் சொத்துகள். மொழி உணர்வும் நில உணர்வும் இல்லாத சொரணை கெட்ட பீடைகள் மாநிலப் பிரிவினையின் போது‡
இந்த நம் நீர்ப்பிடிப்பு சொத்துக்களை எல்லாம் கேரளாவிற்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் விçன்

நாம் தண்ணீர் கேட்டுத் தவிக்கவும்; தரமாட்டேன் என மலையாளிகள் அடம் பிடிக்கவும் காரணம்:
-
தமிழன் குறிப்பிடும் அந்த சொரணை கெட்ட பீடைகள் யார்? அநத பீடைகளின் பெயர் சொல்ல என்ன அச்சம்?
22.01.2012 ஜூனியர் விகடன் கேள்வி பதில் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி என்ன?
கேள்வி: எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது கையயழுத்தான ஒப்பந்தப்படி முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்பட்ட பிறகும், கேரளா பழைய நீர்மட்டத்தைக் கொண்டு வர முற்படாதது ஏன்?

25.11.1979 அன்று எம்.ஜி.ஆருக்கும் அச்சுத மேனனுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையயழுத்தானது. அதுவரை 152 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. அணையை பலப்படுத்திய பிறகு மீண்டும் 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில்தான் தமிழ்நாட்டுக்கான பல்வேறு உரிமைகள் முதன் முதலாக விட்டுக்கொடுக்கப்பட்டது.
அணையின் பாதுகாப்பு முழுவதும் தமிழகத்திடம் இருந்து கேரளா கைப்பற்றிக் கொண்டது. ஆனால் அவர்களுக்கான சம்பளத்தை நாம் கொடுக்க வேண்டும் என்ற வினோதமான ­ரத்தும் அதில் உள்ளது.

படகு விடும் உரிமை பறிபோனது.
குமுளியில் இருந்து அணைவரை உள்ள சாலை முழுவதும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதையும் விட்டுக்கொடுத்தார்கள்.
மீன்பிடிக்கும் உரிமையையும் இழந்தோம். இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்று நாம் அனுபவிக்கும் பல்வேறு அவஸ்தைகளுக்கு காரணமாக அமைந்து விட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில் போடப்பட்ட அந்த ஒப்பந்தம்.

அந்த விட்டுக்கொடுத்தல்தான் இப்போது அணையை உடைக்கும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது.
இதில் ஜூனியர் விகடன் சொல்லாமல் விட்ட செய்தி ஒன்றை நாம் பதிவு செய்கிறோம்‡
மலையாளியான எம்.ஜி.ஆரால் கேரளாவுடன் செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்காக தமிழ்நாட்டின் சார்பாக அனுப்பப்பட்ட குழு உறுப்பினர்கள் மொத்தம் 47 பேர்.

அதில் 46 பேர் மலையாளிகளே மீதமுள்ள ஒருவர் ராஜா முகமது என்னும் தமிழர்.
இப்படி மலையாளிகளை கேரளாவுடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினால் அவர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு சாதகமாக பேசுவார்கள்?
கேடுசெய்த மலையாளியை தெய்வம் என கொண்டாடும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது ‡ எவ்வளவு பெரிய மானக்கேடு?

தமிழ்நாட்டை பச்சைத் தமிழன் காமராச நாடாரும்; பச்சை மலையாளி எம்.ஜி.ராமச்சந்திர மேனனும் தமிழனுக்கு வைத்த கொள்ளியில்‡
மலையாளி நாய்களிடம் தமிழனும்; தமிழச்சிகளும் எப்படியயல்லாம் மானபங்கப்படுகிறார்கள் என்பதை ஜூனியர் விகடன்; தமிழக அரசியல்; குமுதம் ரிப்போர்ட்டர் படம் பிடித்துக் காட்டியுள்ளன. அவைகளைப் படிக்கும் போதே நம் நெஞ்சம் கொதிக்கிறது. அங்கே மானபங்
கப்படுத்தப்படும் தமிழர்கள் நெஞ்சம் எப்படி பதைபதைத்திருக்கும்?
-
ஏன்டா தமிழ்நாட்டு நாயே... உன்னை அடிச்சாலும் எரிச்சாலும் கேள்வி கேட்க எவன்டா இருக்கான். பொழைக்க வந்த நாய்க்கு எதுக்குடா திமிருன்னு என் வீட்டு மேலே கல்லெறிஞ்சு கலாட்டா செய்துவிட்டுப் போனது ஒரு கும்பல். அடுத்து என்ன செய்வாங்களோன்னு பயந்து போய் தலைமறைவா சுத்திக்கிட்டு இருக்கேன்.

தமிழர்கள் எல்லோரும் பாதுகாப்பு இல்லாத நிலையில் உசுரை கையில பிடிச்சுக்கிட்டு தான் இருக்கோம். இது இடுக்கி மாவட்ட அதிமுக செயலாளர் சூட்டுச் சாமியின் புலம்பல்.
யி
ரோ­முள்ள மலையாளியே... தமிழ்க்கார நாய்களின் கடைகளில் பொருட்களை வாங்காதே என மாலையாளத்தில் போஸ்டர்கள் அங்கங்கே ஒட்டப்பட்டிருந்தது என்கிறது ஜூனியர் விகடன்.
-
உடும்பன் சோலை பகுதியில் உள்ள பொன்னாங்கன்னி எஸ்டேட்டில் மேஸ்திரி வேலை பார்க்கும் அருணாச்சலம் தன் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய ஒரு டீக்கடைக்கு போயிருக்கிறார்.

அங்கிருந்த ஒருவன் "பாண்டி பயலுக்கு சாயா கொடுக்காதே மூத்திரம் கொடு" என்று பேசியிருக்கிறான்.
-
கேட்டரிங் பயிற்சிக்காக கேரளாவுக்குப் போன உசிலம்பட்டி மாணவரான ராகேஷை பாய்லரில் தள்ளி இருக்கிறார்கள். தீக்காயங்களோடு இப்போது உசிலம்பட்டி ஆஸ்பத்திரியில் இருக்கிறார். தமிழன்ங்கிற காரணத்துக்காகத்தான் இப்படிப் பண்ணி இருக்கிறார்கள் என்கிறார் அந்த மாணவர்.
-
உடும்பன்சோலை பக்கத்தில் இருக்கும் பொன்னம்மாள் சொல்வது இது.
திடீர்ன்னு ஒரு கும்பல் வந்துச்சி. இருக்குறவங்க எல்லாரையும் அடிச்சாங்க. பாறையிலிருந்து தள்ளிவிட்டு "பட்டி மவளே"ன்னு ஒருத்தன் திட்டினான். இன்னொருத்தன் அடிச்சான். பயந்து போய் இருட்டுல இரண்டு மலையச் சுற்றி வந்தோம். இனிமே அந்தப் பக்கமே போக மாட்டோம்.

மளிகைக் கடைக்குப் போனால் "தமிழக்காரப் பட்டிகளுக்கு எதுவும் கொடுக்க மாட்டோம்" என்று விரட்டுவாங்க என்கிறார் மீனா என்பவர்.

இரவு 9 மணிக்கு மேலே கூட்டம் கூட்டமாக வராங்க. வீடு புகுந்து தாக்க ஆரம்பிக்கிறாங்க. ராத்திரி நேரமின்னு கூட பாக்காம காலி பண்ணிட்டு ஓடுங்கடா பாண்டின்னு அடிச்சி விரட்டுவாங்க பொம்பள மேல கை வச்சதும் கோபப்படுற ஆம்பளைங்களை அடிச்சி கீழே போட்டு மிதிக்கிறாங்க. இதையயல்லாம் நீங்க பாத்துருந்தா அவங்களை சுட்டுக் கொன்னுருப்பீங்கன்னு ஆவேசப்பட்டார் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த சுப்புராஜ்.
-
ஆம்பளை ஆளுங்கள அடிக்கிறாங்க. பொம்பளை ஆளுங்களை வாய்ல சொல்ல முடியாத அளவுக்கு திட்றாங்க போலீஸ்கிட்ட சொன்னா "எங்களால எதுவும் செய்ய முடியாது உங்க நாட்டுக்கு போயிடுங்க"ன்னு விரட்டுறாங்க என்கிறார் கோணாம்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி.
-
கேரளாவிற்குள் தமிழக போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தால் கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள் என உத்தரவு போடுகிறான் இடுக்கி மாவட்ட எஸ்.பி.யான வர்கீஸ்.
தமிழ்நாட்டுக் காவல்துறை என்ன செய்கிறது?
தென்மண்டல டி.ஐ.ஜி ஜார்ஜ் ஒரு மலையாளி. தென்மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ் ஒரு ஒரிசாக்காரன். தேனிப்பகுதியில் போராடிய தமிழர்களை விரட்டி விரட்டி அடித்து; அவன் கையை உடை, காலை உடை நான் பாத்துக்குறேன் என போலீசுக்கு உத்தரவு போடும் ஜ.ஜி. ராஜேஸ்தாஸ் காட்டுக்கூச்சலை தமிழகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
இந்த ஒரிசா மாநில காவல் நாய்க்கு எப்படி வந்தது இந்த தைரியம்? மேலே இருக்கிற மலையாள நாய் தந்த தைரியமா?
தமிழ்மண் தமிழனிடம் இல்லாததால்தான் ‡ 80 சதவீதம் தமிழர்கள் வாழும் தமிழ்ப்பூமியில் 20 சதவீதம்கூட இல்லாத மலையாள நாய்கள் தமிழர்களை கடித்துக் குதறுகின்றன.

தமிழ்நாட்டில் ஒரு தமிழன் ஆட்சி இல்லை என்பதால்தான் ‡ போராட்டப்பகுதியில் ஒரு மலையாளியும்; ஒரு ஒரிசாக்காரனும் சேர்ந்து தமிழனைக் காலை ஒடி கையை ஒடி என உத்தரவிடுகிறார்கள்.

அங்கே இருக்கிற மலையாள நாய்களுக்குப் பாடம் புகட்ட வேண்டுமானால் ‡
அங்கே தமிழனுக்கு விழுகிற ஒவ்வொரு அடிக்கும் இங்கே இருக்கிற மலையாள நாய்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக விழுந்தால்தான் பிரச்சனை தீரும்.
அதற்கு-

தமிழ்மண் தமிழனிடம் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழனின் ஆட்சி நடக்க வேண்டும்.


--
அச்சமில்லை
--
சொரணை வர வைப்போம்
தொடரும்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 28, 2012 7:39 pm

சூடு சொரணை மட்டும் அல்ல , மானம், வெட்கம், ரோசம் என்பதும் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் மிகுந்த வருத்தத்தையளிக்கிறது. மிக அருமையான பதிவைத் தந்த தம்பி புரட்சிக்கு என் வணக்கங்கள். :வணக்கம்:

avatar
Guest
Guest

PostGuest Tue May 29, 2012 10:59 am

உலகத் தமிழினமே... ஒன்று கூடுவோம்!

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது.

அழகான அவ்வனத்தின் மேனி பசுமை கண்டு மெய்மறந்து அங்கேயே தங்கிவிடும் எண்ணம் கொண்டு ஒரு வியத்தகு இருப்பிடம் நிறுவி, காடெங்கும் கர்ஜித்து, நான் தான் ராஜா வந்திருக்கிறேன் நீங்களெல்லாம் எனக்குக் கீழென நாவினால் பறை முழங்கி திரிகிறது.

அந்த நான்கைந்து ஆடுகள் அதன் கர்ஜனையை தங்களின் ஒற்றுமையால் உடைத்தெறிந்து தன் சுதந்திரம் பாதித்திடாத பலத்தில் சுற்றித் திரிகின்றன. அப்படி ஒரு தினத்தில் அந்த 'தின்று கொழுத்த சிங்கம் காடு வளைக்க துணிந்து, பசிக்கென மேய்ந்த ஆடுகளை கொல்லத் திட்டம்தீட்டி நாலு கால் பாய்ச்சலில் அந்த ஆடுகளை நெருங்க, நெருங்கிய சிங்கத்தை ஆளுக்கொரு காலாக பிடித்து வனத்தின் எட்டாதூரத்தில் எட்டி வீசியது அந்த நான்கைந்து ஆடுகள்.

தோல்வியும், பொறாமையும், கோபமும், மண் ஆளும் வெறியுமாய் 'நாக்கில் மனித உயிர் குடிக்கும் ரத்தமென சொட்ட, மீண்டும் அந்த ஆடுகளின் பின் அலைந்ததந்த சிங்கம். சிங்கத்திடம் அண்டி ஒதுங்கி அது போட்ட எச்சில் உணவைத் தின்று வாழவும் சில தந்திர நரிகள் ஆடுகளின் தோட்டத்திலிருந்து பிரிந்து சிங்கத்திடம் செல்லாமலில்லை.

நரிகள் சேனையானதில் சிங்கம் தன்னை ராஜாவானதாய் எண்ணி, நரிகளின் தந்திர யோசனையில் ஒவ்வொரு ஆட்டினையாக வளைத்து சண்டைக்கிழுத்து, ஒரு கட்டத்தில் காடு கணக்க கர்ஜித்து 'தான் மீண்டும் சண்டைக்குத் தயாரென அறிவிப்பு விட்டததந்த கோழைச் சிங்கம்.

மேலும், வீரத்தோடு நெருங்க இயலா ஒற்றுமை மிகுந்த அந்த ஆடுகளின் கண்களில் மண் தூவி தூவி மிக தந்திரமாக ஒவ்வொரு ஆடுகளையும் தனித் தனியாய் பிரித்து, தனித்து நிற்கையில் தடார் தடாரென கொன்று வீழ்த்தியது.

நாளடைவில், ஒற்றுமை குலைந்து திரிந்த ஆடுகளின் மொத்தக் கூட்டத்தையும் அழித்து அழித்து ஆடுகளின் அடையாளத்தையே அழிக்க அந்த கோழை சிங்கம் தயாரானது. கடைசி ஆடு மிச்சமிருக்கும் தருவாயிலும், வனத்தின் நடுப்பகுதியில் ஏறி நின்று வெற்றி வெற்றி என்று கூச்சலிட்டு தீவிரவாதத்தை ஒழித்து விட்டோமென்றும், நாங்கள் எல்லாம் வீர சூரர்களென்றும், ஆடுகளைக் கொன்றது அரச தர்மமென்றும் ஊளையிட்டுக் கொண்டது நேரே நின்று நெஞ்சில் அடிக்க துப்பில்லா சிங்கம்.

இங்கு, சிங்கம் யாராக வேண்டுமாயினும் இருந்துவிட்டுப் போகட்டும்; ஆடுகளை நாமென்று எண்ணிக் கொள்ளுங்கள். புலி விரட்டிய தமிழச்சியின் பால்குடித்த வழி தோன்றல், சென்ற இடமெல்லாம் வென்ற கூட்டம், கையேந்தி வந்தவர்க்கு வாழை விரித்து படையலிட்ட தானப் பரம்பரை. தனக்கு கீழுள்ளோரை வளர்த்தும் மேலுள்ளோரை மதித்தும் 'பண்பு குறையாமல் வாழ்ந்த ஒரு பெருமை மிக்க இனம், இன்று எங்கு நிற்கிறது கண்டீரா உலகத்தீரே?

தமிழனின் புகழை ஒவ்வொன்றாய் சொன்னால் கட்டுரை போதாது, தமிழன் என்பவன் பிறரை வாழவைப்பவன் என்ற ஒற்றை அர்த்தத்திலிருந்து இன்றும் தாழாத ஒருவனாய் கேட்கிறேன்; உலகின் உடம்பெங்கும் பரவிய வேராய் இருந்தும் ஏன் அழிகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே வதை படுகிறது நம்மினம்? ஏன் ஆங்காங்கே கொண்று குவிக்கப் படுகின்றனர் நம் மக்கள்? என்னாயிற்று நம் புகழெல்லாம்? எங்கே போனது நம் வீரம்? என்ன ஆனேன் நான்.. நீ .. மொத்த தமிழரும் என்று யோசித்தீரா உலக தமிழினமே?

ஒரு தமிழின குழந்தை வளரும் போதே, உடுத்திய கால் சட்டை உருவி பாலினம் பார்த்து ஆணென்றால் குண்டு வைத்தும் பெண்ணென்றால் கைவைத்தும் செல்கிறார்களாம்.

பத்து பேரில் ஒரு பெண் அழகென்றால் பிடித்து, கேட்க யாரேனும் வந்தால் அவர்களையும் பிடித்து, அழகு நுகர்ந்து, பெண்மை குலைத்து, உயிர்கொன்று, உறுப்பறுத்து, பார்; தீவிரவாதிகளை பிடித்துவிட்டோம் என்று செய்தி போடுகிறார்களாம்.

பசுமை குலையாமல் விளைந்த நிலத்திலிருந்து வந்த இனத்தின் பார்த்து பார்த்து கட்டிய வீடுவரை பிடிங்கிக் கொண்டு, காட்டில் இடம் தந்து 'போ வேண்டுமெனில் வாழ்ந்து கொள்; உயிரையாவது காத்துக்கொள் என்கிறார்களாம். யாருக்கு யார்வந்து உயிர் பிச்சை போடுவது யோசித்தீரா உலகத்தீரே.

இன்று செம்மொழி ஆனது தமிழரை சற்று திரும்பி பார்க்கிறது உலகம். நாளை மறைக்கப் பட்ட நம் அத்தனை புகழும் வெளிவந்து நம்மை போற்றி நிற்கையில் இழந்த உயிர்களுக்கெல்லாம் இழப்பிற்கான ஈடிணை நம்மால் திருப்பித் தந்திட இயலுமா?

கத்தி எடுத்து ஒருவன் வெட்டுகையில், துப்பாக்கி கொண்டு சுடுகையில், பீரங்கி கொண்டு அடிக்கையில் குடும்பத்தோடு தன்னை தன் இனத்தின் விடுதலைக்காய் மாய்ந்துக் கொண்ட மக்கள்; நாளை குதூகலிக்கும் பொழுதுகளுக்காய் முழுதுமாக இல்லாமல் போகும் முன்; இருப்பவர்களை காத்துக்கொள்ளவேணும் சிந்திப்பது நம் கடமையில்லையா? மனிதமில்லையா உலகத்தீரே?

எத்தனை உயிர், எவ்வளவு ரத்தம் விட்டு காத்த மண்ணில்; குடில் புகும் பாம்பு போல புகுந்து, கொடிநாட்டி செல்கிறானாம் எவனோ ஒரு வந்தேறி குடியானவன். நீதிபதியிலிருந்து நம் கால்சட்டை வரை, கொஞ்சமேனும் ஒட்டியிருக்கும் தமிழரென்னும் வாசனையை கூட அகற்றி விட போகிறானாம் 'எங்கிருந்தோ வந்து நம்மை இடைசாதி நாமென்றவன்.

இப்படி, தமிழர் வாழ்ந்த அத்தனை அடையாளமும் மறைக்கப் படுகிறது; ஒழிக்கப் படுகிறது; இனி எத்தனை பிரபாகரன்களை வைத்து மீட்டெடுக்கப் போகிறோம் தொலைந்து போகுமந்த ஈழ மண்ணினை, யோசித்தீரா?

இறந்த ஒரு வீரனை கூட 'விடுதலை கனவோடு உறங்கும் வீரமறவர் கூட்டமெங்கள் கூட்டம், எமக்கு மரணமென்பதே இல்லை, எம் வீரர்கள் விடுதலை கனவோடு உறங்குகிறார்கள், சுதந்திர விதைகளை தன் உயிரினால் பயிரிட்டு விட்டு ஓய்வு கொண்டுள்ளார்கள், மீண்டும் சொட்டிய ரத்தமெல்லாம் தமிழராகவே முளைத்து வருவார்கள், அன்று பிறக்கும் ஒரு தனி நாடு. அது கொடுக்கும் ஈழத்தின் முழு விடுதலையையும் என்று சொல்லி, கனவுகளோடு கட்டி வைத்திருந்த துயிலம் கூட (மாவீரர்களின் சமாதிகள் வைத்திருந்த இடம்) இன்று தகர்த்து நொறுக்கி அகற்றப் பட்டிருக்கிறதே ஈழத்தில். 'நெஞ்சு பதைக்கவில்லையா?

நான்கு குழந்தைகள் இருக்கிறதா இரண்டை பிடி, இரண்டு இருக்கிறதா ஒன்றை பிடி, ஒன்றே இருந்தாலும் அது எம் விடுதலைக்காய் இருக்கட்டும் இந்தா பிடியென பெற்ற குழந்தைகளை எல்லாம் அனுப்பி அனாதையாய் வாழும் 'அந்த தமிழச்சி வயிற்றிலெல்லாம் நெருப்பெரிகிறதே அதை எது கொண்டு அணைப்பீர் உலக தமிழினமே?

கணவன் இறந்தால் முண்டச்சி, கணவன் வென்றால் மண்ணின் விடுதலை என்று வாழ்ந்த பெண்களுக்கெல்லாம் இனி நம்மால் என்ன நீதி கிடைத்துவிடும் உலக தமிழினமே?

சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் வீட்டில் கொத்தாக குண்டு போட்டு கொத்தாக சிதைந்து போன உடலின் தசைகளை கூட்டி எரித்துவிட்டு ஈழத்துத் தெருவிலெல்லாம் பயித்தியமென அலைந்துக் கொண்டிருக்கும் எத்தனையோ வயோதிக தமிழனுக்கு 'உலக தமிழராய் நாமென்ன பதில் வைத்திருக்கிறோம் உறவுகளே?

கடைசியில், அவன் போனானா நீ போ, அவனும் போயிட்டானா நீ போ, அவளும் போயிட்டாளா இதோ நான் வரேனென்று தன் உயிர்களை துச்சமென வைத்து, அறுபது வருடங்களாக, வீட்டுப் பெண்களெல்லாம் போராடிய ஒரு இனத்தின் சுதந்திரம் உலகத்தின் கண்களில் தோல்வியாக மட்டுமே தெரிவிக்கப் பட்டுள்ளதே என்ன செய்து விட்டோம் உறவுகளே?

தழைத்து வாழ்கிறானே அவனை அழித்து விட்டு அவன் நாடுகளை பிடித்து விடுவோம் என்றா போராடத் துணிந்தான் தமிழன், மாறாக அடிமை தனம் ஒழித்து, இரண்டாம் பட்ச பேதம் உடைத்து, தன் சகோதரிகளின் மார்பில் தொட்டவனை கை முறித்து ஒதுங்கி போ; எங்களை தமிழராய் ஒதுக்கியேனும் வாழவிடு என்று கேட்டது தவறா?

தவறில்லை. ஆனால் நம் தோட்டத்திலிருந்து பிரிந்து சென்ற அந்த நரி போல, நம்மில் இருந்து பிரிந்து சென்றதும், பிரிந்தும் அந்த கோழையோடு சென்று வாலாட்டியதும், நம்மை பற்றி நாமே சொல்லிக்கொடுத்து எதிரியை நம் இனத்தின் அழிப்பு மீது கொடி நாட்ட வைத்ததும், பத்து தலை கொண்ட நம் சக்தியை உடைத்து உடைத்து துளி துளியாய் பிரித்துக் கொண்டதும், நம் தவறுகளை நமக்குள்ளேயே நின்று அகற்றிக் கொள்ளாமல் தூர நின்று பரிகசித்துக் கொண்டதும், நிமிர்ந்து பார்த்து யார் மேலோ காரி உமிழ்வதாய் எண்ணி தன் மேலேயே தானே உமிழ்ந்து கொண்டதும் தவறு. தவறு. தவறில்லையா உலகத் தமிழினமே?

அந்த தவறுகளில் தான் சிதைந்து சுக்குநூறாகி பிரிந்து உடைந்து தொலைந்தே போகிறோம். இன்னும் கூட வென்றுவிட வாய்ப்புகள் நிறைய வைத்திருக்கிறோம். எஞ்சிய ஒரு இனத்தின் மிஞ்சிய உயிர்களையாவது காப்பாற்ற 'வேறொன்றும் வேண்டாம் நம் உலக தமிழர்களின் ஒட்டுமொத்த 'ஒற்றுமை' ஒன்று போதும், உலகை ஒரு சுண்டு விரல் சுட்டிக் காட்டும் வேகத்தில் தமிழரென்னும் இனம் தன்னை வெகு சுலபமாக கம்பீரப் படுத்திக் கொள்ளும்.

இன்றென்றில்லை, என்றுமே நாம் வீரத்திற்காக போர் செய்திருக்கிறோம், வென்றோமென நிருபித்துவிட்டு மண்ணாசை கூட இல்லாமல் எத்தனையோ இடங்களை மண்ணினை நாட்டினை ஒரு கொடிநாட்டியதோடு விட்டுவந்திருக்கிறோம். மண்ணிற்கு; மனிதனை தாண்டி 'ஆசை கொள்ளாதவன் தமிழன், என்பதற்கான வரலாற்றுக் நிகழ்வுகள் நிறையவே உள்ளன.

இனியும், நாம் பிறரின் மண்ணோ, பிறரை துன்புறுத்தும் எண்ணமோ கொள்ளப் போவதில்லை. யாரையும் அடிமையாக்கி அவன் தலைமேல் ஏறி நின்று ஆட்சி முழங்கவோ நமக்கு ஆசை இல்லை. ஆனால் தன் அடிப்படை உரிமைக்கு போராடிய தன்னின மக்களுக்காய் ஒரு சின்ன குரல் கொடுப்போமே;

சுற்றி நிற்கும் பத்து நூறு ஆயிரம் கோடான கோடி பேரும் சேர்ந்து ஒரு ஒற்றை குரலை நம் மக்களுக்காய் கொடுப்போமே; தன்னை இணைத்துக் கொண்ட ஒரு குடையின் கீழ் 'நம்மை அழிக்கத் துணிபவரின் பயத்தை சற்று உலகிற்கு நடுங்க நடுங்க காட்டுவோமே;

காலம் காலமாய் வளர்த்த நம் வீரம் பண்பு பாரம்பரியமென நம் அத்தனை கொடையின் துண்டிப்பும் ஒரு கற்றை நூலிழையில் அறுபடும் இந்நிலையிலாவது, 'நம் மீதமுள்ள அடையாளங்களையாவது, தன் மொழிக்கென உருவாக்கப் போராடிய மக்களின் மிச்சமுள்ள தேசத்தையாவது, இத்தனை வருடங்களாய் உயிர்விட்டு சிந்திய ரத்தக் கரையினை வரலாற்றிலிருந்து பிறர் அகற்றிவிடும் முன் 'எட்டிப் அதை பிடித்துக் கொள்வோமே? அந்த நான்கு ஆடுகளின் ஒற்றுமையை மீண்டும் கொண்டு 'தமிழ் என்னும் ஒரு குடையின் கீழ் தமிழர் என்னும் ஒற்றை பலமாய் மீண்டும் சேர்ந்து நிர்ப்போமே உறவுகளே?

இறந்த; இறக்க இருக்கும் அத்தனை லட்ச உயிர்களின் கதறல்களுக்கும் செவி சாய்ப்பீர்களா? என்று கேட்கமட்டும் இதை எழுதவில்லை. செவி சாயுங்கள், சிந்தியுங்கள், எதையேனும் செய்ய துடித்தெழுங்கள் என்று கேட்கிறேன்.

தமிழுலகின் மைந்தர்களாகிய நாம், நம் பிடியில் இருக்கும் ஒரு துளி தயக்கத்தை துச்சமென உடைத்தெரிந்துவிட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கையில்; நமக்கான நீதியை இவ் உலகம் கொடுக்காமலா போகும்?

இன்னமும் கூட, ஊசலாடும் உயிரை இழுத்துப் பிடித்து, வெறிக்க வெறிக்க தன்னிரு விழிகளை திறந்து, நமக்கென மலரப் போகும் ஒரு தேசத்தின் மலர்ச்சியை, தான் அடைந்து விட்ட சுதந்திரத்தை, இத்தனை வருடம் காத்திருந்த ஓர் விடுதலையை காண 'விடப் போகும் உயிரை கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு அடிமைகளுக்கு நிகராய் உயிர்பயம் அறுத்துக்கொண்டு வாழும் சொற்ப மக்களுக்காகவாவது ஒன்று கூடுவோம்; வாருங்கள் உயர் உலக தமிழினமே!!

--
முத்துகமலம்
--
சொரணை வர வைப்போம்
தொடரும்

avatar
Guest
Guest

PostGuest Thu May 31, 2012 4:51 pm


தமிழா.....

காலத்தின் சுழலில்
கட்டுகோப்பாக...

இருந்த கடல் அலை கூட...

சுனாமியாக மாறி
பொங்கி விட்டது...

ஆனால்...

கொத்து கொத்தாக...

தமிழனின் உயிர்
பிரிந்த போதும்...

பொங்கி எழமால் இருப்பது
நியாயமா...?

இதுதான்...

தமிழனின் வீரம் வெறும்...

ஏட்டோடு போய் விட்டதா...?

தமிழனின் வீரம்...

மீண்டும் முளைத்து
வருவோம் நாம்.....
--
எழுத்து
--
சொரணை வர வைப்போம்
தொடரும்

avatar
Guest
Guest

PostGuest Thu May 31, 2012 4:56 pm


வெற்று சவடால் அரசியல் மேடை பேச்சில் எச்சில் தெறிக்க..
ஆட்டு மைந்தைகள் கர்சீப் கொண்டு அதை துடைக்க..
மைக்கும் அதிர்ந்து தன்னை நிறுத்தி கொண்டது
நம் வேலைக்கு இவர்கள் வேட்டுவைப்பார்கள் என்று..

ஈழத்தில் உன்உறவுகள் செத்து கிடக்க..
இவனோ தேரதல் பிரியாணியை தின்று நடக்க..
சொறிநாய் ஒன்று காலை தூக்கியது இது கல்லோ என்று..

தலைவனின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு அசையாமல் நின்றான் வேறுயாரும் கிழித்துவிடக்கூடாது என்று..
தின்ன அசைந்து வந்த எருமை மாடு அவனை கண்டு ஒதுங்கிபோனது இவனை விட நாம் மேல் என்று..

ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள்-என்னால் என்ன செய்யமுடியும்?
காவிரி பறிபோகிறது என்னால் என்ன செய்யமுடியும்?
முல்லை பெரியாற்றை உடைக்கபோகிறார்கள்- என்னால் என்ன செய்ய முடியும்?
சினிமா தியேட்டர் கவுண்டரில் நின்றான் இன்று தன் தன்னால் முடியும் என்று..

தம்பி தமிழக மீனவர்கள் சிங்கள இனவெறியரால் சுடபடுகிறார்கள் பதிலளித்தான் அது டீசல் கடத்துவதால் வரும் பிரச்சனை என்று..
மீன்கடையில் மீன் விலையை கேட்டு திரும்பிநடந்தான் இன்று நம் வீட்டில் பிரச்சனை என்று..

மராத்தியன் நைய புடைக்க..
மலையாளி போட்டு தாக்க..
கன்னடன் செருப்பால் அடிக்க..
இந்திக்காரன் காறி உமிழ..
நம்மவன் அனைவரிடமும் அடிவாங்கி சொன்னான்..
வலிக்கலயே.. அவர்களும் நம் இந்திய சகோதர்களே! என்று..

சீக்கியன் சொன்னான் தேசியத்திற்காக தலைபாகையை கழற்ற முடியாது நாங்கள் முதலில் சீக்கியர்கள் என்று..
தமிழன் கட்டியிருந்த கோமணத்தை அவிழ்தான் நாம் அனைவரும் இந்தியர்கள் என்று..

சீக்கியன் தன் மூதாதையர் வாளை வீரத்தோடு தன் இடுப்பின் சொருகினான் இது எங்கள் சின்னம் என்று..
தமிழன் தன் மூதாதையர் வாளை பொருட்காட்சிக்கு கொடுத்தான் இது இந்தியத்தின் சின்னம் என்று..


அந்நியர் தம் ஆக்ரமிப்பை எதிர்த்து வாளேந்திய தமிழனின் கை இன்று ..
வெள்ளைத்தோல் மோகத்தால் வேறு எதையோ ஏந்தி நிற்கிறான்..

தமிழ்த்திருமகளே நீ வருக.. தமிழர் தம் வாழ்வில் ஒளி தருக..
தமிழன் வரலாறு தொடக்கம் என்றும் உனக்கு சிறப்பான இடமுண்டு..

எதைச் செய்ய வேண்டும் என்று கூறு..
மறந்துபோன வீரத்தை எம்மக்களுக்கு ஊட்டு..
எதையும் ஏற்கும் துணிவைக் கொடு..
தமிழக விடுதலை வேள்விக்குத் தயாராக்கு..
எம்மை எதற்கும் துணிந்த இனமாக்கு..
--
தமிழ்நாடு டாக்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக