புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
3 Posts - 60%
Manimegala
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
11 Posts - 4%
prajai
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
9 Posts - 4%
Jenila
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
4 Posts - 2%
Rutu
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
2 Posts - 1%
jairam
கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10கூட்டணிக் கொள்ளை!…. Poll_m10கூட்டணிக் கொள்ளை!…. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணிக் கொள்ளை!….


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 13, 2012 12:12 pm

சிமென்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு விலையை அதிகமாக நிர்ணயித்து விற்றுப் பெரும் லாபம் ஈட்டிய குற்றத்துக்காக, 11 சிமென்ட் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.6,307 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் “”போட்டியை உறுதி செய்யும் ஆணையம்” இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட சிமென்ட் நிறுவனங்கள் 2009 முதல் 2011 வரையிலான நிதியாண்டுகளில் ஈட்டிய லாபத்தின் அடிப்படையில்தான் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

தங்கள் லாபத்தையும் முழுமையாக கணக்குக் காட்டியிருப்பார்கள் என்ற பொதுவான நம்பிக்கையில்தான் லாபத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த முறைகேடு பற்றித் தெரிந்தும் தலையிட்டு, சீர்செய்யாமல் வேடிக்கை பார்த்த சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் ரூ.73 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதென்ன வர்த்தகப் போட்டியை உறுதி செய்யும் ஆணையம்? ஒருவர் மட்டுமே ஒரு தொழிலில் ஈடுபடும் ஏகபோகம் இருப்பதால்தான் அவர்கள் வைத்ததே சட்டமாகவும், தரம் நல்லதோ கெட்டதோ அதை நுகர்வோர் வாங்க வேண்டியது கட்டாயமாகவும், அந்த நிறுவனங்கள் வைத்ததே விலையாகவும் இருந்து வருவதை ஒழிப்பது என்பதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை நோக்கம்.

பல நிறுவனங்கள் ஒரே பொருளைத் தயாரித்து விற்பனை செய்யும்போது அவர்களுக்குள் நியாயமான தொழில் போட்டி ஏற்படும். அதனால், பொருளின் தரமும், நியாயமான விலையும், தட்டுப்பாடு இல்லாத நிலையும் சந்தைப் பொருளாதாரத்தால் ஏற்படும் என்பதுதான் எதிர்பார்ப்பு.

1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவாக சந்தைப் பொருளாதாரக் கொள்கை லைசென்ஸ் பர்மிட் காலகட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பல தனியார் நிறுவனங்கள் களமிறங்கின. இவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டதால் தரத்துக்கு முன்னுரிமை தரப்பட்டு வந்தது என்று கூறப்பட்டது. ஆனால் இந்த நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொள்வதில் காட்டிய போட்டியை விலைக் குறைப்பிலும் தரத்தை அதிகரிப்பதிலும் காட்டவில்லை என்பதுதான் நிஜம்.

தனியார்மயமாக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நுகர்வோரை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக 2002-ல் கொண்டு வரப்பட்டதுதான் வர்த்தகப் போட்டியை உறுதி செய்யும் ஆணையம்.

தி காம்படிஷன் ஆக்ட் 2002, 2007-ல் திருத்தப்பட்டு, மேலும் பல புதிய நிபந்தனைகளும் சட்டத்திட்டங்களும் வர்த்தகப் போட்டி இல்லாத தனியார் ஏகபோகத்தைத் தடுப்பதற்காக சீரமைக்கப்பட்டது. இனி பிரச்னைக்கு வருவோம்.

எந்தவொரு பொருளின் விலை உயர்வும் தவிர்க்க முடியாதது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுண்ணாம்புக் கல் கொண்டு வரும் லாரி வாடகை, சுண்ணாம்புச் சுரங்க வயல்களின் குத்தகை உயர்வு, வேலையாள்களின் சம்பள உயர்வு என பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இத்தகைய நியாயமான காரணங்கள் எதுவுமே இல்லாமல், சிமென்ட் நிறுவனங்கள் அனைத்தும் கூட்டாகத் திட்டமிட்டு உற்பத்தியைக் குறைத்து, சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கி, விலையைக் கூட்டியுள்ளன. இது வெறும் முறைகேடு அல்ல. பெரும் குற்றம்.

மிகஅதிகபட்ச அபராதமாக ரூ.1323 கோடி செலுத்தப்போகும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், அதையடுத்துள்ள ஆதித்ய பிர்லா குழுமம், அல்ட்ராடெக், இந்தியா சிமென்ட்ஸ் உள்ளிட்ட இந்த 11 நிறுவனங்களும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை 90 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பது ஆணையத்தின் உத்தரவு. ஆனால் இந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்து அபராதம் செலுத்தாமல் தவிர்க்க முயலும்.

முறையீடும், விசாரணையும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஆட்சியாளர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்ப்பு மறக்கடிக்கப்படும். அல்லது நலிந்துகிடக்கும் சிமென்ட் தொழிலை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற சாக்கில் அபராதத் தொகையை ரத்து செய்யவும் அரசு துணியும். எதுவும் நடக்கலாம்.

பெரிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்துக்கொண்டு, பேசி முடிவெடுத்து, வேண்டுமென்றே ஒரு தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரும் லாபத்தைச் சம்பாதிப்பது மிகப்பெரும் குற்றம். இந்தக் குற்றத்தைக் கண்டுபிடித்து, தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும்தான் வர்த்தகப் போட்டியை உறுதிசெய்ய ஆணையம் அமைக்கப்பட்டது. சிமென்ட் தட்டுப்பாடு அல்லது விலையேற்றம் நடைபெறும் அதே காலகட்டத்தில், அப்போதே அதை கண்காணித்து ஆணையம் நடவடிக்கை எடுத்திருந்தால், எத்தனை கோடி நடுத்தர மக்கள் பலன் அடைந்திருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியதுதான். இப்போதாவது அபராதம் விதித்தார்களே என்று ஒரு குடிமகன் திருப்தி அடைந்தாலும்கூட, இந்த நடவடிக்கையால் அந்தக் குடிமகன் ஏற்றுக்கொண்ட இழப்பை அரசு எவ்வாறு ஈடு செய்ய முடியும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரு குடிமகன் கொடுத்த கூடுதல் விலை நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கப்போவதில்லை.

இப்போது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை இந்த சிமென்ட் நிறுவனங்கள் அப்படியே முழுமையாகச் செலுத்தினாலும்கூட, இது அரசுக்குப் போய்ச் சேரும்தான். தவறு செய்த நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டன என்று வேண்டுமானால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனால் என்ன லாபம்? நடவடிக்கை எடுத்தார்களே என்கின்ற மனத்திருப்தி கிடைப்பதுடன் சரி.

இவ்வாறு கூட்டணி அமைத்து விலையேற்றம் செய்யும் தொழில்கள் நிறைய உள்ளன. அரிசி, பருப்பு மண்டிகள், அடுக்குமனை மற்றும் மனை விற்பனைத் தொழில், சர்க்கரைத் தொழிற்சாலைகள், பருத்தி, மஞ்சள் கொள்முதல் செய்யும் தனியார் அமைப்புகள் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இவர்கள் கூட்டணி அமைத்து நிர்ணயிக்கும் விலைதான் அன்றைய நாளின் விலை. ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நுகர்வோரைத் தள்ளுகிறார்கள்.

இத்தகைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து தண்டிப்பதும், இத்தகைய நிறுவனங்களை அரசே ஏற்றுக்கொள்வதுமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே மக்கள் வர்த்தக நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுவது குறையும்.

ஆணையம் அமைப்பதாலும், அபராதம் விதிப்பதாலும் நிலைமை மாறிவிடாது – அரசுக்கு உண்மையாகவே சராசரி மக்கள் மீது அக்கறையும் இருந்தால்தான் அது சாத்தியம்!
http://www.thannambikkai.net



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 12:44 pm

நல்ல வேளை அந்த சிமென்ட்ட வாங்கின மக்களுக்கு அபராதம் போடலியே - தப்பிச்சோம்.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் - என்று தணியும் இந்த ஊழல் தாகம்?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 13, 2012 12:49 pm

நல்ல பதிவு,என்ன அபராதம் வித்தித்து என்ன பயன்.பாதிக்கபட்டவர்கள் சுமக்கும் கடன் மூட்டைகளை சுமப்பார்களா இந்த சிமெண்ட் நிறுவனத்தினர்கள். சோகம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 13, 2012 1:02 pm

படங்களில் மற்றுமே ஊழல், லஞ்சத்திற்கு எதிராக தண்டனை கொடுப்பதை பார்க்கிறோம்.
ஆனால் நிஜத்தில்??????



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 1:34 pm

அனைத்து முன்னணி சிமென்ட் நிறுவனத்திலும் , அரசியல்வாதிகளின் ஷேர் உள்ளது . இப்படி
ஒரு சுழ்நிலையை ஏற்படுத்தி பணம் பார்த்ததே அரசியல்வாதிகள்தானே ஆகவே இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக