ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:31 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:29 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

Admins Online

ஒவ்வாமை - Allergy

Go down

ஒவ்வாமை - Allergy Empty ஒவ்வாமை - Allergy

Post by சிவா on Sat Jul 14, 2012 11:42 pm

''ஒவ்வாமை ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு எதிராக ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதனை இம்யூனோக்ளோபியூலின் 'இ’(Immunoglobulin - E) என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்த எதிர்ப்பாற்றல் புரதம் முதலில் உருவாகி தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துவிடும். மீண்டும் மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளோடு சேர்ந்து, ரத்தத்தில் உள்ள மாஸ்ட் செல்களின் குழிவுகளில் சேரும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் தூண்டப்பட்டு ஹிஸ்டமைன் (Histamine) என்ற வேதிப் பொருளை வெளியேற்றும். இந்தப் பொருட்கள்தான் ஒவ்வாமையை உண்டாக்குகின்றன.

பிடிக்காத ஒரு பொருள் நாசி வழியாக நுழைந்தால், நாசி ஒவ்வாமை, சுவாசக் குழலுக்குள் நுழைந்தால் ஆஸ்துமா, தோலில் பட்டால் சரும ஒவ்வாமை எனப் பல வகைகளில் தொந்தரவுகளை உண்டாக்கும்.

தூசி ஒவ்வாமை: வீட்டுத் தூசியில் உள்ள ஹவுஸ் டஸ்ட் மைட் (House dust mite) என்ற நுண்ணியக் கிருமி, இந்த ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. தூசி ஒவ்வாமைக்கு ஆளானவர்களது மூக்கின் உட்சவ்வு பாதிக்கப்படுவதால் சளி சேர்ந்து, மூக்கடைப்பு ஏற்படுவதுடன் மூக்கைச் சுற்றி உள்ள 'சைனஸ்’ எனப்படும் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும். மேலும், மகரந்தத் தூள், வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை, சாம்பிராணி - ஊதுபத்தி மணம், நெடிகொண்ட ரசாயனப் பொருட்கள், திரவங்கள், வாசனைத் திரவியங்கள், மரத் துகள், கரப்பான் பூச்சியின் கழிவு, பூனை - நாய்களின் ரோமம் ஆகியவைகூட நாசி ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனை நாசி உட்சுவர் பரிசோதனையிலும் சளிப் பரிசோதனை மூலமும் கண்டறியலாம். எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை மூலமும் கண்டறியலாம்.

நகை ஒவ்வாமை : 'நிக்கல்’ வகை நகைகளால் ஏற்படும் 'சரும ஒவ்வாமை’ நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். அப்படி நேரும்போது, சருமம் தடிமனாவதுடன், சொரசொரப்பாகவும் ஆகிவிடும். இதற்கு 'கான்டக்ட் டெர்மடைட்டிஸ்’ (Contact Dermatitis – Eczema) என்று பெயர். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், பவுடர், எண்ணெய், க்ரீம், தோல் பொருட்கள், ரப்பர், ரசாயனப் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், பெயின்ட் முதலியவையும் சரும ஒவ்வாமைக்குக் காரணமாக அமையலாம். உட்கொள்ளும் உணவுகளினாலோ அல்லது மருந்துகளினாலோகூட சரும ஒவ்வாமை உருவாகும். இந்த ஒவ்வாமையைக் கண்டறிய ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களின் மூலப்பொருளை தோலில் செலுத்தி சருமப் பரிசோதனை செய்வார்கள்.

உணவு ஒவ்வாமை: குறிப்பிட்ட ஓர் உணவைச் சாப்பிட்டு, அதனால் தோல் தடிப்பு, அரிப்புபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் அது உணவு ஒவ்வாமை. பால், முட்டை, வேர்க்கடலை, கொட்டை வகை உணவுகள், கடல் மீன்கள், இறால், நண்டு, செர்ரி வகைப் பழங்கள் ஆகியவை பெரும்பாலும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. உணவு ஒவ்வாமையால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ரத்தப் பரிசோதனை மூலமும், மூலப்பொருட்களை கொடுத்து பரிசோதனை செய்தும் இந்த ஒவ்வாமையைக் கண்டறியலாம்.

மருந்து ஒவ்வாமை: உணவைப் போலவே, எந்த மருந்தும் யாருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். என்றாலும்கூட ஆஸ்பிரின், பென்சிலின், சல்ஃபா மருந்துகள், மலேரியாவுக்கான மருந்துகள், இன்சுலின், தடுப்பு ஊசி மருந்துகள், உலோக மருந்துகள் (Heavy Metals - Gold) ஆகியவை பெருமளவு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. சாதாரண அரிப்புப் பிரச்னையில் தொடங்கி, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவது வரையிலான பாதிப்புகளையும் மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். ரத்தப் பரிசோதனை மூலமும், நோயாளி சொல்லும் மருந்துகளின் விபரங்களைக்கொண்டும் இந்த ஒவ்வாமையைக் கண்டுபிடிக்கலாம்.

கண் ஒவ்வாமை: வீட்டுத் தூசி, புகை, மகரந்தத் தூள் போன்ற சுவாசப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் கண்களில் விழும்போது அவை கண் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் நாசி ஒவ்வாமை உடன் சேர்ந்தே ஏற்படும். இதனால், இவர்களுக்கு கண் வீக்கம், எரிச்சலுடன் கண் சிவந்துபோதல், கண்ணில் நீர் வழிதல் போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம். நாசி ஒவ்வாமைக்கான பரிசோதனை மூலமாகவே இதைக் கண்டறியலாம்.

பூச்சிக்கடியினால் ஏற்படும் ஒவ்வாமை: எறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு போன்ற பூச்சி வகைகள் கடித்தாலும், கொட்டினாலும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். தோல் தடிப்பு, அரிப்பு, எரிச்சல், வீக்கம், தோல் சிவந்துபோதல் போன்ற தொந்தரவுகள் இதன் விளைவாக ஏற்படலாம். ஒவ்வாமையினால் சில சமயங்களில் நினைவு இழக்கவும் நேரலாம். சருமப் பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறிவார்கள். எந்த ஒவ்வாமை என்றாலும், அது எதனால் ஏற்பட்டது என்பதை நோயாளி கூறும் சம்பவங்களில் இருந்தே யூகிக்க முடியும்.

சிகிச்சை முறைகள்: ஒவ்வாமை எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். என்றாலும் ஒவ்வாமையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள ஸ்டீராய்டு வகை மருந்துகள் பயன்படுகின்றன. முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், ஒவ்வாமையை ஏற்படுத்திய பொருளின் ஆன்டிஜினை மிகச் சிறிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பதன் மூலம் நோயாளிக்கு ஒவ்வாமைத் தொல்லைகளைக் குறைக்க முடியும். இதனை இம்மினோதெரபி (Immunotherapy) என்கிறார்கள். இதனை ஊசி மூலமாகவோ அல்லது நாக்கின் அடியில் வைத்துச் சாப்பிடும் மருந்தாகவோ கொடுப்பார்கள்.

சரி, ஒவ்வாமையில் இருந்து விடுதலை பெற என்ன வழி?

சுய சிகிச்சை செய்யாதீர்கள்: ஒருவருக்கு எதனால் ஒவ்வாமை உண்டாகிறது என்பதை மருத்துவரின் உதவியோடு கண்டறிவதுடன், எந்தப் பொருள் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதோ, அந்தப் பொருளை விலக்கிவைக்க வேண்டியது அவசியம். குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் ஏதாவது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்று தெரியவந்தால், அந்த மருந்து மாத்திரைகளின் பெயர்களை டைரியில் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல், தலைவலி என எந்தப் பிரச்னைக்கு மருத்துவரைப் பார்த்தாலும், உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் மருந்து விவரங்களையும் அவரிடம் சொல்லிவிடுவது மிக மிக அவசியம். நாசி ஒவ்வாமை உள்ளவர்கள் பூக்களை (மகரந்தம்) நுகர்ந்து பார்க்க வேண்டாம்!''

விகடன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஒவ்வாமை - Allergy Empty Re: ஒவ்வாமை - Allergy

Post by முரளிராஜா on Sun Jul 15, 2012 10:44 am

பயனுள்ள மருத்துவ கட்டுரை சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum