புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10நான் ஈ - திரை விமர்சனம் Poll_m10நான் ஈ - திரை விமர்சனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஈ - திரை விமர்சனம்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 4:07 pm

நான் ஈ - திரை விமர்சனம் P9410

இந்த ஒற்றை ஈயின் ரீங்காரம் தெலுங்குப் பட உலகில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. கோடிகளைக் குவித்து, புதிய வசூல் சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கும் தெலுங்கு 'ஈகா’ படத்தை அப்படியே தமிழிலும் 'ஈ’ அடிச்சான் காப்பியாக்கி, சில காட்சிகளைத் தமிழுக்கு எனப் படம் பிடித்து சேர்த்து 'நான் ஈ’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அனிமேஷன் சினிமாவைப் பொறுத்தவரை நம் ஊருக்கு இந்தப் படம் ஒரு டிரெண்ட் செட்டர்!

அம்புலி மாமா காலத்துக் கதைதான். நாயகி மேல் ஆசைகொண்டு நாயகனைக் கொல்கிறான் வில்லன். ஹீரோவின் ஆவி(!) அருகில் இருக்கும் 'ஈ’ முட்டை ஒன்றில் புகுந்துகொள்கிறது. அது பிறந்ததும் பூர்வஜென்ம நினைவு வந்து வில்லனைப் பழிவாங்குவதே கதை. இதில் 'ஈ’ அனிமேஷன் மட்டும் புதுசு. வயது வித்தியாசம் இல்லாமல், வகை தொகை இல்லாமல் பட்டையைக் கிளப்புகிறது படம். கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தில் 2,234 காட்சிகள் 'லைவ் ஆக்ஷன் அனிமேஷன்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

முட்டையில் இருந்து ஈ வெளிவரும் ஆரம்பக் காட்சிகள் மட்டுமே கார்ட்டூன் தொனி. ஆனால், வில்லனைப் பழிவாங்கத் தொடங்கும் காட்சிகளில் லாஜிக் மறந்து ஈர்த்துவிடுகிறது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதை. அதிலும் க்ளைமாக்ஸில் சிறகு இழந்து, ஒற்றைக் கால் உடைந்தபோதும் மிச்சம் இருக்கும் உயிரைத் திரட்டி(!) வில்லனைச் சாய்த்து தானும் பலியாகும் காட்சியில்... கண்களில் நீருடன் கைதட்டுகிறது ஒட்டுமொத்த அரங்கமும்.

நம்மவர்களுக்குப் பழிவாங்கும் கதையும் புதிது அல்ல... அனிமேஷன் படமும் புதிது அல்ல. ஆனால், அதில் காமெடி, காதல், ஃபேன்டஸி, சென்ட்டிமென்ட் சேர்த்து ஜோரான காக்டெய்ல் ஆக்கிய மிக்ஸிங்தான் சுவாரஸ்யம். அதன் முழுப் பெருமையும் இயக்குநர் ராஜமௌலிக்கே!

இப்போதைய டிரெண்டில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் இவர்தான். இவர் இயக்கிய எட்டுப் படங்களும் ஆந்திரத்தில் பெரும் வசூல் சாதனை படைத்தவை. 'ஸ்டூடன்ட் நம்பர்-1’, 'எமடொங்கா’, 'சிறுத்தை’, 'மஹதீரா’, 'மரியாதை ராமண்ணா’ எனக் கோடிகளைக் குவித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். வெறுமனே கமர்ஷியல் கலக்கல் மட்டும் இல்லாமல், காமெடியன் சுனிலுக்கு சிக்ஸ்பேக் வைத்து ஹீரோ ஆக்குவது, ரக்ஃபி விளையாட்டை மையமாக வைத்து முழு நீள சினிமா எடுப்பது, பூர்வஜென்மக் கதையில் வரலாற்று ஃபேன்டஸி சேர்ப்பது, 'ஈ’ சினிமா என இவருடைய ஒவ்வொரு படமும் பலே விருந்துவைக்கும் பரிசோதனை முயற்சியாகவே இருக்கும்.

''இந்த 'ஈ’ படம் இயக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது. பிரபாஸை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படம் எடுப்பதற்கு முன்னால், நாலைந்து மாதங்களில் முடிக்கும் அளவுக்கு ஒரு படம் எடுக்கத்தான் எண்ணம். 'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்?’ என்று பல வருடங்களுக்கு முன் என் அப்பா விஜயேந்திர பிரசாத் சொன்ன ஒரு வரி திடீர் என ஃப்ளாஷ் அடித்தது. அதைப் பிடித்துக்கொண்டு 'ஈ’யை ஹீரோவாகவைத்து திரைக்கதை எழுதினேன். எழுதி முடித்துப் பார்த்தால், அந்தப் படத்தைப் போகிறபோக்கில் எடுக்க முடியாது என்று தோன்றியது. 'மஹதீரா’ படத்தில் கிராஃபிக்ஸ் என்பது பின்னணியாக அமைந்துஇருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கிராஃபிக்ஸும் அனிமேஷனும் தான் முன்னணியில் இருக்கும். நடிகர்கள் பின்னணியில்தான் இயங்குவார்கள். அதிலும் ஒரு 'ஈ’ முகத்தில் 80 சதவிகிதம் அதன் கண்கள்தான். ஈயின் கண்களை வைத்து காதல், கோபம், சந்தோஷம் என்று எந்த உணர்ச்சிகளையும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸின் டைட்டில் கார்டில் தத்தித் தாவும் ஒரு டேபிள் லேம்ப் என் நினைவுக்கு வந்தது. அந்த விளக்குக்கு முகமே கிடையாது. ஆனால், அது சந்தோஷமாக இருப்பதை அதன் அசைவுகளிலேயே உணர்த்திவிடுவார்கள். அப்படி இந்த ஈக்கும் உடல்மொழி ஏற்றுங்கள் என்று சொன்னேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அனிமேஷன் ஈயை உருவாக்கினார்கள். என் 10 வருட சினிமா அனுபவத்தில் நான் அப்போதுதான் மிகவும் பயந்துபோனேன். மிகவும் அசிங்கமாக எந்த எமோஷனும் இல்லாமல் இருந்தது அந்த ஈ. ஆனால், அதற்கே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் செலவு. ஒருவேளை ஒரு கோடி மட்டுமே செலவாகி இருந்தால், இந்த புராஜெக்டை அப்போதே நான் கைவிட்டு இருப்பேன். ஆனால், விட்ட இடத்தில்தானே பிடிக்க வேண்டும் என்று வேறு வேறு யூனிட்களில் வேலை செய்து இந்த ஈயை உருவாக்கிவிட்டோம். குழந்தைகள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது தெரியும். ஆனால், பெரியவர்களை யும் குழந்தைகளாக்கி ரசிக்கவைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்று அடக்கமாகப் பேசுகிறார் ராஜமௌலி.

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன்களுக்குச் சவால்விட்டு இருக்கிறது இந்த இந்திய ஈ. முன்பெல்லாம் தியேட்டரில் ஈ ஓட்டுகிறோம் என்பார்கள் பரிதாபமாக... இப்போது ஈ ஓட்டுகிறோம் என்கிறார்கள் பரவசமாக!

கி.கார்த்திகேயன்




நான் ஈ - திரை விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 13, 2012 4:13 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி தல ..

படம் நன்றாக இருப்பதாக நண்பர்களும் சொன்னார்கள் ..

படத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் , படத்திற்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 4:18 pm

இதோட டிவி கமர்ஷியல் பார்த்து என்னடா பூ சுத்துராங்கலான்னு நெனச்சேன்.

பரவாயில்லை தொழில் நுட்பம் கண்டு ரசிக்கலாம்ன்னு தெரியுது.




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 13, 2012 5:33 pm

அருமையான விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா... நான் ஈ - திரை விமர்சனம் 678642
படத்தில் ஆரம்ப சில காட்சிகளில் மட்டும் தான் நாயகன் நானி நானியாக இருக்கிறார் அவர் கொலை செய்யபட்ட பின் நானி நான் ஈ யாக மாறி பழி வாங்கும் காட்சிகள் அருமை.இடையில் வரும் நம்ம சாந்தானம் இரண்டு நிமிடத்திலேயே திரையில் இருந்து மறைகிறார் பின் இறுதியில் தான் தெரிகிறார்.பாடல்களும் இதமாகவும் வெறுப்பேறாமலும் இருக்கிறது..



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Fri Jul 13, 2012 9:43 pm

பதிவுக்கு நன்றி ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 14, 2012 11:46 am

நானும் படம் பார்த்தேன்.. படம் அருமையாக இருக்கிறது.. சூப்பர்




நான் ஈ - திரை விமர்சனம் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 14, 2012 1:47 pm

வெளி வந்த படத்தில் நான் ஈ நல்ல இருக்கு என்று சொல்கிறார்கள்..!
விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா.!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 2:04 pm

யினியவன் wrote:இதோட டிவி கமர்ஷியல் பார்த்து என்னடா பூ சுத்துராங்கலான்னு நெனச்சேன்.
பரவாயில்லை தொழில் நுட்பம் கண்டு ரசிக்கலாம்ன்னு தெரியுது.
நானும் இதே நினைப்புல தான் படம் பார்க்கல , இப்ப பார்க்கனும்ன்னு தோணுது

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 14, 2012 2:36 pm

சூப்பருங்க

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jul 14, 2012 3:09 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான விமர்சனம் பகிர்வுக்கு நன்றி அண்ணா... நான் ஈ - திரை விமர்சனம் 678642
படத்தில் ஆரம்ப சில காட்சிகளில் மட்டும் தான் நாயகன் நானி நானியாக இருக்கிறார் அவர் கொலை செய்யபட்ட பின் நானி நான் ஈ யாக மாறி பழி வாங்கும் காட்சிகள் அருமை.இடையில் வரும் நம்ம சாந்தானம் இரண்டு நிமிடத்திலேயே திரையில் இருந்து மறைகிறார் பின் இறுதியில் தான் தெரிகிறார்.பாடல்களும் இதமாகவும் வெறுப்பேறாமலும் இருக்கிறது..

ஆம் படம் மிகவும் அருமையாக இருக்கு.... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக