ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

Admins Online

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by முரளிராஜா on Sun Jul 29, 2012 8:44 pm

தமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ-கலப்பை (eKalappai)!

நண்பர்களே வணக்கம்.. இன்று நாம் பார்க்கப் போவது தமிழர்களாகிய நாம் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் ஒரு எளிமையான மென்பொருளைப் பற்றிதான்.. தமிழில் எழுத பயன்படுத்தப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் இ-கலப்பையை 3,0 ப் பற்றிய பதிவு. இப்பதிவில் புதியவர்களுக்குரிய குறிப்புகளுடன், பயன்படுத்தும் முறைகளையும் எளிமையாக,தெளிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம்.

இந்த இலவச மென்பொருளை நிறுவும் முறையை புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் படங்களாக கொடுத்திருக்கிறேன்.

முதலில் நீங்கள் தரவிறக்க சுட்டியை சொடுக்கியவுடன் ஒரு விண்டோ திறக்கும் அதில் (Save)சேமி என்பதை சொடுக்குவதன் இந்த மென்பொருளை நீங்கள் சேமித்துக்கொள்ள முடியும்.

சேமித்த மென்பொருள் கோப்பை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவமுடியும்.

மென்பொருள் நிறுவுவதற்கான படிகள்:

தரவிறக்கிய மென்பொருளை இருமுறை கிளிக் செய்தவுடன் முதலில் இவ்வாறு தோன்றும். அதில் I Agree என்பதை சொடுக்குங்கள்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் EKalappai-installation_step_1

பிறகு வரும் அடுத்த விண்டோவில் Install என்பதில் சொடுக்குங்கள்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் EKalappai-installation_step_2

இறுதியாக close என்பதை சொடுக்கவும். இப்போது முற்றிலும் மென்பொருள் கோப்பானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும்.

உபயோகிக்கும் முறை:

இனி நாம் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.
முதலில் உங்கள் கணினியில் Start பட்டனை கிளிக் செய்யவும். அதில் மேல் விரியும் பட்டையில் து என்ற எழுத்துடன் கூடிய படத்துடன் eKalappai என்றிருக்கும். அதை ஒரு முறை சொடுக்குங்கள் உடனே இந்த மென்பொருள் கோப்பு இயங்கத் தொடங்கும்.

பிறகு உங்கள் டாஸ்க் பாரில்(Task Bar) பார்த்தால்

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் EKalappai-installation_step_8

இவ்வாறு ஒரு சிறிய ஐகான்(சிறுபடம்) இருக்கும்.. அதில் ரைட் கிளிக் (வலச்சொடுக்கு)செய்தால் இவ்வாறு தோன்றும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் EKalappai-installation_step_9

அதில் Settings என்பதை சொடுக்கினால் கீழ்கண்டவாறு ஒரு (பெட்டி)விண்டோ திறக்கும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் EKalappai-installation_step_10

அதில் Tamil99 என்ற பட்டனை சொடுக்கினால் இவ்வாறான ஆப்சன்கள்() கிடைக்கும். இதில்.

1. Tamil 99
2. Phonetic
3. Typewriter
4. Bamini
5. Inscript

என்ற ஐந்து வாய்ப்புகள் இருக்கும்.

இதில் ஏதேனும் தங்களுக்கு தெரிந்த எழுத்துருவை தேர்ந்தெடுத்து நீங்கள் தமிழில் தட்டச்சிடலாம். நான் பாமினி(Bamini) என்பதை தேர்ந்தெடுத்து இருக்கிறேன்.
அதாவது இணைத்திற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்களாக (Unicode-ஒருங்குறி எழுத்துக்களாக)இந்த மென்பொருள் உங்களுக்கு மாற்றித் தரும். அதுதான் இம்மென்பொருளின் சிறப்பு.
இதன் மூலம் நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பக்கத்திலும் தமிழில் தட்டச்சிடும்போது அது முறையான எழுத்து வடிவத்தை உங்களுக்கு எந்த ஒரு சிதைவு இல்லாமல் காட்டும். இனி என்ன? அழகு தமிழில் தட்டச்சிட்டு , உங்களுடைய திறமைகளைக் காட்டலாமே..
தமிழில் தட்டச்சிட முடியவில்லையே என்று , தமிழ் தட்டச்சு எனக்கு தெரியாதே என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த போனெட்டிக்( Phonetic) முறை உதவும்.இத்தகயைவர்கள் Phonetic என்பதை தேர்ந்தெடுத்து இம்மென்பொருளைப் பயன்படுத்தவும். இம்முறையில் ஆங்கில எழுத்துக்கள் கொண்டு (amma=அம்மா) என தமிழில் எழுத முடியும்.
அதுபோலவே தமிழில் தட்டச்சு பழகியவர்களுக்கு இந்த பாமினி(Bamini, மற்றும் Typewriter -டைப்ரைட்டர் ) முறை மிகவும் உதவும். இத்தகையவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்து மென்பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இம்மென்பொருளை செயற்பாட்டுக்கு கொண்டுவரவும், செயற்பாட்டிலிருந்து விலக்கவும்(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மாற்ற) F2 பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.

இந்த மொழி மாற்றத்துக்கு பயன்படும் குறுக்குவழி பொத்தான்களை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதிதான் இது. கீழிருக்கும் படத்தைப் பாருங்கள்.
தங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.. இல்லையெனில் அப்படியே விட்டுவிடலாம்.

இதில் (Modifier Key) None மற்றும் F2 எனும் இடத்தில் சொடுக்கி தங்களுக்கு விருப்பப்பட்ட குறுக்குப் பொத்தான்களையும் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், தமிழுக்கிடையான குறுக்கு வழி பொத்தான்களை நீங்களே உருவாக்கிகொண்டும் பயன்படுத்தலாம்.. அதாவது மொழிமாற்ற F2 விற்கு பதிலாக வேறேதேனும் குறுக்கு பொத்தான்களை, உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

தறவிறக்க இங்கு சொடுக்கவும்

நன்றி தமிழ் ரைடர் பிளாக்ஸ்பாட், மற்றும் தமிழா.காம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by சார்லஸ் mc on Sun Jul 29, 2012 8:49 pm

அற்புதமான பதிவு முரளி.

அனைவருக்கும் மிகவும் உபயோகமுள்ள தமிழ் பாண்ட்.

எளிதானது. சிறப்பானது.

சிறந்த பதிவை பதிவிட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் 154550 தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் 678642

நமது ஈகரை உறவுகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்பீடுகள் : 1736

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by மகா பிரபு on Sun Jul 29, 2012 8:52 pm

தகவலுக்கு நன்றி அண்ணா. எளிதான விளக்கம்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 1218

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by பிரசன்னா on Sun Jul 29, 2012 8:54 pm

பகிர்விற்கு நன்றி... நான் பல வருடங்களுக்கு முன்... தமிழில் எழுதுவதற்கு முதலில் பயன்படுத்திய மென்பொருள்... 2001 /2... அன்று தமிழில் ஒரு பக்கம் எழுதியது (சில வரிகள்) ஒரு சாதனை போல் இருந்தது எனக்கு ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மதிப்பீடுகள் : 830

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by முரளிராஜா on Sun Jul 29, 2012 9:06 pm

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb12

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb13

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb141

4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb15

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb17

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb18

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb22

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image_thumb221

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Image12_thumb1

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!

தறவிறக்க

நன்றி பிளாக் ஸ்குவாட்.இன்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by yarlpavanan on Sun Jul 29, 2012 9:10 pm

பயன்தரும் பதிவைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
மதிப்பீடுகள் : 238

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by முரளிராஜா on Sun Jul 29, 2012 9:30 pm

அதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி

கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது.

இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம்.

இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் வேலை செய்யும்.

இதனை தரவிறக்க 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் 3

அடுத்து உங்கள் கணினியில் 'Start' மெனுவை கிளிக் செய்து Control Panel சென்று கொள்ளுங்கள். அங்கு Region and Language என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் 1

தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் 2

அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும்.

இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்த தமிழ் மென்பொருளை கணினியில் பதிந்த பிறகு
vanakkam என்று தட்டச்சு செய்யுங்கள். vanak என்று தட்டச்சு செய்வதற்குள்... தானாகவே நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் வார்த்தை (வணக்கம்) இதுவா? என்று உங்களை அன்புத்தொல்லை செய்கிறது இந்த கூகுள் தமிழ் மென்பொருள்!

தறவிறக்க சொடுக்கவும்

நன்றி டிவிஎஸ்50.பிளாக்ஸ்பாட்.காம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by இரா.பகவதி on Sun Jul 29, 2012 11:15 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by சிவா on Mon Jul 30, 2012 9:27 am

மிகவும் அருமையான தொகுப்பு இது முரளி! பாராட்டுக்கள். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by ராஜா on Mon Jul 30, 2012 11:31 am

அப்பாடா , ஒரு வழியா இந்த தமிழில் எழுதும் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டியாச்சுன்னு நினைக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31310
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by சசி குமார் on Mon Jul 30, 2012 11:49 am

நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல், எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. இது போல் பயனுள்ள தகவல்கள் பதிவு செய்து அனைவருக்கும் உதவுங்கள்...............,

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by யினியவன் on Mon Jul 30, 2012 11:52 am

உங்கள பத்தி எனக்கு தெரியாதா - பாமினிய தான் செலெக்ட் பண்ணுவீங்கன்னு. புன்னகை

நன்றி முரளி.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by சசி குமார் on Mon Jul 30, 2012 12:08 pm

அண்ணா இருப்பினும் எனக்கு {wordpad and word} இதை பயன்படுத்த முடியவில்லை..............
உதவ முடியுமா!
நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.

தயவுசெய்து உதவுங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்............
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by யினியவன் on Mon Jul 30, 2012 12:11 pm

சசி வோர்ட் பேட், நோட் பேட் அல்லது எந்த அப்ப்ளிகேஷன் ஆக இருந்தாலும் - ஓபன் செய்தவுடன் அதனுள்ளே கிளிக் செய்துவிட்டு - டாஸ்க் பாரில் (டாஸ்மாக் பாரில் அல்ல) தமிழ் செலெக்ட் பண்ணிட்டா சரி ஆயிடும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by சசி குமார் on Mon Jul 30, 2012 12:27 pm

@யினியவன் wrote:சசி வோர்ட் பேட், நோட் பேட் அல்லது எந்த அப்ப்ளிகேஷன் ஆக இருந்தாலும் - ஓபன் செய்தவுடன் அதனுள்ளே கிளிக் செய்துவிட்டு - டாஸ்க் பாரில் (டாஸ்மாக் பாரில் அல்ல) தமிழ் செலெக்ட் பண்ணிட்டா சரி ஆயிடும்.அண்ணா அவ்வாறு செய்தேன் இருப்பினும் {?????} இவ்வாறு தான் திரையில் தோன்றுகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை..............,

அண்ணா பாமினி என்று மாற்றினாலும் அது {Calibri} இவ்வாறு மாறிவிடுகிறது................,
எளிதில் புரியும் மாறு உதவுங்கள்.
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள் Empty Re: தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum