ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» Pdf need book
by krishnaamma Today at 7:44 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Padappaijoe Today at 6:38 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:16 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by சிவனாசான் Today at 4:55 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Today at 4:21 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:49 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Today at 3:27 pm

» புத்தகம் தேவை
by Guest Today at 2:03 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

Admins Online

மணிமேகலையின் காதல்...

Go down

மணிமேகலையின் காதல்... Empty மணிமேகலையின் காதல்...

Post by சிவா on Wed Aug 01, 2012 12:08 am

துறவு வாழ்க்கையைத் தானே மேற்கொண்டபோது ஒருவர் காதலில் புக விரும்புவதில்லை. இளமையில் துறவு திணிக்கப்பட்டபோது, இளமைக் காதல் அவ்வப்போது தலைகாட்டுவதும் நேரிடுகிறது. மணிமேகலையின் முற்பிறப்பு வாழ்க்கையும் காதல் தொடர்வதற்குக் காரணமாகிறது. துறவு மேற்கொண்டாலும் முற்பிறப்பில் உதயகுமரன் தன் கணவன் என்றறியும்பொழுது அவனிடம் மணிமேகலைக்குக் காதல் ஏற்படுவது இயல்பாகிறது.

உதயகுமரனின் வரவு கண்டு மணிமேகலை சுதமதியிடம். ""என்மேல் வைத்த உள்ளத்தாள் (4:80) என்று கூறுகிறாள். பளிக்கறையில் ஒளிந்திருந்த மணிமேகலையைக் கண்டு உதயகுமரன்,

""கற்புத் தானிலள் நற்றவ வுணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டி''


என்று அவளைப் பழிக்கிறான். அப்போதும் மணிமேகலை, அவனை வெறுக்கவில்லை. மாறாக,

""இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுகதன் றிறமென''
(5:88-91)

என்று சுதமதியிடம் காமத்தைப் பற்றிக் கூறி வியக்கிறாள். மணிமேகலா தெய்வம்,

""ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்''
(10:44-45)

என்று கூறியபோது மணிமேகலை மறுக்கவில்லை. உடன்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், அமைதி காக்கிறாள். தீவதிலகை மணிமேகலையிடம் நீ யார்? என்று கேட்டபோது முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் தான் யார் என்பதை விளக்குகிறாள்.

""எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது
பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய்
போய பிறவியிற் பூமியங் கிழவன்
இராகுலன் மனையா னிலக்குமி யென்பேர்
ஆய பிறவியி லாடலங் கணிகை
மாதவி யீன்ற மணிமே கலையான்
(11:9-14)

என்று தீவதிலகையிடம் கூறுகிறாள். உதயகுமரன் அம்பலம் புகுந்து தவத்திற்குக் காரணம் கேட்டபோது, மணிமேகலை, "என்னமர் காதலன் இராகுலன்' என நினைத்து அவன் அடி வணங்குகிறாள்.

இப்பிறப்பில் துறவியாகிய தன்னை மற்றவர் வணங்க வேண்டும்; தான் மற்றவரை வணங்கக் கூடாது என்பதை மணிமேகலை மறக்கிறாள். தன்னை இராகுலனின் மனைவி என்று நினைத்தே அவனை வணங்குகிறாள்.

தொன்று காதலன் சொல் மறுக்கக் கூடாது; நன்றியன்று என நடுங்குகிறாள். (18:128-133) உதயகுமரன் கொலையுண்ட போதும்,

""பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும்
அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும்
யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக்
காயசண் டிகைவடி வானேன் காதல!
வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின்
வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோ''
(21:19-24)

என மணிமேகலை அரற்றுகிறாள். இராசமாதேவி தன்னை வணங்கியபோதும், காதலற் பயந்ததற்காகவும், காவலன் மாபெருந்தேவி என்பதற்காகவும் வணங்கியதாகக் கூறப்படுகிறது. (23:146-147)

சாத்தனார் முற்பிறவிக் கொள்கைகளை வற்புறுத்தினார். அதே நேரத்தில் புத்தன் திருவடிகளை அடைவதற்கு - நிர்வாணம் பெறுவதற்கு - முற்பிறவியை அறுக்க வேண்டும். காதல் உணர்வைக் கடிய வேண்டும் என்னும் பௌத்தக் கொள்கையை வலியுறுத்தினார்.

முனைவர் சரளா இராசகோபாலன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by அசுரன் on Wed Aug 01, 2012 12:14 am

கவிதை வரிகள் தவிர (பாதி புரிந்தது) மற்றவை புரிந்தது... முற்பிறப்பின் தொடர்ச்சியை இப்பிறவியில் சந்திக்கும் மணிமேகலை... சோதனைகளை கடந்த சாதனை..

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by THIYAAGOOHOOL on Thu Jan 24, 2013 9:08 pm

அன்பும் காதலும் வெறுப்பை தராது. நல்ல தகவல். நன்றி.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

மணிமேகலையின் காதல்... Empty Re: மணிமேகலையின் காதல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum