ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 12:37 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» கொரோனா குறுங்கதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

Admins Online

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

Go down

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன? Empty பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

Post by சிவா on Sat Aug 18, 2012 9:23 pm

சந்தியாவும் அவள் கணவர் சாரங்கனும் தங்கள் குழந்தையின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நீண்ட நாள் கனவு, நனவாகும் சமயம் இது. பிரசவகாலம் நெருங்கி கொண்டு இருந்தது. அப்போது அவளுக்குள் பரபரப்பும், படபடப்பும் கலவையாக எழுந்தன. பிரசவம் மற்றும் வேதனை போன்ற சொற்கள் அவளுக்கு கவலையை அளித்தன. பிரசவம் பற்றி அவள் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான், தம் பயத்தை உதறித் தள்ள முடியும் என்று சந்தியாவுக்கு தோன்றிற்று.

டாக்டரின் மேஜையை நெருங்கிய உடனேயே, டாக்டர் அவளை அமரச் சொல்லி சைகை செய்யும் முன்னாலேயே, “எனக்கு குழப்பமா இருக்கு டாக்டர்!’ என்றாள் சந்தியா. “லேபர்-னா என்ன? அதுதான் பிரசவ வேதனையை?’

முதல்ல உட்காருங்க.. குழப்பமோ, கவலையோ படாதீங்க. பிரசவத்தின் போது கருப்பை வாய் மெலிந்து விரிவடைகிறது. பத்து சென்டிமீட்டர் வரை முதல் ஸ்டேஜில் விரிவடையும். இரண்டாவது ஸ்டேஜில் ழந்தை பிறப்புப் பாதை வழியே வந்து விடும். அதைத் தொடர்ந்து பிளசன்டா அல்லது தொப்புள்கொடியுடன் சேர்ந்த பாகம் வெளிவருவது மூன்றாவது கட்டம். முதல் ஸ்டேஜ்ல தொடங்குகிற வலிதான் பிரசவ வேதனை.

எல்லாருக்குமே பிரசவ வேதனை, பிரசவமாகிற காலம் ஒரே மாதிரி இருக்குமா?

ஒவ்வொரு பிரசவம் வித்தியாசமானதுதான். அத எத்தனை நேரம் நீடிக்கிறது, எப்படி முன்னேறுகிறது என்பது, பெண்ணுக்குப் பெண் மாறுபடும். ஆனால் உங்கள் மகப்பேறு மருத்துவருக்குத்தான் அது சரியாக முன்னேறுகிறதா என்று தெரியும். அப்படி முன்னேற்றம் நார்மலாக இல்லையென்றால், மருத்துவ உதவி அல்லது சிசேரியன் தேவைப்படுமா என்பதைத் தீர்மானிப்பார்.

பிரசவத்துக்குப் பத்து மாசம் என்கிறார்களே டாக்டர், அப்போ 300 நாட்கள் காத்திருக்கணுமா?

சாதாரணமாக மனித கர்ப்பம் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் நீடிக்கும். 37 வாரங்கள் முடிந்துவிட்டாலே நீங்கள் பிரசவத்துக்குத் தயாராகிவிட்டீர்கள் என்று பொருள். பெரும்பாலான பெண்கள் எதிர்பார்த்த தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவோ ஒரு வாரம் பின்னதாகவோ பிரசவிப்பார்கள். ஒருவேளை 37 வாரங்கள் முடிவதற்கு முன்பாகவே பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், அதைக் குறைமாதப் பேறு “பிரிமெச்சூர் பிரசவம்’ அல்லது “ப்ரிடர்ம் பிரசவம்’ என்று குறிப்பிடுவார்கள். 37ஆவது வாரம் முடிவதற்குள் உங்கள் பிரசவத்துக்கான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக உங்கள் மருத்துவரை நீங்கள் பார்க்கவேண்டும்.

எது பிரசவ வலியைத் தோற்றுவிக்கிறது?

இதன் காரணம் யாருக்கும் யதரியாது! ஆனால் ஆக்ஸிடாசின், ப்ரோஸ்டாகிளாடின் போன்ற ஹார்மோன்கள்தாம் கருப்பைச் சுவரை மெலிதாக்குகிறது. குழந்தையின் ஷார்மோனும் இயங்குவதால், தாயின் ஹார்மோன்கள் உற்பத்தியாகி வலியை உண்டாக்குகிறது.

பொய் வலி எடுக்குமாமே, டாக்டர்?

சில வேளைகளில் எப்போது பிரசவ வேதனை தொடங்குகிறது என்று கண்டுபிடிப்பது சிரமம். உங்களை மருத்துவமனையில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் அந்த வலி தொடரவில்லையானால், கருப்பை வாயில் விரிவடையவில்லை என்றால், வீட்டுக்க அனுப்பிவிடுவார்கள்! இதுதான் பொய் வலி.

அப்படியானால் உண்மையான வலி?

கருப்பை சுருங்கி, அதன் வாய் மெலிதாகி விரிவடையும்போதுதான் உண்மையான வலி உண்டாகிறது. பெண்களின் உடலில் அதற்கான அறிகுறிகள் தாமாகவே தெரிய ஆரம்பிக்கும். பிறப்புறுப்பிலிருந்து சற்றே ரத்தம் கலந்த சளி வெளியாகும். இது வலி தோன்றுவதற்கு ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ முன்னால் நிகழும். வலி தொடங்கிவிட்டது என்பதை அறிய, இரண்டு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

தொடர்ந்து, இறுக்கமான பிடிப்பு போல் 30 செகண்டுகளுக்கு நீடித்து, கருப்பை வாய் மெலிதாகித் திறக்கும். அல்லது நீர்க் குடம் உடையும்.

இரண்டில் ஒன்று நிகழ்ந்தாலும், உடனே மருத்துவரை அணுகவும்; அல்லது மருத்துவருக்குச் சொல்லவும். வலி தொடங்கி விட்டது என்பதை உணர்ந்தால், டாக்டர் சொல்லும் வரை, எந்த உணவும் உண்ண வேண்டாம். நீரும் அருந்தாதீர்கள்.

அப்புறம்?

தொடக்ககால பிரசவ வலியில் கருப்பைவாய் மூன்று சென்டிமீட்டர் வரை விரிவடையும். மூன்றிலிருந்து நான்கு சென்டிமீட்டர் வரை விரிவடையும்போது தான் நிஜமான வலி தொடங்குகிறது. அது அடிக்கடியும், இறுக்கமாகவும் இருக்கும். வேகமாகவும் இருக்கும். சராசரி பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு செண்டிமீட்டர் வீதம் விரிவடையும். வலி அதிகமாக இருக்கையில், முன்னரே பிரசவ அனுபவம் இருந்தால் இது இன்னும் வேகமாக இருக்கும். கருப்பை வாய் முழுவதுமாக விரிவடைந்தவுடன் நீங்கள் குழந்தையைப் பிறப்புப்பாதையில் தள்ளிவிட உங்களை முக்கச் சொல்வார்கள். குழந்தை வெளியே வந்தபின், பிளசன்டாவும் வந்துவிடும்.

சிக்கல்கள் ஏதேனும் இருக்குமா டாக்டர்?

உங்கள் பிரசவம் நார்மலாக இருக்க, உங்கள் மகப்பேறு மருத்துவரின் அனுபவம், திறமை மற்றும் கவனமான கண்காணிப்பு ஆகியவை இருக்க வேண்டும். உங்கள் இயக்கம், கருப்பைச் சுருக்கம், குழந்தையின் இதயத் துடிப்பின் எண்ணிக்கை பிரசவத்தின்போது கவனிக்கப்படும். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் ஏதும் இருந்தால், உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க முடியும்.

- டாக்டர் கீதா அர்ஜுன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன? Empty Re: பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

Post by அதி on Sun Aug 19, 2012 7:56 am

உயிர் போய் உயிர் வரும் என்பது படித்தாலே தெரிகிறது.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379

Back to top Go down

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன? Empty Re: பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

Post by யினியவன் on Sun Aug 19, 2012 12:39 pm

பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் மரண வலி
சுமப்பது ஓர் உயிர் பிறப்பது ஈருயிரன்றோ...

பகிர்வுக்கு நன்றி சிவா.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன? Empty Re: பிரசவத்தில்... பொய் வலின்னா என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum