புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
31 Posts - 36%
prajai
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
3 Posts - 3%
Jenila
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
7 Posts - 5%
prajai
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
4 Posts - 3%
Rutu
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_m10தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:31 am

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angkor-wat-temple-cambodia

பேஸ்புக்கில் கம்போடியாவில் அமைந்திள்ள உலகின் மிகப்பெரிய கோயிலான"அங்கோர்"தமிழர்களால் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் அதன் பெருமைகள் பற்றியும் சிறிது வாசித்திருந்தேன்.ஆவல் மேலிட அதனை பற்றி தகவல் சேகரித்து எழுதலாம் ஒரு பதிவாய் என்று தேட வெளிக்கிட்டால் சுவாரசியமான சில பயணக்கட்டுரைகளும் மேலும் சில செய்திகளும் கிடைத்தன.

இவற்றை எல்லாம் சேர்த்து தொகுத்து எழுதுவதை விட அவற்றை அவ்வாறே சுவாரசியம் குன்றாமல் பதிவிட்டால் வாசிப்போருக்கு சிறப்பாக இருக்கும் என்பதால் தேடலின் முக்கியமான சிலவற்றை தருகிறேன்.சில காலச்சுவட்டில் வெளிவந்தவை.காலச்சுவடு வாசகர்கள் ஏலவே வாசித்திருக்கக்கூடும்.ஆனால் காலச்சுவடு என்றாலே என்னவென்று தெரிந்தவர்களை விட தெரியாதவர்களே அதிகம் என்பதால் இப்பதிவு அங்கோர் கோயிலின் பெருமைகளை வாசித்தறிய,பகிர்ந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.தொகுப்பு என்பதால் பதிவு மிக நீளமாய் இருக்கும்.ஆர்வமிருப்போர் உள்நுழைக.
-------------------------------
வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம் ரெப்(Siem Reap)ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம் ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்கு சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?

அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் (Angkor) என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவுகளாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  6

கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத்தில் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இந்து மதம் அரசியல் செல்வாக்குடன் விளங்கியது. இக்காலத்திய கம்போடிய அரசர்கள் புனான் வம்சத்தினரென அழைக்கப்பட்டனர். கம்போடியாவில் வடக்குக்கும் தெற்குக்கும் பூசல்கள் நீடித்துவந்தன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் பிடிக்குள்ளிருந்தது. எட்டாம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக்கி ஆளத் தொடங்கினான். அவன் பெயர் இரண்டாம் ஜெயவர்மன்.

கெமர் கலாச்சாரம் அவனிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அரசன் இறைவனாகப் போற்றப்பட்ட கலாச்சாரம் அது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்ட கோயில்தான் அங்கோர் வாட். இது மிகப் பெரும் இந்துக் கோயில் மட்டும் அல்ல உலகின் மிகப் பெரிய கோயிலும்கூட. இருநூறு ஹெக்டர் நிலத்தில் மேற்குத் திசை நோக்கிய இக் கோயில் விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு அடுத்தபடியாக அதிகமான வழிபாட்டிற்குரியவர்களாக விஷ்ணுவும் புத்தரும் இருந்துள்ளனர்.

‘அங்கோர்’ என்கிற சொல் ‘நகர்’ என்கிற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கொள்ளப்படுகிறது. ‘வாட்’ என்றால் கோயில். ‘அங்கோர் வாட்’ என்பது நகரக் கோயில். கோயிலைச் சுற்றிலும் நம் நாட்டு அரண்மனைக் கோட்டைகளைச் சுற்றியுள்ளதுபோல் அகழி உள்ளது. வெளிப் பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கோயில் உயர்ந்த கட்டடமாக எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலை மூன்று அடுக்குகளாகப் பார்க்க முடிகிறது. முதல் அடுக்கில் புடைத்த சுவர் சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. இரண்டாம் அடுக்கில் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் இறங்கிக் குளிப்பதற்கேற்பப் படிகள் உள்ளன. புத்தர் சிலைகளும் நிறையக் காணப்படுகின்றன.

அங்கிருந்து இரண்டாம் அடுக்கிற்குச் செல்ல மூன்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அடுக்கு பெரிய தளப்பரப்புடையதாக அதற்கு மேலுள்ள மூன்றாம் அடுக்கிற்கான பிரகாரமாக அமைந்துள்ளது. மூன்றாம் அடுக்கு விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது.

நான் சென்ற சமயம் அங்கே பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால், அந்தப் படிகள்மீது ஏறிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. படிகள் மிகவும் செங்குத்தாகவும் குறுகலாகவும் இருப்பதால் பல சமயங்களில் அவற்றின் மீது ஏறியவர்கள் சறுக்கி விபத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். பொதுவாக அங்கோர் கோயில்களில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் காணப்படுகின்றன.

அங்கோர் வாட் கோயிலில் குருஷேத்திரப்போர் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. யுத்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே நடக்கும்போது புடைப்புச் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ள அந்தப் பதினெட்டு நாள் நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே ஒன்றன் பின் ஒன்றாக ரதங்கள் போன்று நகர்கின்றன.

அங்கோர் வாட் கோயிலை இரண்டாம் சூர்யவர்மன் முழுவதுமாகக் கட்டி முடிக்கவில்லை. எட்டாம் ஜெயவர்மன் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் அது நிறைவுசெய்யப்பட்டது. இவ்வாறே பல கோயில்களும் நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டுள்ளன. பொருள் வசதி, மன்னர்களின் விருப்பம் போன்றவற்றைப் பொருத்துக் கட்டடப் பணிகளில் விரைவு, தாமதங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல்லப்போனால் எல்லாக் கோயில்களுமே முடிக்கப்படாதவையாக இருப்பதாகக் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  IMG_3437

அவ்வாறு முடிக்கப்படாத கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது பயோன். கிபி 1181இலிருந்து 1220 வரை வாழ்ந்த ஏழாம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது பயோன். இது அங்கோர் தோமில் உள்ளது. அங்கோர் தோம் (பெரும் நகரம்), இப்போது கோயில்களை மட்டும் கொண்டிருக்கிறது. சுற்றிலும் காடுகள் நிரம்பியுள்ளன. இதன் தெற்கு வாயில் அழகானது. அகழியால் சூழப்பெற்றது. பாலத்தின் இரு பக்கங்களிலும் ஏழுதலை நாகத்தை வைத்து அசுரர்கள் கடைவதைப் பார்க்கலாம். திருபாற்கடலைக் கடையும் சிற்பங்களை அங்கோரில் பல இடங்களிலும் காண முடிகிறது.

அங்கோர் தோமில் சிகரம் வைத்தாற்போல் காணப்படுவது பயோன் கோயில். ஏழாம் ஜெயவர்மனால் தொடங்கப்பட்டு எட்டாம் ஜெயவர்மனால் முடிக்கப்பட்டது. ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தவர் என்பதால் லோகேஸ்வரரின் உருவங்கள் கோபுரங்களில் இருப்பதாக ஒரு சாரார் எண்ணுகின்றனர். ஆனால் அவை ஏழாம் ஜெயவர்மனின் உருவங்களாகக்கூட இருக்கக்கூடும் என்கிற யூகமும் வலுவானது.

அங்கோர் வாட்டைப் போன்று இதுவும் மூன்று அடுக்குகளில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆனால் அதற்குள் வட்ட வடிவத்தில் கோவிலின் உட்புறம் படிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கையும் அடையப் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மொத்தம் முப்பத்தியேழு கோபுரங்கள். பெரும்பாலான கோபுரங்களின் நான்கு பக்கங்களிலும் லோகேஸ்வரரின் (ஏழாம் ஜெயவர்மனின்?) முகங்கள். அவற்றைத் தவிரவும் பல்வேறு மூலைகளிலும் மனவெழுச்சியை உண்டாக்கும் முகங்கள் ஏராளமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அடுக்கிலும் நடந்து செல்லும்போது நாம் முகங்களால் சூழப்பட்டுக் கண்காணிக்கப்படும் உணர்வு வலுக்கிறது. அதன் உட்புற வாயில்கள் வழியே நுழைந்துவருவது மாயத்தை அனுபவிப்பதற்கு நிகரானது. படை வீரர்கள் ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டும் யானைகள் மீதேறியும் போர்க்களம் நோக்கிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள புடைப்புச் சிற்பங்களில் காணப்படுகின்றன.

அங்கோரிலுள்ள எந்தக் கோயிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவில்லை. முடிக்கப்பட்ட பகுதிகளிலும் பல சிற்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புத்த கோயிலாக இருப்பினும் பயோனில், லிங்கங்களும் காணப்படுகின்றன. இவை பின்னர் அங்கே வைக்கப்பட்டிருக்கலாம். சிற்பங்கள் மக்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பதிவுசெய்து உருவாக்கப்பட்டுள்ளன.

கடைத்தெருவில் உள்ள பெண்கள், கோழிச்சண்டையைப் பார்க்கும் மனிதர்கள் எனப் பல்வேறு காட்சிகள் அங்கே தரப்பட்டுள்ளன. மூடிய கண்களும் திறந்த கண்களுமாகப் பெரிய தேவமுகங்களுக்கிடையே சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ள இக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத்தலங்கள் அல்ல என்பதை உறுதிசெய்கின்றன. ‘சுலபமாக நம்மால் பார்க்கவியலாத, சூர்ய ஒளி எளிதில் புகாத மூலைகளிலும் பல சிற்பங்கள் காணப்படுகின்றன.

வழிபாடு செய்ய இயலாவிடினும் இவ்வகையில் சிற்பங்களை வடித்ததன் மூலம் கெமர்கள் கடவுளர்களின் உலகத்தைக் கோயில்களில் உருவாக்கியதாக நம்பிக்கைகொண்டிருந்தனர்’ என்று அங்கோர் கோவில்கள் பற்றிய பிரதான ஆய்வாளர் எனப் பெயர் பெற்றுள்ள ஜார்ஜ் கோடிஸ் கருதுகிறார்.

இந்தக் காரணங்களுக்காகத்தான் இக் கோயில்கள் எழுப்பப்பட்டன என்று அறுதியிட முன்வரும் எவருக்கும் இவை பெரும் சவால்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றில் நூலகங்கள் என்றழைக்கப்படும் கட்டடங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டடமும் இரண்டு கட்டுகள் கொண்டுள்ளது. அரசர் மற்றவர்களுடன் ஆலோசிக்கவும் ஆருடம் கேட்கவும் இந்த நூல கங்களைப் பயன்படுத்தி இருக்கலாம்.

இவை ஆடம்பரங்களற்ற கற்கட்டடங்கள். உருண்ட தூண்களால் தாங்கப்பெற்றுள்ளன. புடைப்புச் சிற்பங்கள் எதுவுமில்லை. இங்கே கல்வி கற்பிக்கப்பட்டிருக்கக்கூடும். எனவே கல்விக் கூடங்களாகவும் இவை பயன்பட்டிருக்கும்.
‘கடவுளர்களுக்கு நிகரானவர்கள் தாங்கள்’ என்று அரசர்கள் கருதியதால்

இவை நினைவுச் சின்னங்கள் என்று கருதவும் வாய்ப்புள்ளது. ஏழாம் ஜெயவர்மன் தன் தந்தையின் நினைவிற்காகக் கட்டிய கோயில் ‘தா ப்ரோம்’. அங்குள்ள லோகேஸ்வரரைத் தன் தந்தையின் சாயலில் அவர் வார்த்துள்ளார். அவருடைய மனைவிகளின் சிலைகளையும் அங்கே காணலாம். அவருடைய இரண்டாம் மனைவி, கல்வியைப் பரப்பப் பெரிதும் முயன்றவர் எனச் சொல்லப்படுகிறது. கெமர் சரித்திரத்திலேயே ஏழாம் ஜெயவர்மனுக்கு இணையாக இன்னொரு அரசன் தோன்றியதில்லை எனலாம்.

தொழுநோய் அரசன் என்னும் பெயரில் சிலை ஒன்றுண்டு. அதன் அசல் கம்போடியாவின் தலைநகரான ‘நாம் பெங்க்கி’லுள்ள பொருட்காட்சியகத்திற்குச் சென்றுவிட்டது. அங்கோர் தோமில் அதன் நகல் திறந்தவெளியில் மண்டபம் ஒன்றின் மீதுள்ளது. ஏழாம் ஜெயவர்மன்தான் அந்தத் தொழு நோயாளி எனச் சொல்பவர்கள் உண்டு.

அவர் பல மருத்துவமனைகளைக் கட்டியுள்ளதை வைத்து இவ்விதம் முடிவுக்கு வந்திருக்கலாம். நோயைத் தன் ஆட்சியில் கட்டுப்படுத்தவே மருத்துவமனைகளைக் கட்டினார் எனச் சொல்பவர்கள் உண்டு. அவர் திறமைசாலியாகவும் வலிமையுடையவராகவும் விளங்கினார் என்பதற்கு அவரது ஆட்சிக் காலம் சாட்சியாக விளங்குகிறது.


தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  1

சிம் ரெப் இறுதியாகத் தாய்லாந்தின் வசம் இருந்தது. அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுக்காரர்கள் கைக்கு மாறியது.
பிரெஞ்சுக்காரர்களால்தான் அங்கோர் கோயில்கள் உலகப் புகழ் பெறத் தொடங்கின. காடுகளைச் சுத்தம் செய்து அங்குள்ள கோவில்களை அவர்கள்தாம் புனருத்தாரணம் செய்தனர். பிரெஞ்சுக்காரர்கள் பல சிற்பங்களைத் திருடிச் சென்றனர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. ஆந்ரே மால்ரா அங்குள்ள சிலைகளைத் திருடியதற்காகக் கைதுசெய்யப்பட்டார்.

பிரெஞ்சு காலனியின் சுவடுகளைச் சிம் ரெப்பில் பல இடங்களிலும் காண முடியும். சிம் ரெப்பில் உள்ள ஓட்டல்கள் புதுவையிலுள்ள கட்டடங்களை நினைவுபடுத்துகின்றன. பிரெஞ்சு மொழி பேசுகிற பழைய தலைமுறையினர் அங்கு நிறையக் காணப்படுகிறார்கள். பிரெஞ்சு வழிகாட்டிகள் எளிதில் கிடைக்கிறார்கள். கிட்டத்தட்ட எழுபது அங்கோர் கோவில்கள் சிம் ரெப் நகரில் காணப்படுகின்றன.

அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். இரண்டு நாட்களில் இவற்றையெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதுபவற்றை மீண்டும் பார்த்துச் செலவிடலாம்.

கம்போடிய மக்கள் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்கிறார்கள். சிறுவர்கள், சிறுமிகள் பலரும் பள்ளிக்குச் சென்றதில்லை. புத்த துறவிகளாக வாழும் விருப்பம் இளைஞர்கள் பலருக்கு இருக்கிறது. அதற்காகப் படிக்கச் செல்பவர்கள் குடும்பத்தினர் படுகிற துயரத்தைப் பார்த்துவிட்டு அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறார்கள்.

‘டுக் டுக்’ என்றழைக்கப்படும் வாகனங்களை (இது மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்ட, பயணிகள் மூவர்வரை அமர்ந்து செல்லும் நான்கு சக்கர வண்டி) ஓட்டுகிற ஆங்கிலம் பேசுகிற இளைஞர்கள் சிலர் இவ்வாறு துறவைத் துறந்தவர்கள்தாம். அரசர்கள்மீதான மரியாதை இன்னும் தொடர்கிறது. யாராவது சூர்ய வர்மன், ஜெயவர்மன் என்றெல்லாம் பெயர் சூட்டியிருக்கிறார்களா எனக் கேட்டால் அரசர்களுடைய பெயரை நாம் எப்படி வைத்துக்கொள்வது எனப் பதிலுக்கு நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.

தெருவோரக் கடைகளிலும் சுற்றுலா இடங்களிலும் இளைஞர்களே வேலைசெய்கிறார்கள். சிறுவர் சிறுமியர் நானாவிதப் பொருட்களையும் கைகளில் வைத்துக்கொண்டு ‘ஒன் டாலர், ஒன் டாலர்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். சாலையோர உணவு விடுதிகளில் ஒரு டாலருக்கு நல்ல உணவு கிடைக்கும். உடனே எங்கும் கிடைப்பது அசைவம்தான். ஒரு லிட்டர் அளவு சுவையான இளநீர் தரும் தேங்காய்களும் ஒரு டாலருக்குக் கிடைக்கின்றன.

அமெரிக்க டாலர்தான் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வேண்டப்படும் செலாவணி. உள்நாட்டுக் கரன்சியான ரியெல் அவர்களுக்குள் சங்கேதமாகப் புழங்குகிறது. அதை வெளிநாட்டவர்கள் கொடுத்தால் சட்டை செய்வதில்லை. மக்கள் சுற்றுலாப் பயணிகளை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். கெமர் மொழி பேசப்படுகிறது. ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கிற இளைய தலைமுறை அங்கு உண்டு. கம்போடியர்களைத் தவிர, சீனர்கள், வியட்நாமியர்களும் அங்கு வாழ்கின்றனர். நவம்பரிலிருந்து பிப்ரவரிவரை பயணத்திற்குகந்த காலமாகக் கருதப்படுகிறது.

அக்டோபர் மாதக் கடைசியில் நான் சென்ற சமயத்தில் மழைக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. மழை தன் சொச்சத்தை அவ்வப்போது கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தவண்ணம் இருந்தது. நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி தரை எங்கும் பச்சையாய்ப் பூத்திருந்தது. ஆனால் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் நாள் முழுதும் தணியாத வெப்பம். மழை விட்ட உடனேயே லேசாக வியர்த்தது.

தொடரும் ...

******
கவிஉலகம்


avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:36 am

அங்கோர் கோயில்களில் இப்போது வழிபாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. ஒரு சில இடங்களில் பௌத்தர்கள் ஊதுபத்திகளை வைத்துச் சிறிய ஆராதனைகள் புரிவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. கோயில்கள் முற்றாகவே சுற்றுலா இடங்களாக மாறிவிட்டன.

சாலைகள் எழில் மிகுந்த கானகங்களினூடே செல்வதால் பயணிகள் பலரும் விரும்பி சைக்கிள்களில் செல்கிறார்கள். இவற்றினூடே கோயில்களைப் புனருத்தாரணம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சென்டரின் மேற்பார்வையில் அவை செய்யப்படுகின்றன.

பல இடங்களில் பல நூறு வருடங்களாகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள மரங்கள் கோயில்களை மலைப்பாம்புகள் போன்று பெரும் வடங்களாக நொறுக்கி வளைத்துள்ளன. காலமும் கலையும் ஒன்றாகக் கட்டுண்டு கிடப்பதுபோல் அவை ஒருவித அசுர அழகைத் தம்மகத்தே கொண்டுள்ளன. புனருத்தாரணப் பணிகளில் பல நாடுகளும் பங்கேற்றுள்ளன. அவற்றில் ஈடுபட கெமர் கைவினைக் கலைஞர்கள் தயார்செய்யப்படுகின்றனர்.

நமது ஊர் ஆட்கள் இங்குள்ள கோயில்களுக்கு சகட்டுமேனிக்கு வெள்ளையடித்து மிலிட்டரி ஓட்டல்களில் எரியும் பச்சை ட்யூப் பல்புகளை மாட்டிவிடுவதைப் போன்றதல்ல அது. மிகவும் கவனத்துடன் பழமையைப் புதுப்பிக்கிறார்கள்.

புதுப்பிப்பது இயலாதென்றால் மேலும் சீர்கேடடையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆர்கேயாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவினர் சில வருடங்களுக்கு முன்னர் அங்கே சென்று அங்குள்ள ஓட்டைகளில் கான்கிரிட்டை ஊற்றி நிரப்பி, தங்களாலான ‘நற்பணி’யைச் செய்திருக்கிறார்கள்.

பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அதை நிறுத்திக்கொண்டார்கள். அங்கோர் கோயில்கள் செங்கற்கள், சுண்ணாம்புக் கற்கள், செம்பாறாங் கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டவை.

அங்கோர் கோயில்களில் சிவன், விஷ்ணு, புத்தர் சிலைகள் ஏராளம். அதேபோல் அப்சரஸ் தேவதைகள் எல்லா இடங்களிலும் தென்படுகின்றனர். பற்கள் தெரியச் சிரிக்கும் அப்சரஸ்கள் அரிதாக உள்ளனர்.

ராமாயண, மகாபாரதப் புராணக் காட்சிகள் கோயில் சுவர்கள், தூண்கள் என்று எல்லாவற்றிலும் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கோயில் முகப்புகளும் புராணக் கதாபாத்திரங்களும் கெமர் கலாச்சாரத்தையும் அம்மக்களின் உருவங்களையும்தாம் கொண்டுள்ளன. இந்திய முகங்களை அவற்றில் காண முடியாது.

ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் கெமர்கள் தங்களுடையதாக உள்வாங்கிக்கொண்டதன் விளைவு அது.
தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற பிறநாடுகளிலும் இப்புராணங்கள் இவ்வாறே அங்குள்ள கலாச்சாரப் பின்னணிகளுடன் உள்முகப்படுத்தப்பட்டுள்ளன. தவிரவும் இச்சிற்பங்களை வடித்தவர்கள் கெமர் சிற்பிகள்.

கெமர் மக்கள் இந்து, புத்த மதங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதாக இதன் மூலம் அறியலாம். படையெடுப்பாலோ வன்முறையாலோ மதம் அங்கே திணிக்கப்படவில்லை எனக் கருத நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்திய அரசர்களின் காலனியாகவும் கம்போடியா ஒருபோதும் விளங்கியதில்லை.

இந்தியாவில் இருந்து சென்ற புத்த மதம் பல நாடுகளிலும் பரவிப் பல்வேறு குணங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவில் வேரூன்றிய இந்து மதம் எத்தகைய மாறுதல்களுடன் கம்போடியாவில் குடியேறியது என்பதை அங்கோர் சிற்பங்களை வைத்து ஒருவாறாக ஊகிக்க முடிகிறது.

இங்கிருந்து சென்ற வியாபாரிகள் வாயிலாகத்தான் இந்து மதம் அங்கே பரவியிருக்கிறது. ஆனால் ஆட்சியை நிலைநாட்டத் தொடங்கியவர்கள் அங்குள்ள கலாச்சாரத்திற்கு இணக்கமான ஒரு மதமாக இந்து மதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அடிமைகள் அங்கு வாழ்ந்திருக்கக்கூடும். ஆனால் பிறப்பை வைத்துக் கொடுமைகள் புரியும் இந்து மதக் கூடா நெறிகள் அங்கே இருந்திருக்கமாட்டா. கோயில் நுழைவு சமூகத்தினரின் எப்பிரிவுக்கும் மறுக்கப்பட்டிருக்காது.

கோயில் சுவர்களில் எல்லா மக்களின் வாழ்க்கை முறைகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பதால் அது எல்லோருக்குமான அரங்கமாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தவிரக் கம்போடிய மக்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை அசைவ உணவுப் பழக்கம் உடையவர்கள். எனவே உணவுப் பழக்கத்தை வைத்துத் தீண்டத்தக்கவர், தகாதவர் என்னும் பாகுபாடுகள் உண்டாகியிருக்க மாட்டா. இந்தியாவைப் போலன்றிக் கீழைநாடுகளில் இந்து மதம் பின்பற்றப்படாவிடினும் அது குறித்து இன்றுவரை அங்கே ஒரு நல்ல அபிப்பிராயம் நிலவுகிறது.

சாதிப் பாகுபாடுகள் அங்கு வேர்விட்டிருந்தால் இந்து மதம் வெறுக்கப்பட்டிருக்கும். சுருக்கமாகக் கூறினால் கம்போடியாவில் இருந்த இந்து மதம் இந்தியாவிலுள்ள இந்து மதமல்ல.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Worlds-Biggest-Hindu-Temple

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் அவர்களது கற்பனையை மெய்யாகவே ஆட்கொண்டிருந்தன. அரசர்களைப் போலவே மக்களும் புராணங்கள் மீதும் மதக் கோட்பாடுகளின் மீதும் பெரும் நம்பிக்கைகள் கொண்டிருந்ததாலேயே கெமர் ஆட்சிக் காலத்தில் பல கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டன.

புத்த மதத்தைப் பொருத்தவரை அவர்கள் பின்பற்றுவது ஹீனயானம். தெரவாடா பௌத்தம் என்று இது அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, பர்மா, ஸ்ரீலங்கா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் இது செல்வாக்கு பெற்றுள்ளது.
இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் அங்கே பெரிய பூசல்கள் எழுந்ததாகச் சரித்திரம் சொல்லவில்லை. ராஜ விஹாரா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட தா ப்ரோம் கோயிலில் நுழைந்தவுடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள புத்தர் சிற்பம் ஒன்று அங்குள்ளது.

அதில் புத்தர் சம்மணமிட்டு அமர்ந்துள்ளார். தரையில் மடிந்த அதே கால்கள் சற்றே மடக்கினாற்போல் தெரியுமாறு அந்தச் சிற்பத்தின் மீது மேலும் இரண்டு கோடுகள் வரைந்தாற்போல் செதுக்கப்பட்டுள்ளன. இதே போன்று வேறு சில சிற்பங்களும் உள்ளன.

தா ப்ரோம் கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவுகொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்துமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்னென்ன என்பன பற்றியெல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள் எவையுமில்லை.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Ta-Prohm-Temple

பெரிய பெரிய கோயில்களைக் கட்டியதால் மக்கள் சலிப்புற்று கெமர் ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாகத் தங்கள் அரசர்களை நோக்கிப் படையெடுத்து வந்த எதிரிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்கள் என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது தவறான யூகம் என நினைக்கிறேன்.

மக்கள் வெறுப்புற்றிருந்தால் அவர்கள் ஏழு நூற்றாண்டுகளாக ஒரு செயலை இந்து மதம் புத்த மதம் என்று மாறி மாறிக் கோயில் கட்டுமானப் பணிகளில் தொடர்ந்திருக்கமாட்டார்கள். கோயில்கள் தவிர மருத்துவமனைகளும் கட்டப்பட்டன என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

எப்படித்தான் இவ்விதம் கோயில்களை மக்கள் கட்டினார்களோ என்கிற வியப்பிற்கான விடையாக அவர்கள் சலிப்புற்று வெறுக்கும் வகையில் பிழியப்பிழிய வேலை வாங்கப்பட்டார்கள் எனக் கூறுவது கிழக்கின் உணர்வைப் புரிந்துகொள்ளாத மேற்கின் கற்பனையாகும். ஏன் இன்றைய கம்போடியர்களாலும் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லையோவென எண்ணவைக்கிறது.

‘அங்கோரைப் படைத்த மக்களால் எதையும் செய்ய முடியும்’ எனக் கொக்கரித்த சர்வாதிகாரி போல்பாட் கம்போடிய மக்கள் அனைவரையும் கிராமப்புறங்களை நோக்கித் துரத்தி அவர்களை விவசாய மண்ணில் கடின உழைப்பில் ஈடுபடவைத்தான். எதிர்த்தவர்களைக் கொன்றொழித்தான். கம் போடியா கொலையுண்ட பூமியாகியது.

எந்தச் சக்தி அங்கோர் கோயில்களைக் கட்டுமாறு அவர்களை இயக்கியது என்பதை அறியாத போல்பாட்டின் படைகள் போரின் போது அங்கோர் கோயில்களில் ஓடி ஒளிந்த மக்களை வேட்டையாடியதுடன் கோயில்களையும் நாசமாக்கின. பல புத்த இந்துக் கடவுள்களின் கற்சிரசுகள் கொய்யப்பட்டன.

நிலமெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு அவற்றின் மீது நடந்தவர்களை முடமாக்கின. பொய்க்கால்களைப் பூட்டிக்கொண்டு இசைமீட்டிப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களைக் கோயில் வாயில்களில் காண முடிகிறது.

அரிசி, பட்டு தவிர சுற்றுலாத் துறையிலிருந்துதான் அவர்களது வருமானம். அங்கோர் கோயில்களைப் பார்க்க ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம் பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இந்தியக் கலாச்சாரம் மற்றும் கட்டடக் கலையின் கணிசமான பாதிப்பு கொண்ட அங்கோரைப் பார்க்க வருபவர்களை இந்தியா வருமாறு அழைக்க இந்திய சுற்றுலாத் துறை முயல வேண்டும். பல்லவ காலத்துக் கட்டடக் கலையின் பாதிப்புகளும் அவற்றில் இருப்பதால் தமிழ் நாட்டுச் சுற்றுலாத் துறையும் பார்வையாளர்களைத் தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு ஈர்க்க முயன்றால் அது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகளை அழைத்து நமது கோயில்களைக் காட்டிவிட்டுத் திருப்பி அனுப்பினாலேயே போதும். அவர்களே கம்போடியாவையும் இந்தியாவையும் தொடர்புபடுத்திப் பார்வையாளர்களை ஊக்கப்படுத்தி விடுவார்கள். சுற்றுலா வாயிலாக வருவாய் மட்டுமின்றி ஒப்புநோக்கில் ஆய்வுகளுக்கும் இது வழிவகுக்கும்.

அவ்வாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் கோயில் கட்டடக் கலையைக் கெமர்கள் இந்தியாவிலிருந்து தான் முற்றாக எடுத்துக்கொண்டனர் என்றோ இந்தியக் கலையைத்தான் அவர்கள் அங்கே செழுமைப்படுத்தினர் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புவோமாக. கெமர்களின் கலை தனித்தன்மை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அங்குள்ள பிரமிட் வடிவ கோபுரங்களை இந்தியக் கோயில்களில் காண முடியாது.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angkorwat.

அங்கோர் வாட், அங்கோர் தோமிலுள்ள பயோன், தா ப்ரோம், தொம்மனான், பன்தே செராய், பே காங்க், நீக் பியன் போன்றவை மிக முக்கியமான கோயில்கள். அவற்றை மனதில் கொள்கிறார் போல் பார்க்கச் சில நாட்கள் தேவை.

நான் மூன்று நாட்களை அங்கே செலவிட்டேன். இரண்டு நாட்களில் இவற்றை யெல்லாம் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டு மூன்றாம் நாளன்று ஏற்கனவே பார்த்தவற்றில் மிகவும் முக்கியம் எனக் கருதியவற்றை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.

சிம் ரெப்பிற்கு வந்து போகும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொருளாதாரத்திற்கேற்பத் தங்குமிடங்கள், உணவு விடுதிகளைத் தேடிக்கொள்ள முடியும். பாங்காக்கிலிருந்து சாலை வழியே செல்பவர்கள் பொய்பெட்டில் (Poipet) விசாவைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கோரைச் சுற்றிப் பார்க்கும்போது நல்ல வழிகாட்டியின் துணையை இரண்டு நாட்களுக்காவது பெறுவது அவசியம்.

இன்று அங்கோர் பூமி தெளிந்த நீரோடையின் அழகைப் பெற்றுள்ளது. சிதிலமடைந்திருப்பினும் துப்புரவுடன் துலங்கும் அக்கோயில்கள் ஒருவேளை இவ்வாறுதான் ஆரம்ப முதலே படைக்கப்பட்டனவோ என்று எண்ணுகிற விதத்தில் கம்பீரம் குலையாது நிற்கின்றன. உலக அதிசயங்கள் என்று அதிகாரபூர்வமான பட்டியலில் அவை இடம்பெறாவிடினும் அவற்றைப் பார்ப்பவர்கள் அவ்விதமே கண்டுகொள்வார்கள் என்பது உறுதி.

மிகப் பரந்த நிலத்தில் கோயில்களை மட்டுமே கொண்டுள்ள நகரம் அங்கோர். விடியலிலும் பொழுது சாய்தலிலும் அதன் கோயில்களைப் பார்க்கும்போது காலத்தைக் கடந்து வாழ்வது என்பது என்ன என்பதை உய்த்து உணர முடிகிறது.

இரவு ஆரம்பிக்கிறபொழுது சுற்றுலாப் பயணிகள் முற்றாக அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். ஆள் நடமாட்டம் சிறிதும் அற்ற அமைதியான பூமியாக மாறிவிடுகிற அங்கோரைக் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கும்போது கெமர்களின் ஆட்சி அங்கு மீண்டும் திரும்பிவிட்டது போன்றே தோற்ற மளிக்கிறது.

பல நூற்றாண்டுகளாக அடர்ந்த காடுகளாகவும் புதர்களாகவும் மண்டிக்கிடந்த நிலையில் எவருடைய கண்காணிப்பு அக் கோயில்கள் மீது இருந்ததோ அதே லோகேஸ்வரரின் கண்காணிப்பு அந்த இருளில் முன்போலவே தொடர்கிறது.

( இதற்கான சுட்டி)

தொடரும் .....

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:41 am

அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது.முதல் இரு குலோத்துங்கர்கள் ஆண்ட காலங்களை ஒட்டியது சூரியவர்மன் காலம்.

தமிழ் அரசர்களை போலவே இந்த அரசர்களும் விடாது போர் புரிந்தனர்.வென்றால் வெற்றியை கொண்டாட அவர்களுக்கு தெரிந்த வழி கோயில் கட்டுவது தான்.சீயம் ரீப்பை சுற்றியே நூற்றுக்கணக்கான கோயில்கள் இருப்பதால் அவர்கள் பல போர்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.


அங்கோர் இருக்கும்வாட் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதிகிரார்கள்.அகழி மேரு மலையை சுற்றி பெருங்கடலை குறிக்கும் என்றால் கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர்,நிலம்,காற்று ஆகிய தளங்கள்.

மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் எழுவளையங்கள், மேரு மலையை சுற்றி இருக்கும் எழு மலைத்தொடர்கள்.கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது.14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாக தான் இருக்கிறது.கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை.ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்கள்.

அகழியை கடந்து கோவிலின் வெளி சுற்றில் காலடி வைக்கும் போது,இலேசான இருள் சூழ்கிறது.நம்மளையையறியாமல் பேரண்டத்தில் நம் பாதம் படும் உணர்வு ஏற்படுகிறது.சுற்றிலும் அடுக்கிச் சீரமைக்கப்பட்ட,நமக்கு மட்டுமே கேட்கும்படி உறுமும் கற்கள்.வெளியே வந்துவிடலாம் என்றால் நம்மை ஈர்க்கும் அப்சரஸ்கள் இரண்டாயிரத்துக்கும் மேல் சுவர்களில் சாய்ந்துகொண்டிருக்கிரார்கள்,.இந்திய தொல்லியலாளர்கள் இந்த அழகிகளை சுத்தம் செய்ய புறப்பட்டு பலரை சிதைத்துவிட்டதாக பேச்சு.


விஷ்ணு கர்ப்பகிரகத்திளிருந்து வெளியேற்றப்பட்டு வெளிச்சுற்றில் இருக்கிறார்.எட்டுக் கைகளை கொண்ட விஷ்ணு விரிந்து படர்ந்த மூக்கும் மேல் நோக்கி வளைய துடிக்கு இதழ்களும் கொண்ட கம்போடிய பேரழகர்.

அங்கோர் நாட்டின் பேரதிசயம் இந்த கோபுரங்கள் அல்ல.அமெரிக்கமூதாட்டி ஒருவர் தான் இறந்ததும் தனது சாம்பல் அங்கோர் வாட்டில் தூவபப்டவேண்டும் என்று விருப்பப்பட்டு அவ்வாறே தூவப்பட்டுமிருக்கிறது.

இவ்வாறு இந்த இடத்துக்கு வருபவரை மீண்டும் வர தூண்டுவது மூன்றாம் சுற்றிலிருக்கும் புடைப்பு சிற்பங்கள் தாம்.இவை 600 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் கொண்ட சிற்பங்கள்.இந்த சிற்பங்களை வடித்தது மட்டும் அல்ல வடிக்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே ஓர் பேரதிசயம் தான்.இந்த சுற்றின் மேற்கு பகுதியில் குர்ஷேத்திர போர் செதுக்கப்பட்டிருக்கிறது.சிற்பத்தின் இரு பக்கங்களிலிருந்தும் வீரர்கள் சீராக வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து வருகிறார்கள்.

தலைவர்கள் தேர்களிலும் யானைகளிலும் வருகிறார்கள்.நடுப்பகுதியை நெருங்க நெருங்க போரின் உக்கிரம் முற்றுகிறது.ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்கிறார்கள்.பீஷ்ம பிதாமகரை பார்க்கிறோம்-அம்பு படுக்கையில்.

குடுமி வைத்த துரோணர் அம்பு பூட்டிய வில்லோடு காட்சி அளிக்கிறார்.கர்ணன் தனது தேர்ச்சக்கரத்தை தூக்க முயல்கிறான். அர்ஜூனன் அவன் மீது அம்பு எய்கிறான். அவனது தேரோட்டி நான்கு கரங்கள் கொண்ட கண்ணன்.
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angkor-wat-5

கிழக்கு சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தயும் கவர்ந்த ஒரு புராண கதை செதுக்கப்பட்டிருக்கிறது.சமுத்திரத்தை கடைந்து அமுதம் எடுத்ததை சொல்லும் அந்த பாகவதப் புராண கதை.இந்த நாடுகளில் பல இடங்களில் பல வடிவம் தரப்பட்டிருக்கிறது.

உதாரணமாக பாங்காக் நகரின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இந்த கதை மிக அழகிய வண்ணமயமான சிலைகளின் மூலம் சொள்ளபப்டுவதை காணலாம்.இங்கு கல்லில் சொல்லப்படுகிறது.வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல்வண்ணன் மேற்பார்வையில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைகிறார்கள்.

50மீட்டர் நீளம் கொண்ட இந்த சிற்பத்தின் மையக்கொட்டை வாசுகி ஆக்கிரமித்து கொள்கிறது.விஷம் கக்கும் தலைப்பக்கம் அசுரர்கள் .வால் பக்கம் தேவர்கள்.கடல்வண்ணனே ஆமையாகி மதத்திற்கு அடித்தளமாய் இருக்கிறான்.கடலில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் அல்லலாடுகின்றன.

சில துண்டாக்கப்படுகின்றன. அசுரர்களின் பக்கபலமாக ராவணேஸ்வரன் தனது பத்து தலைகளோடு நிக்கிறான்.அனுமன் தேவர்களுக்கு துணை புரிகிறான்.இது கம்போடிய இடை செருகல்.

கண்ணன் பானாசுரனோடு போர் புரிவது,சூர்யவர்மனின் பவனி.நரகத்தில் நமக்கு கிடைக்கும் தண்டனைகள் போன்றவை இந்த சுற்றின் மற்ற பகதிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் என்னை மிக கவர்ந்த சிற்பங்கள் ராம,ராவண யுத்தத்தை சித்தரிப்பவை தான்.இந்த சிற்பங்களில் ராமன் தாவிப்பாயும் அனுமனின் தோளில் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்பும்வைத்துக்கொண்டு அடுத்த கணம் அவனே ராவணன் மீது பாய்ந்துவிடுவான் போன்ற அவசரம் இந்த சிற்பத்தில் தெரிகிறது.

ராவணன் பேய்த்தேர் ஏறி போர் புரிகிறான்.ராவணின் பத்து தலைகள் நமது ஊர் சிலைகளில் இருப்பது போல பக்கவாட்டில் இல்லை.அவை மூன்று அடுக்குகளில் 5 :4 :1 என்று பகுக்கப்பட்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன்.நமக்கு தெரிவது எழு தலைகள் தான்/ஆகப்பெரிய மூன்று தலைகள் முதல் அடுக்கில்.மத்தியில் மூன்று.மகுடத்தில் ஒன்று.ராமனும் ராவணனும் ஒரு புறம் போர் புரிந்தாலும் நம்மை கவருவது குரங்குகள் தாம்.

அவை அசுரர்களுடன் பல உத்திகளில் போர் புரிகின்றன.ஒரு குரங்கு சிங்க முகம் கொண்ட அசுரனின் வாலை கடித்து துண்டாக்க முயல்கிறது. அங்கதான் ஒரு யானையின் தந்தங்களை பற்றி அதை சுழற்றி அடிக்கிறான்.நீலன் இரண்டு சிங்கங்கள் பூட்டிய தேர்களை சமாளிக்கிறான்.

போர் புரிந்தால் தான் வெற்றியை அடைய முடியும் என்பது இந்த சுற்றுக்களில் திரும்ப திரும்ப சொல்லப்பட்டிருக்கிறது.மரணம் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை.ஆனால் மரணத்தால் கவியும் சோகத்தை ஒரு சிற்பி உட்கோபுர சுவர் ஒன்றில் வடித்திருக்கிறான்.வாலியின் உடலை வைத்துக்கொண்டு மற்ற குரங்குகள் சோகம் காப்பது போல் வடிக்கப்பட்ட இந்த சிற்பம் ஈடு இணையற்ற ஒரு கலைப்படைப்பு.

(காலச்சுவடு)( இதற்கான சுட்டி)

தொடரும் ....

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:44 am

சீனப் புத்தாண்டு விடுமுறையில் கம்போடியா செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கம்போடியா என்ற நாட்டை பற்றி என் மனதில் எந்தவித எண்ணமும் இல்லை. ஏதோ விடுமுறையை கழிக்க வேண்டும் என்ற எண்ணதுடனே சென்றேன். அங்கு சென்றபின் தான் உலகத்தில் இருக்கும் கலைசெல்வங்களெல்லாம் ஒரே இடத்தில் குவிந்த மாதிரி ஒரு தோற்றம் எனக்கு ஏற்பட்டது.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angor5

நான், என் தாய்நாட்டில் இருக்கும் உணர்வை எனக்கு கொடுத்தது அங்கோர் வாட். அங்கோர் நகரத்தில் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல கோயில்கள் உள்ளன.
இயற்கையின் தாக்கத்தாலும், உள் நாட்டு கலவரதினாலும் அழிந்தது போக மிச்சம் இருப்பதே இவ்வளவு பிரம்மாண்டம் எனில், "என்னே.. அந்த மன்னனின் திறமை!" என வியக்காமல் இருக்க முடியவில்லை.

கம்பூச்சியா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் கிமர் என்றும் அழைக்கின்றனர். முதல் மூன்று நூற்றாண்டுகள் இந்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வந்தது. இந்த காரணத்தினால் இன்றும் இந்திய கலசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் அதிக அளவு காணப்படுகிறது.
தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angor1

ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது. மிகோங்க் மற்றும் தொன்லே சாப் நதிக்கரையில் தான் தெனோம் கூலன் என்ற ஊரை ஜயவர்மன் II நிர்மானிதான். அந்த நகரம் இன்று சியாம் ரீப் என்று அழைக்கப்படுகிறது. அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது.


மன்னன் சூர்யவர்மன் அங்கோர் வாட் நகரத்தில் கமய் என்ற தேசத்தை ஆண்டு வந்தான். மன்னன் சூரியவர்மன் II ஆட்சி காலத்தை அங்கோர் வாட்டின் பொற்காலமாக கருதுகிறார்கள். 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேரு மன்னர்கள் கோயில்களை கட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன், ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angor2

அங்கோர் மன்னர்கள் தங்களை தெய்வமாகவே கருதி கோயில்களை கட்டி கொண்டனர். பந்தே ஸ்ரீ என்று கூறப்படும் ஆலயம் ஜயவர்மனால் 9-ம் நூற்றாண்டில் மணர்க்கல்லினால் கட்ட பட்ட பிரம்மாண்டமான ஆலயமாகும். ஜயவர்மன் என்ற மன்னன் தனக்கு மட்டுமில்லாமல் தன் தாய் தந்தைக்கும் கோவில் கட்டி உள்ளான். தன்னுடய கோவிலை அங்கோர் தாம் என்றும் தன் தாய்க்கு கட்டிய கோயிலை தா ப்ரோம் என்றும் அழைத்து கொண்டான்.

மன்னன் கமய வம்சாவளி தோன்றலாய் இருந்தாலும் இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட காதலால் தனது பெயரை ஜய வர்மன் என சூட்டி கொண்டான். இவனுக்கு பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின் பற்றினர். இவர்கள் காலத்தில் இந்து மதமும் புத்த மதமும் வேறுபாடின்றி தழைத்தோங்கியது.

அங்கோர் வாட் பெரிய கோயிலை காக்கும் கடவுளான விஷ்ணுவை கொண்டு தன்னையும் விஷ்ணுவாக பாவித்து கொண்டு இந்த கோயிலை எழுப்பினான். நான்கு திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு. தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும், சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணபடுகிறது.

இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்க்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.

நடைமுறையில் மக்கள் சட்ட திட்டங்களுக்கும், பழி பாவங்களுக்கும் கட்டுபட்டு நடக்க இந்த சிற்பங்கள் உதவியது. இவர்களது காலத்தில் நாடே செல்வ செழிப்புடன் காணப்பட்டது. இவர்களுக்கு பின் வந்த மன்னர்களின் ஆட்சியில் தொடங்கியது, ஆதிக்க வெறி.

இந்து மதத்தவர் புத்தர் சிலைகளையும் அதே போல் புத்த மதத்தவர் இந்து கடவுளின் சிலைகளையும் தாக்கி அழித்தனர். இயற்கை சீற்றங்களினால் அழிவு, பல்வேறு நாடுகளின் தாக்குதல், மற்றும் உள் நாட்டு போரினாலும் பல சிலைகளில் பாதிப்பு ஏற்பட்டன. இவ்வாறு படிப்படியாக இக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழ் அடைந்த நிலைக்கு தள்ளப்பட்டன.

இருபது ஆண்டகளாக நடைபெற்ற போரினால் அரசியல், நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற அனைத்து துறைகளும் சிதைந்து காணப்பட்டது.

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Angor3(1)

2000-ம் ஆண்டுலிருந்து கம்போடியாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கம்போடிய நாட்டு மன்னனே நாட்டின் தலைவன். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கு ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகள் பொருளாதார உதவி வழங்கின. உலக சுற்றுலா பயணிகளின் பார்வையை தன் பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது கம்போடியா.
அண்மையில் நான் சென்ற சமயம், பல்வேறு நாட்டினர் அங்கோர் வாட்டிற்க்கு சுற்றுலா வந்திருந்தனர். அங்கோர் வாட் சுற்றுலா வழிகாட்டி அவர்களின் பேச்சு வழக்கில் நமது புராண கதைகளை விவரிப்பது கொள்ளை அழகு. அங்கோர் வாட் கோவிலே கம்போடியாவின் சின்னமாக தேசிய கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

கம்போடியாவின் முன்னேற்ற பாதைக்கு அங்கோர் வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டென்பதில் சந்தேகமே இல்லை.
(விகடன்) ( இதற்கான சுட்டி)

தொடரும் ...

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:48 am

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  419767_326392544065293_1996380900_n

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது .ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா ?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது "! !.இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்,திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர் . இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!!

அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .


இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது !.பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது ,அதை அவர்
" is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of."
என்று கூறியுள்ளார்.பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது .அவர் அந்த புத்தகத்தில்

One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged."
என்று குறிப்பிட்டுள்ளார் !! .

பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!.இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது !.இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம்,

ஆனால் இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக்கொள்கிறேன். கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை !!

வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது !! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை ! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே !!

-------------------------------------------------------------------------------------------------------


உலக அதிசயங்கள் ஏழு என்று சொல்வார்கள். எட்டு என்பதுதான் சரி. காட்டுக்குள் மறைந்து கிடந்த இந்த எட்டாவது அதிசயம் 1860ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப் பட்டது. Henri Mahout என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். ஒரு தாவர ஆராய்ச்சியாளர். கம்போடியக் காடுகளில் வண்ணத்துப் பூச்சிகளையும் சிலந்தி வலைகளையும் தேடிக் கொண்டு போனார். அப்படி போய்க் கொண்டிருக்கும் போது ஆல மர வேர்கள் வலை பின்னிய ஒரு சிவன் ஆலயத்தில் தடுக்கி விழுந்தார். அதைச் சுற்றி நூற்றுக்கணக்கான கோட்டைகள்.

பார்க்கிற இடம் எல்லாம் கோயில்கள் குளங்கள். நீர் பூக்கும் தாமரைத் தடாகங்கள். சரம் சரமாய்ச் சலங்கைகளை வார்த்துச் சுதி பாடும் கருங்கல் சிலைகள். தில்லை அம்பலத்தின் திவ்யச் சுந்தரங்கள். அற்புதச் சிற்பங்கள். அழகு பார்க்கும் ஆயிரம் கால் மண்டபங்கள்.

சொர்க்க லோகத்தைக் காட்டும் சொப்பனச் ஜீவன்கள்

சிற்ப சாஸ்திரங்களின் படி கிழக்கு மேற்கு கோபுரங்கள். வெளிப் பிரகாரத்தில் கருங்கல் தள வரிசைகள். அவை எல்லாம் சொர்க்க லோகத்தையே திறந்து காட்டும் சொப்பனச் ஜீவன்கள். புராண இதிகாசங்களை அழகழகாய் அபிநயம் பிடிக்கும் ஆலாபனைகள். மனிதர் கிரங்கிப் போனார்.

அவை எல்லாம் பல நூறு ஆண்டுகள் கம்போடியக் காடுகளில் மர்மமாய் மாயமாய் மௌன ராகம் பாடிக்கொண்டிருந்த கலைக் காவியங்கள். கலா ஓவியங்கள். உலக அதிசயங்களின் ஒட்டு மொத்தப் பேழைகள். இப்படி ஓர் அதிசயம் இருப்பதை உலகத்திற்குச் சொன்ன போது யாரும் அதை நம்பவில்லை. 1930 ஆம் ஆண்டுகளில் அந்த அதிசயத்தைப் பற்றிய தீவிர ஆய்வுகளில் இறங்கினார்கள்.

Airborne Synthetic Aperture ராடார் அதி நவீன கருவிகளைப் பயன் படுத்தி எல்லா ரகசியங்களையும் கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் ராமர் பாலம் சர்ச்சை தெரியும் தானே. உண்மையிலேயே ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க இந்தக் கருவியைத் தான் பயன் படுத்தினார்கள். அதன் முடிவு என்ன. ஊர் வம்பு வரும். வேண்டாமே.

அலை அலையான கலா ரகசியங்கள்

இதற்கு அமெரிக்காவின் NASA விண்வெளி நிறுவனம் பெரிதும் உதவியது. அப்புறம் நேராகப் போய் படம் எடுத்தார்கள். அந்தப் படங்களைப் பார்த்து உலகமே வியந்து போனது. அவை எல்லாம் உண்மையாக இருக்குமா என்று அனைத்துலகப் பட்டி மன்றங்கள் வேறு நடத்தினார்கள்.

நான் பார்த்ததைச் சொல்கிறேன். காடுகள் நெடுகிலும் அற்புதமான லீலா விநோதச் சிலைகள். அலை அலையான வெளி மதில்கள். நடன மோகனத் தாரகைகளின் நவரச நாட்டியங்கள். சாகும் வரை சலைக்காமல் பார்க்க வேண்டிய சித்திரா இழை பாடுகள். மூச்சு நிற்கும் போதும் கூட மூச்சு விடாமல் பார்க்க வேண்டிய மனோ ரஞ்சிதங்கள். மூச்சு போன பிறகும் கூட மூன்றாம் பிறையைப் போல சரசமாடும் சர்வ லோக அப்சரங்கள்.

அத்தனையும் அப்சரங்கள். அவற்றை அப்சாரா என்று கம்போடியர்கள் அழைக்கிறார்கள். என்னே கலா அதிசயங்கள். ஒளி வீசிக் கொண்டு இருக்கும் ஊர்வசிகள் ரம்பைகள். ஊர்வலம் போகும் சொப்பனச் சுந்தரிகள். போதும். இதற்கு மேல் கேட்க வேண்டாம். மற்றதை நீங்களே போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த அதிசயத்தைக் கம்போடிய மக்களே முதலில் நம்பவில்லை. மற்றவர்களைக் கேட்க வேண்டுமா. வேறு உலகத்தில் இருந்து மகா மெகா மனிதர்கள் வந்தார்களாம். கோயில்களைக் கட்டினார்களாம். குளங்களைத் தோண்டினார்களாம். சிலைகளைச் செதுக்கினார்களாம். ஆலமரங்களை நட்டார்களாம்.

அப்புறம் தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு பறந்து விட்டார்களாம். எல்லாரும் கை எடுத்துக் கும்பிட்டு அழுதார்களாம். சீரியஸாகச் சீரியல்களைப் பார்த்தால் பேரிளம் பெண்களின் விசும்பல் சத்தம் கேட்கும் இல்லையா. அந்த மாதிரி ஏதாகிலும் நடந்து இருக்கலாம்.

ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள்

கம்போடியர்கள் இப்போது அதை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கை எடுத்துக் கும்பிடுகிறார்கள். பார்க்க வருபவர்களிடம் ஆண்டுக்கு எழுநூறு கோடி ரிங்கிட்டிற்கு டிக்கெட் விற்று சந்தோஷப் படுகிறார்கள். அந்த உலக அதிசயம்தான் அங்கோர் வாட்.

இந்த அதிசயத்தின் பின்னால் நீண்ட நெடிய வரலாறே இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அங்கோர் வாட் ஆலயங்களைக் கட்டிய ஜெயவர்மன் பரம்பரையினர் எங்கே இருந்து வந்தார்கள் என்பதைச் சொல்கிறேன். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். எல்லோரும் படிக்க வேண்டும் என்பது நம்முடைய ஆசை.

கட்டுரையை எழுதுவதற்காக அண்மையில் கம்போடியா நாட்டின் அங்கோர் வாட்டிற்கே போய் வந்தேன். என்னுடன் வந்தவர்களைப் பற்றிய விவரங்களைப் பிறகு சொல்கிறேன்.

முதலில் அங்கோர் வாட் வரலாற்றை ஆரம்பத்திலிருந்தே சொல்ல வேண்டும். அப்போதுதான் ஜெயவர்மன் சூரியவர்மன் கதையும் உங்களுக்குப் புரியும். சரியா.

கி.பி.100ஆம் ஆண்டுகளில் அதாவது 1900 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. தென் கிழக்கு ஆசியா மாபெரும் வணிகத் தளமாக, வாணிபக் கேந்திரமாக விளங்கியது. வடக்கே சீனாவில் இருந்து பட்டுத் துணிகள் வந்தன. பாரசீகத்தில் இருந்து பலசரக்குகள் வந்தன. இந்தியாவில் இருந்து இந்து-புத்த மதச் சித்தாந்தங்கள் வந்தன. இதில் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாக வந்தனர்.

புதிய மண்ணில் புதிய கலப்பு இரத்தம்

சரி. அப்படி வியாபாரம் செய்ய வந்தவர்கள் தங்களுடைய கலைகளையும் கலாசாரங்களையும் கொண்டு வந்தனர். அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்கள் அந்தக் கலா மரபுகளுக்குள் கவர்ந்து இழுக்கப்பட்டனர்.

அங்கு வாழ்ந்த சுதேசிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். புதிய மண்ணில் புதிய கலப்பு இரத்தம். அதனால் வித்தியாசமான வியூகங்கள். வித்தியாசமான அணுகு முறைகள்.

இதில் இந்தியர்களின் கலை, சமயம், சட்ட ஒழுங்கு முறைகள், அரசியல் சாணக்கியம், எழுத்து, இலக்கியம் போன்றவை பூர்வீகக் குடிமக்களை வெகுவாகப் பாதித்து விட்டன. பாதிப்பு என்றால் இங்கே ஈர்ப்பு என்று அர்த்தம்.

அந்த வகையில் இந்திய இனங்களைச் சார்ந்தவர்கள் சின்னச் சின்ன நிலப் பிரபுகளாக மாறினார்கள். அவர்கள் தனித் தனியாகச் சின்னச் சின்ன நகரங்களை உருவாக்கினார்கள். அந்த நகரங்களுக்குள் கோட்டைகளைக் கட்டினார்கள். அந்தக் கோட்டைகளுக்குச் சுவர்கள், மதில்கள், பாதுகாப்பு அரண்கள். அதற்குள் பூர்வீக மக்களின் அடிமைத்தனச் சேவைகள்.

நாளடைவில் ஆளுமையும் அதிகாரமும் பெருகின. ஆசைகளும் மல்கின. ஒரு சில படிகள் மேலே போனர்கள். தங்களைக் குறுநில மன்னர்களாக, நிலப் பிரபுகளாக மாற்றிக் கொண்டார்கள். அப்புறம் என்ன. மண்ணாசைக்குப் பின்னால் பெண் ஆசையும் கலைக் கட்டியது. இயற்கையான மனித இயல்புகள்தானே.

Funan என்பது பூநாண்

தொட்ட குறை விட்ட குறையாகப் பொன் ஆசையும் ஒட்டிக் கொண்டது. அவருடைய நிலத்தை இவர் பிடுங்குவதும், இவருடைய மனைவி மக்களை மற்றவர் இழுத்துச் செல்வதும் சகஜமாகிப் போனது. இவை எல்லாம் என்ன நேற்று இன்று நடக்கிற விஷயமா. காலாகாலத்திற்கும் அரிச்சுவடி ஆகிப் போன கலைகள் தானே. அது ஆரம்பக் கட்டம். ஒரு சாம்ராஜ்யம் உருவாகின்ற காலக் கட்டம்.

கம்போடியாவுக்கு வட மேற்கில் இருப்பது வியட்நாம். இந்த வியட்நாமில் கி.பி.300 ஆவது ஆண்டுகளில் பலம் வாய்ந்த ஓர் இந்திய சாம்ராஜ்யம் உருவாகியது.

அந்தச் சாம்ராஜ்யத்தின் பெயர் பூனான். அது செழிப்பும் கொழிப்புமாகப் புகழின் உச்சியில் வளர்ந்து கொண்டிருந்தது. Funan என்பது என்னவோ சீனச் சொல் மாதிரி இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். அது ஒரு சமஸ்கிருதச் சொல். இருந்தாலும் பூனான் என்றால் சீன மொழியில் மலை என்று பொருள்.

காலப் போக்கில் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, பர்மா, மலாயாவின் வட பகுதிகள் எல்லாம் பூனான் ஆட்சியின் கீழ் வந்தன. பூனான் ஓர் இந்திய சாம்ராஜ்யம். நம்ப முடிகிறதா.

ஒரு காலத்தில் இந்தியர்கள் தென்கிழக்கு ஆசியாவையே ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. இவற்றை எல்லாம் எதில் கொண்டு போய்ச் சேர்ப்பது. அவர்கள் விட்டு விட்டுப் போகாமல் இருந்தால் வரலாறு இப்போது வேறு மாதிரியாக இருக்கும் இல்லையா.

கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர்

கம்பு எனும் பிராமணர்தான் பூனான் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர். அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Ruler_of_Cambodia எனும் இணையத் தளத்தில் இந்த விவரங்கள் உள்ளன. ஆனால், விரிவாக இல்லை. கம்பு எனும் கவுந்தன்யா கம்போடியாவுக்கு வந்தார். நிலங்களை வாங்கிப் போட்டார். சில ஆண்டுகளில் நிலப் பிரபுவாக மாறினார்.

அங்கே உள்ள பூர்வீகப் பெண்ணைக் கல்யாணம் செய்தார். அவளுடைய பெயர்Saoma எனும் மீரா. பின்னர் கம்புவின் நிலபுலன்கள் எல்லாம் கிராமங்களாக மாறின. அப்புறம் கிராமங்கள் மாவட்டமாக மாறியது. மாவட்டங்கள் ஒரு சாம்ராஜ்யமாகவே மாறியது. இப்படித் தான் பூனான் சாம்ராஜ்யம் உருவானது. சரியா.

கம்பு என்பவரின் பெயரில் இருந்துதான் கம்புஜா எனும் நாட்டின் பெயரும் உருவானது. கம்போடியாவின் இப்போதைய பெயர் கம்புஜா. அப்படியா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. விஷயம் என்னவோ புதிசு. இருந்தாலும் வரலாறு இருக்கிறதே அது ரொம்பவும் பழசு. அவருக்குப் பின் பல அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். முந்நூறு ஆண்டுகளுக்குச் சரியான வரலாற்று விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்ததைத் தருகிறேன்.

கி.பி.100 லிருந்து கி.பி.434 வரை எட்டு அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். Hun Panhuang, Fan Shih-Man, Fan Chin-Sheng, Fan Siyun, Tian Chu Chantan எனும் பெயர்களில் சீன அரசர்களும் இருந்து இருக்கிறார்கள். கி.பி.434 க்குப் பின் வந்தவர்கள்.

ஸ்ரீஇந்திரவர்மன் (கி.பி.434- கி.பி.435)
கவுந்தன்யா ஜெயவர்மன் (கி.பி.484- கி.பி.514)
ருத்ரவர்மன் (கி.பி.514- கி.பி.550)
பவகவர்மன் (கி.பி.550- கி.பி.600)
மோகேந்திர வர்மன் (கி.பி.600- கி.பி.616)
ஈசனவர்மன் (கி.பி.616- கி.பி.635)
பவகவர்மன் I (கி.பி.639- கி.பி.657)
ஜெயவர்மன் 1 (கி.பி.657- கி.பி.681)
ஜெயாதேவி (கி.பி.681- கி.பி.713)

இது இப்படி இருக்க, பூனான் சாம்ராஜ்யத்திற்கு வடக்கே செந்திலா எனும் ஒரு குட்டி சாம்ராஜ்யமும் இருந்தது. இந்தச் செந்திலா குட்டி சாம்ராஜ்யமும் பூனான் ஆளுமையின் கீழேதான் இருந்தது. கி.பி.600 ஆம் ஆண்டுகளில் நம்முடைய பூனான் ஆட்சியில் குளறுபடிகள் நிகழ்ந்தன. ஆட்சியும் ஆட்டம் கண்டது.

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டது செந்திலா குட்டி அரசு. பூனானின் வடக்குப் பகுதியைக் கலவரம் செய்து பிடித்துக் கொண்டது. கீழே தாய்லாந்தில் இருந்த Mon பூர்வீக மக்கள் சும்மா இருப்பார்களா. அவர்களும் தங்கள் பங்கிற்கு தென் பகுதியைப் பிடித்துக் கொண்டனர்.


சைலேந்திரா மன்னர்கள்

இந்த 'மோன்' அரசுதான் இப்போதைய தாய்லாந்து. செந்திலா அரசு இருக்கிறதே அது இப்போதைய கம்போடியா. காலம் ஓடியது. செந்திலா அரசும் எஞ்சி மிஞ்சி இருந்த மற்ற எல்லா பூனான் நிலத்தையும் அடித்துப் பிடித்துக் கொண்டது.
செந்திலா அரசர்கள் கி.பி.706 லிருந்து கி.பி. 802 வரை இந்திய மன்னர்களின் பூனான் அரசை ஆட்சி செய்தார்கள்.

செந்திலா ஆட்சிக்கு வந்ததும் பூனான் பரம்பரையைச் சேர்ந்த இளவரசர்கள் கண் காணாத இடங்களுக்கு போய் மறைந்து வாழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் நம்முடைய அங்கோர் வாட் கதாநாயகன் ஜெயவர்மன் II. இவர் ஜாவா தீவில் நாடோடியாய் வாழ்ந்தார். அப்போது ஜாவாவை சைலேந்திரா சாம்ராஜ்யம் ஆட்சி செய்து வந்தது. பலம் வாய்ந்த அரசு. சைலேந்திரா மன்னர்கள் ஜெயவர்மன் II ஐ நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

சைலேந்திரா அரசு ஜாவா தீவை ஆட்சி செய்தது. ஸ்ரீ விஜயா அரசு சுமத்திராவை ஆட்சி செய்தது. ஸ்ரீ விஜயா அரசும் சைலேந்திர அரசும் நல்ல உறவுகளூடன் வாழ்ந்தவை. இந்தோனேசியாவை மொத்தமாக இந்தியர்கள் ஆட்சி செய்து வந்த காலம் என்றும் சொல்லலாம்.

இந்தக் காலத்தில் தான் Borobudur 'போராபுடுர்' எனும் புத்த நினைவுக் கோட்டையும் கட்டப் பட்டது. கட்டியவர்கள் சைலேந்திரர்கள். இந்த 'போராபுடுர்' இருக்கிறதே இது தான் உலகிலேயே இப்போதைக்கு மிகப் பெரிய புத்த நினைவு ஆலயக் கோட்டை.

இந்தக் காலக் கட்டத்தில் மேலே செந்திலா ஆட்சியில் பிரச்னை புகையத் தொடங்கியது.. உள்நாட்டுப் போர். கி.பி.8 ஆம் நூற்றாண்டில் செந்திலா அரசு இரண்டாக உடைந்து போனது.

பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை. ஒரு நல்ல நாள் பார்த்து ஜெயவர்மன் II கம்போடியாவுக்கு வந்தார். சும்மா வரவில்லை. ஜாவாவிலிருந்து ஒரு பெரிய படையைக் கொண்டு வந்தார்.

வந்தது கி.பி. 790 ஆம் ஆண்டு. கம்போடியாவைக் கைப்பற்றியது கி.பி.802ல். 25 ஆண்டுகள் தொடர்ந்து கடல் போர். இந்த ஜெயவர்மன் II தான் கம்போடியாவின் தலை எழுத்தையே மாற்றிப் போட்டவர்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். இப்படி ஒரு இந்தியப் போர் நடந்தது பலருக்குத் தெரியவே தெரியாது.

இந்த ஜெயவர்மன் தான் கம்போடியாவை அந்தக் காலத்தில் வல்லரசாக மாற்றியவர். தாய்லாந்தைத் தலை குனிய வைத்தவர். சீனாவைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். தங்களின் எதிரியான செந்திலா ஆட்சியை அடியோடு துடைத்து ஒழித்தவர்.

சிவன் விஷ்ணு ஆலயங்கள்

கம்போடியா நாட்டை விரிவு படுத்தி ஹரிஹரலயா எனும் மாபெரும் நகரத்தையும் உருவாக்கினார். லிங்கத்தை வழி படுதல், சிவா, விஷ்ணு தெய்வங்களை வழி படுதல் போன்றவற்றை அறிமுகம் செய்தவரும் இவரே. அவர் செய்த இன்னும் ஒரு பெரிய காரியம் யசோதபுரம் எனும் தலைநகரை உருவாக்கியது. ரவுலஸ் கோட்டைகளைக் கட்டியது.

ஆனால், உலக அதிசயமான அங்கோர் வாட்டை இவர் கட்ட வில்லை என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். அவர்தான் கட்டியதாகப் பலர் இன்னும் நினைத்து வருகிறார்கள். இவர் நிறைய சிவன் ஆலயங்களைக் கட்டினார். விஷ்ணு ஆலயங்களைக் கட்டினார். உண்மைதான். இவருடைய பெயரால் சியாம் ரியாப் நகரில் இன்றும் ஒரு பெரிய மருத்துவமனை இயங்கி வருகிறது.

கி.பி. 850ல் ஜெயவர்மன் II இறந்து போனார். அவருக்குப் பின் ஜெயவர்மன் III என்பவர் வந்தார். இவர் பல மலை ஆலயங்களைக் கட்டினார். அதன் பின்னர், இந்திரவர்மன் I வந்தார். இவரும் கி.பி. 879ல் பிரியா கோ ஆலயத்தையும், கி.பி. 881ல் பாகோங் ஆலயத்தையும் கட்டினார்.

அடுத்து வந்த யசோவர்மன் I கி.பி.893ல் அங்கோர் பகுதிக்கு தன் தலைநகரத்தை மாற்றினார். முதல் ஆலயக் கோயிலையும் அங்கேதான் கட்டினார்.

அடுத்து வந்த ஹர்ஷவர்மன் 1 என்பவர் பிரசாத் கார்வண் எனும் கோயில்களைக் கட்டினார்.

அடுத்து ஜெயவர்மன் IV வந்தார். இவர் பங்கிற்கு இவரும் பல அரண்மனைகளைக் கட்டினார். தெப்பக் குளங்கள் கட்டப் பட்டன. அதற்கு அடுத்து சூரியவர்மன் II என்பவர் வந்தார். இவர்தான் அங்கோர் வாட் அதிசயத்தைக் கட்டியவர். தென் கிழக்கு ஆசியாவைக் கம்போடியாவின் கீழ் கொண்டு வந்தவர் இவர்தான். முதலில் தாய்லாந்து விழுந்தது. அடுத்து வியட்நாம் விழுந்தது.

பைத்தியம் பிடித்த மனிதர்கள்

அவர் கட்டிய கோயில்களைப் போய்ப் பாருங்கள். இப்படி எல்லாம் கட்டி இருக்கிறார்களே. பைத்தியம் பிடித்த மனிதர்கள் என்று நினைக்கத் தோன்றும். மூலைக்கு மூலை கோயில்கள். பார்க்கும் இடம் எல்லாம் கல் தூண்கள். மொத்தம் 2000 கோயில்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு வருடம் சுற்றினாலும் பார்த்து முடிக்க முடியாது.

அதோடு அந்தக் கோட்டைகளையும் கோயில்களையும் எண்ணிப் பார்க்கவும் முடியாது. ஏனென்றால் பார்க்கும் இடம் எல்லாம் கோயில்களாகத் தான் இருக்கும். எப்படி எண்ணுவது. இடது பக்கம் திரும்பினால் கண்ணுக்கு எட்டிய வரை கோயில்கள். வலது பக்கம் பார்த்தால் அதே மாதிரிதான். மொத்தம் பதினாறு சதுர கிலோமீட்டர் அளவுக்கு கோயில்கள், குளங்கள், ஏரிகள், தாமரைத் தடாகங்கள். முன்னூறு நானூறு வருடங்களுக்கு ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

அங்கோர் வாட்டின் உள்ளே நுழைந்ததுமே நமக்குள் ஒரு பயம் வந்துவிடுகிறது. அது என்ன பயமோ தெரியவில்லை. ஆனால், எனக்கும் வந்தது. ஒரு மாதிரியான பயம். இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு கட்டி இருக்கிறார்களே. எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள். எப்படி கட்டி இருப்பார்கள். என்ன மாதிரியான அறிவியல் அறிவு அவர்களிடம் இருந்து இருக்கும். அவர்களும் நம்மைப் போன்ற இந்தியர்கள்தானே. இந்த மாதிரியான எண்ணங்கள் வந்தன

ஜெயவர்மன் VII எனும் அரசன் இந்து மதத்தில் இருந்து மாறிப் போய் புத்த மதத்தில் சேர்ந்தான். இது நடந்தது 1181ஆம் ஆண்டு. இந்த அரசன் தான் மஹாயனா புத்த மதத்தைக் கொண்டு வந்தவர். இவர் வருவதற்கு முன் Cham எனும் இனத்தவர் கம்போடியாவைக் கொஞ்ச காலம் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பாயோன் புத்த ஆலயங்களைக் கட்டியவர் ஜெயவர்மன் VII தான். அவர் இறந்த பிறகு இந்திரவர்மன் II எனும் அரசர் வந்தார். இவரும் நிறைய ஆலயங்கள் என்றும் கோட்டைகள் என்றும் கட்டினார். அதன் பின்னர் வந்தது ஜெயவர்மன் VIII என்பவர் வந்தார். இவர் கம்போடியாவை புத்த மதத்திலிருந்து மறுபடியும் இந்து வேதாதங்களுக்குக் கொண்டு வந்தார். இவர்தான் அங்கோர் சாம்ராஜ்யத்தின் ஆகக் கடைசி அரசர்.

இவர் இறந்த பிறகு கம்போடியா பலகீனமாகிப் போனது. கம்போடியா என்கிற நாடு சியாம் ஆட்சியின் கீழ் வந்தது. சில ஆண்டுகளில் சியாம் ஆட்சியும் சிதைந்தும் போனது. அப்புறம் பலப் பல மாற்றங்கள், பலப் பல அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. இப்போது இந்த அங்கோர் வாட்டை உலகச் சுற்றுப் பயணிகளிடம் அடகு வைத்துக் கொண்டு கம்போடியா தன் வறுமையைத் துடைத்து வருகிறது. இது தான் விஷயம்.

நன்றி-கே எஸ் முத்துகிருஷ்ணன் ( இதற்க்கான சுட்டி)

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 10:49 am

இந்த கோயில் பற்றிய ஒரு காணொளி கீழே.ஒரு தடவை பார்த்துதான் செல்லுங்களேன்!



வரலாற்றுக்கே திரும்பி சென்ற மாதிரி இருக்கிறதா?வரலாற்று கதைகளை வாசிப்பதில் உள்ள இன்பம் வேறேதும் இல்லை.அது அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்.இந்த கோயில் தமிழர்களினது என்று கூறப்பட்டாலும்,சில ஆபிரிக்கர்கள் தங்களதும் என வாதிடுகிறார்கள் என அறியமுடிகிறது.எவ்வாறாயினும் இருக்கின்ற ஆதாரங்களை வைத்து பார்க்கையில் இது தமிழர்களுடையது தான் என்று தெரிகிறது.

உலகில் பல அதிசயங்களை கனவுக்கப்பால்பட்ட விடயங்களை செய்து முடித்த தமிழர்கள் இன்று உலகமே திரும்பி பார்க்கும் வகையிலான ஊழல்களும்,மோசடிகளும்,துரோகங்களும் என சீரழிவை நோக்கி....
---------
நன்றி : மைந்தன் மனதில்
http://kaviyulagam.blogspot.in/2012/08/blog-post_26.html

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 06, 2012 11:06 am

அங்கோர்வாட் பற்றிய கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி மதன்!



தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 11:36 am

படித்து முடித்ததும் கண்ணில் நீர் வந்தது என்னவோ உண்மை ..

எங்கே போகிறோம் நாம் ... உலகிற்கே கலாசாரம் கற்று கொடுத்த நாம் எங்கே போகிறோம்

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 06, 2012 11:50 am

கெமர் எழுத்து முறையும் , தமிழ் எழுத்து முறையும்

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  Khmer

தமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் "அங்கோர்"கோவில்..!  History_of_Tamil_Script

nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sat Oct 06, 2012 2:50 pm

அருமையிருக்கு
nankut
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் nankut

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக