புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
1 Post - 1%
bala_t
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
1 Post - 1%
prajai
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_m10பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:59 am

[You must be registered and logged in to see this image.] நூலாசிரியர்

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் காணப்படுகிறது. இவருக்கிருந்த தமிழ் இலக்கியத் திறனும் பௌத்த சமயத் தத்துவங்களில் கொண்டிருந்த புலமையும் ஈடுபாடும் இந்நூலிலிருந்து புலனாகின்றன. உலகில் பசிப்பிணி அறவேண்டும் என்ற உயரிய நோக்குடன் மானிட நேயமும் பெண்ணின் பெருமையும் விளங்கும்படி காப்பியம் படைத்த பெருமைக்குரியவர் சாத்தனார்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:01 am

கதை மாந்தர்கள்

மணிமேகலைக் காப்பியத்தின் கதை மாந்தர்களைப் பற்றிய அறிமுகத்தை இங்கே காணலாம்.

மணிமேகலை

காப்பியத் தலைவி. பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி நீக்கிச் சமயத் தொண்டாற்றியவள்.

மாதவி

மணிமேகலையின் தாய். கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு பௌத்த சமயத் துறவியானாள். மகளையும் அதில் ஈடுபடுத்தினாள்.

சித்திராபதி

மாதவியின் தாய்; மணிமேகலையை, மன்னன் மகன் உதயகுமரனோடு இணைத்து வைக்க முயன்றாள்.

உதயகுமரன்

மன்னன் மகன். மணிமேகலையின்பால் காதல் கொண்டவன். எப்படியேனும் அவளை அடையத் துடித்தவன்.

சுதமதி

மணிமேகலையின் தோழி

சங்க தருமன்

பௌத்தத் துறவி

மணிமேகலா தெய்வம்

மணிபல்லவம் என்னும் தீவில் வாழும் ஒரு தெய்வமகள். கோவலன் இந்தத் தெய்வத்தின் பெயரையே தன் மகளுக்குச் சூட்டினான். இந்தத் தெய்வம்தான் மணிமேகலைக்குப் பலவகைகளில் உதவி செய்தது.

தீவதிலகை

இரத்தின தீவகம் என்னும் தீவில் இருந்த பதும பீடத்தின் காவல் தெய்வம். பல வகைகளில் மணிமேகலைக்கு உதவியது.

ஆபுத்திரன்

கருணை மிகுந்தவன். மக்களின் பசிப்பிணியைத் தீர்ப்பதற்காக அமுதசுரபியைப் பெற்றவன். பிறகு அதை ஒரு பொய்கையில் விட்டுச் சென்றான். அதுவே பின்னர் மணிமேகலையின் கைக்கு வந்தது.

ஆதிரை

மணிமேகலை தான் பெற்ற அமுதசுரபியில் முதல் முதலாகப் பிச்சையேற்றது இந்தக்
கற்புக்கரசியிடம்தான்.

சாதுவன்

ஆதிரையின் கணவன். மரக்கலம் உடைந்து நாகர் தீவில் கரையேறி அம்மக்களுக்கு அறிவுரை கூறியவன்.

அறவண அடிகள்

பௌத்தத்துறவி; சமய அறிஞர்; மணிமேகலைக்கு அறநெறி உணர்த்தியவர்; காஞ்சியில் வாழ்ந்தவர்.

கந்திற்பாவை

சக்கரவாளக் கோட்டத்தில் ஒரு தூணில் வாழும் காவல் தெய்வம்

காயசண்டிகை

கந்தர்வப் பெண். ஒரு முனிவரின் சாபத்தால் யானைத் தீ என்னும் பெரும்பசி நோய்க்கு ஆளானவள். மணிமேகலை அமுத சுரபியிலிருந்து உணவளித்ததும் அந்தச் சாபம் விலகியது. உதயகுமரனிடமிருந்து தப்புவதற்காக மணிமேகலை இந்தக் காயசண்டிகையின் உருவில் நடமாடினாள். இதையறிந்து பின் தொடர்ந்த உதயகுமரனைக் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் வெட்டிக் கொன்றான்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:03 am

காப்பியத்தின் தனிச்சிறப்பு

மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற்றப்பட்டு அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசிப்பிணியை நீக்குவதும் காப்பியத்தின் தனிச்சிறப்பாகும்.

மணிமேகலைக் காப்பியம் புத்தரைப் போற்றும் வகை

மனிதன் மனிதனாக வாழ உதவுவதும் மனித நிலையிலிருந்து மேம்படுவதற்கான உரிய வழிவகைகளை வகுத்துரைப்பதும் சமயத்தின் குறிக்கோள் எனலாம். சமயங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்பச் சில மாற்றங்களைப் பெற்று, தம்மைப் புதுப்பித்துக் கொள்வது என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மையாகும். பழைய கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் சமூகத்தில் புரட்சியும் மறுமலர்ச்சியும் தோன்றுவது தவிர்க்க முடியாத நிகழ்ச்சிதான். சடங்குகளும் சம்பிரதாயங்களும் வேள்விகளும் வேதங்களுமே மனிதனை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை மிகுந்திருந்த காலத்தில் புத்தர்பிரான் புதியதோர் ஒளிக்கதிராய்த் தோன்றினார். மனிதரை வெளியே உள்ள யாருமே முன்னேற்ற முடியாது. மனிதன் தன்னாலேதான் உயரவேண்டும். தன் முயற்சியும் தன் ஒழுக்கமும்தான் மனித உயர்விற்கு அடிப்படையாகும் என்றும், மனப்பண்பாடுதான் வாழ்க்கையின் லட்சியம் என்றும் வழிகாட்டியவர் புத்தர். அவருடைய தோற்றம் பற்றி அறவண அடிகள் கூறும் விளக்கத்தை அறியலாமா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:06 am

புத்தரின் தோற்றம்

புத்தர்பிரானின் தோற்றம் குறித்து அறவண அடிகள் அறவணர்த் தொழுத காதையில் கீழ்வருமாறு விளக்குகிறார்: ‘புத்தர்பிரான் கூறிச் சென்ற நல்லறம் தளர்ந்தது. என்றும் அழியாத வீட்டு நெறி தடைபட்டது. வெயிலை உணர முடியுமே தவிர, காண இயலாது. அதுபோலவே, ஆன்றோர் உணர்ந்தவாறே வீட்டு நெறியை நாம் உணர இயலாது. ஊசியால் துளைக்கப்பட்ட மணியின் மெல்லிய துளைவழியே கடல்நீர் புக இயலாது; என்றாலும் அத்துளை வழியே மிகக் குறைந்த அளவு நீர் நுழைய முடியும். அதுபோல நல்லறங்களைச் சிறிது சிறிதாக அடைய முடியும் என்று நினைத்து நான் அறக்கருத்துகளைக் கூறுவது உண்டு; ஆயினும் உலக மக்கள் கேட்டுத் தெளிவு பெறவில்லை. (அறவணர்த் தொழுத காதை: 57-71) இதைப் போன்றதொரு காலகட்டம் முன்பு இருந்தது. அந்த நிலையில்தான் புத்தபிரான் தோன்றினார்.’ இவ்வாறு அறவண அடிகள் கூறிச் செல்கிறார். உலகமக்களின் துயரம் நீங்க, தேவர்கள் வேண்டியதாகவும் அவர்களின் வேண்டுகோளைக் கேட்ட பிரபாபாலன் என்ற தேவன் புத்தரின் தோற்றம் பற்றிக் கூறிய கருத்தும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளது. (அறவணர்த் தொழுத காதை: 72-82)

புத்தரின் பெருமை

புத்தரின் பெருமையை, சங்கதருமன், மணிமேகலா தெய்வம், மணிமேகலை ஆகிய பாத்திரங்கள் மூலம் சாத்தனார் விரிவாகப் பேசுகிறார். முதலில் புத்தரின் தோற்றத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்க்கலாம்.

புத்தரின் தோற்றத்தைக் குறிக்கும் நிகழ்ச்சிகள்

புத்த ஞாயிறு தோன்றும்பொழுது மதியும் ஞாயிறும் தீமையுறாமல் விளங்கும்.

ஓரிடத்தில் நிலைக்காது சுழன்று கொண்டேயிருக்கும் கோள்களால் கேடு விளையாது.

வானம் பொய்க்காது மழைபெய்யும்.

உலகில் வளம் பல பெருகும்.

உயிர்கள் யாவும் துன்பம் அடையா.

காற்று வலமாக எழுந்து சுழலும்.

திசைகள் எல்லாம் செழுமையுறும்.

முத்து, பவளம் முதலிய பல வளங்களைக் கடல் நல்கும்.

பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டிக் கலம் நிறையப் பாலைத் தரும்.

பறவைகள் பயனை நுகர்ந்து தாம் தங்கும் இடங்களிலிருந்து நீங்கா.

விலங்கினமும் மக்களினமும் குறையுடைய பிறவிகளைப் பெற மாட்டா.

அக்காலத்தில் பிறந்து அப்பெருமானின் அருளறத்தைக் கேட்டவர்கள் பிறவித்துன்பத்தைக் கடந்தவராவர். (அறவணர்த் தொழுத காதை: 83-98)

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:08 am

துறவியின் போற்றுதல்

சங்கதருமன் பௌத்த சமயத்தைச் சார்ந்த துறவி. இவர் புத்தரை போற்றும் வகையினைக் கீழே காண்போம்.

புத்ததேவன் எம்முடைய இறைவன்.

இயல்பாகவே தோன்றிய நற்குணங்களை உடையவன்.

குற்றமில்லாத பல பிறப்புகளிலும் பிறந்தவன்.

பிறப்பின் தன்மையை உணர்ந்தவன்.

குணங்களின் மெய்ப்பொருளாக உள்ளவன்.

தனக்கென வாழாது, பிறர்க்காகவே வாழ்ந்தவன்.

தருமச் சக்கரத்தை உருட்டியவன்.

காமனை வென்றவன்.

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை : 71-79)

மணிமேகலா தெய்வம் புகழுரை

இந்திர விழாவைக் காண விரும்பிய மணிமேகலா தெய்வம் அந்நகரில் பெண்வேடம் பூண்டு பளிங்கு மண்டபத்திற்கு வருகிறது. அப்போது அங்குள்ள புத்த பாதபீடிகையை வலங்கொண்டு வந்து போற்றித் துதித்தது.

மணிமேகலா தெய்வம் புத்தரைப் போற்றியுள்ள பகுதி சிறந்த பகுதியாகும். படிப்பதற்குச் சுவை பயக்கும் பகுதி. அதனைக் கீழ்வரும் பாடல் வரிகள் நன்கு உணர்த்தும்.

புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய்
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ
காமற் கடந்தோய் ஏமம் ஆயோய்
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ
ஆயிர ஆரத்து ஆழி அம்திருந்து ஆடி
நா ஆயிரம் இலேன் ஏத்துவது எவன்?

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 5:98-105)

(புலவன் = அறிவுடையோன், தீர்த்தன் = தூய்மையானவன், புராணன் = பழமையானவன், ஏமம் = பாதுகாப்பு)

இனி காப்பியத் தலைவியாகிய மணிமேகலையும் புத்தரை வணங்கிக் கீழ்வருமாறு போற்றுகிறாள்.

மாரனை வென்ற வீரன்

தீய நெறியாகிய பகையை நீக்கியவன்

பிறர் வாழ்வில் அறம் உண்டாக முயல்வோன்

சொர்க்க இன்பத்தை விரும்பாதவன்

மழை போன்றவன்

எட்ட முடியாத அளவிற்கு உயர்ந்து நிற்போன்

உயிர்களுக்கு ஞானக்கண்கள் தரும் மெய்யுணர்வு உடையவன்

நரகர் துயர்கெட அங்குச் சென்றவன்

நரகர்களின் துன்பத்தைப் போக்கியவன்

இவற்றைத் தவிர, பௌத்த சமயச் சின்னங்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொள்வது அவர் பெருமையை மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:10 am

பௌத்தச் சின்னங்கள்

தமிழகத்தில் பௌத்த சமயம் சிறப்புற்றிருந்த காலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புத்த பீடிகைகள் (புத்தரது திருவடிகள் பதித்த பீடங்கள்) இடம் பெற்றிருந்தன. புத்த பீடிகைகள் மக்களால் போற்றி வணங்கப் பட்டன. அவற்றின் பெருமையைப் பல இடங்களில் சாத்தனார் விரிவாகப் பேசிச் செல்கிறார்.

புத்த பீடிகையின் தன்மை

புகழமைந்த நிலத்தில் மூன்று முழ அளவு உயரத்தில் நான்கு திசையிலும் ஒன்பது முழ அளவில் இடம் அகன்று, விதிமுறைகளுக்கு ஏற்ப, சிறந்த பளிங்கினால் வட்டமாய் அமைந்து இடையில் சதுர வடிவத்தின் மீது தாமரை ஒளி வீசுவதாய் அமைய வேண்டும். இதுவே புத்தருக்கு உரிய பீடம். இது மணிபல்லவத் தீவில் அமைந்திருப்பது.

இந்தப் பீடத்தின் அருகில் உள்ள மரங்கள் நறுமலர்களை மட்டுமே சொரியும். பறவைகளும் அப்பீடிகையின் அருகில் தம் சிறகுகளை அசைத்து ஒலி செய்யா. தூய மனத்துடன் தொழுது நின்றால் முந்தைய பிறவியைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். அந்தப் பீடத்தின் சிறப்பை உணர்ந்த இந்திரன் அந்தப் பீடத்தில் மணிகளைப் பொருத்திப் போற்றினான். (மணிபல்லவத்துத் துயருற்ற காதை, 44-63)

உவவனத்தின் பதுமபீடம்

உவவனம் என்பது சோலையாகும். பதும பீடம் என்பது தாமரை வடிவில் அமைந்த பீடமாகும். உயிர்களிடத்தில் அருள் கொண்டவன்; ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற இலட்சியத்தை உடையவன்; இப்படிப்பட்ட புத்த தேவனின் ஆணையால் பூத்துக் குலுங்கும் உவவனத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அதன் தனிச் சிறப்பாவது, அது அங்கிருப்பவரின் ஓசையை வெளிப்படுத்தாது. உருவத்தை மட்டும் வெளியே காட்டும். அந்த மண்டபத்தின் உள்ளே தூய நிறமுடைய மாணிக்கத்தால் அமைந்த ஒளி பொருந்திய பதுமபீடம் அமைந்திருந்தது.

பதுமபீடத்தின் சிறப்பு

பதுமபீடத்தில் அரும்புகளை வைத்தால் அவை மலரும். மலர்ந்தவை பல ஆண்டுகள் ஆனபின்பும் வாடுவதில்லை. அவற்றில் வண்டுகளும் மொய்ப்பதில்லை. காணிக்கை செலுத்துவோர் ஏதேனும் ஒரு தெய்வத்தை மனத்திலே நினைத்து அப்பீடத்தில் மலரை வைத்தால், அம்மலர் அவர் கருதிய தெய்வத்தின் திருவடிகளைச் சென்றடையும். ஒரு நினைப்பும் இன்றி மலரிட்டால் அது எங்கும் செல்லாது; அங்கேயே இருக்கும். இத்தகைய சிறப்பினை உடைய இந்தப்பீடம் தெய்வத் தச்சனால் அமைக்கப்பட்ட பெருமைக்குரியது. தெய்வத்தச்சன், மயனை மயன் என்பர். இவற்றைத் தவிர பாத பங்கய மலையில் உள்ள புத்தரின் பாதப்பெருமையும் (மலர்வனம் புக்க காதை: 61-68) மணிபல்லவத் தீவின் அருகிலுள்ள இரத்தின தீவகத்தில் உள்ள சமந்தமலையில் இடம் பெற்றுள்ள புத்தர் பிரானின் இணையடிகளின் சிறப்பும் (பாத்திரம் பெற்ற காதை 11:19-24) சாத்தனாரால் விளக்கப்படுகின்றன.

இனி பௌத்த சமயக் கோட்பாடுகளைப் பார்க்கலாம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:21 am

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

 மணிமேகலையில்  விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை:

    வினைக் கோட்பாடு
    நிலையாமைக் கோட்பாடு
    அறநெறிக் கோட்பாடு

வினைக்கோட்பாடு

இந்தியச் சமயங்கள்  யாவும் வினைக்கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.

வினை வகைகள்

வினைகள் இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை என்பனவாகும்.

தீவினை என்பது யாது?

கொலை, களவு, காமம் ஆகிய தீய விருப்பம் மூன்றும் தளர்ச்சியுற்ற உடலிலே தோன்றுவன. பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனற்ற சொல் என்று நால்வகைக் குற்றங்கள் சொல்லிலே தோன்றுவன. வெஃகுதல் (விரும்புதல்), வெகுளுதல், மயக்கம் இம்மூன்றும் உள்ளத்தில் தோன்றுவன. இந்த வகைகளில் தீவினை தோன்றும். இந்தத் தீவினையின் தன்மையை உணர்ந்தோர் தீயவற்றில் மனத்தைச் செலுத்த மாட்டார். தீயவற்றில் மனத்தைச் செலுத்துவாராயின் விலங்கு, பேய், நரகர் என்னும் பிறப்புகளை எடுத்துக் கலக்கமுற்றுப் பிறவிதோறும் துன்புறுவர். (ஆபுத்திரன் நாடு அடைந்த காதை 123-134)

அப்படியாயின் நல்வினை என்பது யாது?

நல்வினை  என்பது மேற்கூறப்பட்ட பத்துக் குற்றத்தினின்றும் நீங்கி, ஒழுக்கத்தைப் பின்பற்றி, தானம் செய்து வாழ்பவர் தேவர்; மக்கள், பிரமர் ஆகிய பிறவியெடுத்து நல்வினையின் பயனைத் துய்ப்பர்.

பிறப்பு என்பது யாது?

உலகம் மேல், கீழ், நடு என மூன்றாகும். உயிர்கள் ஆறு வகையென பௌத்த சமயம் கூறும். அவை மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்பனவாகும். உயிர்கள் நல்வினை, தீவினை என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய பிறவி எடுத்து, தம் வினைகள் பயனைத் தரும் காலத்தில் தாம் செய்த வினைக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. (24:116-122)

மறுபிறப்பில் நம்பிக்கை

தாம் செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு மறுபிறவி உண்டு என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான நம்பிக்கையுண்டு. மணிமேகலைக் காப்பியத்தில் உதயகுமரன், மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகிய பாத்திரங்களின் முற்பிறவி பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.

சான்றாக, முற்பிறப்பில் மணிமேகலையின் தமக்கைகளாக இருந்தவர்கள் இப்பிறப்பில் மணிமேகலையின் தாய் மாதவியாகவும், தோழி சுதமதியாகவும் பிறந்துள்ளனர் (9, 10 காதைகள்). முற்பிறப்பில் இலக்குமியாக இருந்த பெண் மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். இலக்குமியின் கணவனாக இருந்த இராகுலன் இப்பிறவியில் மணிமேகலையைத் தொடர்ந்து செல்லும் உதயகுமரனாகப் பிறந்துள்ளான். சென்ற பிறவியில் இலக்குமியாக இருந்தவள் சாதுசக்கர முனிவர்க்கு உணவளித்ததால் இப்பிறவியில் தவச்செல்வியான மணிமேகலையாகப் பிறந்துள்ளாள். அத்துடன் அமுதசுரபிகொண்டு பசியால் தவிப்பவர்களின் பசிப்பிணியைப்போக்கும் புண்ணியத்திற்கு உரியவளாகிறாள். அமுதசுரபியை  முதலில் பெற்ற ஆபுத்திரன் ஏழை, எளிய மக்களின் பசியைத் தீர்த்த நல்வினையின் பயனால் புண்ணியராசனாகப் பிறந்துள்ளான் என்று முற்பிறவி பற்றிய செய்திகள் இடம்பெறுவதை நோக்கலாம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:22 am

வினைப்பயனால் விளையும் பல நிகழ்ச்சிகள்

நல்வினை, தீவினையின் பயனால் விளைந்த பல நிகழ்ச்சிகளை மணிமேகலை விளக்கமாகக் கூறிச் செல்கிறது. சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போமா?

மணிமேகலையைத் தன்வயப்படுத்த அரசிளங்குமரனாகிய உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை சோலைவனத்தில் உள்ள பளிக்கறையில் (பளிங்கினால் ஆன அறையில்) புகுந்து மறைந்து கொள்கிறாள். அப்போது புகார் நகரில் நடக்கும் இந்திர விழாவைக் காணும் விருப்பத்தால் அந்நகரப் பெண்போலத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மணிமேகலா தெய்வம் அங்கு வருகிறது. (மணிமேகலையின் தந்தையான கோவலனின் முன்னோர்களில் ஒருவர் வணிகத்தின் பொருட்டுக் கப்பலில் சென்றபோது, கப்பல் உடைந்து அவர் கடலில் மூழ்கி இறந்துபடாமல் மணிமேகலா தெய்வம் அவரைக் காப்பாற்றியது. அதை நினைவு கூர்ந்து மாதவிக்கும் தனக்கும் பிறந்த குழந்தைக்கு மணிமேகலை எனப் பெயரிட்டான் கோவலன்.) மணிமேகலையின் நல்வினை அதன் பயனைத் தரும் காலம் கனிந்ததால் மணிமேகலைக்கு உதயகுமரனால் தீங்கு ஏதும் நேராமலிருக்க மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்துச் செல்கிறது.

வினையின் பயனை அறவண அடிகள் உணர்த்தல்

மணிமேகலை அறவண அடிகளைக் கண்டு வணங்கி மணிபல்லவத் தீவில் தன் பழம்பிறப்பினை உணர்ந்ததும் அமுதசுரபி என்ற அற்புதப் பாத்திரத்தைப் பெற்றதுமான செய்திகள் அனைத்தையும் கூறுகிறாள். அறவண அடிகளும் பாதபங்கய மலையில் புத்தரின் பாதங்களை வணங்கி, மாதவி, சுதமதி ஆகிய இருவரின் பழம்பிறப்பை உணர்ந்ததை விளக்குகிறார். முற்பிறவியில் வீரையும் தாரையுமாக மாதவி, சுதமதி ஆகியோர் இருந்ததையும் யானையால் வீரை இறந்ததால் தாரை இறந்ததும் இவர்களின் இறப்பால் கணவன் துச்சயன் துயரமுற்றதையும் கூறுகிறார். அறவணஅடிகள் துச்சயனுக்கு ஆறுதல் கூறும்போது, ‘இது அவரவர் வினைப்பயனால் நேர்ந்தது’ என்று கூறி அமைதிப்படுத்துகிறார். வினையின் பயனை அனுபவித்தே ஆகவேண்டுமென்பதும் அதற்காக வருந்தாமல் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதையுமன்றோ இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது! மேலும் ஒருசான்றைப் பார்க்கலாமா?

உதயகுமரன் வெட்டுண்டு இறத்தல்

தன்னைப் பின்தொடரும் உதயகுமரனிடமிருந்து தப்ப மணிமேகலை விஞ்சை மங்கையாகிய (விண்ணுலகப் பெண்) காயசண்டிகை வடிவில் அமுதசுரபி ஏந்தி உணவு படைக்கிறாள். இந்தக் காயசண்டிகை யார் என்ற வினா உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறதா? காயசண்டிகை விஞ்சையனான காஞ்சனன் மனைவி. முன்பு விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளானாள். யானைப்பசி என்பது எவ்வளவு உண்டாலும் பசி தீரவே தீராமல் மேலும் மேலும் (பசி) மிகுதியாகும். இந்நோய் பன்னீராண்டுகள் துன்பத்தைத் தருமென்பார்கள். மணிமேகலை அமுதசுரபி யிலிருந்து அளித்த உணவை உண்டதும் காயசண்டிகையின் பசி தீர்ந்தது. அவள் தன் இருப்பிடம் திரும்பினாள். காயசண்டிகை சாபம் பெற்று யானைப்பசி நோயினால் வருந்திய காலமும் முடிவுற்றதால் அவள் திரும்பி வாராமைக்குக் காரணம் யாதோ எனக் கவலையுற்றுக் காஞ்சனன் அவளைத் தேடிக் கொண்டு வருகிறான். காயசண்டிகை வடிவில் மணிமேகலை அமுதசுரபி கொண்டு உணவளிப்பதைப் பார்த்த காஞ்சனன் அவளைத் தன் மனைவியெனத் தவறாக நினைத்து அவளோடு பேசமுற்படுகிறான். காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலையோ அவனைப் பொருட்படுத்தாமல் (அங்கு) அவளைத் தொடர்ந்து வந்த உதயகுமரனை அடைந்து நிலையாமையை அறிவுறுத்துகிறாள். தன் மனைவி அயலான் முன் சென்று பேசுகிறாள்; அவன் மீது கொண்ட விருப்பத்தினால் தான் இவள் திரும்பி வரவில்லையென முடிவு செய்து, சமயம் நோக்கி மறைந்திருந்து உதயகுமரனைக் கொன்று விடுகிறான்.

ஊழ்வினையின் பயனாலேயே உதயகுமரன் காஞ்சனனின் வாளால் வெட்டுண்டு இறந்தான் என உலகவறவியில் (ஊர் அம்பலம்) இருந்த கந்திற்பாவை என்னும் தெய்வம் காஞ்சனனுக்கு விளக்கியதோடு, காயசண்டிகை ஊர் திரும்பியதையும், மணிமேகலை காயசண்டிகை வடிவில் இருப்பதையும் கூறியது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:23 am

அரசிக்கு மணிமேகலையின் அறவுரை

தன் மகனான உதயகுமரனின் இறப்புக்கு மணிமேகலையே காரணம் என்றெண்ணி அரசி கொடுமைகள் பலவற்றை மணிமேகலைக்கு இழைக்கிறாள். மணிமேகலா தெய்வத்திடம் தான் பெற்ற மந்திர மொழிகள் மூலம் அவற்றையெல்லாம் மணிமேகலை தாங்கிக் கொண்டு எந்தவிதப் பாதிப்பிற்கும் ஆளாகாமல் இருக்கிறாள். மணிமேகலையின் இந்நிலையைக் கண்டு அரசி மிகவும் வியப்படைவதோடு தன் செயலுக்காக வருந்தவும் செய்கிறாள். இராசமாதேவியின் மனம் மாறுகிறது. மனம் திருந்தி மணிமேகலையைத் தொழுது வணங்குகிறாள்.

மணிமேகலை இராசமாதேவிக்குத் தன் முற்பிறப்பைப் பற்றிக் கூறி, தன் கணவனாக இருந்த இராகுலனைப் பற்றியும் கூறியதோடு முற்பிறவியில் இராகுலன் தாயாக அரசமாதேவி இருந்ததையும் கூறுகிறாள். உதயகுமரனை இழந்ததற்காக அழும் அரசமாதேவி பொருந்தாத செயல்களைச் செய்ததைச் சுட்டிக்காட்டி, வினையின் பயனை யாராக இருந்தாலும் நுகர்ந்தே ஆக வேண்டுமென்பதை எடுத்துக்காட்டி இனியாவது நல்வினைகளைச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறாள். ‘பூங்கொடி போன்ற தேவி, நீ எதற்காக அழுதாய்? நின் மகனின் உடலுக்காக அழுதாயா? உயிருக்காக அழுதாயா? உடலுக்காக அழுதாயானால் உன் மகனது உடம்பைப் புறங்காட்டில் யார் இட்டனர்? உயிர்க்காக அழுதாயானால் செய்வினை வழியே அவ்வுயிர் புகும். அது புகுமிடத்தை நம்மால் தெரிந்து கொள்ள இயலாது. அதனால் அந்த உயிரிடத்து அன்புடையையாயின், அஃது எவ்வுடலில் இருக்கும் என்பதை உணராத நிலையில் எல்லா உயிர்களிடத்தும் நீ இரக்கம் கொள்ளல் வேண்டும்’ என்கிறாள்.

உயிர்கள் அனைத்திடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்ற நேயத்தைச் சாத்தனார் இங்கு வலியுறுத்துகிறார். காப்பியத்தின் அப்பகுதியை நீங்களே படித்துப் பாருங்களேன்!

யாங்கு இருந்து அழுதனை இளங்கோ தனக்கு?
பூங்கொடி நல்லாய்! பொருந்தாது செய்தனை
உடற்கு அழுதனையோ? உயிர்க்கு அழுதனையோ?
உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே?
உயிர்க்கு அழுதனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்து உணர்வு அரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்

(சிறைவிடு காதை: 71-79)

(புறங்காடு = சுடுகாடு, புக்கில் = உடம்பு)

ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஓர் உறவை இழந்த அனுபவம் சோகமாய் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அதையே நினைத்துப் புலம்பாமல் எல்லா உயிர்களையும் சமமாக எண்ணி, அனைத்து உயிர்களிடமும் அன்பு செய்ய வேண்டும். தன் உறவு, தன் சொந்தம் எனப் பார்க்காமல் அன்பு பாராட்டும் மனப்பாங்கு வரவேண்டும். அப்போது எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிரம்பும்; யாதும் ஊரே யாவருங் கேளிர் என்ற எண்ணமும் மேலோங்கும். அவ்வெண்ணம் எவ்வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தந்து செயல்பட வைக்கும்.

இது எல்லாக் காலத்தும் எல்லாவிடத்தும் எல்லோருக்கும் பொருந்தும் உண்மையல்லவா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 1:24 am

நிலையாமைக் கோட்பாடு

இந்தியச் சமயங்கள் அனைத்துமே நிலையாமைக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையன. அதிலும் சமணமும் பௌத்தமும் நிலையாமையை வற்புறுத்திக் கூறும் தன்மையன. சாத்தனார் பௌத்த சமய அறங்களை வலியுறுத்தும் போதெல்லாம் நிலையாமையை அழுத்தமாகக் கூறிச் செல்கிறார். பளிக்கறை புக்க காதையில் மணிமேகலையைத் தொடர்ந்து உதயகுமரன் வர, மணிமேகலை பளிக்கறைக்குள் மறைந்து கொள்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொல்லைப் படுத்துவான் என்பதை உணர்ந்த மணிமேகலையின் தோழி சுதமதி, அவனுக்கு யாக்கை நிலையாமையை விளக்குகிறாள்.

வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி
வினையின் வந்தது வினைக்கு விளைவாயது
புனைவன நீங்கில் புலால்புறத் திடுவது
மூப்புவிளி உடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையாற ழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து...

(பளிக்கறை புக்க காதை: 112-121)

(வினைவிளங்கு = செயல்திறமுடைய, கேட்டி = கேட்பாயாக, புனைவன = புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள், மூப்பு = முதுமை, விளி = சாவு, கொள்கலம் = பாத்திரம், செற்றம் = கோபம், சேக்கை = இருப்பிடம், அவலம் = வருத்தம், கையாறு = மூர்ச்சித்தல், அழுங்கல் = அழுதல், தவலா = நீங்காத)

உடம்பு வினையால் உண்டானது. வினைக்கு விளைநிலமாக உள்ளது. புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீக்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்காட்டுவது. முதுமையடைந்து சாதலை உடையது. கொடிய நோய்க்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுகளுக்குப் பற்றும் இடமாக உள்ளது. குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது. பாம்பு அடங்கும் புற்றைப் போல, கோபம் தங்குமிடமாக இருக்கிறது. மக்கள் யாக்கை இத்தகையது என விளக்கி, மணிமேகலையைப் பின்தொடரும் செயலை அவன் விலக்கிக் கொள்ள வேண்டுமென்று மறைமுகமாகக் கூறுகிறாள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக