ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 7:24 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

Admins Online

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!

Go down

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Empty தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!

Post by சாமி on Fri Oct 26, 2012 10:30 pm

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை என்பதற்கு ஏராளமான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கின்றன. மாற்றார் இசையில் இப்போது மயங்கி நிற்கின்றோம். தமிழ்நாட்டில் தமிழிசை மீட்புக்காக ஓர் இயக்கமே நடத்த வேண்டிய அளவிற்கு நாம் மயங்கிக் கிடக்கின்றோம்.

உலகில் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் இயல், இசை, நாடகம் என்று தன் பிரிவுகளை அமைத்து வளர்ந்ததாக வரலாறே இல்லை. அரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாய்வுகள் நடைபெறவில்லையானால் தமிழரின் தொன்மை வரலாறுகளை தமிழுக்கு எதிரானவர்களின் சதிகளால் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டதிலிருந்து மீட்டெடுத்தே இருக்க முடியாது. அரப்பா, மொகஞ்சதாரோ சிந்துவெளித்தமிழர் நாகரிகம் இன்றைய காலத்திற்கு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது.
அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின்னங்களில் கிடைத்தவை, பழந்தமிழரின் யாழும் குழலும். சர்.ஜான் மார்ஷல் குறிப்பில் அந்தக் குழலை இப்போது கூட எடுத்து வாசித்தால் மிக இனிமையாக அதில் இசையை எழுப்ப முடிகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று காணப்படுகிறது. அப்படியானால் தமிழிசையின் தொன்மைக்கு இதைவிடச் சான்று வேறு என்ன வேண்டும்?

தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல். அதில் உலகை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்காகப் பிரித்ததுடன் ஒவ்வொரு நில வகைக்கும் ஒவ்வொரு வகை யாழ் உண்டு என்று கூறியிருப்பது நம்மைத் திகைப்படயச் செய்கிறது. அதாவது மலைப்பக்கம் வாசிப்பதற்கு என்று ஒரு தனி யாழ்! அடடா! இசையில் எவ்வளவு தேர்ச்சி இருந்தால் இப்படி யாழ் வகைகளைப் பிரிக்க முடியும்!

இசைக் கருவிகளில் முக்கியமானவை காற்றுக்கருவி, நரம்புக்கருவி, தோற்கருவி என்பவை. குழல் காற்றுக்கருவி, யாழ் நரம்புக்கருவி, முழவு தோற்கருவி. இந்த கருவிகளின் பெயர்களாகிய குழல், யாழ், முழவு என்ற மூன்றிலும் தமிழுக்கே உரித்தான பிற மொழிகளில் இல்லாத ‘ழ’கரம் வருவதைப்பாருங்கள்! இதுவே இசைக்கு மூலம் தமிழ்தான் என்பதற்கு அரிய ஆணித்தரமான சான்று.

தமிழில் அடிப்படை எழுத்துக்களான நெடில் எழுத்துக்கள் ஏழும் ஏழிசைச் சுரங்களாகவே பழந்தமிழரால் அமைக்கப்பட்டனவாம்.
‘ஆ,ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
எனும் இவ்வேழெழுத்தும் ஏழிசைக்குரிய’
என்பது தமிழ் நிகண்டு கூறுகிற செய்தி.

ஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.

பாடும்போது சில இடங்களில் நீட்டிப்பாட வேண்டியிருக்கும். தமிழ் இலக்கணம் அதற்கும் இடம் கொடுத்தது. அதற்கு இசையளபடை என்றே பெயர் வைத்தது.

ஆலாபனை என்பதற்கு தமிழில் ஆளத்தி என்று பெயர் வழங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் தன, தரனா என்று ஆலாபனை செய்கிறார்கள். அன்று ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வார்கள். இன்றும் ‘ஆ’ என்றே ஆலாபனை செய்வதும் உண்டு. இப்படி ‘ஆ’வால் வளர்த்துவதால் அதற்கு ஆவளர்த்தி என்று பெயர் ஏற்பட்டுப் பின்னர் அது மருவி ஆளத்தி ஆயிற்று.
இன்று ஆரோகணம், அவரோகணம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதை ஆரோசை, அமரோசை என்று தூய தமிழில் வழங்கினார்கள். ஆனாயர் புராணத்தில் சேக்கிழார் இதைக்கூறுகிறார். தனி ஆவர்த்தனம் என்று மத்தளம் வாசிப்பவர்கள் வாசிப்பதை இன்று கேட்கிறோம். இதை தனி நிலை ஓரியல் என்று தூயதமிழில் கூறி இருக்கிறார்கள்.

இன்று மாற்றார் 72 மேளகர்த்தாக்கள் என்று ராகங்களுக்கு எண்ணிட்டிருக்கிறார்கள். இராகங்கள் என்று இன்று கூறப்படும் இவற்றிற்கு இணையாக தமிழில் பண்கள் என்றுக் கூறப்படுகின்றன. மொத்தம் எவ்வளவு பண்கள் பழந்தமிழ் நாட்டில் இருந்ததாம் தெரியுமா? 11,991 பண்கள். 72 எங்கே 11,991 எங்கே? எண்ணிப்பாருங்கள்!

இனி இசையைப் பொழுது போக்கிற்காக அமைத்தார்கள் பிறர். ஆனால் தமிழன் இசையால் இறைவனையே அடையலாம் என்று காட்டியவன். இதற்குச் சான்று ஆனாய நாயனார்! அவர் என்ன செய்தார்? இந்தப்பழந்தமிழ் இசையில் மெய்யறிவிற்கு ஏதுவான ஐந்தெழுத்தைக் குழைத்துக் குழலை வாசித்து கூடற்கரிய இறைவனையே கூடிவிட்டார்!

ஆனால் இந்த உண்மை எடுத்துக்காட்டைப் பார்த்தும் உலகவர் தவக்குறைவால் தமிழிசையின் தனித்தன்மையை மறந்தனர்; சிலர் மறைக்கப்பார்க்கின்றனர்.

(நன்றி - தெய்வமுரசு – ஆகஸ்ட்-2010 இதழ்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Empty Re: தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Oct 27, 2012 2:39 pm

மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Empty Re: தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!

Post by சாமி on Sun Oct 28, 2012 7:16 am

[You must be registered and logged in to see this link.] wrote:மிகவும் நன்று ....சாமி அவர்களே. நானும், சில கட்டுரைகள் உங்களின் பதிவுக்கு வலுசேர்க்கும் வகையில் இங்கு பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆயினும் உங்களைக்கேட்காமல் செய்வது சரியல்ல என்று அவைகளை உங்களின் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். படித்துப்பாருங்கள் புன்னகை

தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா!
தாராளமாக பதிவிடுங்கள்!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Empty தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!

Post by Kuzhali on Fri Nov 02, 2012 2:26 pm

ஏழுசுரங்களுக்கும் தமிழில் பெயர்கள் உள்ளன. குரல், துத்தம், கைக்கினை, உழை, இளி, விளரி, தாரம் என்பவை அவை. அவரவர் பிள்ளைக்கு அவரவர் தாமே பெயர் வைப்பர். தமிழன் தான் கண்டிபிடித்த ஏழிசைச் சுரங்களுக்கு தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறான்.

அப்போதைய தமிழர்கள் சுரங்களுக்கு கூட தமிழ் பெயர் வைத்திருகிறார்கள். ஆனால் இப்போதோ தான் பெற்ற பிள்ளைகளுக்கே தமிழில் பெயர் வைப்பதில்லை.

கட்டுரை நன்றாக உள்ளது.
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 17

Back to top Go down

தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை! Empty Re: தமிழிசைதான் உலகில் தோன்றிய முதல் இசை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum