புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
139 Posts - 56%
heezulia
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_m10தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 08, 2012 7:52 pm

தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Evening-Tamil-News-Paper_18459284306

தர்மபுரி: தர்மபுரி அருகே மகள் வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் 1500 பேருடன் திரண்டு சென்று 3 கிராமங்களில் உள்ள 200 வீடுகளை தீ வைத்து எரித்தனர். இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களை கலெக்டர் இன்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவரது காலில் விழுந்து பெண்கள் கதறினர். தர்மபுரி மாவட்டம் செல்லங்கொட்டாயை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் லதா, தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளங்கோ மகன் ராஜா (23). இவரும் லதாவும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி காதலர்கள் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்டனர். மறுநாள் சேலம் டிஐஜி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். பின்னர் லதா, கணவர் ராஜாவின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் லதாவின் பெற்றோர், மகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று ராஜா தரப்பினரிடம் கேட்டு வந்தனர்.

இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. அப்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு அளிக்கும்படி எஸ்.பி.யிடம் ராஜா மனு அளித்தார். அதன் பேரில் நேற்று காலை 30க்கும் அதிகமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் லதாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் நாகராஜன் சடலத்தை தர்மபுரி திருப்பத்தூர் சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஊர் எல்லையில் மரங்களை வெட்டிப் போட்டு சாலையில் தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் போக்குவரத்து முடங்கியது. நாகராஜனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் ஆம்புலன்சை வரவழைத்தனர். ஆனால், மறியலில் ஈடுபட்ட மக்கள் ஆம்புலன்சை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. மறியல் காரணமாக செல்லங்கொட்டாய் பகுதியில் இருந்து சுமார் 15 கி.மீ. முன்பாகவே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் நடந்தே சென்றனர். இதற்கிடையே, செல்லங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 1500 பேர் நத்தம் காலனிக்கு திரண்டு சென்றனர்.

இதை பார்த்ததும் காலனியில் இருந்த ஆண்கள் அனைவரும் உயிருக்கு பயந்து தப்பியோடி விட்டனர். ஆத்திரமடைந்த கும்பல், நத்தம்காலனியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து சூறையாடினர். பொருட்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். 119 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின. துணிகள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்தும் சாம்பல் ஆனது. மேலும் 4 கார், 50க்கும் அதிகமான இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். வழியில் வந்தவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கியுள்ளனர். குழந்தைகளையும் அடித்து உதைத்துள்ளனர். ஆத்திரம் அடங்காத கலவரக்காரர்கள், நத்தம் காலனிக்கு அருகில் உள்ள அண்ணாநகரில் வசிக்கும் ராஜாவின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளையும் சூறையாடி 29 வீடுகளுக்கு தீ வைத்தனர்.

கொண்டம்பட்டி கிராமத்தில் 30 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. கலவரத்தையடுத்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இரவு முழுவதும் கிராமத்தில் பதற்றம் நிலவியது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வண்டிகளையும், செல்லங்கொட்டாய் மக்கள் உள்ளே விடவில்லை. சேலம் டிஐஜி சஞ்சய்குமார் தலைமையில் 4 எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணிக்கு போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரக்காரர்கள் வைத்த தீயில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால், மாற்று உடை இன்றியும் உணவு சமைக்க முடியாமலும் 3 கிராம மக்கள் தவித்தனர். தர்மபுரி கலெக்டர் லில்லி, டிஆர்ஓ ராமர், தாசில்தார் மணி மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நத்தம்காலனி உள்பட 3 கிராமங்களை இன்று காலை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து கலெக்டர் ஆறுதல் கூறினார். அப்போது பெண்கள் அவரது காலில் விழுந்து கதறி அழுதனர். அவர்களிடம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிரான்ஸ்பார்மர் உடைப்பு

நத்தம் காலனிக்குள் புகுந்த கும்பல், முதலில் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்தது. இதனால் காலனி உள்பட சுற்றுப்புற பகுதிகள் மாலை 5 மணி முதல் இருளில் மூழ்கின. இன்று காலையில்தான் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் வினியோகத்தை சரி செய்தனர். ஆனால் நத்தம் காலனிக்கு இன்னும் மின்சாரம் வினியோகிக்கப்படவில்லை. காலனியில் உள்ள நூலகம், அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் கலவரக்காரர்கள் சூறையாடினர்.

மாயமான 4 சிறுவர்கள் மீட்பு

கலவரக்காரர்கள் காலனிக்குள் புகுந்ததால் ஆண்கள் உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடிவிட்டனர். வீடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அவர்களையும் கலவரக்காரர்கள் தாக்கி அடித்து உதைத்தனர். அந்த பகுதியை சேர்ந்த நேதாஜி (6), அகல்யா (8), சதாசிவம் (15), தேன்மொழி (9) ஆகிய 4 பேரை காணவில்லை. கலவரக்காரர்கள் அவர்களை அடித்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டதால் இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் உயிருக்கு பயந்து பக்கத்து கிராமத்தில் தஞ்சம் அடைந்திருந்த 4 பேரும் இன்று காலை பத்திரமாக வீடு திரும்பினர்.

தினகரன்



தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 08, 2012 8:03 pm

இது எந்த அளவிற்கு நல்லது என்று தெரியவில்லை...
எவனோ எவளோ ஓடிப்போக பாவம் அப்பாவிகள் அடிபடுகிறார்கள்...
அவ்வளவு தைரியமாய் ஓடிப்போகத் தெரிந்தவர்களுக்கு எதிர்த்து நிற்கவும்
தைரியம் இருந்திருக்க வேண்டும்...
இப்போது பாருங்கள்...அடிபட்டுச் சாவது அப்பாவிகள்...
இந்த வயதில் கொஞ்சம் யோசித்து செய்யாததன் விளைவு...இன்று ஒரு கிராமமே எரிந்து சாம்பலாகி அமைதியிழந்து...
அட போங்கடா உங்க காதலும் நீங்களும்...

அது சரி...உங்க பொண்ணு உங்க பேச்ச கேட்கலேன்னா...எதோ ஓர் ஊர்ல இருக்க அப்பாவி ஜனங்க என்ன செய்வாங்க?...
என்னடா உங்க ஜாதியும் கருமமும்...இது எப்பவும் சாகாது...ஜனங்கதான் சாவணும்...

யதார்த்தம் சுடும்...உண்மைதானோ?...



தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு 224747944

தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Rதர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Aதர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Emptyதர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு Rதர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 08, 2012 11:58 pm

இந்த வருட கடைசிக்குள் உலகம் அழியப்போகிறது என்று சொன்னார்கள் அது இப்பொழுதே ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. உலக அழிவுக்கு இயற்க்கை அனர்த்தம்தான் நடக்க வேண்டும் என்றில்லை, மனிதனே தான் வாழும் உலகை அழித்துவிடுவான்.
திரைப்படத்தில் காதலர்கள் கலப்புத்திருமணம் செய்தால். அந்த திரைப்படத்துக்கு பெரிய வரவேற்பு கொடுக்கும் இந்த சமூகம் வாழ்க்கையில் அது நடந்தால் ஆவேசம் கொண்டு கொலை வெறி தாண்டவம் ஆடுகிறது.
நமது சமுதாயம் எப்பொழுது திருந்தும் என்று கடவுளைக்கேட்டால் கடவுளே எமது அறியாமைக்காக கண்கலங்குவார்.
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது



நேர்மையே பலம்
தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு 5no
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 09, 2012 9:20 am

இதை பற்றி எந்த செய்தி சேனலிலும் எதுவும் சொல்லவில்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக