புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
52 Posts - 62%
heezulia
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
89 Posts - 61%
heezulia
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_m10 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 11, 2012 1:43 am

குஜராத்தி மொழியில் ராமாயணத்தை முதன் முதலாக எழுதியவர் கர்மண் மந்திரி. கி.பி. 1470ல் எழுதப்பட்ட இந்தி ராமாயணம் ராமன் சீதையோடும் லட்சுமணனோடும் காட்டுக்குப் புறப்படுவதிலிருந்து, ராமன் ராவணனை வென்று, அயோத்தி திரும்பும் வரை கூறப்பட்ட குஜராத்திய ராமாயணக் கதையில் வினைப் பயனை வலியுறுத்துவதே முக்கிய நோக்கமாகத் தெரிகிறது.

ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றபோது அவளது பிரிவால் ராமன் பட்ட துன்பத்தையும், மண்டோதரி ராமனைப் பகைத்துக் கொள்ளவேண்டாம் என்று ராவணனுக்கு அறிவுரை கூறும் இடத்தையும் கவி அழகாகக் கையாளுகிறார். “இரண்டே கண்களையுடைய தன்னாலேயே தெளிவாகப் பார்க்கக் கூடிய உண்மையை இருபது கண்கள் கொண்ட அவனால் பார்க்க முடியவில்லையே’ என்று ராவணனை மண்டோதரி இடித்துக் கூறுகிறாள். போர்க் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

பதினேழாம் நூற்றாண்டின் பெருங்கவிஞர் பிரேமானந்த் ராமாயண ஆக்யானத்தை எழுதியிருக்கிறார். அடுத்த நூற்றாண்டில் கிரிதர ராமாயணம் இயற்றப்பட்டது. வல்லப்ஜி ஹரிதத்த ஆசார்யர் (1840-1911) ராமாயணத்தை வால்மீகியின் அதே சந்தத்தில் மொழிபெயர்த்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை நூல் அச்சில் வரவில்லை. சிவபால் த்யானேஜ்வர் (1850-1899) துளசி ராமாயணத்தின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார்.

குஜராத்தில் வெளிவந்த ராமாயணங்களில் கிரிதர ராமாயணமே தலைசிறந்தது என்பது இலக்கிய ஆய்வாளர்கள், ரசிகர்கள் அனைவருடைய ஏகோபித்த கருத்து.

கிரிதரதாசர் பணியா எனப்படும் வைசிய சாதியைச் சேர்ந்த வைணவர். புகழ்பெற்ற கவி தயாராமின் சமகாலத்தவர். அவர் பிறந்த வருடம் சம்வத் 1843 (கி.பி. 1787) பாக்ரா தாலுகாவில் பரோடாவையடுத்த மாசர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தை கிராம அதிகாரி. கிராமப் பள்ளியில் கணக்கும் குறிப்பாக வரவு செலவுக் கணக்கு முதலியன கற்றார்.

சாதுக்கள், சன்யாசிகளிடமிருந்து, வால்மீகி ராமாயணம், துளசிதாசரின் ராமசரித மானஸ், ஹரிவம்சம் கற்றார். வேதாந்தம், செய்யும், இலக்கணம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றை கோஸ்வாமி புரு÷ஷாத்தம்ஜி மகராஜ் என்ற புஷ்டி மார்க்க வைணவ ஆசாரியாரிடம் கற்றுத் தேர்ந்தார்.

பெற்றோர் காலமான பிறகு வடோதராவில் தமக்கை வீட்டில் வாழ்ந்தார். பல வைணவத் தலங்களைத் தரிசித்தார். பின்னர் ராதா வல்லப சம்பிரதயாத்தைச் சேர்ந்த ஆசாரிய ரங்கிலால்ஜி மகாராஜின் கோவிலில் கணக்கராகப் பணியாற்றினார்.

அக்காலத்தில் சமயநூல்களைப் படித்தார். ஹரி கதா காலட்சேபங்களைத் தவறாமல் கேட்டார். பாடல்கள் எழுதத் தொடங்கினார். திருமணமாயிற்று. ஆனால் அது மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையும், மனைவியும் சில காலத்திற்குள் இறந்தனர்.

கிரிதரர் பல நூல்களை எழுதினார். துளசி விவாகம், ராஜசூய யக்ஞம், அசுவமேதம், கிருஷ்ண லீலா, கோகுல லீலா, ராதாகிருஷ்ண மஹிமா, ராமாயணம் முதலியன. இதிகாச புராண ஹரிகதா காலட்சேபங்களைச் செய்தார். குஜராத்தி ஆக்யானங்கள், முக்கியமாக ராமாயணக் கதை தெரிந்த கதைதான் என்றாலும் அதை மிகச் சுவைப்பட இசையும் நடனமும் கலந்தளிப்பார். நடனமும், இசையும் ஐம்புசார் தாலுகாவின் சரோத் கிராமத்தின் பட்டாஜியின் படைப்பு. அதே கிராமத்தைச் சேர்ந்த கலைமான் பகத் கிரிதர ராமாயண இசைக் கச்சேரியை தம்புரா, ஜாலராவோடு நடத்துவார் கிரிதார். உபன்யாசத்தைக் கேட்கப் பெருந் திரளாக மக்கள் கூடுவர். நிகழ்ச்சி மூன்று நான்கு மணிநேரம் நடக்கும்; நாள் கணக்கில்தொடர்ந்து நடக்கும். கேட்போர் பக்திப் பெருக்கில் மெய் மறந்து போவார்களாம்.

ஏறக்குறைய 150-200 ஆண்டுகளுக்கு முன்னால் மின் விளக்குகள் கிடையாது ஒலிபெருக்கிகள் கிடையாது. பெரிய மண்டபங்களும், பந்தல்களும் கிடையாது. உபன்யாசருக்கும் வாத்தியக்காரர், நடனக் காரர்களுக்கும் ஒரு மேடை, தீபங்கள் இவ்வளவுதான். (சிறுவயதில் நானே இத்தகைய திறந்த வெளி அரங்குகளில் கதாகாலசேபம் கேட்டு அனுபவித்திருக்கிறேன். இன்றைக்கு, பக்திவளர்க்கும் இக்கலை அநேகமாய் மறைந்து விட்டது நமது துர்பாக்கியமே).

இப்படி அமைதியாகப் பக்தியைப் பரப்பி வந்த கிரிதார் ஒரு நாள் மறைந்தார். அதுவே ஒரு சோகநாடகம்.

ஒரு சமயம் ரங்கிலால்ஜி மகராஜின் தலைமையில் ஒரு வட இந்திய ஷேத்ராடனத்தில் கலந்து கொண்டார் அப்போது ராஜஸ்தானுக்கும் சென்றார். அங்குள்ள பிரசித்தி பெற்ற நாதித்வா ராவின் ஸ்ரீ நாத்ஜி ஆலய தரிசனம் செய்யப் பெரிதும் விரும்பினார். ஸ்ரீநாத்ஜி புஜ்டி மார்க்க வைணவர்களுக்கு மிக முக்கியமான தெய்வம். ஆனால் ராதாகிருஷ்ண சம்பிரதாயத்தைச் சேர்ந்த குழுத் தலைவர் ரங்கிலால்ஜி மகராஜ் ஸ்ரீ நாத்ஜி தரிசனத்திற்குப் போகக் கூடாதென்று தடை விதித்தார்.

அந்த ஏக்கத்தில் கி.பி. 1852 பத்ரபாத மாதத்தில் ஒரு ஏகாதசியன்று நாத் த்வாராவின் ஸ்ரீ நாத்திஜியின் திரு நாமத்தை ஜபித்துத் தியானத்தில் அமர்ந்த வண்ணம் கிரிதரதாசரின் உயிர் பிரிந்தது.

கிரிதர ராமாயணம் ஏழு காண்டங்கள் கொண்டது. 299 அத்தியாயங்களும் 9551 சுலோகங்கள் அடங்கிய ஆக்யானப் பாணியில் அமைந்த நூல். சம்வத் 1983ல் (கி.பி.1827) மார்கழி மாதம் இரண்டாம் பட்சத்தில் நவமி திதியில் ஞாயிற்றுக் கிழமையில் அதை எழுதி முடித்ததாக உத்தர காண்டத்தின் கடைசிப் பாடலின் புஷ்பிகாவில் கிரிதரர் கூறுகிறார்.

கிரிதர ராமாயணத்தின் மூலக் கதை வால்மீகி ராமாயணம் என்றாலும் ஹனுமான் நாடகம், யோகவாசிஷ்டம், அக்னி புராணம், பத்ம புராணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

தவிரவும் துளசியின் ராமசரித மானஸ் ஏகநாதரின் மராத்திபாவார்த்த ராமாயணம், ஆனந்த ராமாயணம், பிரேமானந்தரின் குஜராத்தி ரானாயக்ஞம், ஹரிராமரின் சீதாஸ்வயம்வரம், கிருஷ்ணாபாயின் சீதாஜினி கானாலி முதலிய நூல்களின் தாக்கமும் கிரிதர ராமாயணத்தில் காணப்படுகின்றன. மேலும் இன்று அநேகமாகக் கிடைக்காத பல ராமாயணங்களையும் அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வளவு புலமையோடு இயற்றிய ராமாயணத்தில் அவையடக்கத்தில் அவரது உள்ளம் நமக்கு நன்கு தெரிகிறது. அவர் சொல்லுகிறார்: சூரியன் எப்படி நாம் ஒரு தீபத்தைக் காட்டினாலும், நமது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறானோ, அப்படியே ஒளி அதிகமற்ற, மந்தமாகத் தோன்றும் இக்கவிதையை உங்களுக்கு அளிக்கிறேன். மகான்களே, இதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஏன் ஏற்கவேண்டும் என்று கேட்டால், ராமகதையில் நம்பிக்கையுடையவன் பிறவித் தளைகளிலிருந்து விடுபட்டு, சிரமமின்றிப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கிறான். பூமியிலுள்ள அணுக்களையோ, அல்லது வானத்து நட்சத்திரங்களையோ நீ எண்ணி விடலாம். ஆனால் ராமனது அருங்குணங்கள் முடிவற்றவை. அவற்றை உன்னால் கணக்கிட முடியாது.

எனவே கிரிதர தாசர் ராமனது கதையை எழுதியதற்கு முக்கியமான காரணம் அவரது அசைக்க முடியாத ராமபக்தியே.

அவரது ராமாயணத்தில் காணப்படும் பெரிய மாற்றம் ராவணனது பிறப்பும் அனுமனது பிறப்பும் பால காண்டத்திலேயே ராமநனது பிறப்புக்கு முன்னதாகவே சொல்லப்பட்டு விடுகிறது.

ராவணனது பிறப்பு ஆனந்த ராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ராவணனது எல்லையற்ற ஆணவமும் மகாபலி, கார்த்தவீர்யார்ஜுனன், வாலி மூவரிடம் பலப்பரீட்சை செய்து, ராவணன் தோல்வியுற்று அவமானப்பட்டதும், கைலாயத்தைப் பெயர்த்தெடுக்கப்போய் கைகள் நசுங்கிக் கதற சிவபெருமான் கருணையால் கரங்களை மீட்டதையும் அவரது கதையில் சொல்லப் படுகிறது.

இரண்டாவது மாற்றம் தன்னை அழிக்கப் போகிறவன் அஜனது பேரனும் தசரதனுக்கும் கோசலைக்கும் பிறக்கப் போகும் மைந்தன் என்பதைப் பிரம்மாவிடமிருந்து கேட்டறிந்த ராவணன் தசரதன் கோசலைத் திருமணத்திற்கு முன்னமேயே அவர்களை ஒழிக்கத் திட்டமிடுகிறான்.

வசிஷ்டரது அறிவுரையால் அஜன் தசரதனையும், கோசலையையும் கடலில் ஒளித்து வைக்கிறான்.

அதையறிந்த ராவணன் அவர்களிருவரும் இருந்த கப்பலைத் தகர்த்து, கோசலையைக் கொண்டு போய் ஒரு பெட்டியில் வைத்து, அதை ஒரு ராக்ஷச மீனிடம் ஒப்படைத்து விட்டு வரப்போம் பகைவனை ஒழித்துவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறான்.

ஆனால் உடைந்த கப்பலிலிருந்து தப்பிய தசரதன் சாதகமான காற்றினால் கோசலை இருந்த பெட்டிக்கருகில் விடப்படுகிறான் பின்னர் இருவரும் மணந்து கொள்கிறார்கள். புத்ர காமேஷ்டி யாகப் பிரசாதத்தைக் கைகேயி கையில் வாங்கிக் கொண்டபோது சாபத்திற்காளான சுவர்ச்சஸா என்ற அப்சரஸ் பருந்து உருவில் வந்து அதைக் கைகேயியிடமிருந்து பறித்துக் கொண்டு ஓடுகிறாள். ஆனால் அது தரையில் விழவே, வாயுவின் கருணையால் மிதந்து வந்து கேசரியின் மனைவியான அஞ்சனையை அடைய, அனுமன் பிறக்கிறான்.

அயோத்யா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, லங்கா காண்டங்கள் பெரும்பாலும் வால்மீகி ராமாயணத்தையே பின்பற்றுகின்றன.

விசுவாமித்திரரோடு காட்டுக்குப் போகுமுன் தன்னைத் தசரத குமாரன் என்றே ராமன் கூறிக்கொள்கிறான். கவியும், விசுவாமித்திரர், வசிஷ்டர் மற்ற முனிவர்களும் ராமனைப் பரப்ரம்மாகக் கருதுகிறார்கள்.

இந்த இடத்தில் ராமன் சொல்கிறான்: “இந்த வேள்வியை நான் இடையூறுகளினின்று காப்பேன். தீயசக்திகளை வெல்லுவேன். ஆயினும் அரக்கர் விடாது போரிடுவர். மனித வாழ்க்கை நிலையற்றது. எனவே எனக்கு ஆத்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டுகிறேன்.’

உடனே விசுவாமித்திரர் ராமனுக்கு ஆத்மாவைப் பற்றி உபதேசிக்குமாறு வசிஷ்டரை வேண்டுகிறார். இப்படி கிரிதரர் இந்த இடத்தில் யோகவாசிஷ்டத்தைப் புகுத்தி விடுகிறார்.

இந்த இடத்தில் ராமன் சொல்லுவது மிகச் சிறப்பாக உள்ளது. “மூக்கற்ற அழகும், உயிரற்ற உடலும் போல ஆத்ம ஞானமின்றி எல்லா சாதனங்களும் பயனற்றவையே’

ராமனது அடக்கத்தை இப்படிக் காட்டும் கிரிதரர் ராவணனது ஆணவத்தை எப்படிக் காட்டுகிறார்! சீதை சுயம்வரத்திற்காக ராவணனும் வந்தான். வில்லை நாணேற்ற எழுந்திருக்கிறவன் ராவணன். அப்போது அவன் பேசுகிறான்.

“நான் கயிலாயத்தையே ஆட்டினேன்

இந்த வில் எம்மாத்திரம்?

நான் தேவர்களைச் சிறை வைத்தேன்

நான் வலிமை மிக்க ராவணன்!

நான்மேருமலையைத் தூக்கியெறிவேன்

நான் மந்திரமலையைப் பந்தாடுவேன்’

இப்படி வீரவாசகம் பேசிய ராவணன் தன் இருபது கரங்களாலும் வில்லைப் பிடித்துத் தூக்க முயன்றான். வில்லோ அசங்கவே இல்லை. கோபத்தால் பற்களை நறநறவென்று கடித்தான். கோபத்தால் கண்கள் ரத்தச் சிவப்பாய் மாறின. மீண்டும் வில்லைத் தூக்க முயன்றான். மீச்சுவாங்கியது. வியத்துக் கொட்டியது. வில்லைத் தூக்கும் போது கீழே விழுந்தான்.

“பத்து தலை ராவணன் விழுந்தான்

அவனது முயற்சி தோற்றது

த்ரயம்பகம் அவன் மேல் விழுந்தது

அதன் கீழ் அவன் நசுக்கப்பட்டான்’

அப்போது தன்னை வில்லின் கீழிருந்து எடுத்து விடுமாறு ஜனகனிடம் கெஞ்சுகிறான். அப்போது அவனது ஆணவம் போகவில்லை. கும்பகர்ணனும், இந்திரஜித்தும், அரக்கர்களும் ஜனகனைப் பழி வாங்குவர் என்று மிரட்டுகிறான். இப்படி ராவணனது அச்சத்தையும் பலவீனத்தையும் அழகாகக் காட்டுகிறது இந்நூல். இப்படிப் பல அருமையான காட்சிகள்.

கிரிதர தாசர் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பல வேதப் பாடங்களைச் சேர்க்கிறார். அகலிகையின் பிரார்த்தனை, சிவனிடம் ராமன் பிரார்த்தனை, ஆதிசேஷன் துதிப்பாடல், பிரமன் ராமனுக்குச் செய்யும் பிரார்த்தனை, குரு வந்தனம் ஆகியவை குறிபிபடத்தக்கன.

“குஜராத்தி இலக்கிய வரலாறு’ எழுதிய மன்சுக்லால் ஜாவேரி கூறுகிறார்: “கிரிதர தாசர் அவரது ராமாயணத்தால் நன்கு அறியப்பட்டவர். அந்த நூல் மொழிபெயர்ப்பல்ல. தழுவி எழுதப்பட்டது அல்ல. ஹனுமான் நாடகம், அக்னிபுராணம், பத்ம புராணம் துளசி ராமாயணம் முதலியவற்றிலிருந்து பல நிகழ்ச்சிகளையும் எடுத்து எழுதப்பட்ட ஒரு மூலப் படைப்பே. மிக எளிய நடையில் இயற்றப்பட்ட இந்நூல், பல ஆண்டுகளாக ஒவ்வொரு குஜராத்தியர் இல்லத்திலும் பக்தியோடு படிக்கப்பட்ட நூலாகும்.’

மு. ஸ்ரீனிவாஸன்



 நாட்டிய இசையில் ராம காவியம் - குஜராத்தி கிரிதர ராமாயணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக