ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Today at 8:36 am

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by ayyasamy ram Today at 8:33 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Today at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Today at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Yesterday at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Yesterday at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Yesterday at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Yesterday at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Yesterday at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Yesterday at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Yesterday at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Yesterday at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Yesterday at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Yesterday at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Yesterday at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Yesterday at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Yesterday at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Yesterday at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Yesterday at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Yesterday at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Yesterday at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Thu Sep 17, 2020 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Thu Sep 17, 2020 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Thu Sep 17, 2020 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Thu Sep 17, 2020 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Thu Sep 17, 2020 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Thu Sep 17, 2020 7:45 pm

Admins Online

தமிழ்ச்சொல் வேட்டை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Nov 18, 2012 7:39 am

First topic message reminder :

தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...

(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)

இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு


Last edited by சாமி on Sun Jan 27, 2013 8:17 am; edited 3 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Kuzhali on Sat Dec 08, 2012 1:49 pm

இந்த வாரம் இந்த வார்த்தைக்கு யாரும் விடை கண்டுபிடிக்க முயலவில்லையா?
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 17

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Dec 09, 2012 9:09 pm

ஐந்து)
எடுத்த எடுப்பில் நான் இரு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, நான் கனவிலும் எதிர்பார்க்காத அளவில், இந்தச் சொல் வேட்டை எங்கெங்கோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் குறியீடாக இந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஒரு சிறை வாசி (அவரைக் கைதி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை) நான்கு சொற்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நான் நெகிழ்ந்து போனேன். இரண்டாவது, சொல் வேட்டையில் பங்கேற்கும் வாசகர்கள் ஆங்காங்கே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வட்டார வழக்காக இருந்து, இன்று வழக்கொழிந்து போன அல்லது போய்க்கொண்டிருக்கும், சொற்களையும் தேடிப்பிடிக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், வழக்குச் சொற்களுக்கு தமிழ் மொழியில் தனி இடம் உண்டு.

÷கம்பன் தன் காப்பியத்தில் முதலில் பாடிய பாட்டு ""குமுதனிட்ட குலவரைக் கூத்தரில்'' என்றும், அப்பாட்டில் வரும் "துமி' என்ற ஒரு வழக்குச் சொல் ஒரு சர்ச்சையைக் கிளப்பியது என்றும், கலைவாணியின் அருளால் அந்த சர்ச்சை முடிவுற்றது என்றும் ஒரு கதை உண்டு. எனவே, வாசகர்கள் பண்டைய இலக்கியங்களில் வேட்டை நடத்தும்போதே, கூடவே வழக்குச் சொற்களைத் தேடுவதும் நலம் பயக்கும் என்று கருதுகிறேன். இனி இந்த வார வேட்டைக்கு வருவோம்.

÷நான் மேலே கூறியது போல் புழல் சிறையிலிருந்து தே.புதுராஜா, தனது கடிதத்தில் "பாரநோய' என்ற சொல்லுக்கு தன்னிலை அறியாக் குறைபாடு, அவ நம்பிக்கை, தொடர்புத் திறன் குறைபாடு, வேண்டா பயம் குறைபாடு என்னும் நான்கு சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

÷சென்னை சேத்துப்பட்டிலிருந்து மு.கேசவராமன், "பாரநோய' என்ற சொல்லுக்கு மன மாயை, கற்பனை, பொய்த் தோற்றம், கற்பனை நினைப்பு, கானல், எதிர்மறை ஏற்பு, அச்சம், பீதி, மன மயக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

÷கிழவன் ஏரியிலிருந்து புலவர் செ.சத்தியசீலன், திருக்குறளைச் சான்றாகக் காட்டி "பாரநோய' என்ற சொல்லுக்கு "மிகை அச்சம்' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

÷நங்கநல்லூர் டி.வி. கிருஷ்ணசாமி, "மனப்பிரமை' என்ற சொல்லையும், புதுச்சேரி தே. முருகசாமி, வீண் குழப்பம், தற்சார்பின்மையுடன் கலங்கி மருகுவது ஆகிய சொற்களையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

÷அண்ணாநகர் ஆனந்தக்கிருஷ்ணன், மனப்பிறழ்வு, மனச்சிதைவு ஆகிய சொற்களையும், திருப்பத்தூர் புலவர் விமலாநந்தன், "கற்பனையான அச்சம்' அல்லது "புதிரான அச்சம்' என்ற சொற்களையும் எழுதியிருக்கிறார்கள்.

பாடியிலிருந்து மு.அரங்கசுவாமி, தமிழ் லெக்சிகன்-இல் "பாரநோய' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றும், ""மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்ற பழமொழியை அடியொற்றி பாரநோய என்ற சொல்லுக்கு "மருள்' அல்லது "மருளி' சரியான தமிழ்ச் சொல்லாக அமையும் என்றும் கூறுகிறார்.

÷வில்லிவாக்கம் சோலை.கருப்பையா, கானல் கற்பனை பீதி, கானல் உணர்வு அச்சம் அல்லது கற்பிதவாதம் என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

÷புலவர் அடியன் மணிவாசகன், "பாரநோய' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியிலிருந்து "அறிவுப்பிறழ்ச்சி' அல்லது "தருக்கியல்', "சித்தப்பிரமை' ஆகிய சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், நல்ல மனநலக் குறைவினால் ஏற்படும் நோயாக இது இருப்பதால் "மனநோய்' என்று கூறுவதே மருத்துவத்தை நாடும் அறிவு திரிபுக்கும், மூளை கலக்கத்திற்கும் செயல் மாறாட்டத்திற்கும் பொருந்தி வரும் என்றும் உரைத்திருக்கிறார்.

÷திருச்சி தி.அன்பழகன், தெளிவின்மையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் "ஆசு' என்பதால், "பாரநோய' என்ற மனநோய் அல்லது மனக்கோளாறை "ஆசுள்ளம்' என்று அழைக்கலாம் என்கிறார்.

÷கோயம்புத்தூர் கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, திருவருட்பாவில் வள்ளலார் பல இடங்களில் "மருள்' என்ற சொல்லை (மருளுடைய மனப்பேதை நாயினேன்) குறிப்பதாலும், திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும் ""மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி'' என்றும், நம்மாழ்வார் ""மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே'' என்றும் கூறுவதால், "மருள்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்கிறார். மேலும், திருவருட்பாவில் "மருட்பகை தவிர்த்து' என்ற சொல்லால் மருளையும், பகை அச்சத்தையும் வள்ளலார் சுட்டிக் காட்டுவதால், மருட்பகை அல்லது மருள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

÷ஆலந்தூரிலிருந்து புலவர் இரா.இராமமூர்த்தி, தியங்குதல்,

வெருவருதல், திகைத்தல் ஆகிய சொற்களையும், வி.ந.ஸ்ரீதரன், மன மயக்கம் அல்லது மதி மயக்கம் என்ற சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியில் குறிப்பிட்டிருக்கும் "தருக்கியல்', "சித்தப்பிரமை' என்பது பொருத்தமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதை விட,

"மனப்பிறழ்வு என்பது பொருத்தமாக இருக்கும்.

அடுத்த வார சொல் : OBJECTIVE - SUBJECTIVE (அப்ஜெக்டிவ் - சப்ஜெக்டிவ்)

(வேட்டை தொடரும்)Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:51 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Dec 16, 2012 10:39 pm

ஆறு)
சொல் விளையாட்டு ஒரு சுவையான விளையாட்டே. ஒரே சொல்லுக்கு பல்வேறு பொருள்களும் ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் நமது அன்னைத் தமிழில் இருப்பது போலவே ஆங்கிலத்திலும் உண்டு. "ஆப்ஜக்ட்' என்ற சொல் ஒரு பொருளையும் குறிக்கலாம். ஒரு இலக்கையும் குறிக்கலாம். அதே போல் "சப்ஜக்ட்' என்பது ஒரு பொருளை அறியும் அல்லது உணரும் ஒன்றையும் குறிக்கலாம். அதே சமயம் ஒரு கூட்டத்திலோ, ஓர் அவையிலோ, விவாதிக்கப்படும் பொருளையும் குறிக்கலாம். எனவே சில சமயங்களில் இவ்விரு சொற்களுமே ஒரே பொருளில் பயன்படுத்தப்படலாம். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்ட (எதிர்மறையாகக் கூட) பயன்படுத்தப்படலாம்.

ஆனால் இவ்விரு சொற்களும் அப்ஜக்டிவ்-சப்ஜக்டிவ் என்ற குறிப்பிட்ட வரையறையில் பயன்படுத்தப்படும் போது, இலக்கு, பொருள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மனம்சார்ந்த குறியீடுகளாக இச்சொற்கள் மாறிவிடுகின்றன. இந்த நுணுக்கத்தின் அடிப்படையில் இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

÷புலவர் அடியன் மணிவாசகன் சப்ஜக்டிவ் என்பதை வினைமுதல் என்றும், அப்ஜக்டிவ் என்பதை "எதிர்மறை பொருள்' என்றும் சென்னை பல்கலைகழக அகரமுதலியை அடிப்படையாக வைத்தும், ஆனால் அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டும் எழுதியிருக்கிறார்.

÷வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், சப்ஜக்டிவ் என்பது "மனதில் தூண்டுதல் இல்லாமல் எழுகிற எண்ணம்' என்றும், அப்ஜக்டிவ் என்பது "நோக்கம், இலக்கு' என்கிற பொருளிலேயும் குறிக்கப்படுவதால் இவ்விரு சொற்களையும் எண்ணம், கருத்து, நோக்கம், இலக்கு என்ற சொற்களால் குறிப்பிடலாம் என்கிறார்.

÷கோவையிலிருந்து வழக்குரைஞர் நந்திவர்மன், அப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "புறவயமான குறிக்கோள்' மற்றும் "நோக்கம்' என்ற சொற்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், "நோக்கம்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்று சிவபுராணத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார். சப்ஜக்டிவ் என்ற சொல்லுக்கு "அக எண்ணம் சார்ந்த' என்ற பொருளை எடுத்தியம்பியுள்ளார்.

÷கடலுர் சத்தியமூர்த்தி, அப்ஜக்டிவ் என்ற சொல்லை "குறிக்கோள்' என்று சொல்லலாம் என்றும், தனிமனித விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட நிலையில் அச்சொல்லை பயன்படுத்தும் போது முனிவு, கனிவு இன்றி, என்று கூறலாம் என்று சொல்லிவிட்டு அதே போல் சப்ஜக்டிவ் என்பது தனிமனித விருப்பு வெறுப்புக்கு உட்பட்டு ஏற்படும் காரணத்தால் அதை "விழைவு வழி' என்று குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷கோவை கோவில்பாளையத்திலிருந்து முனைவர் வே.குழந்தைசாமி, அப்ஜக்டிவ் என்பதை "ஒருதலையன்மை' அல்லது "கோடாத சிந்தை' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "ஒருதலைச்சிந்தை' அல்லது "மனக்கோட்டம்' என்றும் அழைக்கலாம் என்கிறார்.

÷ஆலந்தூர் புலவர் இரா.ராமமூர்த்தி, அகம், புறம் இந்த இரண்டின் வெளிப்பாடே அனைத்தும் என்பதனால் சப்ஜக்டிவ் என்பதை "அகவயம்' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "புறவயம்' என்றும் குறிக்கலாம் என்றும் இது அறிவியலுக்கும், அருளியலுக்கும், காதலுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடுகிறார்.

÷திருச்சியிலிருந்து தீ.அன்பழகன், சப்ஜக்டிவ் என்பதை "தன்முனைப்பு' என்றும், அப்ஜக்டிவ் என்பதை "தன்மிதப்பு' என்றும் கூறலாம் என்கிறார்.

÷திருப்பத்தூர் புலவர் ச.மு.விமலாநந்தன், அப்ஜக்டிவ் என்பதை "பயனுறு நோக்கம்' என்றும், சப்ஜக்டிவ் என்பதை "தானாக மனதில் எழுகிற' என்றும் குறிப்பிடலாம் என்கிறார். ஆனால், இவை அனைத்தும் மிகச் சரியான சொற்களாகத் தெரியவில்லை.

÷ஆங்கில அகரமுதலிகள் அப்ஜக்டிவ் என்ற சொல்லை சாதாரண எண்ணங்கள், உணர்வுகளிலிருந்து மாறுபட்டு புறப்பொருள்களை ஒரு சரியான துலாக்கோலில் இட்டு எடைபோடுவது என்று குறிப்பிடுகின்றன. சப்ஜக்டிவ் என்ற சொல்லை ஆங்கில அகரமுதலிகள் மனதில் உதிக்கின்ற அல்லது எண்ணுபவரின் எண்ண ஓட்டத்தைச் சார்ந்த ஒன்றாகக் குறிக்கின்றன. ஆக, தான் என்ன நினைக்கிறோம் என்பதை ஒதுக்கிவிட்டு, அறிவியலின்பாற்பட்டு ஒரு செய்தியையோ, ஒரு நிகழ்வையோ, ஒரு நபரையோ எடை போடுவதை அப்ஜக்டிவ் என்றும்; தான் கொண்ட கொள்கை அல்லது முடிவு அல்லது கருத்துகளின் அடிப்படையிலோ அல்லது அறிவியல் சார்பில்லாமலோ எடைபோடும் முயற்சியை சப்ஜக்டிவ் என்றோ சொல்லலாம்.

÷அந்த வகையில் பார்க்கும் போது வழக்குரைஞர் சேலம் அ.அருள்மொழி தொலைபேசியில் என்னிடம் "அகக்காரணிகளைக் கொண்டு ஒன்றை ஆராய அல்லது எடைபோடப் புகுங்கால், அதை "சப்ஜக்டிவ்' என்று சொல்லலாம் என்றும், புறக்காரணிகளைக் கொண்டு ஆராயும் அல்லது எடைபோடும் முயற்சியை "அப்ஜக்டிவ்' என்றும் சொல்லாமே' என்றார். அந்த வகையில் பார்க்கும்போது, "அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கு "புறத்தாய்வு - அகத்தாய்வு' என்றும் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

"அப்ஜக்டிவ் - சப்ஜக்டிவ்' என்ற சொற்களுக்கான வாசகர்களின் தேர்ந்த முடிவு புறத்தாய்வு - அகத்தாய்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த வார சொல் : INPUT - OUTPUT (இன்புட்-அவுட்புட்)

(வேட்டை தொடரும்)


Last edited by சாமி on Thu Jan 03, 2013 10:51 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Wed Dec 26, 2012 12:31 pm

ஏழு)
கடந்த ஆறு வாரமாக நடக்கும் சொல் வேட்டை, பல பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவற்றில் ஒன்று, எங்கெங்கோ தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் குடத்தில் இட்ட விளக்கு போல், முகவரி தெரியாமல் தங்களை ஒடுக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே. சொல் வேட்டையின் மூலம் புதுச்சொற்களைப் போலவே, அவ்வறிஞர்களும் வெளிக்கொணரப் பட்டால், அது நமக்கு மிகப் பெரிய மகிழ்வைத் தரும். எனவே, சொல் வேட்டையை வாரந்தோறும் படித்து மகிழ்ந்த அல்லது படித்த பின் மாற்றுக் கருத்து கொண்ட அனைவரும், தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய ஒரு மேடையாகவோ, மன்றமாகவோ இத்தொடரைப் பயன்படுத்திக் கொண்டால், அது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டாக அமையும். ஆகவே, வாரந்தோறும் தொடர்ந்து நம்மோடு களத்தில் இறங்கும் வாசகர்களைப் போலவே, இன்னும் பலரும் நம்மோடு பயணிக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்தவார வேட்டைக்கு வருவோம்.

ஆங்கிலச்சொல் அகராதிகளின் படி, "இன்புட்' என்ற சொல் இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கை ஆகும். எனவே, அச்சொல் உள்ளே செலுத்தப்படும் அல்லது கொடுக்கப்படும் பொருளையும் குறிக்கலாம் அல்லது கொடுப்பதான செய்கையையும் குறிக்கலாம். இவை தவிர, ஒருவர் மற்றவர்க்கு வழங்கும் கருத்துகளையும், ஆலோசனைகளையும், செய்திகளையும் கூட அச்சொல்லால் குறிக்கலாம். அதேபோல் "அவுட்புட்' என்ற சொல்லும் இரு சொற்களின் சேர்க்கையே. அச்சொல்லும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் பொருளையோ, அதன் அளவையோ குறிக்கலாம், வெளியேற்றுவதான செய்கையையும் குறிக்கலாம். கணினி மயமாகிவிட்ட இவ்வுலகில், அச்சொல் செய்தித் தொகுப்புகளின் பரிமாற்றத்தையும் குறிக்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

தாராபுரத்திலிருந்து பல் மருத்துவர் கந்தவேள், "உட்படுதல் - வெளிப்படுத்துதல் அல்லது உள்ளாக்குதல் - வெளியிடுதல்' என்னும் சொற்களை எழுதியிருக்கிறார். காஞ்சிபுரத்திலிருந்து டி.சிவா, இன்புட்-அவுட்புட் சொற்களை மருத்துவத்தோடு பொருத்திப் பார்த்து "இன்புட்' என்பதற்கு "அகஞ்சேரல்' அல்லது "உள்வாங்கல்' என்றும், "அவுட்புட்' என்பதற்கு "புறந்தள்ளல்' அல்லது "வெளியேற்றல்' என்றும் குறிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

சென்னை உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன், "உள்ளீர்ப்பு, வெளிக்கொணர்வு' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார். புலவர் அடியன் மணிவாசகன், "இன்புட்' என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படுத்தப்படும் காரணத்தால், "அகநிகழ்வு' என்று கூறலாம் என்றும், அதே போல் "அவுட்புட்' என்பதை "புறநிகழ்வு' என்று குறிப்பிடலாம் என்றும் சொல்கிறார்.

வேலூரிலிருந்து புலவர் அரு.சுந்தரேசன், பொருளியல் மற்றும் வணிகத்தின் அடிப்படையில் "முதலீடு-வருவாய்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தலாம் என்கிறார். பேராசிரியர் க.பாஸ்கரன், "அகபங்களிப்பு-புறவிளைவு' என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆலந்தூர் புலவர் இரா.இராமமூர்த்தி, இன்புட், அவுட்புட் என்னும் சொற்கள் அறிவியல், மின்சாரம், கணினி சார்ந்த சொற்களாக இருப்பதால், இவற்றிற்கு "ஆகாறு - போகாறு, உள்ளீடு - வெளியீடு, உள்ளிறக்கம் - வெளியேற்றம், பெறுதல் - வழங்குதல், தரவு - விளைவு' என்னும் பல்வேறு சொற்களைக் காட்டுகிறார்.

அண்ணா நகரிலிருந்து திரு.ஆனந்தகிருஷ்ணன், உள்ளீடு மற்றும் வெளியீடு என்பவை எல்லோராலும் அறியப்பட்ட சொற்களாக இருப்பதாலும், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியிலும், தொழில்துறையிலும், புழக்கத்தில் இருப்பதாலும் இச்சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

திருச்சி தி.அன்பழகன், தொழில்துறை சார்ந்தும், கணினி சார்ந்தும் இச்சொற்களுக்கு இணைச்சொற்களைக் காண வேண்டுமென்றும், அதனால் இன்புட்-அவுட்புட் என்பதை "உள்ளுட்டம்-வெளிவாட்டம்' என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறார்.

புதுச்சேரி தே.முருகசாமி, சிலப்பதிகாரத்தில் பொற்கொல்லன் சிலம்பை ஆய்ந்த நிலையைக் கருதி இன்புட்-அவுட்புட் ஆகிய சொற்களுக்கு "அகவேலைப்பாடு, புறவேலைப்பாடு' என்பவை பொருத்தமாகும் என்கிறார். கடலூர் என்.ஆர்.சத்தியமூர்த்தி, "இடுவன-தருவன' என்ற சொற்களைத் தந்திருக்கிறார்.

அச்சொற்களுள் "இடுவன-தருவன' என்ற சொற்கள் பொருள் நயமும், ஓசை நயமும் மிக்கவையாக அமைந்திருந்தாலும், அவை "இடுகின்ற-தருகின்ற' பொருளைக் குறிக்குமேயன்றி, "இடுகின்ற-தருகின்ற' செயல்களைக் குறிக்குமா என்பது ஐயமாக இருக்கிறது. தரவு, விளைவு என்ற சொற்கள் கற்றோர் மனதைக் கவரும் வகையில் இருந்தாலும், உள்ளீடு-வெளியீடு என்ற சொற்கள் புழக்கத்தில் வருவதற்கு எளிமையாக இருக்கும் என்ற காரணத்தால் அச்சொற்களைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அடுத்த வார சொல்: அக்​ரோ​னிம் (acronym)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Thu Jan 03, 2013 10:58 pm

எட்டு)
சொல்​வேட்டை,​​ பழைய மற்​றும் புதிய சொற்​களை மட்​டும் நமக்கு அறி​மு​கப்​ப​டுத்​த​வில்லை.​ அதை​யும் தாண்டி,​​ எங்​கெங்கோ இருக்​கும் மொழிப் பற்​றா​ளர்​க​ளை​யும்,​​ அவர்​கள் தங்​க​ளுக்கே உரிய ஆய்​வுப் பார்​வை​யோடு கொண்​டி​ருக்​கும் பல்​வே​று​பட்ட கருத்​து​க​ளை​யும் நமக்கு அறி​மு​கப்​ப​டுத்தி வரு​கி​றது.​ ஒரு சிலர்,​​ கம்​ப​னது காப்​பி​யத்​தில் பொன்​மா​னைப் பற்​றிய ஐயத்​தைக் கிளப்​பிய இலக்​கு​வ​னி​டம்,​​ ""இரா​மன் இல்​லா​தன இல்லை இளங்​கு​மர'' என்று கூறி​ய​தைப் போல்,​​ தமிழ் மொழி​யில் இல்​லாத சொற்​களே இல்லை என்​னும் கருத்​தைக் கொண்​டி​ருக்​கி​றார்​கள்.​ இன்​னும் சிலர்,​​ புதிய பொருள்​க​ளை​யும்,​​ புதிய சூழ்​நி​லை​க​ளை​யும்,​​ புதிய செய்​தி​க​ளை​யும் குறிக்​கும் சொற்​கள் நமக்​குத் தேவை​தானா என்ற ஐயத்​தை​யும்,​​ ஏற்​க​னவே முழு​மை​யாக வளர்ச்​சி​ய​டைந்து,​​ செம்​மொ​ழி​யா​கச் சுடர்​விட்​டுப் பிர​கா​சிக்​கும் நம் மொழிக்கு இவை அவ​சி​ய​மில்லை என்​றும் எண்​ணு​கி​றார்​கள்.​ அவர்​கள் அனை​வ​ரின் கருத்​து​க​ளுக்​கும் நான் தலை​வ​ணங்​கு​கி​றேன்.​

÷அதே நேரத்​தில்,​​ ஒரு கருத்தை அறி​ஞர்​கள் முன் பதிவு செய்ய நான் விழை​கி​றேன்.​ இன்​றைய சூழ்​நி​லை​யில் ஒவ்​வொரு நாளே​டும்,​​ காலத்​தின் கட்​டா​யத்​தி​னால்,​​ நமக்​குத் தேவை​யான,​​ தேவை​யற்ற,​​ விரும்​பு​கிற,​​ விரும்​பாத,​​ மகிழ்ச்​சியை அல்​லது துன்​பத்​தைத் தரும் பல செய்​திக் குப்​பை​களை நம் சிறு மூளைக்​குள் கொண்டு வந்து கொட்​டு​கின்​றன.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக நாம் அறிந்தோ,​​ அறி​யா​மலோ,​​ விரும்​பியோ,​​ விரும்​பா​மலோ,​​ குப்​பைத் தொட்​டி​யா​கிப் போய்க்​கொண்​டி​ருக்​கும் நம் மூளைக்​கும்,​​ மன​திற்​கும் ஒரு மாற்​றுப் பயிற்​சியே இச்​சொல் வேட்டை.​ இனி இந்த வார வேட்​டைக்கு வரு​வோம்.​

÷வி​ழுப்​பு​ரத்தி​லி​ருந்து முதல்​நிலை விரி​வு​ரை​யா​ளர் வேல்.சிவ.கேதாரி சிவ​சங்​கர்,​​ "ஒரு மொழி​யின் அனைத்​துச் சொற்​க​ளை​யும் வேறொரு மொழி​யில் மொழி​பெ​யர்ப்​ப​தும் இய​லாது,​​ அது தேவை​யும் அற்​றது என்​றும்,​​ ஆங்​கி​லத்​தில் வரி​வ​டி​வ​மும்,​​ ஒலி​வ​டி​வ​மும் மாறு​ப​டு​வ​த​னால் அக்​ரோ​னிம் கிடைப்​ப​தா​க​வும்,​​ தமிழ் மொழி​யின் இயல்​பின்​படி அக்​ரோ​னிம் கிடை​யாது என்​றும்,​​ அப்​ப​டியே செயற்​கை​யாக உரு​வாக்க வேண்​டு​மா​னால்,​​ அதன் பயன்​பாட்​டைக் குறித்து அக்​ரோ​னிம் என்​பதை "விரி​ப​தம்' என்று குறிப்​பி​ட​லாம்' என்​கி​றார்.​ ஆனால்,​​ அவ​ரது கருத்​தில் ஒரு சிறிய சிக்​கல் இருக்​கி​றது.​ தமி​ழி​லும் சில நேரங்​க​ளில் சில எழுத்​து​கள் அவை பயன்​ப​டுத்​தப்​ப​டும் இடங்​க​ளைப் பொறுத்து மாறு​பட்ட ஒலி​க​ளைக் கொடுக்​கின்​றன.​ ÷எ​டுத்​துக்​காட்​டாக "அச்சு' என்ற சொல்​லில் உள்ள "சு' என்ற எழுத்து உரு​வாக்​கும் ஒலி​யும்,​​ அஞ்சு,​​ நெஞ்சு,​​ பஞ்சு போன்ற சொற்​க​ளில் உள்ள "சு' என்ற எழுத்து உரு​வாக்​கும் ஒலி​யும் மாறு​ப​டு​கின்​றன.​ அதைப்​போல் "விரி​ப​தம்' என்​பது அப்​ரி​வி​யே​ஷன் என்ற சொல்​லுக்கு எதிர்​ம​றை​யான "எக்ஸ்​பான்​ஷன்' என்​ப​தைக் குறிக்​க​லாமே தவிர,​​ அக்​ரோ​னிம் என்​ப​தைக் குறிக்க முடி​யாது.​ அவ்​வா​ச​கரே எடுத்​துக்​காட்​டாக சுரதா,​​ கல்கி போன்ற சொற்​க​ளைக் காட்​டி​யி​ருக்​கி​றார்.​ சுரதா என்​ப​தன் விரி​ப​தம் "சுப்பு ரத்​தின தாசன்' ஆக இருக்க முடி​யுமே தவிர,​​ சுப்பு ரத்​தின தாசன் என்ற பெய​ரின் விரி​ப​த​மாக சுரதா இருக்க முடி​யாது.​

÷நெல்​லையி​லி​ருந்து பெரு​ம​ணல் ராயர் என்​னும் அன்​பர்,​​ "சிநோ​னிம்' என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு அருஞ்​சொல் என்ற சொல்​லும்,​​ "ஆண்​ட​னிம்' என்ற ஆங்​கி​லச் சொல்​லுக்கு எதிர்ச்​சொல் என்ற சொல்​லும் வழங்​கப்​ப​டு​வ​தால்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "குறுஞ்​சொல்' என்ற சொல்​லைப் பயன்​ப​டுத்​த​லாம் என்​கி​றார்.​

÷இ​லந்தை சு.இரா​ம​சாமி,​​ "முதல் எழுத்து வருக்​கம்' என்ற சொல்​லைப் பரிந்​து​ரைக்​கி​றார்.​ பாடியி​லி​ருந்து முனை​வர் மு.அரங்​க​சு​வாமி,​​ சொல்​சு​ருக்​கம்,​​ சொல்​ஒ​டுக்​கம் போன்ற சொற்​கள் பொருந்​து​வது போல் தோன்​றி​னா​லும்,​​ தமிழ் இலக்​க​ணத்​தில் இரண்டு சொற்​க​ளுக்கு இடையே சில உரு​பு​கள் மறைந்து வந்து பொரு​ளைத் தரு​வது "தொகை' என்று அழைக்​கப்​ப​டு​வ​தால்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு,​​ சொல் இலக்​க​ணத்தை அடி​யொற்றி "சொற்​தொகை' என்ற சொல்லை உரு​வாக்​க​லாம் என்​கி​றார்.​

÷ஸ்ரீ​ரங்​கத்தி​லி​ருந்து மாதா சம்​பத்,​​ மகா​பா​ர​தப் போரில் ஈடு​பட்ட படை​வீ​ரர்​கள் அக்​ரோ​னி​க​ளா​கப் பிரிக்​கப்​பட்​டி​ருந்த கார​ணத்​தால்,​​ "அக்​ரோனி என்ற சொல்​லுக்​குப் "படை​வீ​ரர்​க​ளின் கூட்​டம்' என்​பது பொரு​ளா​கும் என்​றும்,​​ அதை அடி​யொற்றி அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "சேர்க்கை' என்று பொருள் கொள்​வது பொருத்​த​மா​ன​தா​கும் என்​றும் குறிப்​பி​டு​கி​றார்.​ ஆனால் இக்​க​ருத்து சரி​யா​ன​தா​கத் தோன்​ற​வில்லை.​ மகா​பா​ர​தப் போரில் ஈடு​பட்ட படை​வீ​ரர்​க​ளின் கூட்​டம் வட மொழி​யில் அெக்ஷ​ள​ஹிணி​ சேனை என்​ற​ழைக்​கப்​பட்​டதே தவிர,​​ அக்​ரோனி என்​ற​ழைக்​கப்​ப​ட​வில்லை.​ ஓர் அùக்ஷ​ள​ஹிணி என்​பது வட​மொ​ழி​யில்,​​ குறிப்​பாக மகா​பா​ர​தத்​தில்,​​ சுமார் 20,000 தேர்​கள்,​​ 20,000 யானை​கள்,​​ 65,000 குதி​ரை​கள் மற்​றும் 1,00,000 காற்​படை வீரர்​கள் அமைந்த ஒரு சேனைக்கு அளிக்​கப்​பட்ட பெய​ரா​கும்.​ இதற்​கும் அக்​ரோனி அல்​லது அக்​ரோ​னிம் என்​ப​தற்​கும் எவ்​வி​தத் தொடர்​பும் இல்லை.​

÷ரா​சப்​பா​ளை​யம் சத்​தி​ரப்​பட்​டியி​லி​ருந்து தமிழ் பேரா​சி​ரி​யர் க.பாண்​டித்​துரை,​​ வேலை ஆயு​த​மாக உடைய முரு​கனை வேல்​மு​ரு​கன் என்​ற​ழைப்​ப​தும்,​​ பாலை உடைய குடத்தை பாற்​கு​டம் என்​ற​ழைப்​ப​தும் தமி​ழில் தொகை எனப்​ப​டும் என்​றும்,​​ தொக்கி ​(மறைந்து)​ நிற்​கும் சொல் தொகு​சொல் ஆகு​மென்​றும்,​​ தொட​ராக விரி​யும் சொல் விரி​சொல் ஆகு​மென்​றும் கூறு​கி​றார்.​ எனவே,​​ அக்​ரோ​னிம் என்​பதை "தொகு​சொல்' என்​ற​ழைக்​க​லாம் என்​கி​றார்.​

÷கல்​லி​டைக் குறிச்​சியி​லி​ருந்து இந்​திய வரு​வாய்ப் ​ பணி​யைச் சேர்ந்த ​(இ.வ.ப.)​ கமால் அப்​துல் நாசர் அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "குறுஞ்​சொற்​றொ​டர்' என்ற சொல்​லைப் பரிசீ​லிக்​க​லாம் ​ என்​கி​றார்.​

ஆலந்​தூர் புல​வர் இரா.இரா​ம​மூர்த்தி யாப்​ப​ருங் கலக்​கா​ரிகை என்​னும் செய்​யுள் இலக்​கண நூலில்,​​ சீர்,​​ தளை,​​ மா,​​ இனம் ஆகி​ய​வற்​றின் எடுத்​துக்​காட்​டுப் பாடல்​களை அவற்​றின் முதல் அசை​க​ளைத் தொகுத்து,​​ "முதல் நினைப்​புக் காரிகை' என்ற பாட​லில் குறிப்​பி​டு​வ​தா​லும்,​​ நாலா​யிர திவ்​யப் பிர​பந்​தத்​தில் பத்​துப்​பத்து பாடல்​க​ளின் முதல் அசை​களை இறு​தி​யில் "அடி​வ​ரவு' என்ற தலைப்​பில் தொகுத்​த​ளிக்​கும் கார​ணத்​தி​னா​லும் அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு முதல் நினைப்பு,​​ அடி​வ​ரவு,​​ முதல் தொகுப்பு,​​ முதல் எழுத்​துச் சுருக்​கம்,​​ சொற்​சு​ருக்​கம் ஆகிய சொற்​கள் பொருந்​தும் என்​கி​றார்.​

÷சென்னை வழக்​குரை​ஞர் இ.தி.நந்​த​கு​மா​ரன்,​​ முருகா என்​னும் பெயரே முகுந்​தன் ​(திரு​மால்)​,​​ ருத்​ரன் ​(சிவன்)​ மற்​றும் கம​லன் ​(பிரம்​மன்)​ ஆகிய மூவ​ரின் பெயர்​க​ளின் முதல் எழுத்​துச் சேர்க்​கையே ​(மு,​​ ரு,​​ க)​ என்​றும்,​​ சுப்பு ரத்​தின தாசன்,​​ சுரதா ஆனது இவ்​வ​ழியே என்​றும்,​​ இப்​ப​டிச் சுருங்​கக் கூறு​வது தமி​ழில் சுருங்​கச்​சொல் அணி அல்​லது ஓர் அலங்​கா​ரம் என்​ற​ழைக்​கப்​ப​டு​வ​தா​க​வும் எழு​தி​யுள்​ளார்.​ சுட்டி என்ற சொல் சுருங்​கு​வ​தை​யும்,​​ சுட்​டிக்​காட்​டு​வ​தை​யும் குறிப்​ப​தால்,​​ ஒரு சொல்​லின் முதல் எழுத்​து​களை மட்​டும் எடுத்து உரு​வாக்​கப்​ப​டும் இன்​னொரு சொல்லை "சுட்​டி​யம்' என்​ற​ழைக்​க​லாம் என்​றும் கூறு​கி​றார்.​

÷தஞ்​சைத் தமிழ்ப் பல்​க​லைக்​க​ழ​கத்தி​லி​ருந்து முனை​வர் பா.ஜம்பு​லிங்​கம்,​​ தமி​ழில் அக்​ரோ​னிம் பயன்​பாடு இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை என்​றும்,​​ எம்.ஜி.ஆர்.,​​ என்.டி.ஆர்.,​​ எம்.எஸ்.,​​ உ.வே.சா., மு.வ.​ போன்​ற​வர்​க​ளின் பெயர்​கள் மட்​டும்,​​ மரி​யாதை நிமித்​த​மா​கச் சுருக்​கித் தரப்​பட்​ட​தா​க​வும் குறிப்​பிட்​டு​விட்டு,​​ அக்​ரோ​னிம் என்​பது சுருக்​க​மா​கக் குறி​யீட்டு நிலை​யில் அமை​வ​தால் "சுருக்​கக் குறி​யீடு' என்​பது பொருத்​த​மாக இருக்​க​லாம் என்​கி​றார்.​

÷பு​ல​வர் அடி​யன் மணி​வா​ச​கன்,​​ படைப்​பி​யற்​கை​யின் உண்​மை​யி​யல் நாத​மான ஓம் என்​பதே மூன்று சொற்​க​ளின் முதல் எழுத்​து​க​ளின் சேர்க்​கை​யாக அமை​வ​தா​லும்,​​ திவ்​யப் பிர​பந்​தத்​தில் ஒரு பதி​கத்தை நினைவு கூறு​வ​தற்​காக ஒவ்​வொரு பாட்​டின் முதல் சொல்​லை​யும் எடுத்​துத் தொகுத்து,​​ அதை ஈர​டிப்​பாட்​டுப் போல அமைத்து,​​ அதற்கு "அடி​வ​ரவு' என்று பெயர் சூட்​டி​யுள்ள கார​ணத்​தா​லும்,​​ அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு "முதல் எழுத்து ஆக்​கச்​சொல்' அல்​லது "முதல் எழுத்து வரவு' என்ற சொற்​க​ளைப் பயன்​ப​டுத்​த​லாம் என்​கி​றார்.​

இவை அனைத்​தை​யும் அல​சிப்​பார்த்து ஒரு முடி​வுக்கு வரும் முன்,​​ ஒரு செய்​தியை வாச​கர்​கள் அறிய வேண்​டும்.​ அக்​ரோ​னிம் என்ற சொல் ஆங்​கில மொழி​யி​லேயே 20-ஆம் நூற்​றாண்​டில்​தான் பயன்​பாட்​டிற்கு வந்​த​தாக ஒரு கருத்து நில​வு​கி​றது.​ ஒரு சொற்​றொ​ட​ரின் முதல் எழுத்​து​களை மட்​டும் ஒன்று சேர்ப்​ப​தி​னால் வரும் கூட்​டுச்​சேர்க்கை,​​ தனி​யாக நின்று எந்​தப் பொரு​ளை​யும் தரா​த​போது,​​ அது அப்​ரி​வி​யே​ஷன் என்​றும்,​​ அந்​தக் கூட்​டுச்​சேர்க்​கையே ஒரு பொரு​ளைக் குறிக்​கும் சொல்​லாக மாறி​வி​டும்​போது,​​ அது அக்​ரோ​னிம் என்​றும் குறிப்​பி​டப்​ப​ட​லாம்.​ அந்த அடிப்​ப​டையை வைத்​துப் பார்க்​கும்​போது,​​ அக்​ரோ​னிம் என்​பதை "தொகு​சொல்' என்​ற​ழைப்​ப​தும்,​​ அப்​ரி​வி​யே​ஷன் என்​பதை "சொற்​சு​ருக்​கம்' என்​ற​ழைப்​ப​தும்​தான் பொருத்​த​மாக இருக்​கும்.​
அக்​ரோ​னிம் என்ற சொல்​லுக்கு,​​ வாச​கர்​கள் தரும் இணைச்​சொல் தொகு​சொல்.​

அடுத்த சொல் வேட்டை​​:கேள்​விக்​குறி,​​ ஆச்​ச​ரி​யக்​குறி,​​ முற்​றுப்​புள்ளி போன்ற குறி​யீ​டு​கள் ஒட்டு மொத்​த​மாக ஆங்​கி​லத்​தில் "பங்க்​சு​வே​ஷன் மார்க்ஸ்' என்​றும்,​​ அவற்​றைப் பயன்​ப​டுத்​தும் நடை​மு​றையை "பங்க்​சு​வே​ஷன்' என்​றும் குறிக்​கின்​ற​னர்.​ இவற்​றுக்கு இணை​யான தமிழ்ச் சொற்​கள் உண்டா?​
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ராஜு சரவணன் on Fri Jan 04, 2013 1:00 am

எனது புதிய பதிவை பார்க்கவும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
மதிப்பீடுகள் : 1529

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Jan 06, 2013 8:47 pm

ஒன்பது)
நமது சொல் வேட்டையின் நோக்கம், ஒரு குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லை, பழைய இலக்கியங்களிலிருந்தும், மொழி ஆராய்ச்சி நூல்களிலிருந்தும் தேடித் தெரிந்து கொள்வதா? அல்லது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதைப் புழக்கத்தில் விடுவதா?' என்று ஷா.கமால் அப்துல்நாசர் என்பவர் ஓர் அடிப்படை கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து புழக்கத்தில் விடுவது என்றால், அதைத் தமிழர் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவ்வாசகர் ""தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார்'' என்ற குறளை மேற்கோள் காட்டி, அக்குறளில் வரும் "கடிகொண்டார்' என்ற சொல்லை அடித்தளமாகப் பயன்படுத்தி, ஆங்கிலத்தில் சொல்லப்படும் "புரொஹிபிட்டரி ஆர்டர்' என்ற சொற்றொடருக்கு "கடிகொள்ளாணை' என்ற சொல் பொருத்தமாக இருப்பினும், புழக்கத்தில் "தடுப்பாணை' என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதைக் குறிப்பிட்டு, சொல் வேட்டையில் சொற்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்.

வாசகர்கள் பலருக்கும் இப்படிப்பட்ட கேள்விகளும், ஐயங்களும் எழுந்திருக்கலாம். எனவே, இதைத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை.

இச்சொல் வேட்டையின் உண்மையான நோக்கம், புதுச் சூழ்நிலைகளுக்கும், புதுக் கருத்துகளுக்கும் பொருந்தும் புதுச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதே! ஆனால், இந்த சொல் வேட்டையைத் தொடங்கிய பிறகு, புழக்கத்திலிருக்கும் ஒருசில ஆங்கிலச் சொற்களுக்கே பெருவாரியான மக்கள் ஏற்றுக்கொள்ளும் அல்லது பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் சொற்கள் தமிழில் இல்லையோ என்ற ஐயம் எழுந்தது. அதோடு, வாசகர்களும் இச்சொல் வேட்டைக்குப் பல்வேறு பரிமாணங்களை அளித்து, பல்வேறு கோணங்களில் இதை அணுகத் தொடங்கியதால், சொல் வேட்டையின் நோக்கமும், அது தொடங்கப்பட்ட தளமும், என்னையும் அறியாமலேயே விரிவுபடுத்தப்பட்டு, புதுச் சூழ்நிலைகளுக்கான புதுச்சொற்கள், புது அல்லது பழங்கருத்துகளுக்கான அருஞ்சொற்கள், அவ்வருஞ் சொற்களின் எளிமைப் படுத்தப்பட்ட வடிவங்கள், அவ் வடிவங்களில் எளிதில் புழக்கத்திற்கு வரக்கூடியவை என்றெல்லாம் சொல்வேட்டையின் தளம் விரிவு படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இதை இனியொரு சிறிய எல்லைக்குள் சிறைப்படுத்த முடியாது.

இனி இந்தவாரச் சொல் வேட்டைக்கு வருமுன், சுவையான சில செய்திகளை வாசகர்களுக்குச் சொல்ல விழைகிறேன். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், உலகின் தொன்மையான மொழிகளில் "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' எனப்படும் குறியீடுகளுக்கான தேவை பழங்காலத்தில் அமையவில்லை போல் தெரிகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் சில குறியீடுகளை கிறிஸ்துவுக்கு முன்பே (கி.மு.) பயன்படுத்தியதாகத் தெரிந்தாலும், உலகம் முழுவதிலும் புனித விவிலியம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட காலத்தில்தான் இக் குறியீடுகளுக்கான தேவை அதிகரித்ததாகத் தெரிகிறது. பதினாறாம் நூற்றாண்டில் ஆல்டஸ் மேனுடியஸ் என்பவரால் இக்குறியீடுகள் முறைப்படுத்தப்பட்டதாக ஒரு குறிப்பும் உண்டு.

அதிகமாக நம்மிடம் புழக்கத்திலிருக்கும் பங்க்சுவேஷன் மார்க்ஸ், கமா, ஃபுல் ஸ்டாப், கோலன், பிராக்கட், எக்ஸ்க்ளமேஷன், அப்பாஸ்ட்ரஃபி, கொட்டேஷன், கொஸ்டின் மார்க் ஆகியவைதான். ஆனால், அவற்றைத் தாண்டி பல பங்க்சுவேஷன் மார்க்ஸ் இன்று ஆங்கிலத்தில் பெருவாரியாகப் பழக்கத்தில் வந்துவிட்டன. அவை: (1) டாகர் அல்லது ஓபிலிஸ்க் - கூறியது கூறும் குறையைக் களைவதற்கான குறியீடு (2) காரட் அல்லது வெட்ஜ் - சொன்ன கருத்தில் விட்டுப்போன ஒன்றைக் குறிக்கும் குறியீடு (3) சாலிடஸ் - நாணயத்தின் பல்வேறு மதிப்புகளை, அதாவது ரூபாய்க்கும், காசுக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்ட, தற்போதைய டெசிமல் முறை கொண்டுவரப்படுவதற்கு முன் பயன்படுத்தப்பட்ட குறியீடு, (4) ஆஸ்டரிக் - ஒரு சொல் அல்லது கருத்தின் விரிவாக்கத்தை வேறிடத்தில் விரித்துரைப்பதைக் காட்டும் குறியீடு, (5) கில்மெட்ஸ் - ஆங்கிலமல்லாத மொழிகளில் கொட்டேஷன் மார்க்காகப் பயன்படுத்தப்படும் குறியீடு, (6) ஷெப்ஃபர் ஸ்ட்ரோக் - கணிதத்தில் கால்குலஸ்ஸில் பயன்படுத்தப்படும் குறியீடு, (7) பிகாஸ் சைன் - காரணம் என்ற சொல்லைக் குறிக்கும் குறியீடு (இது "ஆகவே' என்ற சொல்லைக் குறிக்கும் குறியீட்டைத் தலைகீழாகப் போடும் குறியீடு), (8) செக்ன் சைன் - பொதுவாக வழக்குரைஞர்களால் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவை மாறுபடுத்திக்காட்டப் பயன்படுத்தப்படும் குறியீடு, (9) எக்ஸ்க்ளமேஷன் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் ஆச்சர்யத்தைக் குறிக்கும் குறியீடு, (10) கொஸ்டின் கமா - ஒரு வாக்கியம் முடியும் முன்பே ஏற்படும் வினாவைக் குறிக்கும் குறியீடு, (11) இன்ட்டெர்ரோபாங்க் - வியப்பையும், வினாவையும் ஒருசேரக் குறிக்கும் குறியீடு, (12) ஹீடரா அல்லது பில்க்ரோ - ஒரு பத்திக்கும் இன்னொரு பத்திக்கும் உள்ள வேறுபாட்டைக் குறிக்கும் குறியீடு, (13) ஸ்னார்க் - சொன்ன சொல்லுக்குக் கிண்டலாக இன்னொரு பொருள் உண்டு என்பதைக் குறிக்கும் குறியீடு.

கணினியின் தாக்கம் அதிகரித்த பிறகு, இன்னும் பல குறியீடுகள் இளைய தலைமுறையிடம் வந்துவிட்டன. தங்களுடைய மகிழ்ச்சி, துயரம், அழுகை, வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் காட்டும் குறியீடுகள் இன்று கைபேசியிலும், கணினியிலும் வந்துவிட்டன. இனி இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.

பங்க்சுவேஷன் மார்க்ஸ், மேலை நாட்டு மொழிகளின் வரவால் தமிழ் மொழியில் பயனாக்கம் பெற்றன என்றும், ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியைக் கொண்டு எழுதப்பட்ட காலங்களில், சுவடிகள் கிழிந்துவிடும் வாய்ப்பு இருந்தமையால் இக்குறியீடுகள் பயன் படுத்தப்படாமல் இருந்தன என்றும் குறிப்பிட்டுவிட்டு, புலவர் அரு.சுந்தரேசன், அச்சொல்லுக்கு "நிறுத்தற்குறிகள்' என்றச் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். மேலும் அனைத்து நிறுத்தற்குறிகளையும் வரிசைப்படுத்தியுள்ளார்.

வி.ந.ஸ்ரீதரன், "வாக்கியக்குறியீடு' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார். பாபாராஜ் என்பவர், சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தை மேற்கோள்காட்டி பங்க்சுவேஷன் மார்க்ஸ் என்றச் சொல்லுக்கு நிறுத்தக்குறியீடு, முத்திரைகள் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

செ.சத்தியசீலன், நிறுத்தற்குறிகள், எழுத்துக்கள் அன்று என்றும், அவை பொருள் தரும் அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டு, "பொருள்குறிகள்' என்பது கூடப் பொருத்தமாக இருக்கும் என்கிறார். டி.வி.கிருஷ்ணசாமி, "குறியீட்டியல்' என்றச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்குங்கால், "பங்க்சுவேஷன் மார்க்ஸ்' என்றச் சொல்லுக்கு "நிறுத்தற் குறிகள்' என்பதே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தினாலும், அச்சொல் அனைத்துக் குறியீடுகளையும் உள்ளடக்கிய காரணத்தினாலும், அதுவே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

அடுத்த வார சொல்:
மறைமுகமாக ஒரு மனிதனையோ ஓர் இடத்தையோ, ஒரு நிகழ்வையோ சுட்டிக்காட்டும் முறைக்கு ஆங்கிலத்தில் 'அல்யூசன்' என்று பெயர். இதன் தமிழாக்கம் அல்லது தமிழ் இணைச்சொல் என்ன?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Wed Jan 16, 2013 10:49 pm

பத்து)
இங்கிலத்தில் உள்ள பல சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து உருவானவை என்பதை அறிவோம். "அல்யூசியோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "சொல் விளையாட்டு' என்பது பொருள். "அல்யூசியோ' என்ற சொல்லை வேர்ச்சொல்லாகப் பயன்படுத்தி "அல்யூடியர்' என்ற சொல் இலத்தீன் மொழியிலேயே உருவானது. அச்சொல்லுக்கு "கிண்டலாகக் குறிப்பிடுவது' அல்லது "விளையாட்டாகக் குறிப்பிடுவது' என்ற பொருளுண்டு. அந்த இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆங்கிலச் சொல்தான் "அல்யூஷன்'.

அச்சொல்லுக்குரிய பொருளை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், "ஒருவரை நேரில் பார்க்காமலேயே, அவரிடம் நேரிடையாகப் பாடம் படிக்காமலேயே அவரை மானசீக குருவாக எண்ணி, ஒருவன் கற்றுத்தேர்ந்தான் என்றால், அதனை நாம் "இவன் ஒரு ஏகலைவன்' என்கிறோம். அப்படி நாம் குறிப்பிடும் முறை அல்யூஷன்.

கண்ணெதிரே அக்கிரமம் நடப்பதைக் கண்டும் காணாதது போல் இருப்பவனை, "இவன் ஒரு திருதராட்டிரன்' என்கிறோம். இது ஓர் அல்யூஷன். ஒரு கட்சிக்குள் அல்லது ஒரு குழுவுக்குள் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் உறுப்பினரை "இளம் துருக்கியர்' என்றழைப்பதும் அல்யூஷன் ஆகும். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டு, இந்தவார சொல் வேட்டைக்கு வருவோம்.

"அல்யூஷன்' என்ற ஆங்கிலச் சொல் பொதுவாக எதிர்மறைப் பொருளிலேயே கையாளப்படும் காரணத்தால், அச்சொல்லுக்கு "உட்குறிப்பு' அல்லது "மறைகுறிப்பு' என்னும் சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்று ஷா.கமால் அப்துல் நாசர் எழுதி, திருக்குறள் 128ஆவது அதிகாரத்தின் தலைப்பு "குறிப்பு அறிவுறுத்தல்' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலவர் இரா.இராமமூர்த்தி, தொல்.செய்யுளியல் 122ஆவது நூற்பாவை மேற்கோள்காட்டி, ""மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு'' ஆகும் என்பதனால், "கரப்பு மொழி' அல்லது "மொழி கரப்பு' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கலாம் என்றும், "பிறிது மொழிதல்' என்பதும் பொருத்தமாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் செ.சத்தியசீலன், மறைமுகமாக ஒருவரையோ, ஓரிடத்தையோ, ஒரு நிகழ்வையோ உணர்த்தும் சொற்கள் "குறிப்புச் சொற்கள்' என்று கூறப்படுவதாலும், சில சமயம் சில குழுக்களிலுள்ள மக்கள் அவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய சொற்களைப் பயன்படுத்திக் கொள்வதை தமிழிலக்கணம் "குழூஉக்குறி' என்று குறிப்பதால், "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு "பொருள்மறை சொல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "மறைவாகக் குறித்தல்' அல்லது "குறிப்பால் உணர்த்துதல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்குமென்கிறார். தி.அன்பழகன், "மறைபொருள்' அல்லது "தொகைசொல்' ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

புலவர் அடியன் மணிவாசகன், பண்டைத் தமிழில் "அல்யூஷன்' என்ற சொல்லுக்கு உள்ளுறைப்பொருள், இறைச்சிப்பொருள், குழூஉக்குறி ஆகிய சொற்கள் பொருந்தும் என்று கூறிவிட்டு, அதற்குச் சான்றாக தொல்.பொருள். 994ஆவது சூத்திரத்தைக் மேற்கோள் காட்டியுள்ளார். அதே சமயம், பொதுவாக ஒருவரிடம் மறைமுகமாகப் பேச நேரும்போது, அதைச் சான்றோர் "முன்னிலைப் புறமொழி' என்பர் என்றும், அது இறைச்சிப்பொருள் போன்றதே என்றும், இவற்றுள் "முன்னிலைப் புறமொழி' என்னும் சொல் எளிமையாகவும், பொருத்தமாகவும் இருக்குமென்கிறார்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, ஒரு சொல் நேராகக் குறிக்கும் பொருள் ஒன்றாயினும், அது பயன்படுத்தப்படும் இடம், பொருள் ஆகியவற்றைப் பொறுத்து, அது வேறொன்றைக் குறிப்பதாக அமையலாம் என்றும், அதற்குத் தமிழ் மொழியில் பல சான்றுகள் (இடக்கரடக்கல், தற்குறிப்பேற்றல், வஞ்சப் புகழ்ச்சி, பிறிது மொழிதல்) உள்ளன என்பதை எடுத்துக்காட்டி "அல்யூஷன்' என்பதைப் "பிறிதொன்றுரைத்தல்' என்று சொல்லலாம் என்கிறார். தற்போது சாதாரணமாக "பிக் ப்ரதர் ஈஸ் வாட்சிங்' என்ற சொற்றொடர் அமெரிக்கக் கண்காணிப்பைக் குறிக்கப் பயன்படுத்துவதை எடுத்துக்காட்டி, "அல்யூஷன்' என்பது உருபும் பயனும் தொக்கி நிற்பதாலும், அதில் உட்பொருள் மறைந்து நிற்பதாலும் "மறைபொருள் உவமை' என்பது அதற்கு இணைச் சொல்லாகும் என்கிறார்.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, பெருவாரியான வாசகர்கள் "பொருள் மறை' அல்லது "மறை பொருள்' என்பதை அதிகமாகச் சுட்டிக்காட்டி இருப்பதால், "மறை பொருள்' என்பதே பொருத்தமாக இருக்கும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Tue Jan 22, 2013 3:13 pm

பதினொன்று)
""காமன் சென்ஸ் ஈஸ் தி மோஸ்ட் அன்காமன் திங் இன் தி வோர்ல்டு'' என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. அமெரிக்க வரலாற்றை அடியோடு மாற்றிப்போட்ட 48-பக்கங்கள் கொண்ட ஒரு துண்டுப் பிரசுரத்திற்கு, தாமஸ் பெயின் இட்ட பெயர் "காமன் சென்ஸ்'. இன்றைக்குச் சரியாக 237 ஆண்டுகளுக்கு முன் (ஜனவரி,1776-இல்) ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படாமல் மொட்டையாகப் பிரசுரிக்கப்பட்ட இந்தத் துண்டுப் பிரசுரம்தான், காலனி ஆதிக்கத்திலிருந்து அமெரிக்கா விடுதலைபெறக் காரணமாக அமைந்தது. அப்பிரசுரம், அமெரிக்க அரசியலில் மட்டுமன்றி, துண்டுப் பிரசுர விற்பனையிலும் 1776-இல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. முதல் மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகளும், முதலாண்டிலேயே 5 லட்சம் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தது அந்தத் துண்டுப் பிரசுரம். இச்செய்தியை புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில் நினைவில் நிறுத்தி, நாம் இந்தவார வேட்டைக்கு வருவோம்.

÷அமெரிக்கா - கலிபோர்னியாவிலிருந்து புலவர், பொறிஞர். சி.செந்தமிழ்ச்சேய், ""கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள'' என்ற குறளை மேற்கோள் காட்டி, "சென்ஸ்' என்ற சொல்லுக்குப் புலன், புலன் உணர்வு, அறிவு நலம் என்பது பொருளாகும் என்றும், ஆகவே, "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு இயல்பாகிய புலனுணர்வு, இயல்பாகிய புலனறிவு என்பவை பொருந்தக் கூடும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை பதிப்பித்துள்ள ஆட்சிச் சொற்கள் அகர முதலியில் "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, "இயல்பறிவு' என்று பொருள் கொண்டுள்ளனர் என்றும் எழுதியுள்ளார்.

÷முனைவர் பா.ஜம்புலிங்கம், "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, (1) பகுத்தறிந்து பார்ப்பதால் பகுத்தறிவு, (2) விவேகத்தோடு சிந்திப்பதால் விவேக அறிவு, (3) பொதுப்படையாக இருப்பதால் பொதுப்படை அறிவு, (4) சிந்தனையை சரிநிகராகப் பயன்படுத்துவதால் சிந்தையறிவு ஆகிய நான்கு சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

÷பேராசிரியர் மருத்துவர் பி.ஞானசேகரன், "விவேகம்' என்ற சொல்லையும், கவிக்கோ. ஞானச்செல்வன், "ஒத்ததறிவான் உயிர் வாழ்வான்' என்பதனால், "ஒப்புரவறிவு' என்பதே பொருந்தும் என்றும் எழுதியிருக்கிறார்கள்.

÷ஏ.ஸ்ரீதரன் பூங்கொடி, 355-ஆவது குறளையொட்டி "மெய்யறிவு' என்ற சொல்லையும், "நெஞ்சே தெளிந்து' என்ற ஈற்றில் முடியும் திருவாய்மொழியை அடியொற்றி "தெள்ளறிவு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்.

÷வி.ந.ஸ்ரீதரன், "காமன் சென்ஸ்' என்பது அனைவர்க்கும் அடிப்படையில் இருக்க வேண்டிய ஒன்றாகும் என்றும், "நெருப்பு சுடும்' என்பது அறிந்திருக்க வேண்டிய ஒன்றாக இருப்பதுபோல் தாமாக அறிந்திருக்க வேண்டிய காமன் சென்ûஸ, "தன்னறிவு' என்பதே சரியாகும் என்றும் கூறுகிறார்.

÷வி.என்.ராமராஜ், காணல், கேட்டல், தொடுதல் ஆகியவை மக்களுக்கும், மாக்களுக்கும் இயல்பானவையாயினும், மனிதன் கற்றும், கேட்டும், பட்டும், படித்தும் பெறும் அறிவினால் அகத்திற்கும், புறத்திற்கும் எது நல்லது, எது கெட்டது என்ற மதிநுட்பம் பெறும் காரணத்தால், "காமன் சென்ஸ்' என்ற வார்த்தைக்கு "புத்தி' என்ற ஒரு வார்த்தையையோ, அல்லது நுட்ப அறிவு - மதிநுட்பம் என்னும் இரு சொற்களையோ பயன்படுத்தலாம் என்கிறார். சான்றாக, மதி அல்லது மதிநுட்பம் ஆகிய சொற்களை திருவள்ளுவர், அருணகிரியார், வள்ளலார் ஆகியோர் பயன்படுத்திய பாக்களையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

÷புலவர் உ.தேவதாசு, காமன், ஜெனரல் ஆகிய இரு சொற்களுமே "பொது' என்ற பொருளைக் குறித்தாலும், ஜெனரல் ஆஸ்பிடல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் போன்ற சொற்களில் பயன்படுத்தப்படும்போது "ஜெனரல்' என்ற சொல்லுக்கு "தலைமை' என்ற பொருளும் வரக்கூடிய காரணத்தால், "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய சொற்கள் பொருந்தலாம் என்கிறார். நடைமுறை அறிவும் நடைமுறை ஒழுக்கமும் தனி மனித வாழ்வையும், அறிவையும் தாண்டி, சமூக அளவில் செயல்படும் காரணத்தாலும், உலகத்தோடு ஒட்ட ஒழுகலின் அவசியத்தை வள்ளுவம் உணர்த்துவதாலும், "ஒட்ட ஒழுகல்' என்ற இலக்கிய வடிவத்தை "பொது ஒழுங்கு', "நடைமுறை அறிவு' ஆகிய இவ்விரு சொற்களால் குறிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி "காமன் சென்ஸ்' என்ற சொல்லுக்கு, ""ஒரு பொருண்மை அல்லது நிகழ்வைச் சாதாரணமாகப் புரிந்து கொண்டு அதன் விளைவாக நாம் அதைப்பற்றி ஏற்படுத்திக் கொள்ளும் முறையான கருத்தாக்கம் அல்லது முடிவு'' என்று பொருள் கூறுகிறது. கேம்பிரிட்ஜ் அகரமுதலி, அதே சொல்லுக்கு ""ஒரு மனிதனுக்குச் சரியாக மற்றும் பாதுகாப்பாக வாழத் தேவையான நடைமுறை அறிவும் கருத்தாக்கமும்'' என்று பொருளுரைக்கிறது. இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அரிஸ்டாட்டில், ஜான் லாக் போன்ற சிந்தனையாளர்கள், நமது புலன்களால் தனித்தனியாக அறியப்படும் ஒன்றுக்கு, நம் உள்ளம் அல்லது உள்ளுணர்வு கொடுக்கும் முழு வடிவம் அல்லது ஒட்டு மொத்த உருவகம் "காமன் சென்ஸ்' என்றார்கள்.

÷இதை வைத்துப் பார்க்கும் போது, புலன்களாலும், மனத்தாலும் அவற்றைத் தாண்டிய உள்ளுணர்வாலும் மனித உயிர்கள் இயல்பாக அறிந்து கொள்ளும் ஒன்றே காமன் சென்ஸ் ஆவதால், அதற்கு இணைச் சொல் "இயல்பறிவு' என்பதே பொருத்தமாகும்.

காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.

அடுத்த சொல் வேட்டை: வானியல் தொடர்பானவற்றிலும், மனித உடலைப் பற்றிய ஆன்மிக அல்லது தத்துவ விசாரத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். அதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by ஹர்ஷித் on Tue Jan 22, 2013 3:22 pm

காமன் சென்ஸ் என்ற சொல்லுக்கு வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச் சொல் இயல்பறிவு.
சூப்பருங்க
நன்றி திரு.சாமி அவர்களே.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Jan 27, 2013 7:59 am

பனிரெண்டு :-
ஸ்ட்ராலிஸ்' அல்லது "ஆஸ்ட்ரம் ஸ்டார்' என்ற இலத்தீன் மொழிச் சொற்களிலிருந்தும், "ஆஸ்ட்ரோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1605-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாகக் கருதப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். இந்தச் சொல்லுக்குப் பொதுவான பொருள் விண்மீன்களிலிருந்து வரும் அல்லது விண்மீன்கள் தொடர்பான என்று மெரியம்-வெப்ஸ்டர் அகர முதலி குறிக்கிறது. அதே சமயம், புறப்புலன்களால் அறியப்படும் உலகைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாமல் விளங்கும் ஒன்றையும் இச்சொல் குறிப்பதாக அதே அகர முதலி சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத்தில் மேற்கூறிய பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், பின்னாளில், இறப்பிற்குப் பின் நடப்பதென்ன என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும், இறப்பின் விளிம்பிற்குப் போய்த் திரும்பி வந்தவர்கள் தங்களது பூதவுடலை விட்டு வெளியேறி, பின் உடம்பிற்குள் புகுந்ததாகச் சொல்லப்படும் (அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்) நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதுதான், மிக அதிகமான முறையில் இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால், இந்திய தத்துவவியல் குறிப்பாகத் தமிழர்களின் சைவ சித்தாந்தத் தத்துவவியல் அல்லது மெய்யியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுவிட்ட காரணத்தால், இச்சொல் தொடர்பான பயன்பாடு ஏற்கெனவே இருந்திருப்பது போல் தெரிகிறது.

இந்திய தத்துவவியல் ஒரு மனிதனை 3 உடல்கள், 5 கோசங்கள் மற்றும் 3 நிலைகள் கொண்டதாக விரித்துரைக்கிறது. அம்மூன்று உடல்கள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண சரீரங்கள் ஆகும். வடமொழியில் சூக்ஷ்ம என்றும், தமிழில் சில நேரங்களில் சூக்கும அல்லது சூட்சும என்றும் அறியப்படும் சரீரமே ஆங்கிலத்தில் "ஆஸ்ட்ரல் பாடி' என்றழைக்கப்படுகிறது. மனம், புத்தி இந்த இரண்டும் வசிக்கும் கண்ணுக்குப் புலனாகாத உடலே "ஆஸ்ட்ரல் பாடி' என்றும், இப்பூதவுடலைச் சுற்றி சக்தி வடிவில் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒளி என்றும் இது பொதுவாக அறியப்படுகிறது. இவற்றை முன்னிறுத்தி, இந்த வார மடல்களைக் காண்போம்.

இலக்கியன் என்ற வாசகர், "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "உடுவெளி' அல்லது "விண்மீன்வெளி' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். சோலை கருப்பையா, அண்டமும், பிண்டமும் ஒன்றே என்பது சித்தர் வாக்கு என்பதாலும், நமது மெய்யியல் அண்டத்தையும், பிண்டத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்திருந்த காரணத்தால், அச்சொல்லுக்கு "அண்ட பிண்டவியல்' என்ற சொல்லையோ, அல்லது மெய்யியல் பற்றிய வெளிப்பாடாக இருக்கும் காரணத்தால், "மெய்ம்மை' என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்கிறார்.

பாபாராஜ், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "விசும்புருவான' என்ற சொல் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். தி.அன்பழகன், "ஆஸ்ட்ரல் வொர்ஷிப்' என்பது விண்மீன்களியலில் "உடு' என்னும் கூட்டத்தை வழிபடுதலைக் குறிப்பதால் "உடுவெளி' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார். மேலும், சூரிய வழிபாடு போன்றவை வானியல் வழிபாடு ஆகும் காரணத்தால், "ஆஸ்ட்ரல்' என்பதற்கு வான் + இறை = வானிறை அல்லது வானாலயம் என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாகரர் தெ.முருகசாமி, "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி "ஆவியுரு' என்ற சொல்லை இணைச்சொல்லாகக் குறிப்பிட்டிருக்கிறது என்கிறார். இருப்பினும், உடல் என்பது சரீரமாகவும், உடலைத் தாங்கியவன் சரீரியாகவும், உருவத்திற்கப்பால் ஒலியாக அறியப்படுபவன் அசரீரியாகவும் குறிப்பிடப்படுவதால், "அசரீரி' என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம் என்கிறார்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, ஆஸ்ட்ரல் என்ற சொல்லிலிருந்து ஆஸ்ட்ராலஜி, ஆஸ்ட்ரானமி போன்ற சொற்கள் ஏற்பட்டிருக்கும் காரணத்தால் வானத்திற்கும், மனிதனுக்கும் இருக்கும் இயற்கையின் தொடர்பைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் "வான்விதி' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வாசகர்கள் அனுப்பியிருக்கும் சொற்களில் உடு, ஆவியுரு போன்ற சொற்கள் கிட்டத்தட்ட பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் "ஸ்டெல்லர்' என்ற பொருளையும் குறிக்கின்றன. "ஸ்டெல்லர்' என்ற சொல்லுக்கு "உடு' அல்லது "உடுவெளி' என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மனிதவுடல், மனம் அல்லது ஆன்மா தொடர்பான செய்திகளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. "ஆவியுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அது கோள்களோடு தொடர்புள்ள பொருளைத் தராது. எனவே, "விசும்புருவான' அல்லது "விசும்புரு' என்ற சொல்லே பொதுவாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

அடுத்த சொல் வேட்டை:
நாகரிகமான நடத்தையை, இடம், பொருள் மற்றும் பயன்படுத்தப்படும் நிகழ்வு சார்ந்து 'டெகோரம்' என்றும் 'எடிக்வேட்' என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம்.
இவ்விரண்டையும் அவற்றின் தன்மை மாறாமல் குறிப்பிடுவதற்குரிய சொற்கள் உண்டா?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 27, 2013 9:58 am

’இயல்பறி’வோடு ’விசும்புரு’ அறிவு பெற்றிருந்த பண்டைத் தமிழர்களைச் சாமி அவர்கள் துலக்கியிருக்கிறார்கள்! பாராட்டுகள்!
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5250
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Sun Feb 03, 2013 11:23 pm

பதிமூன்று )

கலிபோர்னியாவிலிருந்து புலவர்-பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு "நன்னடத்தை', "சீரொழுக்கம்' என்று பொருள் கொண்டுள்ளதாகவும், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு ஒழுக்கமுறை, நடத்தை நெறி, ஒழுக்க நெறி என்று பொருள் கொண்டுள்ளதாகவும், ஒரு சொல் நீர்மைத்தாய், வினைத்தொகையாக வேண்டுமானால் ஒழுகாறு, ஒழுகுநெறி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

முனைவர் சு.மாதவன், அகராதிகள் "நல்லொழுக்கம்' எனப் பொருள் குறித்தாலும், தமிழ்ச் சொல்லாக்கமாக "பண்பாட்டுத் தகவு நிலை' அல்லது "தகவு நிலைப் பண்பாடு' என்று கொள்ளலாம் என்கிறார். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகரமுதலி மரபமைதி, சீரொழுங்கு, நயநாகரிக அமைதி என்று பல பொருள்களைக் குறித்துள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டு, டெகோரம், எடிக்வெட் என்னும் சொற்களுக்கு "நனிநாகரிகம்', "நயன்மை' அல்லது "பற்றன்மை' என்னும் சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ் "அவையறிதல்' அல்லது "அவைப் பண்பு' ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார். புதுச்சேரி இலக்கியன் டெகோரம், எடிக்வெட் ஆகிய சொற்களுக்குப் பொதுவாக மதிப்பு, மரியாதை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆசாரம், சடங்கு, தகுதி ஆகிய பல பொருள்கள் இருந்தாலும், இவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு என்றும்; டெகோரம் - "புற ஒழுங்கு' அல்லது "புறநிலை ஒழுங்கு'; எடிக்வெட் - "அக ஒழுங்கு' அல்லது "அகநிலை ஒழுங்கு' என்னும் சொற்களையும் கொள்ளலாம் என்கிறார்.

ஆனந்த கிருஷ்ணன் டெகோரம், எடிக்வெட் ஆகியவை நவநாகரிகத் தன்மை பற்றியதாகும் என்று தொடங்கி, இச்சொற்களின் பொருள்களாகப் பல்வேறு சொற்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவையடக்கம் என்பது நன்னடத்தை, வெளிமதிப்பு, மெய்ப்பு, மதிப்பு, வரம்பு குறிப்பாக மரபொழுங்கு மீறாமல் செயல்படுதலாகும் என்றும், நிறைநலம், நிறை நடத்தை-பேச்சு, நன்மதிப்பும் நிறைநலமும் அடங்கிய நன்னடிக்கை முறை, நவநாகரிகத் தன்மை, ஒழுங்கு, ஆசாரம் ஆகியவை அவையறிதலில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும், மரியாதை, கண்ணோட்டம், சாதுர்யம், பண்பாடு ஆகியவை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கையுடன் ஒட்டி இருக்க வேண்டும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, நடை, உடை, பாவனை, உணவு, நல்லொழுக்கம் முதலியவைகளில் நேர்த்தியான தன்மை வெளிப்பட வேண்டும் என்றும், இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, "மரபொழுங்கு' என்ற சொல்லே இச்சொற்களுக்கு சரியான இணைச்சொற்களாகும் என்றும் எழுதியுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "நாகரிகம்' என்ற சொல் "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லாகவும், "டெகோரம்' என்ற சொல்லுக்கு "மாண்பு' என்ற சொல் இசைவான தமிழ்ச் சொல்லாகவும் கருதப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், சட்டமன்றத்தின் மற்றும் நீதிமன்றத்தின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் சொற்றொடர்கள், அவைத்தலைவர் மற்றும் நீதிமன்ற ஆணைகளில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணையாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமல்லாது, நன்னெறிக் கோவையில் வரும் நன்னெறி, "நன்றிக்கு வித்தாகும்' எனத் தொடங்கும் குறளில் வரும் "நல்லொழுக்கம்' ஆகிய சொற்களையும் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "டெகோரம்' மற்றும் "எடிக்வெட்' என்னும் சொற்கள் ஒருவர் மற்றவர்களுடன் பழகும் பாங்கு, நடந்து கொள்ளும் விதம் சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன என்றும், இதனையே திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் எனக் குறிப்பிடுகிறார் என்றும், எனவே, டெகோரம் - நயத்தகு பண்பு; எடிக்வெட் - நயத்தகு நடத்தை ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா. ஜம்புலிங்கம் "டெகோரம்' - கண்ணியம் காத்தல்'; "எடிக்வெட்' - "கண்ணிய நெறி' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

எடிக்வெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து 1750-இல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பிரெஞ்சு மொழியில் அதன் பொதுவான பொருள் "அனுமதிச் சீட்டு' என்று காணப்பட்டாலும், ஆங்கிலத்தில் அதன் பொருள் நற்குடிப்பிறப்பின் காரணமாக வரும் "நடத்தை' அல்லது "நடைமுறை' என்பதாகும் என்றும், அதற்கு இன்னொரு பொருள் சமூக அல்லது தாம் கொண்ட அலுவல் தொடர்பான வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நடத்தை அல்லது நடைமுறை என்றும் மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.

அதே சமயம், "டெகோரம்' என்ற வினைச்சொல் "டெகோரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து 1568-இல் பிறந்ததாகவும், அச்சொல்லுக்கு (1) இலக்கிய மற்றும் நாடகப்பாங்கிற்கு வரையறுக்கப்பட்ட முறைமை; (2) நடத்தையிலும், தோற்றத்திலும் நற்சுவையும், ஒழுங்குமுறையும் கொள்ளும் பாங்கு; (3) பணிவான நடத்தைக்கு ஏற்படுத்தப்பட்ட வரையறை என்று மூன்றுவிதமான பொருள்களை அதே மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.

ஆனால், அந்த வினைச்சொல் லத்தீன் மொழியில் பயன்படுத்தப்பட்ட முதுமொழித் தொடர் "துல் சி எட் டெகோரம் எஸ்ட் ப்ரோ பாட்ரியா மோரி' ஆகும். அத்தொடரின் பொருள் ஒருவரது நாட்டிற்காக உயிர் துறப்பது இனிமை மற்றும் அழகானது என்பதாகும்.

இவற்றை வைத்துப்பார்க்கும் போது, "டெகோரம்' என்ற சொல் நற்சுவை, நடத்தை, ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சுற்றி வருவதாகவும், "எடிக்வெட்' என்ற சொல் பொதுவிடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், ஒரு மனிதனிடம் வெளிப்படும் தோற்றம், பொலிவு, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்க முற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த அடிப்படையில் அணுகும் போது, "டெகோரம்' - "கண்ணியம்'; "எடிக்வெட்' - "நனிநாகரிகம்' என்னும் சொற்கள்தான் பொருத்தமாகும். காரணம், வழக்கு மன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் "டெகோரம்' காக்கப் படவேண்டும் என்ற வரைமுறை "கண்ணியம்' என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், ""முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'' என்று நற்றிணையில் குறிக்கப்படும் "நாகரிகம்' என்ற சொல்லும், "பெயக்கண்டும்' என்ற குறளில் வரும் "நாகரிகம்' என்ற சொல்லும், "கண்ணோட்டம்' என்பதன் அடிப்படையில் அமைவதாகப் பெரியவர்கள் கருதுவதால், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு "நனிநாகரிகம்' சாலப்பொருந்தும்.

வாசகர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இணைச்சொற்கள்:

டெகோரம் - கண்ணியம்; எடிக்வெட் - நனிநாகரிகம்.

அடுத்த சொல் வேட்டை: ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றை அதன் காரணமாக அடியொற்றிப்பின்தொடர்ந்து வரும் இன்னொன்றுக்கு ஆங்கிலத்தில் "கொரோலரி' என்று பெயர். இதற்கிணையான தமிழ்ச்சொல் என்ன?
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Mon Feb 11, 2013 10:42 pm

பதினான்கு

தொன்மையான லத்தீன் மொழியில் "விளைவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "கொரோலேரியம்' என்ற சொல் பிற்கால லத்தீன் மொழியில் "மாலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்' அல்லது "அன்பளிப்பு' போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல்லாக மாறி, 14-ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிக்கு இறக்குமதி செய்யப்பட்டு, "கொரோலரி' (இர்ழ்ர்ப்ப்ஹழ்ஹ்) என்ற சொல்லானது.

ஆங்கிலத்தில் "கொரோலரி' என்ற சொல் கணிதம் அல்லது தர்க்கவியல் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் போது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக, அதை அடியொற்றி தாமாகவே நிரூபிக்கப்பட்டுவிடும் இன்னொரு கோட்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் "விளைவு' அல்லது "எளிதாக' அல்லது "இயல்பாகத் தீர்மானிக்கப்படும் முடிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு, இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.

÷ஷா.கமால் அப்துல் நாசர், "பொதுவாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை ஒட்டிவரும் அனுமானத்தை அல்லது விளைவை "கொரோலரி' என்று குறிப்பதாலும், சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்படுவதாலும், "உருத்துவிளைவு' அல்லது "தொடர் விளைவு' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம்' என்கிறார்.

÷ஆனந்தக்கிருஷ்ணன், "கொரோலரி என்ற சொல்லுக்கு தொடர் முடிவு, பின் தொடர்பு, துணை முடிவு, கிளைத்தேற்றம், பின் நிகழ்ச்சி, தொடர்ந்தேற்றி ஆகிய சொற்களையும், பழைய லத்தீன் மொழி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு முடிவு, முடிபு, இறுதி, வரிசை, செறிவு, பூங்கொத்து' ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, "கண்ணாடியில் காணப்படும் பிரதிபிம்பத்தைப் போன்றது கொரோலரி என்பதால், "நிஜப்பிரதி' அல்லது "இணைப்போலி' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்' என்கிறார்.

÷டி.சிவா, "ஒரு செயலையோ, சொல்லையோ, நடைமுறையையோ, நிகழ்வையோ அடியொற்றி அதேபோல இருப்பதுதான் "கொரோலரி' என்றழைக்கப்படுகிறது' என்றும், இதை "ஒத்திசைவுச் செயல்', சொல், நடைமுறை, நிகழ்வு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதனால் "ஒத்திசைவு' எனக் கூறலாம்' என்கிறார்.

÷ஏற்கெனவே குறிப்பிட்டது போல், "கொரோலரி' என்ற சொல் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக அல்லது அதன் பிரதிபிம்பமாக நிரூபணம் தேவையற்றதாகப் போய்விடும் இன்னொரு கோட்பாட்டை குறிப்பதால், நாம் உருவாக்கும் சொல் நிரூபணம், கோட்பாடு என்ற இவ்விரு பொருளையும் உள்ளடக்கியதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். எனவே, "கொரோலரி' என்ற சொல்லுக்கு "வினைவிளைக் கோட்பாடு' என்பது பொருத்தமாக இருக்கும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by சாமி on Thu Feb 21, 2013 11:37 am

பதினைந்து

"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற அகரமுதலிகள், இரண்டு விதமான பொருள்களைத் தருகின்றன. ஒன்று உடற்கூறைச் சார்ந்தது; இன்னொன்று மனப்பாங்கைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் தொடர்ந்து வெளிப்படும் குறிப்பிட்ட அறிகுறிகளின் தொகுப்பு அல்லது கருத்துகள், உணர்ச்சிகள், நடத்தை போன்றவை ஒரு குறிப்பிட்ட தொடர்போடு கூட்டாகத் தோன்றும் தொகுப்பு என்பதே இவ்விரு பொருள்களாகும்.

மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி கிட்டத்தட்ட 48 வகையான சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியுள்ளது. 1540-ஆம் ஆண்டுக்குப்பின், "அடையாளங்களின் ஒன்று சேர்ந்த வெளிப்பாடு' என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோம்' என்ற சொல்லில் இருந்தும், ஒன்றாகத் தோன்றும் என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோமோஸ்' என்ற சொல்லில் இருந்தும், ஆங்கிலச் சொல்லான "சின்ட்ரோம்' உருவாக்கப்பட்டது.

இந்திய மருத்துவ அகரமுதலி (மெட் இண்டியா) ஆங்கிலத்தில் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளில் ஒவ்வொன்றையும் முதல் எழுத்துகளாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு இன்று பெருமளவில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 124 சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் நோய் என்பது "அக்வயர்ட் இம்யுனோ டெஃபிசியன்சி சின்ட்ரோம்' என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நம் அடி வயிற்றைக் கலக்கும் சில வித்தியாசமான சின்ட்ரோம்கள் பின் வருமாறு:

(1) 8 மில்லியன் குழந்தைகளில் ஒருவரைத் தாக்கும் "ப்ரோஜெரியா சின்ட்ரோம்' (progeria syndrome) மிக வேகமாக அக்குழந்தையை மூப்படையச் செய்து, 12-13 வயதிற்குள் அக்

குழந்தையை மரணமடையச் செய்துவிடும்.

(2) "வேர்வுல்ஃப் சின்ட்ரோம்' (Werewolf syndrome)உடல் முழுவதும் (உள்ளங்கை உள்பட) ஓநாயைப் போல் முடி வளரச் செய்யும் குறைபாடு.

(3) "லெஷ்-நைஹன் சின்ட்ரோம்' (Lesch-nyhan syndrom) என்பது ஒரு மனிதனைத் தனது உடலின் சில பாகங்களைத் தானே கடிக்க அல்லது சிதைக்கத் தூண்டும் மனநலக் குறைபாடு.

(4) "லாக்ட்-இன் சின்ட்ரோம்' (Locked-in syndrome) என்பது கண், செவி, மூக்கு போன்ற புலன் உணர்வுகள் அப்படியே இருக்கும்போதும், உடல் முழுவதும் மொத்தமாக செயல் இழந்து முடங்கிப் போகும் முடக்குவாதம் அல்லது பக்கவாதத்தைக் குறிப்பதாகும்.

(5) "லாசரஸ் சின்ட்ரோம்' (Lazarus syndrome) என்பது மருத்துவர்களால் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், திடீரென்று உயிர்த்தெழும் நிலையைக் குறிப்பதாகும். அமெரிக்காவில் டெலவர் நகரத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் பிணவறை ஊழியரால் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 61 வயதுப் பெண்மணியின் கதை இந்த வகை சின்ட்ரோமை அறிமுகப்படுத்தக் காரணமாக அமைந்தது.

இத்தகைய சுவையானத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம். "சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு நோய்க்குறியம் அல்லது நிலைமை காட்டி என்ற சொற்களை ஆனந்த கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். தெ.முருகசாமி ஒத்தறிதல், ஒழுகுதல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுவதால் "ஒத்துணர்வு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

வெவ்வேறு பொருள்களில் நிகழும் தொடர்புடைய செயல்களால் ஒரு பொதுமை எண்ணம் ஏற்படுவது சின்ட்ரோம் எனப்படுவதால் "ஒத்தமைவு' என்ற சொல் பொருந்தும் என்று புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.

சோலை.கருப்பையா, டவுன் சின்ட்ரோம் போன்ற பல சொற்களால் ஒரு வெளிக்காரியத்தின் உடன் விளைவாக ஏற்படும் நிகழ்வு குறிப்பிடப்படுவதால் உடன் விளைவு, உடன் குறைபாடு போன்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ், தொடர்புடைய பல சம்பவங்களைக் குறிக்கும் போது இணைப் போக்கு, ஒத்திசைந்திருத்தல் என்று குறிப்பிடலாம் என்றும், இவையன்றி ஒன்றுபடுத்து முறை, ஒத்த சம்பவங்கள் ஆகிய சொற்களாலும் குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மனதில் தோன்றும் சிந்தனை அப்படியே தொடர்ந்து நிலைத்து நிற்பது சின்ட்ரோம் ஆகும் என்றும், குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய பின் தாய்க்கு ஏற்படும் மனோ நிலை "எம்ப்டி நெஸ்ட் சின்ட்ரோம்' (empty nest syndrome) என்று அழைக்கப்படுவதால், மனப்போக்கு அல்லது சிந்தைப்போக்கு என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். ஆனால், நாம் ஏற்கெனவே கண்டது போல், சின்ட்ரோம் என்பது, ஒருவரது உடற்கூறிலோ, அல்லது மனப்பாங்கிலோ ஏற்படும் நோய், மாறுபாடு, தனித்தன்மை அல்லது குறைபாடு ஆகியவற்றை, எளிதில் அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளின் கூட்டு வெளிப்பாடு அல்லது தோற்றம் ஆகும். எளிமையாகச் சொல்லப் போனால், சின்ட்ரோம் என்பதை "அடையாளங்களின் அணிவகுப்பு' என்று சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்லுவது ஒரு குறைபாட்டோடு தொடர்புடையதாக இருந்தால்தான் அடையாளங்களின் அணிவகுப்பு என்பது சின்ட்ரோம் என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வரும்.

எனவே, "குறைபாட்டு அறிகுறிகள்' என்ற சொல் பொருத்தமாக அமையலாம்.

"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "குறைபாட்டு அறிகுறிகள்'.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தமிழ்ச்சொல் வேட்டை - Page 2 Empty Re: தமிழ்ச்சொல் வேட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum