புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
64 Posts - 50%
heezulia
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_m10காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 9:05 am

காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் இரா. பரமசிவம்
காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Time-machine
மானுட அறிவுத் தேடலின் ஆகப் பெரும் கட்டமைப்பான அண்டவியல் (Cosmology) பற்றியும், அதிநுட்ப அணுக்கட்டமைப்பு பற்றியும் ஆய்ந்து புகழார்ந்த அறிவியல் அறிஞர்கள் ஐசக் நியூட்டனும், பால் டிராக்கும் பெருமை சேர்த்த, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணக்கியல் துறை ''லூகாசியன் பேராசிரியர்'' பதவியில் தற்போது ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளார். நரம்பியல் இயக்க நோய் காரணமாக கை, கால் செயலற்று வாய் பேசா நிலையுற்று சக்கர நாற்காலியில் செவிலியர் பராமரிப்பில் சிறப்புக் கணிப்பொறியின் துணையுடன் ஹாக்கிங் பணியாற்றி வருகிறார். அவர், சாமானிய வாசகர்களுக்காக A BRIEF HISTORY OF TIME: From the Big Bank to Blank Holes என்ற புகழ் பெற்ற நூலினை 1987ல் எழுதியுள்ளார். இயற்பியல், வானியல், அண்டவியல் ஆகிய துறைகளின் எல்லைகளை அறிவியல் கண்ணோட்டத்தோடு அளாவி நிற்கும் சுடர்மிகு வெளிப்பாடுகள் கொண்ட இந்நூலினை 1996ல் மறுபதிப்பாக, இடைப்பட்ட காலகோட்பாடு மற்றும் நோக்காய்வு முடிவுகளையும் முன்னேற்றங்களையும் உட்கொண்டதாக வெளியிட்டு உள்ளார்.

புத்தக விற்பனை வரலாற்றில் சாதனை புரிந்து உலகில் 65 மொழிகளில் ஏற்கெனவே பெயர்க்கப்பட்டுள்ள மூலச் சிறப்பு வாய்ந்த அருஞ்சிக்கலான அண்டவியல் பற்றிய இந்த அறிவியல் நூலினை மருத்துவ வல்லுநர் நலங்கிள்ளி தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார். மாமேதை கார்ல் மார்க்ஸ் மனித குலத்திற்கு வழங்கிய ''மூலதனத்தை'' தமிழாக்கம் செய்த தியாகுவின் பதிப்பாசிரியர் பொறுப்பில் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (சிகாககோ, அமெரிக்கா) இதனை ''காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்'' என்ற பெயரில் 2002ல் வெளியிட்டுள்ளது.

1. நூல் அறிமுகம்:-

நூல் பன்னிரு இயல்களாக இயற்றப்பட்டுள்ளது. அண்டச் சித்திரம் தொட்டு கருந்துளைகள் ஊடாக இயற்பியல் ஒருங்கிணைப்பு மற்றும் முடிவுரை ஈறாக உள்ள பன்னிரு இயல்களின் மையக் கருத்துக்களின் சாராம்சங்களை இயல்வாரியாக இரத்தினச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இயல் 1: நம் அண்டச் சித்திரம்:-

புவி வடிவம் மற்றும் அசைவியக்கம் ஞாயிறு மைய நீள்வட்டப் பாதைக் கோளியக்கம்; பலகோடி ஞாயிறொத்த விண்மீன்கள் கொண்ட திரள்கள் (galaxies); விண்மீன்கள் இடையிலான ஈர்ப்பு இமானுவேல் காண்ட், புனித அகஸ்டின் ஆகியோரின் அண்டம் (universe), காலம் (time) பற்றிய வாதங்கள்; எட்வின் ஹபிளின் விரிவடையும் அண்டம் பற்றிய நோக்காய்வு, மாவெடிப்பு (bigbang) என்னும் அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடு அண்டம் பற்றிய சிக்கலைத் தொடக்க நிலவரம், காலப்போக்கில் மாறுதல்கள் என இருபகுதிகளாக விவரிக்கும் பகுதிக் கோட்பாடுகள் (partial theories) போன்றவை பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

ஈர்ப்பு விசையையும் அண்டத்தின் பெருவீதக் கட்டமைப்பும் பொதுச் சார்பியல் கோட்பாடு (general relativity theory) ஒருங்கிணைத்து விவரிக்கின்றது. மின் காந்த விசை, மெல் அணுக்கருவிசை, வல் அணுக்கரு விசை ஆகியவற்றைக் ஒருங்கிணைந்த கோட்பாட்டிற்கான (Complete unified theory) தேடலிற்கு விளக்கமாகின்றது.

இயல் 2: வெளியும் காலமும்:-

உடுக்களின் அசையா நிலை, நியூட்டனின் அசைவியக்க விதிகள் மற்றும் ஈர்ப்பு விதி, மாறா வேகத்தில் ஒளி பயணித்தல், ஈதர் என்ற கருத்தின் தேவையின்மை, சார்பியல் கோட்பாட்டின்படி காலம் (time) என்பது வெளி (Space) என்பதுடன் சேர்ந்து வெளி - காலம் (Space time) என்றாகுதல் போன்றவைகளை மிக விரிவாகத் தக்க விளக்கங்களுடன் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். வெளிகாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை (events) ஒளிக்கூம்பு (lighteone) முறையில் குறிப்பிடல், நிறையினதும் ஆற்றலினதும் பரவலால் வெளிகாலம் வளைந்தோ சுருண்டோ இருப்பதன் ஒரு விளைவுதான் ஈர்ப்பு என்னும் பொதுச் சார்பியல் கோட்பாட்டின் முன்மொழிவு, இரு பரிமாண வளைவெளியான புவிப்பரப்பில் நிலநேர்ப்பாதை (Geodesic) போன்ற அதிநுட்பங்களையும் ஆசிரியர் தக்க விளக்கங்களுடன் விவரிக்கின்றார்.

பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி இயக்கத் துடிப்புள்ள அளவுகளான வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கின்றன. இயங்காற்றலுடன் விரிவடைந்து கொண்டிருக்கும் ஒன்றாகவும், ஒரு திட்டமான காலம் முன்பு தொடங்கியதாகத் தோன்றுவதும் எதிர்காலத்தில் ஒரு திட்டமான நேரத்தில் முடியக் கூடியதுமான ஒன்றாகவும் அண்டத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் கருத்து உருவானது. அண்டத்திற்கு ஒரு தொடக்கம் இருக்கவேண்டும். முடிவும் இருக்கக் கூடும் என்பதையே ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் கோட்பாடு குறிப்பதாக ரோஜர் பென்ரோஸ் - நூலாசிரியர் கருத்தாய்வுகள் சுட்டியதாகவும் குறிப்பிடுகின்றார்.

இயல் 3: விரிவடையும் அண்டம்:-

திரள்களுக்கிடையிலான தொலைவுகளை அவற்றில் உள்ள விண்மீன்களின் ஒளிர்திறன் மற்றும் தோற்றப் பொழிவு கொண்டு அளவிடல்; விலகியோடும் திரள்களின் விண்மீன்கள் உமிழும் ஒளியலைகளின் நிறமாலைகள் (Spectra) காட்டும் செம்பிறழ்வுகள் (red shifts) சுட்டிய அண்டம் விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற கண்டுபிடிப்பு; அலெக்சாண்டர் பிரீட்மேனின் அண்ட மாதிரியமைப்புகள்; வெளி - காலம் žரானது தட்டையானது என்ற அடிப்படைகளிலான அறிவியல் கோட்பாடுகள் மாவெடிப்பு (big bang) என்ற ஒளிவற்ற இயன் வழுப் புள்ளியில் (naked singularity) செயலற்றுப்போகும் என்ற கருத்தாய்வுகள்; காலம் மாவெடிப்பில் தொடங்கியது என்னும் கருதுகோள்; நுண்ணலைப் பின்னணிக் கதிர் வீச்சுக் (microwave background radiation) கண்டுபிடிப்பால் அண்டம் பற்றி žர்நிலவரக்கோட்பாடு (steady state theory) போன்றவைகள் கைவிடப்படல், ஈர்ப்புத் தகர்வுக்கு (collapse) உள்ளாகும் எந்த உருவும் இறுதியில் இயன்வழுப் புள்ளியாக (singularity) அமைந்தே தீரும் என்ற பென்ரோசின் தேற்றம்;

மாவெடிப்பாகிய இயன்வழுப்புள்ளி நேரிட்டிருக்க வேண்டும் என்று - இரு நிபந்தனைகளுடன் - 1970 ல் பென்ரோஸ் - ஹாக்கிங் கூட்டுக் கருத்தாய்வு மெய்ப்பித்த போது அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் என அண்டம் பற்றி அதன் தொடக்க நிலையிலிருந்தான சித்திரம் தீட்ட முற்பட்ட ஆசிரியர், அண்டத்தின் தொடக்கத்தில் இயன்வழுப்புள்ளி எதுவும் இருக்கவில்லை எனவும் கற்றை விளைவுகளைக் கணக்கில் கொண்டால் அது மறைந்துவிட முடிவும் என்று முடித்து வைக்கிறார்.

பரிசோதனைச் சான்றுகளும், கோட்பாட்டுச் சான்றுகளும் வளர, வளர அண்டத்திற்குக் கால வகையில் ஒரு தொடக்கம் இருந்திருக்க வேண்டும் என்பது மேன்மேலும் தெளிவாகி வந்தது. இதனை இறுதியாக, அசாதாரண அளவுக்கு மிகப்பெரியது பற்றிய பகுதிக் கோட்பாடான பொதுச் சார்பியலின் அடிப்படையில் 1970ல் பென்ரோஸ் - ஹாக்கிங் நிரூபித்தனர். மிக முற்பட்ட நிலையில் அண்டம் ''மிகச் சிறியதாக'' இருந்த ஒரு காலம் இருந்திருக்க வேண்டும் என்பதை இயன்வழுப் புள்ளித் தேற்றங்கள் சுட்டுவதால், அதிநுண்மை பற்றிய பகுதிக் கோட்பாடான கற்றை இயங்கியல் நோக்கி அண்டம் பற்றிய புரிதலுக்கான தேடலை 1970களின் தொடக்கத்தில் திருப்ப வேண்டியதாயிற்று என நூலாசிரியர் தொகுத்து வழங்குகின்றார்.

இயல் 4: உறுதியின்மைக் கொள்கை:-

மாக்ஸ் பிளாங்கின் கற்றை ஆற்றல் கோட்பாடு (Quantum energy theory), ஐன்ஸ்டைனின் ஒளி மின்விளைவு (Photoelectirc) நீல்ஸ் போரின் அணுக் கொள்கை காம்ப்டனின் காம்ப்டன் விளைவு (Compton effect), பாலியின் தவிர்ப்புப் கொள்கை (exclusion principle), ஹெய்சன் பெர்க்கின் உறுதியின்மைக் கொள்கை போன்ற அறிவியல் முன்னேற்றத்தில் கற்றை இயங்கியல் என்னும் நவீனக் கோட்பாடு வகுத்துரைக்கப்பட்டது. பொதுவாகக் கற்றை இயங்கியல், நோக்காய்வுக்குத் திட்டமான ஒற்றை முடிவை ஊகித்து சொல்வதில்லை. மாறாக, சாத்தியப்பாடுள்ள பல்வேறு முடிவுகளை ஊகித்தறிந்து ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதைச் சொல்கிறது. எனவே, ஊகித்தறிய முடியாத தன்மை அல்லது திட்டவரையறையின்மை என்கிற தவிர்க்க முடியாத கூறு ஒன்றை அறிவியலுக்கு அறிமுகம் செய்கிறது.

ஒரு துகளின் நிலை (Position), திசைவேகம் (Velocity) இரண்டையுமே ஒரு போதும் துல்லியமாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது. ஒன்றை எந்த அளவுக்கு துல்லியமாகத் தெரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்குத் துல்லியக் குறைவாகத் தான் மற்றதை அறிந்துகொள்ள முடியும் என்பது தான் உறுதியின்மைக் கொள்கை. இக்கொள்கைக்கு உட்பட்ட முழுதொத்த, 1/2 சுழல் (Spin) கொண்ட, இருதுகல்களுக்கு ஒரே நிலை மற்றும் ஒரே திசை வேகம் இருக்க முடியாது என்பதே தவிர்ப்புக் கொள்கை, இவ்விரண்டு கொள்கைகளையும் மிக முக்கிய அடிப்படைக் கூறுகளாக கற்றை இயங்கியல் கொண்டுள்ளது. மேலும் கருத்துளைகளிலும் மாவெடிப்பிலும் இயன்வழுப் புள்ளித் தேற்றங்கள் சுட்டும் மிகு வலு ஈர்ப்புப் புலத்தில் கற்றை இயங்கியலின் விளைவுகள் மிக முக்கியமானவைகளாக இருக்கும் என நூலாசிரியர் விவரிக்கின்றார்.

இயல் 5: அடிப்படைத்துகள்களும் இயற்கையின் விசைகளும்:-

அண்டத்திலுள்ள அறியப்பட்ட துகள்கள் அனைத்தையும், பாலியின் தவிர்ப்புக் கொள்கைக்கு உட்பட்ட 1/2 சுழல் கொண்ட நிறைத் துகள்கள் என்றும் பாலியின் தவிர்ப்புக் கொள்கைக்கு உட்படாத 0, 1 அல்லது 2 சுழல் கொண்ட விசைத் துகள்கள் என்றும் இரு வகைப்படுத்தலாம். இத்துகள்களின் கண்டறிதல்கள், பண்புகள், செயல்பாடுகள் போன்றவற்றை ஆசிரியர் மிக ஆழமாக விவரிக்கின்றார். ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, மெல் அணுக்கரு விசை, வல் அணுக்கரு விசை என நால்வகை விசைகள்;

ஈர்ப்பு விசை தவிர்த்து பிற மூன்றும் ஒருங்கிணைந்த மகா ஒருங்கிணைந்த கோட்பாடு மற்றும் மகா ஒருங்கிணைந்த ஆற்றல் (Grand, unified theory and grand unification energy); மின்னூட்டப் பிணைவு, ஒப்புமை, காலம் என மூன்று சமச்žர்மைகள்; கற்றை இயங்கியலுக்கும் சார்பியலுக்கும் கீழ்ப்படியும் எக்கோட்பாடும், எப்போதுமே (மி-ஒ-கா) இணைந்த சமச்žர்மைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்னும் கணிதத் தேற்றம்; விண்மீன்கள் தகர்வால் உண்டாகும் கருந்துளைகளைச் சுற்றி உண்டாகும் தீவிர ஈர்ப்புப் புலங்கள் பற்றிய ஆய்வுகள் வரப்போகும் ஈர்ப்பியல் கற்றைக் கோட்பாட்டின் முன்னோட்டம் என நூலாசிரியர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றார்.

இயல் 6: கருந்துளைகள்:-

பெரும் அளவிலான வாயித் திரட்சி தன் ஈர்ப்பால் தகர்வுற்று விண்மீனாதல்; அணுக்கருப்பிணைவு வினை எரிபொருள் தீர்ந்து சந்திரசேகர் வரம்பெல்லையின்படி (ஞாயிறு நிலையில் ஒன்றரை மடங்கு) வெள்ளைக் குறளி (White dwarf), நொதும விண்மீன் (neutron star) கருந்துளை என ஏதேனும் ஒன்றாக மாறுவது; தகர்வுறும் விண்மீனின் ஈர்ப்புப் புலம் ஒளி கூட வெளியேறா வண்ணம் வலுவுற்று நிகழ்ச்சி விளிம்பும் (Event horizon) இயன்வழுப் புள்ளியும் கொண்ட கருந்துளையாக மாறுதல்; நிலைத்த சமச்žர் அச்சில் மாறா வீதத்தில் கருந்துளை சுழலுதல் போன்றவற்றைக் கருத்தாய்வு மற்றும் நோக்காய்வுச் சான்றுகளுடன் ஆசிரியர் நுட்பமாக விளக்குகின்றார்.

கருந்துளைக்குள் திருகுச் சுற்றாக வந்து விழும் பருப்பொருட்கள் கருந்துளையை அதே திசையில் சுழல வைப்பதோடு அருகே மிக்குயர் ஆற்றல் துகள்களைப் பிறப்பிக்கும், கருந்துளை சுழற்சியால் உண்டாகும் காந்தப் புலம், ஆற்றல் துகள்களை சுழல் அச்சின் இருமுனைகளிலும் தாரைகளாகப் பீச்சியடிக்கும். மேலும் முற்பட்ட அண்டத்தில் சில ஒழுங்கீனங்கள் - வெப்பம், அடர்த்தி, அழுத்தம் என்ற வகைகளில் - இருந்திருக்கும் என்பதால் ''ஆதிக் கருந்துளைகள்'' ஏற்பட்டிருக்கக்கூடும் என நேர்த்தியாக விவரிக்கின்றார்.

இயல் 7: கருந்துளைகள் அவ்வளவு கருப்பல்ல:-

இரு கருந்துளைகள் ஒன்றாகும்போது புதிய நிகழ்ச்சி விளிம்புப் பரப்பு, முன் பரப்புகளின் கூடுதலாகவோ, அதற்கும் அதிகமாகவோ இருக்கும் என்பதை வெப்ப இயக்கவியலின் (thermodynamics) இரண்டாம் விதியான குலைதரத்தோடு (entropy) ஒப்பிடலாம். கருந்துளை நிகழ்ச்சி விளிம்பின் புறவெளியில் கற்றை ஏற்ற விறக்கங்களால் (quantum fluctuations) உருவாகும். ஒளித்துகள்கள் - எதிர்த் துகள் இணைகள் கலைந்து போய்க் கருந்துளைக்குள் விழலாம் அல்லது தப்பிக் செல்லலாம். வெளியேறும் நேர் ஆற்றல் துகள்களை ஈடுசெய்ய உட்பாயும் எதிர் ஆற்றல் துகள்களால் கருந்துளையானது நிறைகுன்றி, நிகழ்ச்சி விளிம்புப் பரப்பு குறைந்து, அளவில் மிகச் சிறுத்து சிறியதாகி இறுதிப் பெரும் உமிழ்வுத் தெறிப்பில் அடியோடு மறைந்து போகலாம். கருந்துளைக் கதிர்வீச்சானது ஈர்ப்புத் தகர்வு இறுதியானதும் மாற்ற முடியாததும் அல்லவென்பதைச் சுட்டுவதாக நூலாசிரியர் விளக்குகின்றார்.

இயல் 8: அண்டத்தின் பிறப்பும் வழியும்:-

வெப்பந்தகிக்கும் நிலையில் தொடங்கி, விரிவடைய விரிவடைய குளிர்ந்து சென்ற அண்டம் என்னும் ''வெப்ப மாவெடிப்பு'' மாதிரியமைப்பினை கருத்தாய்வு நோக்காய்வுச் சான்றுகளுடன் இந்நூல் விரிவாக நுட்பமாக அலசி ஆய்கிறது. முற்பட்ட அண்டத்தின் மாதிரியமைப்புகளாக முன் வைக்கப்பட்ட உப்பல் விரிவாக்கம் (Inflationary expansion), குழப்ப உப்பல் மாதிரி (Choatic inflationary model) போன்றவைகளையும் ஹாக்கிங் கவனமாகப் பரிžலனை செய்கிறார்.

அண்டத்தின் மிக முற்பட்ட கட்டங்களுக்குக் கற்றை ஈர்ப்பியல் கோட்பாடு பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் கற்றை இயங்கியலையும் ஈர்ப்பையும் இணைக்க முழுமையான முரணற்ற ஒரு கோட்பாடு உருவாக்கப்பட வேண்டும், அதற்காக ரிச்சர்ட் ஃபெய்மேன் முன் வைத்த கூட்டுக் தொகையான வரலாறுகள் (sum over histories) என்ற வகையில் கற்றைக் கோட்பாட்டை வகுத்துரைப்பது, ஈர்ப்பு புலத்தை வெளி கால வளைவு குறிக்கிறது என்ற ஐன்ஸ்டைனின் கருத்தினை முழுமைக் கோட்பாட்டின் ஒரு பகுதியாக்கி கொள்வது போன்ற முன் மொழிவுகளை ஆசிரியர் வலியுறுத்துகின்றார்.

அண்டவியல் பின்னணி ஆய்வுக் கோள் 1992ல் முதன் முதலாகக் கண்டுபிடித்த, நுண்ணலைப் பின்னணி செறிவடர்த்தியில் திசைக்கேற்ப ஏற்படும் மிகச் சிறு மாற்றங்கள், உப்பல் மாதிரியமைப்பின் ஊகங்களுக்கும் எல்லையின்மைக் கொள்கைக்கும் (no boundary principle) ஒத்துப் போவதாகத் தோன்றுகிறது. எனவே எல்லையின்மை நிலைமையும் உறுதியின்மைக் கொள்கையும் சேர்ந்து அண்டத்தின் சிக்கலான கட்டமைப்புகள் அனைத்துக்கும் விளக்கமாக அமையலாம்.

இயல் 9: காலக் கணை:-

காலத்தோடு சேர்ந்து žர்குலைவு அல்லது குலைதரம் அதிகரிப்பது காலக் கணை (Arrow of time) என்பதற்கான ஓர் உதாரணம். இது கடந்த காலத்தை எதிர்காலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டி காலத்திற்கு ஒரு திசை கொடுக்கிறது. குறைந்தது மூன்று காலக் கணைகள் உள்ளன. முதலாவது வெப்ப இயக்கவியல் காலக் கணை (Thermodynamic arrow of time) இந்தக் காலத் திசையில் தான் žர்குலைவு அல்லது குலை தரம் அதிகரிக்கிறது. இரண்டாவது உளத்தியல் காலக்கணை (Pschological arrow of time) இத்திசையில் தான் காலம் செல்வதாக நாம் உணர்கிறோம். இந்தத் திசையில் தான் கடந்த காலத்தை நினைவு வைத்திருக்கிற நாம் எதிர்காலத்தை நினைவு வைத்திருப்பதில்லை. மூன்றாவது அண்டவியல் காலக் கணை (Cosmological arrow of time) இந்தக் காலத் திசையில் தான் அண்டம் சுருங்கிச் செல்லாமல் விரிவடைந்து செல்கிறது.

அண்டம் சரளமான ஒழுங்கான நிலவரத்தில் தொடங்கி, காலம் செல்லச் செல்ல, கட்டி கட்டியான žர்குலைவுற்ற நிலவரத்துக்கு மாறியிருக்கும் என்பதை வெப்ப இயக்கவியல் காலக் கணை இருப்பதற்கான விளக்கமாகும். இக்காலக் கணைதான் காலத்திசை பற்றி நமது அக உணர்வையே நமது மூளைக்குள் உளத்தியல் காலக் கணையாக நிர்ணயிக்கிறது. அண்டம் விரிவடையும் கட்டத்தில் மட்டுமே மனிதப் பிறவிகள் இருக்க முடியும் என்பதே வெப்ப இயக்கவியல் மற்றும் அண்டவியல் காலக் கணைகள் ஒரே திசையைக் காட்டுவதாக நோக்கியறியப்படுவதன் காரணமாகும்.

இயல் 10: புழுத்துளைகளும் காலப்பயணமும்:-

பொதுச் சார்பியல் அனுமதிக்கும் ஒரு புதிய வெளி-காலத்தை 1949ல் கர்ட் கோடல் கண்டறிந்தது மனிதர்கள் காலப் பயணம் மேற்கொள்ள இயற்பியல் விதிகள் உண்மையில் வாய்ப்பளிப்பதாக அமைந்தது. ஒன்றையொன்று உயர்வேகத்தில் கடந்து செல்லும் இரு அண்டத் தந்திகள் (Cosmic strings) கொண்ட வெளி - காலம் ஒன்றும், சுழலும் கருந்துளை ஒன்றின் உட்புறத்தில் வெளி-காலம் ஒன்றும் பின்னர் கண்டறியப்பட்டன. அண்டத் தந்திகள் முற்பட்ட அண்டத்தின் சமச்žர்மை முறிவால் ஏற்பட்டவை. தொலைவாக விலகியுள்ள சற்றொப்பத் தட்டையான இரு வட்டாரங்களை இணைக்கும் மெலிந்த வெளி - காலக்குழாயே புழுத்துளை (Worm hole) என்பதாகும்.

காலப் பயணத்திற்கேற்ப வெளி - காலத்தைச் சுருட்டி வளைக்க ஆய்வுச் சான்று உண்டெனினும் சில முரண்மெய்மைகள் தீர்க்கப்பட வேண்டும். தீர்வு நோக்கில் ''முரணற்ற வரலாறுகள் அணுகுமுறை'' மற்றும் ''மாற்று வரலாறுகள் கருதுகோள்'' போன்றவை முன்மொழியப்படுகின்றன. கருந்துளைக் கதிர்வீச்சுக் கருத்தாய்வுகள், நுண்ணளவில் பின்னோக்கிய காலப் பயணத்துக்குக் கற்றைக் கேட்பாடு இடமளிப்பதாகக் காட்டுகிறது. எனவே பெருவீத அளவிலான உருக்களின் பின்னோக்கிய காலப் பயணத்துக்கும் கற்றைக் கோட்பாடு இடமளிப்பது போல் தோன்றலாம். ஆனால் பெருவீத உருக்கள் கடந்த காலத்துக்குச் செல்வதை இயற்பியல் விதிகள் தடுக்கவே செய்கின்றன எனினும் ''காலவரிசைப் பாதுகாப்புக் கருதுகோள்'' சரியெனில் கடந்த காலத்துக்குள் பெரு உருக்கள் பயணிக்க இடமளிக்காதபடி வெளி - காலம் ஒரு நேர்மறை வளைவு பெறக்கூடும் என ஆசிரியர் கருதுகின்றார். எதிர்காலம் அறியப்படாததும் திறந்திருப்பதும் என்பதால், அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தால் கால எந்திரம் ஒன்று கட்டப்பட்டாலும் காலப் பயணம் என்பது எதிர்காலத்துக்கு மட்டுமே உரியதாக அமையும் என்பதை உரிய காரண காரியங்களோடு விளக்குகிறார்.

இயல் 11: இயற்பியல் ஒருங்கிணைப்பு:-

அண்டம் பற்றிய முழுமையான ஒருங்கிணைந்த ஒரு கோட்பாட்டிற்கான தேடலின் வரலாற்றில், உறுதியின்மைக் கொள்கையைப் பொதுச் சார்பியலில் இணைத்த போது ஈர்ப்பும் அண்டவியல் மாறிலியும் (Cosmological constant) தவிர பிற சிக்கல்கள் தொடர்ந்தன. மீயீர்ப்பு (Super gravity) என்ற முன் மொழிவு ஈறிலிகள் பற்றிய கணக்கீட்டுச் சிக்கலால் வெற்றி பெறவில்லை. தந்திக் கோட்பாடுகளில் (String theories) 10 அல்லது 26 பரிமாணங்கள் என்ற சிக்கல் அமைகிறது. 1994க்குப் பின் கபிரேன்கள் என்ற கோட்பாடு முன் வைக்கப்பட்டது. வெவ்வேறு சூழல்களில் சரியானவை எனத் தோன்றும் மீயீர்ப்பு, தந்தி, கபிரேன் ஆகியன ஓர் அடிப்படைக் கோட்பாட்டுக்கான தோராயங்களாகவே அமைகின்றன.

அண்டத்திற்கு உண்மையில் ஒரு முழுமையான ஒருங்கிணைந்த கோட்பாடு உள்ளதா? என்ற வினாவிற்கு

1. உண்டு, கண்டுபிடிக்க முடியும்.
2. இல்லை, மேன்மேலும் திருத்தமேறும் கோட்பாடுகளின் முடிவுறாத் தொடர்வரிசை ஒன்று இருக்கும்
3. கிடையாது. அண்டம் தற்போக்கானது.

என்ற விடைப் பட்டியல் முன் உள்ளது. உறுதியின்மைக் கொள்கைக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை ஊகித்தறியப் பயன்படும் விதிகளின் கணம் (set) ஒன்றினை வரையறுப்பதே இலக்கு என நவீன கால அறிவியல் மறுவரையறை செய்யப்பட்டதால் மூன்றாவது சாத்தியப்பாடு விடைபெறுகிறது. அளவீட்டு நுட்ப உயர்வுகள் புதுவகை நோக்காய்வுகள் போன்றவை, நடப்புக் கோட்பாடுகள் தாண்டிய புலப்பாடுகளைக் கண்டறிந்துள்ள நடைமுறையோடு இரண்டாவது சாத்தியப்பாடு இசைந்து செல்கிறது. துல்லிய கோட்பாடுகளின் தொடர் வரிசைக்கு பிளாங்க் ஆற்றல் (Plank energy) அடிப்படையில் ஓர் எல்லை இருக்கக்கூடும் என்பது முதல் சாத்தியப்பாடு நோக்கி வழிகாட்டுகிறது.

அண்டம் பற்றிய இறுதிக் கோட்பாட்டினைச் சென்றடைவது மனிதகுலம் நடத்தி வரும் அறிவுப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு நீண்ட நெடிய புகழார்ந்த அத்தியாயத்துக்கு முத்தாய்ப்பாக அமையும். அண்ட விதிகள் பற்றிய சாதாரண மனிதரின் புரிதலையும் புரட்சிகரமாக மாற்றியமைக்கும்.

அடிப்படை விதிகளின் முழுக்கணத்தையும் கண்டறிந்த பின்னரும் அணுகுமுறைகளை மேம்படுத்தி வளர்த்தெடுக்கும் அறிவுக்கு அறைகூவல் விடுக்கும் பணி இருந்து வரவே செய்யும்.

ஒரு முழுமையான, முன்னுக்குப் பின் முரணற்ற, ஒருங்கிணைந்த கோட்பாடு என்பது முதல் அடிதான் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும் நாம் நாமாக இருப்பதையும் முழுமையாகப் ''புரிந்து கொள்வதே'' நமது இலக்கு என்று எதிர்கால அறிவியல் பயணிக்க வேண்டிய திசைவழி கட்டி பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறார்.

இயல் 12: முடிவுரை:-

கலிலியோவின் ஞாயிறு மையக் கோட்பாடு, லேப்லஸ’ன் அண்டம் பற்றிய முன்னுறுதிக் கொள்கை, நியூட்டனின் இயக்கவிதிகள், ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடுகள் என - சமய நம்பிக்கைகளைப் புறந்தள்ளி, வாகை சூடிய மீப்பெரு அண்டம் பற்றிய அறிவியல் கூறுகள், கற்றை இயங்கியல், அடிப்படைத் துகள்கள், இயற்கை விசைகள் என மீச்சிறு கட்டமைப்புகளின் அறிவியல் கூறுகள் ஆகிய இரண்டின் இழையோட்டமாக நூலினை வடித்துள்ள ஆசிரியர், இயல்களின் மையக் கருத்தோட்டங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

அண்டத்தின் படைப்பில் கடவுளின் உள்ளத்தை விளங்கிக் கொள்ள முயல்வதாகக் சொல்லும் ஆசிரியருக்கு ''அண்டத்தைப் பொருத்தவரை, வெளிவகையில் விளிம்பேதும் இல்லை'' காலவகையில் தொடக்கமோ முடிவோ இல்லை படைப்புக் கடவுள் செய்வதற்கொன்றுமில்லை என்று முடிவுகிடைக்கிறது. அண்டம் என்னவாக உள்ளது? என்று வினவும் அறிவியல், அண்டம் ஏன் இருக்கிறது? என்பதை நோக்கிப் பயணிக்க வேண்டும் அதற்கு விடை காண்பதே மாந்தப் பகுத்தறிவின் இறுதி வெற்றியாக அமையும் என்று நூலினை நிறைவு செய்கிறார்.
நன்றி: சமூக விஞ்ஞானம்



காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Paard105xzகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Paard105xzகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Paard105xzகாலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக