புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_c10திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_m10திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_c10திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_m10திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian
திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_c10திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_m10திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 11, 2012 9:49 am

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! NT_121210123924000000

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! டி.டி.எச்., குறித்து கமல் ஆதங்கம்!!

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,-ல் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் கமல், திருடனுக்கு 50 சதவீதம் கூட கொடுப்பார்கள் ஆனால் உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று ‌என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை

இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள், அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி. சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்., இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதைவிடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சாட்சி.

இந்தி சினிமா வசூலுக்கு வழிவகுக்கும்

என்படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளை சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்து சொல்லி கறுப்பு பண விளையாட்டை குறைத்து கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

இந்தியாவில் அதிக விற்பனையான விஸ்வரூபம் ஆடியோ

ஒரேநாளில் விஸ்வரூபத்தின் இசை, இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூபம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது

டி.டி.எச்-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்யேகக் காட்சி முடியும் போது படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது. விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது டி.வி-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

திருடனுக்கு கொடுப்பவர்கள் உடையவனுக்கு கொடுக்கமாட்டார்கள்

டி.டி.எச். வசதி தமிழக ஜனத்தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் ஒன்றரை சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7.5 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி., வியாபாரி கொண்டு போவ‌தை தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி-க் காரர்களுடன் கூட்டு சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாரத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50 சதவீதத்தை கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த வாதத்தால் தியேட்டரில் வியாபாரம் குறையாது. வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்து கொண்டதாய் தெரியவில்லை. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும், நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன..? பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளவே ஒரு சின்ன விளக்கம்.

முஸ்லீம்களை தவறாக சித்தரிக்கவில்லை

முடிவாக இந்தப்படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இந்தப்படத்தை பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் வருந்தினால் மட்டும் போதாது, சகோதரனை சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அவ்வளவு பிரியா‌ணியையும் நான் ஒரு ஆளாக சாப்பிட முடியாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 11, 2012 10:04 am

ஏதோ புதுசாக செய்கிறார், வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 11:00 am

அறிக்கை பலமாக உள்ளது..நடத்துங்க..நன்றி

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Paard105xzதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Paard105xzதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Paard105xzதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 11:19 am

ஆமா...இதுக்கு முடிவு தெரிய சரியாக இன்னும் முப்பதே நாள்கள்தான்...
என்னதான் நடக்கப்போகுதுன்னு எல்லாரும் கண்ணா விரிச்சுகிட்டு காத்திருக்காங்க...
இந்த விவகாரம் புஸ்வானமாக ஆகாமலிருந்தால் சரி...

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! 224747944

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Rதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Aதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Emptyதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Rதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 11, 2012 11:36 am

ரா.ரா3275 wrote:ஆமா...இதுக்கு முடிவு தெரிய சரியாக இன்னும் முப்பதே நாள்கள்தான்...
என்னதான் நடக்கப்போகுதுன்னு எல்லாரும் கண்ணா விரிச்சுகிட்டு காத்திருக்காங்க...
இந்த விவகாரம் புஸ்வானமாக ஆகாமலிருந்தால் சரி...

திரை துறையை சேர்ந்த உங்களுக்கு கமலின் நடவடிக்கை வளர்ச்சி சினிமா பாதையில் செல்லுமா , இல்லையா உங்க கருத்தை அறிய ஆவா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Dec 11, 2012 11:40 am

பாலாஜி wrote:
ரா.ரா3275 wrote:ஆமா...இதுக்கு முடிவு தெரிய சரியாக இன்னும் முப்பதே நாள்கள்தான்...
என்னதான் நடக்கப்போகுதுன்னு எல்லாரும் கண்ணா விரிச்சுகிட்டு காத்திருக்காங்க...
இந்த விவகாரம் புஸ்வானமாக ஆகாமலிருந்தால் சரி...

திரை துறையை சேர்ந்த உங்களுக்கு கமலின் நடவடிக்கை வளர்ச்சி சினிமா பாதையில் செல்லுமா , இல்லையா உங்க கருத்தை அறிய ஆவா

கமல் ஓர் அதீத அறிவாளி என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்து இருக்க வாய்ப்பே இல்லை...
ஆனால் சினிமாவில் ஒரு போராட்டம் என்றால் ஒரு சாராருக்கு எதிராகவே இருப்பார்...குறிப்பாக இயக்குனர்களுக்கு...அதன் மர்மம் புரியவில்லை...

பிறகு தனக்குப் பின் வளர்ந்து வருபவர்களை மனம் விட்டுப் பாராட்டி நான் பார்த்ததில்லை..
மிக மிகக் குறைவே அது அவரிடம்...

ஆனால்...எல்லாவற்றையும் மீறி ஒன்று மட்டும் உண்மை...அவர் தொடும் தொழில்நுட்பம் பின்னர் சினிமாவை ஆளும்...அதில் மாற்றுக் கருத்து இல்லை...

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! 224747944

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Rதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Aதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Emptyதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Rதிருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 11, 2012 11:44 am

நன்றி ரா.ரா ... நன்றி அன்பு மலர்

ஆனால்...எல்லாவற்றையும் மீறி ஒன்று மட்டும் உண்மை...அவர் தொடும் தொழில்நுட்பம் பின்னர் சினிமாவை ஆளும்...அதில் மாற்றுக் கருத்து இல்லை...

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 11:44 am

ஆனால்...எல்லாவற்றையும் மீறி ஒன்று மட்டும் உண்மை...அவர் தொடும் தொழில்நுட்பம் பின்னர் சினிமாவை ஆளும்...அதில் மாற்றுக் கருத்து இல்லை...

இது அன்றும் இன்றும் ஆண்டு கொண்டு தான் இருக்கிறது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 6:31 pm

கமல் கவலைக்படாதீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 11, 2012 6:35 pm

பார்போம்.. எப்படி இருக்கும்ன்னு

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! -கமல் ஆதங்கம்!! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக